Jul 15, 2013

AMEN - ஆடுவோமே... பள்ளுப்பாடுவோமே... ஆனந்தமா... சுதந்திரமா... கொல்வோமே!


நண்பர்களே...இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்.
அவர் ஆட்சிக்காலத்தில் போட்ட நலத்திட்டங்கள்தான்
தமிழ்நாட்டை இன்றும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.
அவருக்கு பின்னால் வந்த அனைவருமே ஹிட்லர் வாரிசுகள்.
ஹிட்லர் யூதர்களை அழித்தான்.
இவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை அழித்து வருகிறார்கள்.
இதில் ஒருவர், ஹிட்லருக்கே கற்றுக்கொடுக்கும் கலைஞராக வளர்ந்து விட்டார்.

மதுவை ஊற்றிக்கொடுத்து தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே ஊற்றி மூடி விட்டார்கள்.
கல்வியை வியாபாரமாக்கி ஏழைகள் கண் முழியை பிதுக்கி விட்டார்கள்.
குடிநீர்,மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் நாட்டையே முடமாக்கினார்கள்.
இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து,
இலஞ்சத்தை  ‘நாட்டுடமை’  ஆக்கி விட்டார்கள்.

வாருங்கள்...
நாற்றமெடுத்த தமிழக அரசியலை விட்டு விட்டு...
‘ஆமெனுக்குள்’ செல்வோம்.


AMEN \ 2002 \ German, Romanian, French \ Directed by : Costa - Gavras \ Part - 4

 'உலக நாடுகள் சங்கத்தில்',
‘யூத முத்துக்குமார்’ தற்கொலை செய்ததை பார்த்தோம்.
அதிர்ச்சியில் உறைய வைத்த அக்காட்சி,
‘ஆடம்பர பிரச்சார ஊர்வலத்தில்’ கரைந்து விடுகிறது.
‘பப்பரப்பாங்’ என பிரமாண்ட பேண்ட் வாத்தியங்கள் முழங்க,
அதற்கு பிரம்மாண்ட நாஜிக்கொடிகள் தலையசைத்து ஆட,
சிறுவர்களும் சின்னஞ்சிறு கொடியை தூக்கி ஊர்வலத்தை எதிர் கொண்டு, ஆடிக்கொண்டு... கும்மாளமிட்டு ஓட,
மக்களை மதி மயக்கும் உற்சாக காட்சியாக உருவெடுக்கிறது.


_________________________________________________________________________________

நாஜிக்கொள்கைகளை அப்படியே பின்பற்றினார்கள் நம் அரசியல் வியாதிகள்.
இது போன்ற  ‘ஊர்வலம்’ கான்செப்டை,
 ‘கருந்தேள் பாணியில்’ சொல்வதென்றால்,
ஊர்வலத்தை  ‘காப்பியடித்து’...
‘பிரம்மாண்ட பேரணி’ என்ற படத்தை உருவாக்கினார்கள் திராவிடக்கட்சிகள்.
அட..கொடியைக்கூட ‘நாஜிக்கொடியில்’ இருந்துதான் உருவாக்கினார்கள் போலும்.


_________________________________________________________________________________

ஊர்வலத்தை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருக்கிறார்கள்
‘மன வளர்ச்சியில்லாத’ சிறுவர்கள்,சிறுமிகள்.
அவர்களை அங்கிருந்து அகற்றி,
வரிசையாக நிற்க வைக்கிறார்கள் ‘கன்னியாஸ்த்ரீகள்’.


அங்கே ‘சிரித்த முகத்துடன்’ கருணை வழிய ஒரு டாக்டர் அனைவரையும்
தேர்வு செய்கிறார்.
எதற்கு? 

இந்த டாக்டர் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவரை வைத்துதான் கிளைமாக்சை அமைத்திருக்கிறார்
இயக்குனர் காஸ்டா கவ்ராஸ்.

‘அதாண்டா...இதாண்டா...அருணாச்சலம் நாந்தாண்டா...’
என ஆர்ப்பாட்ட அதிரடிகள் இல்லாமல்,
வெகு சாதாரணமாக ஒரு டெய்லர் முகாமில் அறிமுகம் செய்யப்படுகிறார் படத்தின் ஹீரோ ‘கர்ஷைன்’.


தனது அளவுக்கேற்ப தைக்கப்பட்ட ஆடையை போட்டு ‘டிரையல்’ பார்க்கிறார் கர்ஷைன்.
‘ஹிட்லர் பாணி’ ராணுவ சல்யூட் வைக்க சொல்கிறான் டெய்லர்.
ஒப்புக்கு சப்பாணியாக ‘அரைகுறை’ சல்யூட் வைக்கிறார் கர்ஷைன்.
அந்த சல்யூட்டில் திருப்தியில்லாத டெய்லர்,
அதே சல்யூட்டை பவர்புல்லாக செய்து காட்டுகிறான்.


அவனை பின்பற்றி ‘சல்யூட்’ செய்கிறார்.
 ‘அக்குள்’ பகுதியில் ‘கிழிந்து விடுகிறது’.

ஒரே காட்சியில்...
# 1 . ‘ஹிட்லர் பாணியை பின்பற்ற விருப்பமில்லாத ஜெர்மானியன்.
# 2. ஹிட்லர் பாணியை வேத வாக்காக கடைப்பிடிக்கும் ஜெர்மானியன்.
# 3.ஹிட்லர் பாணியை கடைப்பிடித்தால் ‘கிழிந்து விடும்’.
என ‘சட்டையர்’ செய்த காஸ்டா கவ்ராஸை,
‘இயக்குனர் இமயம்’ என கொண்டாடியது சரிதானே!


‘கர்ஷைன்’ ஒரு நிஜ ஹீரோ.
இவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்,
‘ஆமென்’ திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க உதவும்.
ஜெயமோகன் பாணியில்,
ஆமென் திரைப்படத்தின் ‘உள்ளொளியை’ தரிசிப்பீர்கள்.
எனவே கர்ஷனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...

மனநலம் வளர்ச்சியில்லாத குழந்தைகள் கதியை பார்க்க,
‘கல் நெஞ்சத்தோடு’ வாருங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

15 comments:

  1. //‘அக்குள்’ பகுதியில் ‘கிழிந்து விடுகிறது’.
    //

    எளிமையான முறையில் காட்சியை எடுத்த இயக்குனருக்கும், அதை அழகாக விவரித்த உலக சினிமா ரசிகனுக்கும் ஒரு ஓ..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...நான் ‘இட்டுக்கட்டி’ சொல்லவில்லை.
      காஸ்டாஸ் கவ்ராஸின் பாணியே அதுதான்.
      சடையர், செய்வதில் மாஸ்டர் அவர்.

      பாராட்டுக்கு நன்றி நண்பரே.

      Delete
  2. ஒரே காட்சியில்... 3...!

    மனதை திடப்படுத்திக் கொண்டு தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. நேரம் கிடைப்பின் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Story-Student.html

    ReplyDelete
    Replies
    1. உடனே வருகிறேன் நண்பரே.
      அழைப்பில்லாமலேயே பல தடவை உங்கள் பதிவை படித்திருக்கிறேன்.
      பெரும்பாலும் சினிமா பதிவுகளுக்குத்தான் பின்னூட்டம் இடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறேன்.
      ‘மொய்க்கு மொய்’ பாணியில் பின்னூட்டமும் இட மாட்டேன்.
      எனவேதான் என்னுடைய வருகையை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
      தவறாக எண்ண வேண்டாம்.

      Delete
  4. சார் நான் காமராஜர் அவர்களின் மிகப்பெரிய விசிறி.அவருடைய வாழ்க்கை வரலாற்றை முழுவதும் படித்துவிட்டேன்.அவர் பற்றிய கட்டுரைகளை சேகரித்து வைத்துள்ளேன்.அவர் ராஜாஜியுடன் பெரிதும் முரண் பட்டிருந்தபோதும் அவர் ராஜாஜி மீது வைத்திருந்த மரியாதையும்,இறக்கும் வரை நாத்திகராகவே இருந்ததும் ,அவருடைய எளிமையும் எனக்கு வியப்பளித்தது.தனது அரசியல் வாழ்கையில் உன்னதத்தை எய்த நினைத்த அவர் அதை சாதியப்படுதியும் காட்டினார். விடுதலை போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் தனது சுயசரிதையான 'இந்தியா விடுதலை பெறுகிறது அபுல் கலாம் ஆசாத் பேசுகிறேன் ' என்ற புத்தகத்தில் கூட காமராஜர் பற்றி அவர் எழுதியுள்ளார்.அவர் தனது அரசியல் வாழ்வில் தான் செய்த பெரிய தவறாக நினைத்தது இந்திரா காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்ததை தான்.அந்த கவலையே பின் நாளில் அவர் உயிரை பறித்தது.இனி என்றும் நம் தமிழகம் காண முடியாத தமிழக முதல்வர் அவர்.ஆனால் கொடுமையிலும் கொடுமை ஓட்டு வேட்டைக்காக இன்றைய அரசியல் கட்சிகள் காமராஜரை சுவரொட்டிகளில் சிவப்பாக சித்தரிப்பது.

    ReplyDelete
  5. உன்னைப்போன்ற இளைஞன் காமராஜரை சிலாகித்து பேசுவது பெருமையாக இருக்கிறது.
    என் பால்ய வயதில் அவரை,
    நேரில் சந்தித்து பேசும் பாக்கியம் பெற்றவன் நான்.
    ஆறடி கம்பீர காந்தி அவர்.
    என்னிடம் அவர் கேட்ட கேள்வி எல்லாமே படிப்பை பற்றியே இருந்தது.
    என்ன படிக்கிறாய்?
    எங்கே படிக்கிறாய்?
    எத்தனை பேர் படிக்கிறீர்கள்?
    உன் பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?
    இந்த ரீதியிலேயே கேட்டார் அந்த படிக்காத மேதை.

    காமராஜரை பற்றிய திரைப்படம் வந்தது நல்ல விஷயம்.
    சில விஷயங்களில் குறை இருந்தாலும், அருமையான முயற்சி.

    “நாடு பார்த்ததுண்டா...இந்த நாடு பார்த்ததுண்டா...”
    இளையராஜாவின் குரலில் வந்த பாடல் என்றும் அவர் பெருமை பேசும்.

    ReplyDelete
  6. காமராஜரை பற்றியும் அறியாத ஒரு திரைப்படத்தினையும் சிறப்பாக விவரித்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பெருந்தலைவர் காமராஜர் பற்றி எழுதும் போதே நன்றியுணர்ச்சி பெருக்கெடுக்கிறது.
      கல்வி...கல்வி...கல்வி என அதற்காகவே தன்னை அர்ப்பணித்தார் அந்த படிக்காத மேதை.
      கலவி...கலவி...கலவி என அதற்காகவே தங்களை அர்ப்பணித்தனர் திராவிடக்கட்சியினர்.
      எப்படி உருப்படுவோம்?.

      Delete
  7. காமராஜர் பற்றி பேசும் போதே இன்றைய அரசியல்வாதிகளை நினைத்து கோபம் வருவதை தடுக்கமுடியாது,அவரது ஒவ்வொரு மூச்சுமே நாட்டு முன்னேறத்துக்காக செலவிட்டார்,மக்களாகிய நாம் அவரை தேர்தலில் தோற்கடித்து நன்றியை காட்டிவிட்டோம்.இனி மியூசியத்தில் பார்த்தால் தான் உண்டு,இது போன்ற தன்னலமில்லா தலைவரை.

    ஆமென் 3அருமையாக துவங்கியது,அந்த கொடூர டாக்டரை மறக்கவே முடியாது,கர்ட் கெர்ஸ்டெயின் அக்கா மகள் மனவளர்ச்சி குன்றியவள்,அவளும் அந்த கருணைக்கொலை ஸீஸனில் கூட்டிவரப்படுவாள்,அக்குழந்தைக்கு அந்த நயவஞ்சக டாக்டரை எதனாலோ பிடித்துப்போகும்,முகம் பார்த்து சிரிக்கும், இவளின் ரிப்போர்டுகளை இன்னொரு டாக்டர் அவனிடம் காட்டி ,என்ன செலக்டடா?என்று வினவ,கண்களை சுருக்கி,தலையை வேகமாக ஆமோதிப்பது போல அசைப்பான்,அக்குழந்தை என்னவோ விளையாடக்கூட்டிப்போவது போல நினைத்துக்கொண்டு அந்த மெடிகல் ரெகார்ட் ஃபைலை மார்போடு தழுவிக்கொள்ளும்.மிகவும் கனமான காட்சி.


    இதே இயக்குனரின் EDEN IS WEST என்னும் தன் நாட்டினை முற்றிலும் தொலைத்த அகதியின் கதையை அவசியம் பாருங்கள்,ஈழத்தமிழரின் அவதியை நேரில் கண்டது போல் சித்தரித்திருப்பார்,எந்த நாட்டின் அகதியையும் அதில் ஒருவர் பொருத்திப்பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. காஸ்டா கவ்ராஸ் படங்களை தொடர்ந்து எழுத இருக்கிறேன்.

      நீங்கள் ஆமெனை மிக நுணுக்கமாக பார்த்து எழுதி வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
      தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
      இ.மெயிலில் ஆமெனைப்பற்றி நீங்கள் எழுதிய விபரங்கள் மிகவும் உபயோகமாக உள்ளது.
      மிக்க நன்றி நண்பரே.

      அடுத்து காஸ்டா கவ்ராஸின் ‘மிஸ்ஸிங்’ படத்தை எழுத உள்ளேன்.
      அந்தப்படம் அப்படியே தமிழ் ஈழ போராட்டத்தை பொருத்தி பார்க்க மிகவும் உதவும்.

      நீங்களும் பெருந்தலைவரின் பக்தர் என நானறிவேன்.
      பெருந்தலைவரை பற்றியும் இனி அடிக்கடி எழுத வேண்டும்.
      நாம் எல்லோரும் அவருக்கு செய்நன்றிக்கடன் பட்டவர்கள்.
      அவரால்தான் பள்ளிப்படிப்பை இலவசமாக படிக்க முடிந்தது.

      Delete
  8. காமராஜரைப்பற்றி ஒரு முழுப்பதிவையுமே போட்டு எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு காமராஜரின் பெருமைகளை உணர வைத்திருக்கலாம். காமராஜரை நேரில் கண்ட பாக்கியம் பெற்ற உங்களிடமிருந்து நிறைய விடயங்கள் தெரிந்து கொண்டிருப்போம்.

    //அவருக்கு பின்னால் வந்த அனைவருமே ஹிட்லர் வாரிசுகள்//

    சத்தியமான வார்த்தை.. இவர்கள் இருக்கும் வரை தமிழ்னாடு பிச்சை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான். உருப்படவே உருப்படாது.

    ReplyDelete
    Replies
    1. உங்களைப்போன்ற இளைஞர்கள் காமராஜரை கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது.
      எத்தனை காலம்தான் ‘பீடை’ பிடித்து நிற்கும்.
      ஒரு நாள் நிச்சயம் விலகும்.
      காமராஜரின் வாரிசு நிச்சயம் பிறந்து வருவான்.
      அது வரை ‘ஏழரை’ விடாது.

      Delete
  9. ஒரு உலக திரைப்படத்தை உள்ளூர் அரசியலில் புரட்டி எடுத்து உள்ளீர்கள் ! அருமை, விரைவில் அடுத்த பாகம் எழுதுங்கள், எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.