
Nazarin[நாஸரின்]
இயக்கம் லுயி புனுவேல்
இவர் ஒரு மார்க்சியவாதி..நூறு சதவீத நாத்திகர்..இயக்குனர்களில் அக்மார்க் கலகக்காரர்.
முதல் இரண்டு படங்கள் சல்வெடார் டாலியுடன் இணைந்து பணியாற்றினார்.இவரது நாத்திக வெப்பம் தாங்காமல் டாலி வெளியேறினார்.இவரது எல்லா படங்களிலுமே சர்ரியலிசம் இருக்கும்.
இந்த முன்னுரையோடு இப்படத்தை அணுகுங்கள்.இந்த கவிதையின் உட்கூறுகள் பிடிபடும்.
இயேசுவை ஜெராக்ஸ் எடுத்து வாழும் இளம் பாதிரியார்தான் இப்படத்தின் நாயகன்.இருப்பதை கொடுத்து சிறப்புடன் வாழும் இலக்கணமாய் இருக்கிறார்.விளிம்புநிலை மக்களோடு வாழ்கிறார்.கொடுப்பதற்க்கு எதுவும் இல்லா சூழலில் அடைக்கலம் தேடி வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி.இங்கிருந்து துவங்குகிறது ஏழரைச்சனி.விரட்டி அடிக்கிறது திருச்சபையும் அதிகாரவர்க்கமும்.சமூகமும் இவரை சிலுவையில் தினமும் அறைகிறது .மனிதனாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதை உணர்த்தி விடை பெறுகிறது படம்.
இந்த மனித ஆத்மாவின் அழுத்தமான முகத்தை அற்புதமாக கேமரா பதிவு செய்துள்ளது.
அகத்தோற்றத்தில் நாத்திகத்தை பதிவு செய்த இப்படத்திற்க்கு வாடிகன் பரிசளித்தது .இதற்க்கு புனுவலின் பதில்.....Thank God.... நான் இன்னும் நாத்திகனாக இருக்கிறேன்..
நமக்கு இப்படி ஒரு சாமியார் இல்லையே என்ற ஏக்கம் எழுவதை தவிற்க்கமுடியவில்லை.நமக்கு வாய்த்தது எல்லாம் நித்தியானந்தாவாக இருக்கிறது.........ஹூம்.......