Nov 10, 2013

கமல்ஹாசனை நேசிப்பேன்.

நண்பர்களே...
கமல்ஹாசன் நடத்திய பட்டிமன்றத்தை நேற்றுதான் காணொளியில் பார்த்தேன்.
அவருக்கே உரித்தான பாணியில் அந்த ஊடககத்தை தன் வசப்படுத்தி  இருந்தார்.
இரண்டு அணியுமே போற்றிப்பனுவல்தான் பாடியது.
நடுநாயகமாக குற்றவாளிக்கூண்டில் இருந்து கொண்டு அத்தனையையும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்...பாருங்கள்.
அங்கேதான் அவர் உண்மையான  ‘உலக சினிமாவின் உன்மத்தனாக’ உயர்ந்தார்.


 “சத்யஜித்ரேயின் சில ஷாட்களைத்தான் திருடி பயன் படுத்தி இருக்கிறோம்.
அவரைப்போல முழுமையான உலக சினிமாவை எடுக்க யாருமே முயற்சிக்கவில்லை.
முட்கள் நிறைந்த பாதையில் நடந்து பாதையை பதப்படுத்தி இருக்கிறோம்...அவ்வளவுதான்.
இதை நான் மட்டுமல்ல...என் முன்னோடிகள் எல்லோருமே செய்து இருக்கிறோம்.
அந்தப்பாதையில் பயணிக்க நீங்கள்தான் வரவேண்டும்”...
இதுதான் அவரது பேச்சின் முக்கிய கருத்தாக்கம்.


இப்படி பேச கமல் ஒருவரால்தான் முடியும்.
இந்த ஆண்மை மிக்க கமலை நான் நேசிப்பேன்.
போற்றுவேன்...நன்றியோடு வாழ்த்துவேன்.
வாழ்க வளமுடன்.

9 comments:

  1. உங்கள் மனதை 'குளிர்வித்த' திண்டுக்கல்லுக்கும், ஜீவாவுக்கும் நன்றிகள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நிறைய பேருக்கு சொல்ல வேண்டி இருக்கிறது.
      இருந்தாலும் முதலிடம் கோவை நேரம் ஜீவாவுக்குத்தான்.

      Delete
  2. போச்சுடா.. கமலை வேற நேசிப்பேன்னு சொல்லிட்டிங்க இல்லை.. அவ்வளவுதான்... இனிமே ஒரு நாலு பேரு தீயா வேலை செய்வானுங்க...

    ReplyDelete
  3. கலை கடவுளை பற்றிய உங்கள் பகிர்வுக்கு நன்றி !!!

    ReplyDelete
  4. உண்மைகளை தைரியமாக சொல்ல ஒரு திடம் வேண்டும்! உண்மையில் கமல் திடமானவர்தான்! நன்றி!

    ReplyDelete
  5. உண்மைகளை (மட்டுமே) பேசுவதால் பலருக்கும் கமல் மேல் ஒரு வித எரிச்சல் வந்து விடுகின்றது.

    ReplyDelete
  6. ம்ம்ம்.. கமலை கூட்டிவந்த பெருமையில் புகழ்பாடிக்கொண்டிருந்திருப்பார்கள். யாருமேயில்லாமல் கமல் மட்டும் பேசியிருந்தால் அவருக்குள்ளேயிருக்கும் கேள்விகளுக்கு அவரே பதிலளித்து பார்வையாளர்களை இன்னொரு உங்கத்துக்கு கூட்டிச்சென்றிருப்பார். நல்ல பதிவு...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.