Oct 14, 2010

உதிரிப்பூக்கள்-தமிழில் உலகசினிமா



உதிரிப்பூக்கள் தமிழில் நான் பார்த்த முதல் உலகசினிமா.தமிழில் வந்த முதல் உலகசினிமா பாதை தெரியுது பார்.இயக்கியவர் இந்தியாவின் முதல் உலகசினிமாவான சின்னமோளை உருவாக்கிய நிமாய்கோஸ்.தயாரித்தவர்கள் கம்யூனிஸ்ட் இயக்க தோழர்கள்.இப்படம் ஓடினால் தங்கள் தொழில் நாறி விடும் என்று கருதிய ஏ.வி.எம் போன்ற மசாலா நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து படத்தை வாங்கி பிட் படங்கள் ஓடும் நாலாந்தர தியேட்டர்களில் ரீலிஸ் செய்து மக்களைச்சென்றடையாமல் பார்த்துக்கொண்டனர்.எம்.பி.சீனிவாசன் இனிய இசையில் வெளியான பாடல்கள் மட்டும் இன்றும் நம் செவிக்கு உணவளித்துக்கொண்டிருக்கிறது.




தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.....




......................................................................




.............................................................................




சிட்டுக்குருவி பாடுது தன் பெட்டை துணை தேடுது......





சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்......





உதிரிப்பூக்களை உருவாக்கிய மகேந்திரன் உருவானது முள்ளும் மலரும் படத்தில்தான்.தங்கப்பதக்கம் போன்ற மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த மகேந்திரனுக்கு கதையே கேட்க்காமல் வாய்ப்பளித்தார் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச்செட்டியார்.ஆனால் படத்தை பாதியில் நிறுத்தச்சொல்லிவிட்டார்.காரணம் கேட்டதற்க்கு,”ரஜினி கை,காலை ஆட்டி நடித்தால்தான் ரசிப்பார்கள்....நீ ரஜினிக்கு கை இல்லாமல் படமெடுக்குறீயாமே..என் காசை கரியாக்கவா..போ வீட்டுக்கு”என்றார். கமல் கேள்விப்பட்டு சமரசம் செய்தார்.படம் நட்டமானால் நான் அடுத்த படத்துக்கு கால்ஸீட் தருகிறேன் என்று உறுதியளித்தார் கமல்.ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பெண்டிங்...இனி பைசா தரமுடியாது எனச்செட்டியார் முரண்டு பிடிக்க இப்போதும் கை கொடுத்தது கமல்.அந்தப்பாடல் படமாக்க கைக்காசை கொடுத்தார் கமல்.அந்தப்பாடல் ..செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்......





இவ்வளவு உதவி செய்த கமலும்...உதவி பெற்ற மகேந்திரனும் ஏன் இணைந்து ஒரு படம் கூட தரவில்லை????????




ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு மவுஸ் வேலை செய்யமுடியாது.





முள்ளும் மலரும் மகத்தான வெற்றிபெற்றதில் அப்படத்தின் ஒளிப்பவாளர் பாலுமகேந்திராவின் பங்கு அதிகம் என்று மீடியாவும்,சினிமா இண்டஸ்ட்ரியும் சேர்ந்து கதைத்தன.எனவேதான் அசோக்குமாரோடு கை கோர்த்தார்.இவர்களது கூட்டணியில் வந்த வெற்றி படைப்புகள்




நெஞ்சத்தை கிள்ளாதே,உதிரிப்பூக்கள்,மெட்டி.




தமிழ்சினிமா உலகசினிமா பாதையில் கூட்டிச்சென்ற டிரண்ட்செட்டர் மகேந்திரன்.அந்தப்பாதை அடைத்து மசாலா பாதையில் திருப்பிவிட்டது ஏவி.எம்.என்னின் முரட்டுக்காளையும்,சகலகலாவல்லவனும்.





மகேந்திரனின் மாஸ்டர்பீஸ் உதிரிப்பூக்கள்.இன்றளவும் இப்படத்தின் தரம் இமயம்.




மனைவியின் தங்கை அழகிய நங்கை....அவளை தாரமாக்க துடிக்கிறான் நாயகன்.இவனது ஆசைக்கு எண்ணெய் வார்க்கும் சுயநலமிகளால், பலியாகிறான்.இவனது குழந்தைகள் உதிரிப்பூக்களாகின்றன.




விஜயன்,அஸ்விணி,சாருஹாசன்,சரத்பாபு என அனைவருமே யதார்த்தப்பிரதிகள்.




இளையராஜா இசையில் மோனாலிசப்பாணி கடைப்பிடித்திருப்பார்..... அழகிய கண்ணே பாடலில்..ஒரு தாயின் சந்தோசமும்,மனைவியின் துக்கமும் சரிவிகிதக்கலவையாக ஒலிக்கும்.பின்னணி இசையாக அநேககாட்சிகளில் மவுனத்தை இசையாக வழியவிட்டிருப்பார்.




படத்தின் டைட்டிலில் கதை புதுமைப்பித்தன் என்று வரும்.கதை படித்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும்.மகேந்திரன் மகத்துவம் தெரியும்.
இப்படத்தின் பாக்ஸாபிஸ் வெற்றி எல்லா பொய்களையும் கலைத்துவிட்டது.ஈரான் நாட்டு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இப்படம் பாடம்.இந்திய அரசும் இப்படத்தை பெருமைக்குறிய சொத்தாக வாங்கி பெருமை சேர்த்துக்கொண்டது.

Oct 9, 2010

The purple Rose of cairo-நடிகனின் சுயரூபம்







சீரியசான உலக சினிமா மத்தியல்... இப்படம் ஒரு ஜாலி திருவிழா.ஆனால் திருவிழாவில் பலி கொடுப்பது உண்டே...இங்கு பலியாடு சினிமா ஹீரோக்கள்.

ஹாலிவுட்டில் இருந்துகொண்டு ஹீரோக்களை இப்படி காயடித்த ஆண்மகன் வுடி ஆலன்...எழுதி இயக்கி இருக்கிறார்.

1930 ல் துவங்குகிறது படம்.அமெரிக்கா எத்தியோப்பியாவாக இருந்த காலம்.

கதாநாயகி சிசிலியா, அன்றாடம் அடி வாங்குகின்ற அடித்தட்டு மக்களில் ஒருத்தி.அவளின் தினசரி ஒரே சந்தோசம் சினிமா.ஒரே படத்தை தினசரி பார்ப்பாள்.ஒரு நாள் அவள் தினசரி பார்க்கும் சினிமா ஹீரோ,திரையில்
இருந்து நேரடியாக சிசிலியாவிடம் பேச ஆரம்பிக்கின்றான்.அது மட்டுமல்ல.. திரையில் இருந்து குதித்து சிசிலியாவின் சீட்டுக்கு அருகில் வந்து உரையாட ஆரம்பிக்கின்றான்..திரையில் இருக்கும் மற்ற காரக்டர்கள் திகைக்கின்றன.....சிசிலியாவும் திகைக்கிறாள்.... மற்ற ஆடியன்சும் திகைக்கிறார்கள்.....ஏன் படம் பார்க்கும் நாமும் திகைக்கிறோம்.இப்படி இருக்கவேண்டும் திரைக்கதை.நம் திரைக்கதாசிரியர்கள் வுடிஆலன் மூத்திரத்தை குடிக்கவேண்டும்..


இதற்க்கு பிறகு படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நீங்கள் பார்த்து அனுபவிக்கவேண்டியது .ஒரே ஒரு காட்சி மட்டும் சொல்லிவிடுகிறேன்....ப்ளீஸ்.....சினிமா ஹீரோவாக நடித்த....நடிகன் ...அவனும் களத்தில் குதிக்கிறான்..இவனது அறிமுக காட்சியிலேயே நடிகர்களது முகத்திரைகளை கிழிக்கிறார் வுடிஆலன்.'இப்படி உன் பட காரக்டர் ஊருக்குள் புகுந்து கலாட்டா செய்கிறதே' ...என்று கேட்டால் அலட்சியமாக தலை குலுக்குவான்.லாயர் போன் பண்ணி,'அடே பாவி அந்த காரக்டர் ஏதாவது கொலை ,கொள்ளை,கற்ப்பளிப்பு..... இப்படி எது செய்தாலும் மவனே நீதான் ஜெயிலுக்கு போகவேண்டும்' என்று எச்சரித்த பிறகு பதறி ஓடுவான் சிசிலியாவையும்,தனது காரக்டரையும் சந்திக்க.
இந்த இடத்தில்..... நமது ஊர் ஹீரோ மகள் திருமணம்.... ரசிகர்கள் வரக்கூடாது எச்சரிக்கை....சார் சமீபத்தில் நம்ம படம் ரீலிசாகணும்-மந்திராலோசனை ....ஊருக்கு ஊர் விருந்து பல்டி அறிக்கை.... ஞாபகம் வந்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல..

சினிமா நடிகன் நிஜம் வேறு...நிழல் வேறு என்பதை சிசிலியாவுக்கும் நமக்கும் தெளிய வைக்கிறார் இயக்குனர்... கிளைமாக்ஸில்.....

வசூலில் மட்டுமல்ல விருதுகளையும் வாரி குவித்தது இப்படம்.