Jan 12, 2014

ஜில்லா - அற்புதமான பயிற்சி !.


நண்பர்களே...
ஜில்லா படம்  ‘பரம ரசிகர்களை’ திருப்தி படுத்துகிறது.
ஆனால் ஏனைய  ‘பாமர ரசிகர்கள் ஆசனவாயில் பட்டாஸ் வெடிக்கிறது’.
காரணம் என்ன?
இதை  ‘நாளைய இயக்குனர்கள்’ ஆராய்ந்தால்,
அதுவே அற்புதமான ‘திரைக்கதை பயிற்சியாக’ இருக்கும்.

கில்லி, போக்கிரி, துப்பாக்கி போன்று  ‘ஹிட்’ அடிக்க வேண்டிய கதை,
திரைக்கதையால் நொண்டியடிக்கிறது...
தலைகுப்புற, அது வெட்டிய குழியில் விழுகிறது...
ரசிகர்களையும் கூட இழுத்து பிராணனை விடுகிறது.

‘ஜில்லாவில்’ ரசிகனை ஈர்த்த ஒரே விஷயம் ‘மோகன்லால்’.
மோகன்லால் அல்லாமல் வேறு ஆளைப்போட்டிருந்தால் இப்படம் ‘சுறாவை’ முந்தி இருக்கும்.
மோகன்லாலின் ஆளுமை, தொடக்கத்தில் ரசிகனை கட்டிப்போடுகிறது.
கட்டிப்போட்ட மோகன்லாலின் ஆளுமையை, புரட்டிப்போட்ட இடம் எது ?

கேஸ் கம்பெனி விபத்தால் மதுரையே பற்றி எரிகிறது.
அந்த கொடூரத்தை நேரில் பார்த்த கதாநாயகன் வருந்துகிறான்...திருந்துகிறான்.
ரசிகர்களை பதைபதைக்க வைத்த கொடூரக்காட்சிகளுக்குப்பிறகு,
மோகன்லால் அது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படுவதாக காட்சிபடுத்தப்படவில்லை.

கொத்து கொத்தாக ஈழத்தமிழர்கள் செத்து விழும்போது ‘மானாட மயிலாட’ புரோகிராமை ரசித்த  ‘கலைஞர் குடும்பம்’ போல் காட்சிபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் மோகன்லாலும், அவரது குடும்பத்தாரும்.
ஆனால், நடந்த கொடூர சம்பவத்துக்கு... துன்பப்படாத...துயரப்படாத... வருத்தப்படாத...மோகன்லால்,
தனது அல்லக்கைகளை விஜய் கைது  செய்ததை எதிர்த்து கோபிக்கிறார்.
இந்த இடத்தில்,
மோகன்லால் காரெக்டரை பூமியில் புல்டோசர் விட்டுத்தோண்டி... ஜல்லி,சிமெண்ட் போட்டு மூடி...
தோற்றம்: முதல் சீன்...
மறைவு: நாற்பதாவது சீன்...
என கல்வெட்டும் வைத்து விட்டார் இயக்குனர்.

இதோடு மோகன்லாலையும்,
அவரது குடும்பத்தாரையும் புறக்கணித்து விடுகிறார்கள் பார்வையாளர்கள்.
விஜய்க்காக ‘நெஞ்சை நக்கும்’ பூர்ணிமா பாக்யராஜை,
 ‘போடி டகால்டி’ என உதைக்கும் கவுண்டமணியாகி விடுகிறார்கள்.
‘இன்ஸ்டெண்ட் வில்லனிடம்’ அடி வாங்கும்  ‘மணமகளிடம்’ இரக்கம் வராமல் ‘மிக்சர் சாப்பிடுகிறார்கள்’.
‘ஆஸ்கார்’ நடிப்பை தந்து உயிரை விடும்  ‘மோகன்லால் மகனிடம்’
துளி இரக்கம் காட்டாமல் இறுக்கமாகிறார்கள்.
‘பிரபல தாதாவின் மகன் சுட்டுக்கொலை’ எனும் தினத்தந்தி தலைப்பை மட்டும் படித்து கடந்து செல்லும் வாசகர்களாகிறார்கள்.


மோகன்லாலும்,விஜயும் இணையும் இறுதிக்காட்சியில் விசிலடிக்காமல் திகிலடித்து திகைக்கிறான் ரசிகன்.
 ‘என்ன எழவுடா இது’ என ஒரு வரியில் தீர்ப்பெழுதுகிறான்.

 ‘நாளைய இயக்குனர்களே’...
இது போன்ற விலகல்களால், நரகல்களாகி விட்டது ‘ஜில்லா திரைக்கதை’.
நீங்களும் நரகல்களை நக்காதீர்கள்...நீக்குங்கள்.
ஜில்லாவை, பில்லாவாக்கும் வித்தை வசப்படும்.
பாட்சா, தூள், சிங்கம், தசாவதாரம், துப்பாக்கி போன்ற வணிக சினிமாக்களை
படைத்து வெற்றி பெறுவீர்கள்.