Dec 23, 2012

இளையராஜா கொன்னுட்டாரு.

நண்பர்களே...
நேற்று  ‘ஜெயமோகன் இலக்கிய வட்டம்’ கோவையில் நடத்திய விழாவுக்கு சென்றேன்.
இளையராஜாவைத்தவிர பேசிய அனைவரும் அவங்க ஏரியாவில வித்த
A4 ஷீட் அனைத்தையும் வாங்கி... எழுதி எடுத்திட்டு வந்து...
வாசிச்சு கொன்னுட்டாங்க.
 ‘ராஜா’வைத்தவிர மிக நன்றாக பேசியது...
மலையாளக்கவிஞர் ‘கல்பற்றா நாராயணன்’.
அவர் பேச்சும்...குரலும்  ‘சுந்தரமாயிட்டு’ இருந்தது.
அவரது குரலில் இருந்த ‘மனோகரம்’ மொத்த அரங்கையும் வசீகரித்தது.
அதையும்  மொழி பெயர்த்து பேசிறேன் பேர்வழின்னு ஒருத்தர் சாகடிச்சாரு.
நல்ல வேளை எங்கிட்ட துப்பாக்கி இல்ல.

இயக்குனர் ‘சுகா’ தனது பேச்சில் சுவாரஸ்யம் கொண்டு வர...
முடிந்தவரை முயற்சித்தார்.
 ‘சுகா அண்ணாச்சி’ எழுத்தில் இருக்கும் கவர்ச்சி பேச்சில் வரவில்லை.
ஆனால் ஒரு உண்மையை உரக்கச்சொன்னார்.
 “இலக்கியவாதிகள் நிறைய பேர் உள்ளும் புறமும் வேறாக இருக்கிறார்கள்.
எனவே சினிமாக்காரர்களை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை” 
என நேரடியாக போட்டு தாக்கினார் சுகா.
சபாஷ் அண்ணாச்சி...
 ‘இப்படித்தான் சரியான இடம் கிடைக்கும் போது வச்சு  ‘வெளுவெளுன்னு’  வெளுக்கணும்’.

சினிமா, நூல் இலக்கியத்தை விட ஒரு படி மேல்.
ஏழு கலைகளை உள்ளடக்கிய மாபெருங்கலை. 

விழா தொடங்கி முடியும் வரைக்கும் ஜெயமோகன் இலக்கிய வட்டத்துக்கும். இளையராஜா  ‘தீவிர ரசிகர்களுக்கும்’ ‘தள்ளுமுள்ளு’ நடந்து கொண்டே இருந்தது.
மேடையில் ‘அறுத்துக்கொண்டிருக்கும்போது’ இந்த ஸ்டண்ட் காட்சிகள்தான் சுவாரஸ்யமாக இருந்தது.
ஜெயித்தது ஜெயமோகன் வட்டமே.
 ‘தீவிர ரசிகர்களை’ கடைசி வரை மேடை ஏற விடவில்லை.
விட்டிருந்தால் அவ்வளவுதான்.
தெய்வத்துக்கு மலர் மாலையை பொன் மாலையாக்கும் பிசினஸ்தான் நடந்திருக்கும்.


இளையராஜா பேச்சு...சிம்பிள் & சூப்பர்...
 ‘கொன்னுட்டாரு’.

அவருக்கு முன்னால் பேசிய  ‘அறுவையின்’ மொழியிலிருந்தே துவங்கினார்.
இனி  ‘ராஜாவின்’ உரையின்  ‘ஹை லைட்ஸ்’...

“ எனக்கு முன்னால பேசியவர்,
முதலில் தோன்றியது பேச்சு.
இரண்டாவது எழுத்து.
மூன்றாவது இசை என்றார்.
நான் சொல்கிறேன்.
முதலில் தோன்றியது இசை.
இரண்டாவதும் இசை.
மூன்றாவதும் இசைதான்.
எல்லாமே இசைதான்.
மனிதன் காட்டுமிராண்டியா இருந்தப்ப ‘ஆ...ஊன்னு கத்தியிருப்பான்.
அது இசையில்லையா ?
எழுத்தில் இருப்பது இசையில்லையா?

யாருக்கு விருது கொடுப்பது என்று பேசி முடிவு பண்ணி பின் அறிவித்து கொடுப்பதற்கு பெயர் விருதா ?
[ யாரைச்சொருகுகிறார் என அரங்கு புரிந்து கை தட்டியது ]
நான் மத்திய அரசு விருதைச்சொன்னேன்.

கோயிலுக்குப்போனால் கூட மனசு ஒரு நிலையில் நிற்காது.
குரங்கு மாதிரி தாவிக்கொண்டே போகும்.
நான் என்னைச்சென்னேன்.
நீங்கள் எப்படி என்று எனக்குத்தெரியாது.

ஆனால் இசை உங்களை ஒரு முகப்படுத்தும்.
கட்டிப்போடும்.
கேட்டுப்பாருங்கள்...
[ பாடுகிறார் ]
ஜனனீ...ஜனனீ...
[ அரங்கு அதிருகிறது ]

அதன் பின் கவிஞர் தேவ தேவனை இரண்டு வரி வாழ்த்திப்பேசி அமர்ந்தார்.


இன்று இளையராஜாவின் இன்னிசைக்கச்சேரி மாலை 6.00 மணிக்கு
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெறுகிறது.
நான் போகிறேன்.
நீங்களும் வருகிறீர்களா!


9 comments:

  1. இளையராஜாவிற்கு இப்போது நேரம் அதிகமாகக் கிடைக்கிறது போலும். அதிகமாக மேடையில் பேசுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. அவர் பேசி...அடுத்த தலைமுறைக்கு தனது அனுபவத்தை கடத்துகிறார்.
      தவறில்லையே!.

      Delete
    2. என்ன முரளி, அவர் பேசுவது உங்களுக்கு ஏதாவது பிரச்சினையை தருகின்றதா?

      Delete
  2. விழாவைப் பற்றிய அருமையான அலசல்.நாஞ்சில் நாடான் மற்றும் ஜெயமோகன் பேசியவைகளையும் சிறிது கூறியிருக்கலாமே சார்.

    ReplyDelete
    Replies
    1. காரணமாகத்தான் தவிற்தேன்.

      Delete
  3. // முதலில் தோன்றியது இசை.
    இரண்டாவதும் இசை.
    மூன்றாவதும் இசைதான். //ஹி ஹி மறுக்க முடியாத உண்மை ..

    ReplyDelete
    Replies
    1. இசைஞானி அல்லவா!
      அவரால்தான் அதை சொல்ல முடியும்.

      Delete
  4. நாஞ்சில் நாடன் பேச்சு மிக அருமை--அதன் பின் பேசிய ராஜகோபாலன் பேச்சு--கவித்துவமும்...உயர்தர இலக்கிய வர்ணனை...தெளிந்த நீரோடையென ரம்மியமாக இருந்த்து..மற்ற படி...நீங்கள் சொன்னது சரிதான்..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.