Jun 11, 2012

Hey Ram- கலவரத்தின் விதை [2000\ஹேராம்=009]


போன பதிவில் நான் ஒளித்து வைத்த குறியீடு...

ராமர்-பாபர் பிரச்சனை சமகால அரசியல் என்றே நிறைய பேர் கருதிக்கொண்டு இருக்கிறோம்...நான் உட்பட....

ஆனால் 1946ல் நடைபெற்ற பார்ட்டியில் பாடப்படும் பாடலில் ராமரையும் பாபரையும் மையப்படுத்தி வாலி எழுத கமல் படத்தில் வைத்திருக்கிறாரே! கருத்துப்பிழையோ என நினைத்து வரலாற்றை ஆய்வு செய்தேன்.
விக்கிப்பீடீயா விடையளித்தது.
http://en.wikipedia.org/wiki/Babri_Mosque
18ம் நூற்றாண்டிலேயே இப்பிரச்சனை கோர்ட்டு வரைக்கும் போயிருக்கிறது.
இந்த வரலாறு தெரிந்துதான் கமல் இப்பாடலை வடிவமைத்திருக்கிறார் என்பது என் மர மண்டையில் ஏறியது.

பாடல் முடிவடைந்ததும்... கராச்சியிலிருந்து கல்கத்தா என்ற கலவர பூமிக்கு பயணப்படுகிறது திரைக்கதை.
கேபிடல் வாட்ச் கம்பெனி [Capital Watch Co.]என்ற போர்டு டைட் குளோசப்பில் வரவேற்கிறது.
முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா...
எழுத்து வடிவத்திலும் செமியாட்டிக்ஸ் வேலை செய்யும் என்று....
இந்த போர்டுதான் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

இந்து-முஸ்லீம் கலவரத்தை தூண்டி விட்டு....விருப்பத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது வெள்ளைக்கார அரசு என்பதே இக்குறியீட்டின் விளக்கமாகிறது.
கேபிடல்=முதலாளித்துவ பிரிட்டிஷ் அரசு
வாட்ச்=பார்த்துக்கொண்டிருப்பது.
கம்பெனி=கிழக்கிந்திய கம்பெனி.
இந்தப்பெயரில்தான் இங்கிலாந்து பேரரசு இந்திய துணைக்கண்டத்தை ஆக்கிரமித்தது.

எய்தப்பட்ட அம்புகள் போல் இஸ்லாமியர்கள்... குழு மனப்பான்மையுடன்... ஆக்ரோஷத்தோடு அலைபாய்வதை... சாகேத் ராம் காரில் வரும் காட்சிகள் சித்தரிக்கின்றன.


இங்கேதான்...இஸ்லாமிய நல்லொழுக்கத்துக்கு பிரதிநிதியான அம்ஜத்துக்கு... நேர் எதிர்மறையான அல்தாப் அறிமுகமாகிறான்.
அவனது உரையாடல் மூலமாக அவன் சாகேத்ராமின் மனைவி மீது மோகத்துடனும்...வன்மத்துடனும் இருப்பதை உணரமுடிகிறது.
அவனது செயல்பாட்டில்....வஞ்சகத்தை நயமாக மூடி மறைக்கும் வித்தை இருப்பதை புரிய முடிகிறது.
காரின் மீது அழுகிய தக்காளி வீசப்படுகிறது.
சாகேத் ராமின் முன்னால்... வீசியவனை கடிந்து கொள்வது போல் நடிக்கிறான்.
காரின் பின்னால்... அவனே தக்காளியை அடிப்பான்.
அவனது உடல் மொழி,ரியாக்‌ஷன் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்ற இஸ்லாமியர்களிலிருந்து வேறுபட்டிருப்பதை உணரலாம்.

ராம் : வாட்டீஸ் ஹாப்பனிங்?
டோண்ட் சீ த போலிஸ் எனி வேர்!


சர்தார்ஜி டிரைவர் : ட்டுடே இஸ் ஆகஸ்ட் 16th சர்....
போலீஸ் செலிபரேட்டிங் ஹாலி டே சர்....
அண்ட் அவர் பிரிமியர் சுஹ்ராவர்தி செலிபரேட்டிங் ஜின்னா சாப்ஸ்...
டைரக்ட் ஆக்‌ஷன் டே...
ஆஃகிர் ஃப்ரீஸ்ட் அண்டு ஃபார்மோஸ்ட் ஹி இஸ் எ முஸ்லீம் லீகி... 


1946 ஆகஸ்ட் 16ம்நாளை,ஜின்னா... பாகிஸ்தான் கோரிக்கைக்காக நேரடி நடவடிக்கையை அறிவித்தார்.
அதற்காக அன்று பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட...
இஸ்லாமிய முதலமைச்சர் சுஹ்ராவர்த்தி... அந்நாளைஅரசு விடுமுறையாக அறிவித்து விட்டார்.


முஸ்லீம்கள் சூறையாடலில் இறங்கியது...
பதிலடியாக சீக்கியர்களும்,இந்துக்களும் எதிர் சூறையாடலில் இறங்கியது...
பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது.
ஆண்கள் என்றால் படுகொலை...
பெண்கள் என்றால் பாலியல் வன்முறை+படுகொலை.
ஹூக்ளி நதியில் படகுகள்... பிணங்களின் மீதுதான் மிதந்தன.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த கருப்பு வரலாற்றின் எஸ்ஸென்சை மேற்படி டயலாக்கில் கேட்டோம்.
தொடர்ந்து காட்சிகளிலும் காணவிருக்கிறோம்.

17 comments:

  1. [Capital Watch Co.]?...! அருமையான விளக்கம் சார்...சாதாரணமா பார்க்கிறவங்களுக்கு ஒன்னுமே புரியாது... தேர்ட் ஐ வியூ என்று இதை தான் சொல்றாங்கலோ...அன்பே சிவம் படத்தில் தொழிளாலியின் சம்பளம் ..ஒரு சிவனின் படத்தினுள் லாஜிக்கா வைத்திருப்பார்..பாட்டு சீன்...இங்கு முதலாளித்துவத்தின் தாக்கம்..படத்திலேயே விளக்கம் வருவதால் மற்றவர்கள் புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  2. வணக்கம்...கலா குமரன்...
    தங்கள் பாராட்டு எனக்கு மகிழ்வை தருகிறது.
    அன்பே சிவம்... கமலின் மிகச்சிறந்த படங்களுள் ஒன்று.
    அது பற்றியும் என்றாவது எழுத வேண்டும்.

    ReplyDelete
  3. மறுபடியும் படத்தை பார்க்க வேண்டும் நண்பரே...நிறைய மிஸ் செய்து விட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. நான் இருபது தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்.
      இன்னும் பிடிபடாத விஷயங்கள் நிறைய இருக்கிறது....
      நண்பா!

      Delete
  4. கமல் மலேசியா சென்றிருந்த சமயம், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி அவரை நேர்காணலுக்கு அழைத்திருந்தது.
    அப்போது நேயர்கள் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேள்விகள் கேட்கலாம் அனா அறிவித்தனர்.
    அப்போது ஒரு நேயர் அவரிடம் கொண்ட உரையாடலின் ஒரு ஒரு பகுதி பின்வருமாறு:
    நே: சார்! எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். ஹேராம்ல நீங்க நிகழ்காலத்தை black and white -லேயும் , இறந்த காலத்தை கலர்- லேயும் படமாக்கி இருப்பீங்க. ஆனா- நிகழ்காலத்துல நெருப்பு மட்டும் கலர்ல எறிஞ்சுட்டு இருக்கும். இதுக்கு என்ன சார் அர்த்தம் எனக்கு புரியலையே?!
    கமல்: நான் உங்கள ரொம்ப பாராட்டுறேன். ஏனா, நெறைய பேர் புரியலனு சொல்லமாட்டாங்க, மாறாக பிடிக்கலைன்னு சொல்லிடுவாங்க. நீங்க நேர்மையா பேசி இருக்கீங்க.
    அதுக்கு காரணம் என்னனா அந்த காலத்துல சத்தியம், நேர்மை போன்ற விஷயங்கள் அப்படியே இருந்தன. இன்றோ எல்லா விஷயங்களும் நிறம் மாறி விட்டன. ஆனால் வன்முறை என்கிற 'நெருப்பு' மட்டும் நிறம் மாறாமல் எரிந்து கொண்டே இருக்கின்றது.

    (நான் வாயடைத்துப் போய்விட்டேன்)

    ReplyDelete
  5. நான் முந்தைய பதிவுகளில் இந்த கலர் குறியீட்டை குறிப்பிட்டிருந்தேன்.
    கமலே... தனது பேட்டியில் சொல்லியிருப்பது... ஒரு படைப்பாளியின் தீர்ப்பு.

    நன்றி...நாகசுப்ரமணியன்.

    ReplyDelete
  6. ஹாலிவுட் உலகை கலக்க செல்லும் கமலஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.

    இவ்வளவு விசயங்களை படிக்கும்போதுதான் கவனமூன்றி படம் பார்க்க வேண்டுமென்பது புரிகிறது..

    உண்மையாகவே சினிமாவை இந்த பதிவுகள் மூலம் வேரூன்றி ரசிக்க துவங்கிவிட்டேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டம் மிகுந்த மன நிறைவை தருகிறது.

      தரமான படங்களில்...இது போன்று புதையல்களை ஒளித்துதான் வைத்திருப்பார்கள்.
      அதை கண்டு பிடித்து யுரேகா என்று கத்துவதில்தான்... மகிழ்ச்சி.

      Delete
  7. முதல் கொஞ்ச காட்சிகளுக்கே இவ்வளவு அலசல்கள் தேவைப்படுவதைப் பார்த்தால் இது படமா? இலக்கியமா?ங்கற சந்தேகமே வந்துருது..
    உங்கள் பணி கடினமானது! அதையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள்.. நன்றி நண்பா!!

    ReplyDelete
    Replies
    1. //முதல் கொஞ்ச காட்சிகளுக்கே இவ்வளவு அலசல்கள் தேவைப்படுவதைப் பார்த்தால் இது படமா? இலக்கியமா?ங்கற சந்தேகமே வந்துருது.. //
      சந்தேகமே வேண்டாம்.
      அதனால்தான் மேலை நாட்டு விமர்சகர்கள் இப்படத்தை இந்திய சினிமாவின் காவியம் எனக்கொண்டாடுகிறார்கள்.

      Delete
  8. hai sir...

    i am a great fan for your posts about hey ram... i have tried to speak with you.. but i couldnt catch in phone.

    all the best

    ReplyDelete
    Replies
    1. நன்றி...மனோ.
      என் அலை பேசி எண் 090039 17667.
      தொடர்பு கொண்டு பேசுங்கள்.மகிழ்வேன்.

      Delete
  9. JZ மற்றும் கோவியின் கருத்துக்களை பார்த்தால் நீங்கள் எழுத ஆரம்பித்ததின் நோக்கம் நிறைவு பெற்று கொண்டே இருக்கிறது போல தோன்றுகிறது. பல பேர் வருடக்கணக்கில் blog எழுதியும் சாதிக்காதது, நீங்கள் சாதித்துவிட்டீர்கள் , பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. நண்பர் செந்தில் அவர்களே!
    என் மீது கொண்ட அதீத அன்பினால் இப்படி பாராட்டு மழையை பொழிந்து தள்ளி விட்டீர்கள்.

    // பல பேர் வருடக்கணக்கில் blog எழுதியும் சாதிக்காதது, நீங்கள் சாதித்துவிட்டீர்கள்//

    இந்தக்கருத்தை மட்டும் தங்கள் சார்பாக... நானே வாபஸ் பெற என்னை அனுமதியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வாபஸ் பெறுகிறேன் என்று சொன்னதால் என் தன்னிலை விளக்கம் அவசியமாகிறது. திரை விமர்சனம் என்பது ஒரு tricky வேலை. கத்தி மேல் நடப்பது போல. திரையில் பார்த்ததை எப்படி நீங்கள் வார்த்தையில் விளக்குவீர்கள்? எவ்வளவு சரியாக செய்தாலும், குறை இருக்கும். சரியாக செய்யாவிட்டால்? குருடன் யானையை தடவி பார்த்த கதைதான். (யானையாவது பரவாயில்லை; சில படங்கள் நிறங்களை போல - குருடரிடம் "பச்சை" என்ற நிறத்தை விளக்குங்கள் பாப்போம்).

      திரை விமர்சனத்திற்கு இரண்டு பாணிகள் உள்ளன. ஒரு படத்தை பார்த்து முழு கதை இது, இயக்குனர் இவர், இவர்கள் நடித்து இருக்கிறார்கள், இசை இவர் அமைத்து இருக்கிறார் என்று எழுதுவது. இதைதான் நம் பத்திரிக்கைகள் காலம் காலமாக செய்து வருகின்றன. இதை பின் பற்றியே பல பேர் blog எழுதுகிறார்கள்.

      இன்னொரு பாணி, படத்தின் கதையை மேலோட்டமாக சொல்லி, கதாபாத்திரங்களின் செயல்கள், உள் நோக்கங்கள், அந்த செயல்கள் கதாபாத்திரங்களின் குணாதிசியத்தை ஒட்டியே இருக்கிறதா மற்றும் தொழில் நுட்பங்கள் அந்த படத்தின் atmosphere-கு தகுந்தவாறு இருக்கிறதா, கதைக்கு உதவி செய்கிறதா என்று எழுதுவது. இது கடினம். ஏனென்றால், அதற்கு நீங்கள் கொஞ்சம் அஸ்திவார வேலை செய்ய வேண்டும் - நிறைய நல்ல படம் பார்க்க வேண்டும், நிறைய படிக்க வேண்டும். மேலும், இசை, editing, cinematography, etc. பற்றி அடிப்படை அறிவும் வேண்டும். இத்தகைய விமர்சர்கள் நமக்கு ஆசிரியர்கள் போல; ஒரு நல்ல ஆசிரியர் புத்தகத்தில் உள்ளதை நன்றாக விளக்குவார். சிறந்த ஆசிரியர் உங்களை புத்தகத்திற்கு வெளியே தேட வைப்பார்.

      உதாரணத்திற்கு, நீங்கள் 12 Angry Men பற்றி எழுதுகிறீர்கள் என்றால், cinematography எப்படி அந்த கதை களத்திற்கு உதவி புரிகிறது என்று எழுத வேண்டும். நீங்கள் Adaptation பற்றி எழுதுகிறீர்கள் என்றால், ஏன் அந்த கதையின் போக்கு படத்தின் third act -ல் திசை மாறுகிறது என்று சொல்ல வேண்டும். இன்னொரு உதாரணமாக, Stagecoach-ஐ பார்த்தால், ஒரு சாதாரண படமாகவே தெரியும், ஆனால் ஒரு நீங்கள் ஒரு film enthusiast/critic என்றால், நீங்கள் படம் பார்க்கும் போதே உங்களுக்கு அது எந்த மாதிரியான படம் என்று விளங்கிவிடும்.( Stage Coach பற்றி: 1. Citizen Kane எடுக்கும் போது Orson Welles 30 - 40 Stagecoach பார்த்தார். (Ref: This is Orson Welles) 2. David Bordwell - ன் ஒரு சிறிய analysis இங்கே : http://www.davidbordwell.net/filmart/Stagecoach_FilmArt_4th_1992_366.pdf)

      நான் Pulitzer Prize வென்ற Roger Ebert-ன் இரண்டு link கீழே தந்துள்ளேன். நம் ஊர் விமர்சகர்களுக்கும் இவருக்கும் வித்தியாசம் தெரிகிறதா?
      1. http://www.rogerebert.com/apps/pbcs.dll/article?AID=/20090715/REVIEWS08/907159989/-1/rss
      2. http://rogerebert.suntimes.com/apps/pbcs.dll/article?AID=/20110801/REVIEWS08/110809999/1023

      நீங்கள் blog எழுதும் பாணி இரண்டாம் பாணி. வாசகர்களை படத்திற்கு வெளியேயும் தேட வைக்கிறீர்கள். அதனாலேயே அந்த பின்னூட்டம். (இப்படிப்பட்ட விமர்சகர்கள் இல்லாத காரணத்தாலேயே நாம் குப்பை படங்களை தயாரிக்கிறோம் என்பது என் தாழ்மையான கருத்து)

      யாரவது Hey Raam படத்தின் உங்களுடைய analysis தவறு என்றோ, Hey Raam படத்தில் ஏதாவது தவறு (narration, screenplay, inconsistent characterization etc) இருக்கிறது என்று technical-ஆக சொன்னால், நானே அவர்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, என் கருத்தை வாபஸ் பெறுகிறேன்.

      Delete
  11. வணக்கம் சார்,

    சிறு வயதில் மற்றவர்கள் பாராட்டுகிறார்களே என்று , வீம்புக்கு நல்ல விஷயங்களைக் கூட மட்டம் தட்டுவது உண்டு . அந்த இழி செயல் இப்போதும் என்னை வருத்தப்படுத்தும். " இசையில் தொடங்குதம்மா " பாடலை எனது நண்பன் விரும்பி ரசிப்பதை பொறுக்காமல் , அந்தப் பாட்டை கேட்காமலேயே வெறுத்தேன் .

    இரண்டு வருடங்களுக்கு முன்பு இணையதளத்தில் ராக அடிப்படையிலான பாடல்களை தேடி கேட்கும் போது , ஹம்சநாதம் அடிப்படையில் அமைந்த இப்பாடலை சுவாரஸ்யமின்றி கேட்கத் தொடங்கினேன் . நம்புங்கள் ஒருநாளைக்கு பத்து தடவையாவது கேட்டிருப்பேன் , கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு போதை இறங்கவில்லை . சொல்வனத்தில் வந்த சுகாவின் பாலேஷ்வருடானான பேட்டி , எவ்வளவு மிஸ் செய்துவிட்டேன் என்பதைப் புரிய வைத்தது . ( என்னடா இளையராஜாவை பற்றி பேசுகிறானே ? ) .

    அதன் பின்னர் தான் நண்பனிடம் இருந்து இந்தப் படத்தை வாங்கிப் பார்த்தேன் . ஹிந்தி , ஆங்கிலம் , தமிழ் மூன்றும் இப்போது புரியும் என்பதால் பிரச்சினை இல்லை. சுயபுராணம் எனக்கே அலுக்கிறது .

    உங்களுடைய குறியீடு விளக்கங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. ஆயிரம் பேர் படித்தாலும் முப்பது , நாப்பது பேர் தான் பின்னூட்டமிடுவார்கள் , தயவு செய்து நிறையத் தகவல் கொடுங்கள்.

    by the way , 1857 க்குப் பிறகு , இந்திய நிர்வாகம் நேரடியாகவே கிழக்கிந்தியக் கம்பனியிடம் இருந்து பிரிட்டிஷ் மகாராணியிடம் சென்று விட்டது . அதனால் Capital Watch Co யில் உள்ள Co ., கிழக்கிந்தியக் கம்பனியைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை . அதனால் என்ன Capital Watch மட்டுமே போதுமே , அந்தப் பரதேசிப் பயல்கள் வேடிக்கை தான் பார்த்தார்கள் என்பதை உணர்த்த .

    அன்புடன்

    மா.சட்டநாதன்

    ReplyDelete
  12. நண்பரே!
    கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் நம் நாட்டிற்குள் வந்து நம்மை சுரண்டிய கொள்ளைக்காரகும்பலின் வரலாற்றை நாம் தேடிப்பிடித்து படிக்க இந்த குறியீடு இருக்கலாம் எனக்கருதினேன்.
    இந்த வாரக்குமுதத்தில் அவரது பேட்டியும் இதை உறுதி படுத்துவது போல் உள்ளது.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.