Jan 24, 2013

புறாவை வறுத்தா தின்பீர்கள் !


நண்பர்களே...
அதிர்ச்சியில் இருக்கிறேன்.
காலையிலிருந்து வரும் செல்போன் அழைப்புகள் என்னை கொதி நிலையில் வைத்திருக்கிறது.

விஸ்வரூபம் மலேசியாவில் வெளியாகி விட்டது.
மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு.
மலேசிய  சென்சாரில், ஒரு திரைப்படத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்கள் இருக்கிறதா என பார்ப்பதற்கு என்றே இஸ்லாமியப்பண்டிதர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு மறுமடியும் வேறு பிரிவிற்கு அனுப்புவார்கள்.
அந்தப்பிரிவில்  தமிழ் படத்துக்கு, தமிழறிஞர்கள் படம் பார்த்து சான்றிதழ் தர வேண்டும்.
இதையெல்லாம் கடந்து விஸ்வரூபம் வெளியாகி உள்ளது.

[ நான் மலேசியாவில் தயாரித்த விளம்பரப்பட அனுபவத்தில் இச்செய்தியை கூறி உள்ளேன்.]

மலேசியாவில் படம் வெளியாகி...விமர்சனமும் வந்து விட்டது.
இதோ விமர்சனம்...
Vishwaroopam gets magnum opus response in malaysia (Here are some response the film received from malaysian viewers 

"Dhool opening. 
Kamal appears and whistle clap fills the hall 
A treat is in store
Openinh song wow"

"Stark realities behind terrorist breeding places.
Have never seen anything like this before.
Not a single irrelevant scene. Lesson on direction for everyone.
Lots of subtle humor"

"What a transformation.
Need many watches. Once isn't enough.
Some parts we feel sympathy for the terrorists"

"Phew..... what a roller coaster ride.....!
All of us are insatiated ... we want more. Please bring on part 2 quickly.
My children thought it was intermission when the movie ended!
2.5 hours of non stop action.
This is what I want from kamal.
Movie of the decade for sure.
Guys in India. .. it is worth the wait"

Courtesy:
http://www.twitlonger.com/show/kq8l74



இன்றைய விஸ்வரூப விளம்பரத்தை ‘குறியீடாக’ வெளியிட்டுள்ளார்.



இவ்விளம்பரத்தை பார்த்து எனது நண்பர் அடித்த கமெண்ட்...

“புறாவை வறுத்தாடா தின்பீர்கள்...
வறுமைக்கு பிறந்தவர்களே...”

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டதற்கு கமலின் விளக்க அறிக்கையை
 காண்க...


உயர் நீதி மன்றமும் படத்தை 28 வரை வெளியிடத்தடை விதித்துள்ளது.
26 ம்தேதி நீதிபதி படம் பார்க்க இருக்கிறார்.
விஸ்வரூபம் தமிழ்நாட்டில் மட்டும் இனி பார்ப்பது நீதியின் கரங்களில்.

படத்தை பார்க்க மலேசியா போகலாமா என சிந்தித்து வருகிறேன்.
28 தீர்ப்பு வரும் வரை காத்திருக்க பொறுமையில்லை.
மலேசியாவில் மிட்வேலி மல்டிபிளக்ஸில் வெளியாயிருக்கிறதா ?
மலேசிய அன்பர்கள் தெரிவிக்கவும்.


12 comments:

  1. ஆந்திராவில் நாளை ரிலீஸ் ஆகிறது..

    ReplyDelete
  2. i brought ticket for friday night show but the film ban too here in singapore...all theatre in malaysia are released vishwatoopam...

    ReplyDelete
  3. அன்புள்ள கமல் ஹாசனுக்கு.!
    கேப்டன்களும், காமன் மேன்களும், ஜென்டில் மேன்களும்,இளைய தளபதிகளும்(..!) தமிழ் சினிமாவில் பதித்து வைத்து இருக்கிற, முஸ்லிம்களைப் பற்றிய எதிர்மறை உணர்வுகள் ஏற்கனவே அதிகம்..
    இந்த நிலையில் உங்கள் பங்களிப்பை மீண்டும் ஒரு முறை செலுத்தி இருக்கிறீர்கள்...
    உன்னைப் போல் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவர இருக்கிறது உங்கள் விஸ்வரூபம்.
    சபாஷ்.?..!!
    வாழ்க உங்கள் கலைச் சேவை.(.!)




    நடுநிலையாளர்களே
    ************************
    1)இது வெறும் கருத்து தானே.
    இதை கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டியது தானே என சிலர் நினைக்கிறார்கள்.
    ஆனால் இது போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான எதிர்மறை பிரச்சாரங்கள்,
    வெறும் கருத்து சுதந்திரம் என்பதை தாண்டி,
    முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனையும் சந்தேகப் பார்வை பார்க்கும் சூழ்நிலைக்கு
    ஆளாக்கி வைக்கிறது என்கிற விபரீதத்தை நீங்கள் கவனிக்க தவறி விடுகிறீர்கள்.



    பொதுமக்களே.
    ***************

    1)அஃப்சல் குரு பற்றிய செய்திகளைப் பற்றி என்றால், முதல் பக்கத்தில் அதை வெளியிடும் தமிழ் மீடியாக்கள், அசிமானந்தா போன்றோரின் செய்தியை எல்லாம் இருட்டடிப்பு செய்கிறதே ஏன்.?

    2)இந்த நாட்டில் முஸ்லிம் பெயர்களில் நடத்தப் படுகிற,நக்சலைட் , இனவாத,அல்லது காவிக் கும்பலால் நடத்தப்படுகிற எந்த வித தேச விரோத செயல்களையும் இந்திய முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அங்கீகரிப்பது இல்லை..
    இதை இஸ்லாமும் ஆதரிப்பது இல்லை..
    இதைப் புரிந்து கொள்வீ ர்களா.?


    3)தவறு செய்பவர் எவராக இருந்தாலும், அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை..
    அந்த நபருக்கு நீதியின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
    ஆனால் அதே வேளையில் இஸ்லாத்தை குறித்தும், முஸ்லிம்களைக் குறித்தும், தவறான பிம்பத்தை பிரச்சாரம் செய்வதை , தமிழ் மற்றூம் இந்திய சினிமா, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.. இதோ இப்போது வந்து இருக்கிற துப்பாக்கி, வெளிவர இருக்கிற விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் விரோத திரைப்படங்களை,
    நடுநிலையாலர்களும், சமூக ஆர்வலர்களும் கட்டுப்படுத்த வேண்டும்..

    4
    இனவாத்தில் இருப்பவன், இஸ்லாத்தின் பார்வையில் இறை நம்பிக்கையே இல்லாதவன் என்கிறார் இறைத்தூதர் முஹம்மது நபி (சல்) அவர்கள்..


    6)இந்த நாட்டில் நீதியும், மனித நேயமும் இன்னும் செத்துப் போய் விடவில்லை..
    அது உயிரோடு தான் இருக்கிறது..
    தன் சுய நலத்திற்காக , மதத்தின் போர்வையில், அல்லது ஜாதி, மொழி, இனம் அடிப்படையில்,
    தேச விரோத செயல்களை செய்யும், சமூக விரோதிகளை,
    அவர்கள் எந்த மதம்,இனம்,மொழியைச் சேர்ந்தவரக இருந்தாலும்,
    எப்படிப்பட்ட அரசியல் அதிகாரத்தில் இருந்தாலும்,
    இந்தியன் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் சேர்ந்து,
    அவர்களை களை எடுப்போம் என்கிற ரீதியில் நேர்மறை உணர்வோடு கருதுக்களைப் பதிவு செய்யுங்கள்..

    முஸ்லிம்களே
    **********************

    1)கண் முன்னே அநீதி இழைக்கப் படும்போது, பாதிக்கப்படுபவர் எவராக இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டும்..
    அமைதியாய் இருந்து விடக் கூடாது என போதிக்கிறது இஸ்லாம்..
    இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படும் இந்த சூழ்நிலையில்,
    இந்த உண்மையை,
    இதை இந்த நாடும், நாட்டு மக்களும், புரிந்து கொள்ளும் விதத்தில் முஸ்லிம்கள் எடுத்து உரைக்க வேண்டும்..

    2)இன்றைய சூழ்நிலையில் அனாச்சாரங்களும், அலங்கோலங்களும் சினிமாவை ஆக்கிரமித்து இருப்பதால், சினிமா என்ற வலிமை வாய்ந்த ஊடகத்தையே,
    இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வருகிறது..
    இது மாற வேண்டும்..
    இதற்கு மாறாக குறைந்த பட்சம், காலத்தின் தேவைக்கு ஏற்ப,
    தங்கள் அடையாளங்களையாவது பதிவு செய்கிற வகையில்,
    குறும்படங்கள், ஆவணப்படங்கள், போன்றவற்றை தயாரிக்க முஸ்லிம் சமூகத்தை சார்ந்த வல்லுநர்கள் முன் வர வேண்டும்.

    3)தங்கள் அமைதி, மற்றும் நிசப்தத்தை களைத்து கலைத்துறையில் முஸ்லிம்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்த முன் வர வேண்டும்..

    4)இனி வரும் "துப்பாக்கிகளை " அநியாயம் செய்யவும், அப்பாவிகளுக்கு எதிராக விஷங்களை பரப்பவும்
    பயன்படுத்த முடியாத வண்ணம்,
    அதனைக் கட்டுப்படுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை
    சமூக தலைவர்கள் எடுக்கட்டும்.




    தெரிந்தோ அல்லது அறியாமையின் காரணமாகவோ "விஸ்வரூபங்கள்" விதைக்க நினைக்கிற விஷ விதைகள் வெறும் புஸ்வானமாக போகட்டும்.
    இறைவன் அருள் புரிவானாக..
    - Abbas Al Azadi

    ReplyDelete
  4. சார்,
    மனசே கேட்கல, இங்க கலையில 3 மணிக்கே எதிரிச்சு ஒட்கார்ந்து தமிழ் நியூஸ் பார்க்க ஆரம்பிச்சிட்டேன், இப்ப தான் தமிழ்நாட்டுல மற்றும் பாண்டியில் மட்டும் தடை என்கிற நியூஸ் வந்திச்சு. ஆனா மத்த ஊருல ரீலீஸ்.
    படம் அட்டகாசமா வந்து இருகிறதா LAல பர்மியர் ஷோ பார்த்த என்னோட நண்பன் ஒருத்தன் சொன்னான். படம் 28 ரீலீஸ் ஆகி சாதனை படைக்கும். விஸ்வரூபம் பார்ட் 2 நம்ம ரெடி ஆவோம்.

    ReplyDelete
  5. Good post!.
    I support kamalhasan!!

    http://aatralarasau.blogspot.com/2013/01/blog-post_3377.html
    Thank you

    ReplyDelete
  6. abdul hakkim poi pulla kuttigalai padikkavai

    ReplyDelete
  7. மிட்வேலியில் 11:30 AM 02:35 PM 05:40 PM 08:50 PM 12:00 AM காட்சிகள் ஓடுகின்றன நண்பரே.. வாருங்கள் மலேசியாவிற்கு!

    ReplyDelete
  8. “புறாவை வறுத்தாடா தின்பீர்கள்...
    வறுமைக்கு பிறந்தவர்களே...”

    Supper Comment

    ReplyDelete
  9. //1)கண் முன்னே அநீதி இழைக்கப் படும்போது, பாதிக்கப்படுபவர் எவராக இருந்தாலும் அவருக்கு உதவ வேண்டும்..
    அமைதியாய் இருந்து விடக் கூடாது என போதிக்கிறது இஸ்லாம்..
    இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படும் இந்த சூழ்நிலையில்,
    இந்த உண்மையை,
    இதை இந்த நாடும், நாட்டு மக்களும், புரிந்து கொள்ளும் விதத்தில் முஸ்லிம்கள் எடுத்து உரைக்க வேண்டும்..//
    அப்படியா பாய். கமலுக்கு முஸ்லீம்களால் இழைக்கப்படும் அநீதிக்கு அல்லா பதில் சொல்வாரா இல்லை சிவன் பதில் சொல்வரா இல்லை இயேசு பதில் சொல்வாரா??
    படம் பார்க்காமலே வாய் ஆல் வடை சுடும் நீங்கலே இப்படியென்றால் .....

    ReplyDelete
  10. //2)இன்றைய சூழ்நிலையில் அனாச்சாரங்களும், அலங்கோலங்களும் சினிமாவை ஆக்கிரமித்து இருப்பதால், சினிமா என்ற வலிமை வாய்ந்த ஊடகத்தையே,
    இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வருகிறது..
    இது மாற வேண்டும்..
    இதற்கு மாறாக குறைந்த பட்சம், காலத்தின் தேவைக்கு ஏற்ப,
    தங்கள் அடையாளங்களையாவது பதிவு செய்கிற வகையில்,
    குறும்படங்கள், ஆவணப்படங்கள், போன்றவற்றை தயாரிக்க முஸ்லிம் சமூகத்தை சார்ந்த வல்லுநர்கள் முன் வர வேண்டும்.
    //
    ஆமா பாய் . இப்ப சாருக்கான், சல்மான் கான், அமீர்கான் , ஆரியா எல்லாம் இந்துக்களாகிவிட்டார்கள். ( அதுதான் சினிமாவை இந்திய முஸ்லிம் சமூகம் புறக்கணித்து வருகிறது)
    பாய் உங்கள் பிள்ளை குட்டிகளையாவது படிக்க வையுங்க. அதுகளாவது புத்தியோட நடக்கட்டும்.

    ReplyDelete
  11. 3)தங்கள் அமைதி, மற்றும் நிசப்தத்தை களைத்து கலைத்துறையில் முஸ்லிம்கள் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செலுத்த முன் வர வேண்டும்..//

    ஆமா . முஸ்லீம்கள் இன்னும் சி மும்தாஜ்கள் , குஷ்புக்களை சினிமாவிற்கு வழங்க வேண்டும். ஆக்கபூர்வமில்லாமல் செயல்படும் கமல் இளைப்பறவேண்டும்.

    ReplyDelete

  12. 4)இனி வரும் "துப்பாக்கிகளை " அநியாயம் செய்யவும், அப்பாவிகளுக்கு எதிராக விஷங்களை பரப்பவும்
    பயன்படுத்த முடியாத வண்ணம்,
    அதனைக் கட்டுப்படுத்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை
    சமூக தலைவர்கள் எடுக்கட்டும்.//

    ஆமாம் தீவிரவாதிகள் துப்பக்கிகளை எடுத்து தமிழ் சினிமா விஸ்வரூபம் எடுக்காமலிருக்க எல்லா கலைஞ்ஞர்களையும் சுட்டு தள்ளாமல் காக்க அந்த அல்லாவின் அருள் பெற்றவர்கள் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கட்டும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.