Aug 25, 2011

நாகேஷ்-மறக்க முடியாத கலைஞன்

கோவை புத்தகக்கண்காட்சி வெற்றிகரமாக நடந்தது.
புத்தக விற்பனையில் ஈரோடு,திருப்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
டாஸ்மாக் விற்பனையில் முதலிடமும்...புத்தக விற்பனையில் மூன்றாம் இடமும் பிடித்தது கோவைக்கு அவமானம்.
சிறப்பு பேச்சாளராக வந்த ஜெயமோகன் காலி நாற்காலிகளிடம் பேசியது மிகப்பெரிய அவமானம்.
அடுத்த ஆண்டாவது கோவை மக்கள் அவமானத்தை துடைப்பார்களா?


நாகேஷ் பற்றி எழுதுங்கள் என நண்பர் கொழந்த கேட்டு பல மாதம் ஆகிவிட்டது.
அவர் மறந்தே போயிருப்பார்.
ஆனால் நான் மறக்கவில்லை.

சிரித்து வாழ வேண்டும் என்ற தலைப்பில் நாகேசின் வாழ்க்கை அனுபவங்களை எஸ்.சந்திர மவுலி என்பவர் தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அதிலிருந்தும்....
நான் நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டறிந்தவற்றையும் இப்பதிவில் காணலாம்.

நாகேஷ் தமிழில் செய்த சாதனைகள் மற்ற நகைச்சுவை நடிகர்கள் நெருங்க முடியாதது.
நாகேஷ் கால்சீட் இருந்தால்தான் எம்ஜியார் கால்சீட் வாங்க முடியும்.
அந்தளவுக்கு கொடி கட்டி பறந்தார்.

நாகேஷ் தனது முதல் நாடகத்திலேயே மிகச்சிறந்த நடிப்புக்கான பரிசை பெற்றவர்.
“முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்கிற சந்தோசம்...
 ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்கிற பயம்...இப்படி ஒரு கலவையான உணர்வுடன் மேடையின் பக்கவாட்டில் காத்துக்கொண்டிருந்தேன்.

 ‘அடுத்த பேஷண்ட்’என்று டாக்டர் சொல்ல,காட்சி ஆரம்பித்தது.
 ‘சட்டென்று உள்ளே போ’என்று என்னை லேசாகத்தள்ளினார் டைரக்டர்.
‘டாக்டர் கூப்பிட்டவுடன் உள்ளே போவதற்க்கு நான் என்ன கம்பவுண்டரா சார்!
பேசண்ட்!
அதுவும் வயிற்று வலியால் துடிக்கிற பேசண்ட்!
 எப்படி என்னால்,கிடுகிடுவென்று நடந்து போக முடியும்?என்று லேசான குரலில் ஆனால் அழுத்தமாக பதில் சொல்லிவிட்டு,
 ‘டாக்டர்’ என்று வீரிட்டு அலறியபடி மேடைக்குள் நுழைந்தேன்.
தீடிரென்று இப்படி ஒரு வீரிடும் குரலை எதிர்பார்க்காத பார்வையாளர்கள்
சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர்.
நிஜமாகவே வயிற்று வலியால் துடிக்கிற நோயாளி போல் உடலை வளைத்து நெளித்து கைகளால் வயிற்றை பிடித்துக்கொண்டே போய் நடந்து,
டாக்டருக்கு பக்கத்தில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் போய் ஒரு வழியாக உட்கார்ந்தேன்.
என்ன உடம்புக்கு? என்று டாக்டர் கேட்க,
 நான் அதை சட்டையே பண்ணாமல்.வயிற்றை பிடித்துக்கொண்டே ‘அம்மா’ என்று துடித்தேன்.
 என் கையில் ஒரு சீட்டு இருந்தது.
அதை டாக்டரிடம் நீட்டினேன்.
அதை அவர் வாங்குவதற்க்கு தன் கையை கொண்டு வந்த போது,
சட்டென்று என் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு,உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி,
ம்மா... ஆஆஆ...என்றேன்.
மறுபடி சீட்டை கொடுக்க நீட்டினேன்.
டாக்டர் வாங்க வரும்போது,கையை பின்னால் இழுத்துக்கொண்டு அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.....என்று கத்தினேன்.
ஒன்றரை நிமிடங்களுக்கு...விதவிதமான ஏற்ற இறக்கங்களை குரலில் கொண்டு வந்து அம்மா என்றலறி;துடித்து கதறினேன்...
யாரடா இவன்!தீடிரென்று வந்து இப்படி அமர்க்களப்படுதுகிறானே!என்று பார்வையாளர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்!
கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்து கொண்டிருந்த செக்கச்சிவந்த மனிதர் கை தட்டி என் நடிப்பை மிகவும் ரசித்ததை பார்த்தேன்.
அவர்தான் தலைமை விருந்தினர்.
நாடகம் முடிந்ததும் மைக்கை பிடித்த அவர்,
நாடகம் நன்றாக இருந்தது.ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து,
ந்ம் அனைவரையும் கவ்ர்ந்து விட்டார்அந்த தீக்குச்சி மனிதர்.
அவருக்குத்தான் முதல் பரிசு...
என பரிசு கோப்பையை வழங்கினார்.

அன்று என்னை பாராட்டி பரிசளித்த விஐபி யார் தெரியுமா?
மக்கள் திலகம் எம்ஜியார்.

நேற்றும் இன்றும் நாளையும் சிரிப்பை வாரி வழங்கும்
காதலிக்க நேரமில்லை....
பாலையாவுக்கு கதை சொல்லும் காட்சி...
 எப்படி எடுப்பது என்று இயக்குனர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும் பேசிக்கொண்டிருந்தனர்.
காக்கா கிழவிகிட்ட வடையை திருடின கதையை வைத்துக்கொள்ள்லாமா?
என கோபு கேட்க,
 ஸ்ரீதர் நிராகரித்து,
 “கதை சொல்லணும்;ஆனா அது கதை போல இருக்கக்கூடாது”என்றார்.
“டைரக்டர் தாதா மிராஸி சீன் சொல்லுவாரே அது மாதிரியா”என்றார் கோபு.
ஐடியா பிரமாதம் எனப்பராட்டினார் ஸ்ரீதர்.
டைரக்டர் தாதாமிராஸி கதை சொல்கிற பாணியே தனிதான்.

ஹீரோ நடந்து வந்துகிட்டு இருக்காரு...
தட்...தட்...தட் சப்தம்,
தீடிரென்று மழை...
ஹீரோவுக்கு பயம்.
மனசு திக்...திக்...திக்..னு அடிச்சுக்குது.
ஊ....ஊ....ஊ...தீடிரென்று மரத்திலிருந்து சப்தம்.
ஒரு கணம் கதிகலங்கி போகிறார் ஹீரோ.
ஜல்...ஜல்...ஜல்...கொலுசு ஒசை.
இருட்டில் பயந்தபடி வருகிறார் ஹீரோயின்...
இந்த ரீதியில் பின்னணி இசையுடன் அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போவார்.
அதன்படி நான் நடித்தக்காட்சிதான் இன்றும் மக்களால் பேசப்படுகிறது.

திருவிளையாடல் தருமி நாகேசின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.

"தருமி மேக்கப் போட்டு ரெடியாக இருந்தேன்.
சிவாஜி வரவில்லை .லேட்டாகும். என்றார்கள்.
சிவாஜி வரும் வரை சோலாவாக என்னை வச்சு கொஞ்சம் எடுக்கலாமே என்றேன் இயக்குனர் ஏ.பி.என்னிடம்.
அவர்,  “படத்தின் சீன் இது ..நீ உன் இஷ்டப்படி இம்ப்ரவைஸ் பண்ணீக்கோ” என முழு சுதந்திரம் கொடுத்தார்.
அந்த சமயம் செட்டில் இருவர், “சிவாஜி இப்போ வந்திடுவார்,
இல்ல..இல்ல..
வரமாட்டார்.லேட்டாகும்”
என தங்களுக்குள் பேசிகொண்டிருந்தது காதில் விழுந்தது.
அதையே துவக்கமாக எடுத்துக்கொண்டேன்.
வர மாட்டான்...வரமாட்டான்..
அவன் நிச்சயம் வர மாட்டான்.
எனக்குத்தெரியும்..அவன் வரமாட்டான்...
என புலம்பியபடி ஒரே ஷாட்டில் முடித்தேன்.
பிரமாதம்...ரொம்ப பிரமாதம் எனப்பாராட்டினார் ஏ.பி.என்.

சில நிமிடங்களில் பரமசிவனாக மேக்கப்போட்டபடி சிவாஜி கம்பீரமாக நுழைந்தார்.
இருவருக்கும் காட்சியை விளக்கினார் இயக்குனர்.
புலவரே...என்ன புலம்புகிறீர்?என்றார் சிவாஜி.
ம்...இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல...
பேசும் போது,ரொம்ப இலக்கணமா பேசு!
பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு! என்றேன்.
சிவாஜி, “என்ன ஏபிஎன்...நாகேஷ் பேசுறது புதுசா இருக்கு?என்று கேட்க ,
“நீங்க பரமசிவன் சார்...
அவர் அன்றாடங்காச்சி புலவர்.
அவர் லெவல் அவ்வளவுதான்,
ஏதோ புலம்பட்டும்...விட்டுடுங்க”என்றார் ஏபிஎன்.

மொத்த சூட்டிங் முடிந்து டப்பிங் தியேட்டரில் சிவாஜி நான் நடித்த மொத்தக்காட்சியையும் பார்த்தார்.
 “மீண்டும் இந்த சீனைப்போடுங்க”எனச்சொல்லி மீண்டும் பார்த்தார் சிவாஜி.
எதற்க்காக இந்தக்காட்சியை பார்க்கணும் என சிவாஜி சொல்றார்!அவ்வளவுதான் இந்தக்காட்சி...
பிடிக்கவில்லை.....
தூக்கிவிடுங்கள் எனச்சொல்வாரோ என்ற பயத்தில்...துக்கத்தில் தொண்டை அடைத்தது.
சிவாஜி ஏ.பி.என்னை அழைத்து,
இந்த மாதிரி நடிப்பை நான் பார்த்தது இல்லை.
நாகேஷ் நடிப்பு ரொம்ப்ப்பிரமாதம்.
இந்தக்காட்சியில ஒரு அடி கூட கட் பண்ணிடாதீங்க...
எல்லோரும் பாராட்டுவாங்க..
அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்..
அவன் பொறுப்பில்லாத பயல்.
டப்பிங் கரெக்டா பேச வைங்க..
ஒழுங்கா பேசலன்னா வெளிய விடாதீங்க”என்றார்.
கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மிகவும் சந்தோசம்.
சிவாஜி மாபெரும் நடிகர் மட்டுமல்ல...மிகச்சிறந்த ரசிகர்...எனவும் புரிந்து கொண்டேன்.”

நாகேஷ் இப்புத்தகத்தில் நாம் திரையில் இன்றும் ரசிக்கும் அத்தனை காட்சிகளும் உருவான பின்னணியை கூறி அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.
ஸ்ரீதர்,பாலச்சந்தர்,
கிருஷ்ணன் -பஞ்சு,எஸ்.எஸ்.வாசன்,ஏவிஎம்,கண்னதாசன் போன்ற ஜாம்பவன்களுடன் நாகேசுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை சுவைபட கூறி உள்ளார்.
நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்.


24 comments:

  1. நான் மறக்கவில்லை சார்...ஹி....ஹி....

    அந்த புக்க நானும் படிச்சிருக்கேன்.ஆனா...அதுல அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை என்பது என் கருத்து..வேற எதுனா உங்களுக்கு தெரிஞ்ச புக் இருக்கா ?

    நண்பர்களே........எதுனா இருந்தா சொல்லுங்க

    ReplyDelete
  2. முழுசா படிக்கல..ஆபிஸ்......அப்பறம் வரேன்.......

    ReplyDelete
  3. இந்த நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நாகேஷ் என்பதில் ஐயமில்லை நண்பா...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. நாகேஷுக்கு இதைவிடப் பெரிய Tribute கொடுக்க முடியாது அண்ணா..
    வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  5. அட்டகாசமான பதிவு பாஸ்! தமிழ்சினிமாவின் ஒரு மிகச்சிறந்த கலைஞனின் அனுபவங்கள்..அருமை!

    ReplyDelete
  6. நாகேஷைப் பற்றி பேசினால் கூட சுவை வந்துவிடுகிறது. சுவாரசியமானப் பதிவு. அபூர்வ சகோதரர்கள் வில்லன் நாகேஷை இப்போது நினைத்தால் கூட பயம் வருகிறது. நகைச்சுவையைத் தாண்டி ஒரு கொடும் மனிதனின் முகத்தை அப்படத்தில் கொண்டிருப்பார். அற்புதமான நடிகர். நிரப்ப முடியாத பக்கம் தான்.

    ReplyDelete
  7. நாகேஷ் தமிழ் சினிமாவில் நிரப்ப முடியாத பக்கம்///miga seri. Nala pathivu

    ReplyDelete
  8. @கொழந்த

    //அந்த புக்க நானும் படிச்சிருக்கேன்.ஆனா...அதுல அவரது ஆளுமை முழுமையாக வெளிப்படவில்லை என்பது என் கருத்து..//
    நாகேசின் அந்திமக்காலங்களில் இந்தப்புத்தகம் தொகுத்து வெளியிடப்பட்டது.
    நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய பாக்கியம் படைத்தவன்.
    அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.
    இந்த நூலில் இவ்வளவு வந்ததே பெரிது.
    நிறைய மறந்து விட்டார்.
    பேசும் போது தாவித்தாவி வேற எங்கேயோ போய் விடுவார்.
    தொகுத்தவர் செய்த முயற்ச்சியில்தான் இவ்வளவாவது நமக்கு கிடைத்தது.

    ReplyDelete
  9. @விக்கியுலகம்

    //இந்த நூற்றாண்டின் இணையற்ற நடிகர் நாகேஷ் என்பதில் ஐயமில்லை நண்பா..//
    நாகேசை ரசித்து வாழ்ந்த பரம்பரை நாம்.
    அவரை பாராட்டுவதே ஒரு தனி இன்பம் நண்பா....

    ReplyDelete
  10. sir,
    Nagesh was a legend..avaroda expressions superb..avaru villana nadikum podhu romba kodurama irupparu,also character roles whatever he does it was fantastic..good post

    ReplyDelete
  11. @JZ
    //நாகேஷுக்கு இதைவிடப் பெரிய Tribute கொடுக்க முடியாது அண்ணா..
    வாழ்த்துக்கள்!!//
    நாற்பது ஆண்டு காலம் என்னை மகிழ்வித்த நாயகனுக்கு என் சிறு நன்றிக்கடன்.

    ReplyDelete
  12. @ஜீ
    நண்பரே!மசாலா சினிமாக்களுக்குள் தன் தனித்தன்மையை விட்டு கொடுக்காமல் உலகத்தரத்திற்க்கு தனது பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.அவரது உயரத்தை என் போன்ற ஏணியால் அளக்க முடியாது.

    ReplyDelete
  13. @விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
    //நாகேஷைப் பற்றி பேசினால் கூட சுவை வந்துவிடுகிறது. சுவாரசியமானப் பதிவு. அபூர்வ சகோதரர்கள் வில்லன் நாகேஷை இப்போது நினைத்தால் கூட பயம் வருகிறது. நகைச்சுவையைத் தாண்டி ஒரு கொடும் மனிதனின் முகத்தை அப்படத்தில் கொண்டிருப்பார். அற்புதமான நடிகர். நிரப்ப முடியாத பக்கம் தான்.//

    நாகேசை கடைசி காலங்களில் கமல் மட்டுமே பயன்படுத்தி பயன்பெற்றார்.
    அதில் நம்மவர்,மகளிர் மட்டும் மறக்க முடியாத பாத்திரங்கள்.

    ReplyDelete
  14. @திணேஷ்
    @பாலு
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
    பாலு....
    நாகேஷ் சவாலே சமாளியில் சின்னப்பண்ணயாக வந்து கலக்குவார்...பாருங்கள்.வில்லத்தனமான காமடி அது.

    ReplyDelete
  15. பாஸ்கர் சார் வரவர வாரத்துக்கு ஒரு பதிவு தான் வருது...... பார்த்து ரெண்டு மூணு போடுங்க................

    ReplyDelete
  16. வாங்க உலகசினிமா...

    // வரவர வாரத்துக்கு ஒரு பதிவு தான் வருது...... பார்த்து ரெண்டு மூணு போடுங்க................//
    இனி புத்தகக்கண்காட்சி நாட்களில் என்னால் எழுதமுடியாது.
    சற்று மெதுவாகத்தான் வரும்.
    பொறுத்தருள்க...

    ReplyDelete
  17. தெரிந்த மனிதர்.தெரியாத விஷயம்.வாழ்த்துக்கள்.அப்புறம் நாங்க (கோவை மக்கள் ) விரும்பறது இல்ல புத்தகம்
    ...அடிக்கறது ஓல்ட் மங் ரம்...
    நீங்க வைக்கலாம் கண் காட்சி
    ஆனா நடக்கிறது டாஸ்மாக் ஆட்சி
    ஏ..டன் டனக்க..டன் டனக்க....
    புத்தக கண்காட்சி பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.உங்கள வந்து சந்தித்த அந்த பதிவுலக எழுத்து சித்தர் சிபி, அப்புறம் வளரும்... அட...நான்தானுங்க...இவங்களை பத்தி கொஞ்சம் ....உங்க வாயால...சாரி எழுத்தால...

    ReplyDelete
  18. வணக்கம் மாப்பிள போன பதிவுக்கு வரமுடியாம போச்சு மன்னிச்சுக்கோயா.. இந்த பதிவில நாகேஷை பற்றி அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் இங்கு நீங்கள் இட்டிருக்கும் போட்டோவே ஆயிரம் கதை சொல்லும்.. வாழ்த்துக்கள் மாப்பிள்ள..


    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  19. சிவாஜிக்கு ஆனா மாதிரி 80களில் நாகேஷ் கடுமையாக வீணடிக்கப்பட்டார்.......................

    கமல் மட்டுமே அவரது வீரியத்தை உணர்ந்தவர் என்பது என் கருத்தும் கூட....................

    // நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய பாக்கியம் படைத்தவன்.
    அந்த அனுபவத்தில் சொல்கிறேன். //

    இத சொல்லிக்ட்டே இருக்கீங்க...அத பத்தி கொஞ்சம் நேரம் இருக்கும் போது சொல்லுங்க........

    ReplyDelete
  20. @கோவை நேரம்

    டி.ஆர் படம் பார்த்த எபெக்ட் உங்க பின்னூட்டம்.
    இந்த கண்காட்சியில் நடந்த நல்ல விசயங்களில் உங்களையும்..சிபியையும் சந்தித்தது அடங்கும்.
    பதிவர்களை சந்தித்த அனுபவத்தை தனி பதிவிட எண்ணியிருக்கிறேன்.

    ReplyDelete
  21. @காட்டான்

    காட்டான் குழ போட்டதை பாத்துட்டேன்.

    ReplyDelete
  22. >>>> நான் அவரிடம் நேரிடையாக உரையாடிய பாக்கியம் படைத்தவன்.
    அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.<<<<<

    //இத சொல்லிக்ட்டே இருக்கீங்க...அத பத்தி கொஞ்சம் நேரம் இருக்கும் போது சொல்லுங்க........//

    கமல் பற்றிதான் என்னிடம் நிறைய பேசினார்.
    அது பற்றி தனிப்பதிவு எழுதுகிறேன்.

    ReplyDelete
  23. அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

    "தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  24. நாகேஷ் கல்கியில் எழுதிய தொடர் செமயா இருக்கும்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.