Jun 27, 2013

இப்பதிவு...பதிவர்களுக்கிடையிலான மோதலா ?


நண்பர்களே...
இப்பதிவு இரண்டு பதிவர்களுக்கிடையிலான மோதல் எனக்கருதும் வாய்ப்பை நன்றாகவே உருவாக்கித்தரும்.
இருந்தாலும் இப்பதிவை தவிர்க்க முடியாது.
தவிர்க்கவும் கூடாது.
காரணம்  ‘வரலாறும்... கருத்தாக்கமும்’.



தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் மனோரமா கதாபாத்திரத்தின் வசனம் இப்பதிவிற்கு மிகப்பொருத்தமான துவக்கமாக இருக்கும்.

 “ அவுக ஒரு பக்கம் ஆடினா...நான் ஒரு பக்கம் ஆடுறேன்.
இரண்டையும்தான் சனங்க பாக்கட்டுமே”
 _________________________________________________________________________________

நாடக கலைக்களஞ்சியம் \ 1964 \ ஆசிரியர் : அ.பாபநாசம் \ 
பதிவின் பாகம் - 4 [ நிறைவுப்பகுதி ]

நாடக சந்தர்ப்பங்கள் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாடக ஆசிரியர் ‘கார்லோ கோஸி’ [ Carlo Gozzi  \ 1720 - 1806 ]  36 ‘அடிப்படை சந்தர்ப்பங்களை’ கொண்டு நாடகம் எழுத முடியும் என்று கூறியுள்ளார்.
அவைகள்...
01. பிரார்த்தனை.
02. மீட்சி.
03. பழிக்குப்பழியால் ஏற்பட்ட குற்றம்.
04. ஒரு சொந்தக்காரர் மற்றொரு சொந்தக்காரர் மீது பழிக்குப்பழி வாங்குதல்.
05. அழிவு.
06. சம்பந்தம், தொடர்ச்சி.
07. துரதிர்ஷ்டத்துக்கு பலியாதல்.
08. புரட்சி.
09. துணிச்சலான காரியம்.
10. விடுகதை
11. பெண் சோரம்.
12. பிரபலம் அடைதல்.
13. இனத்தாருக்குள் விரோதம்.
14. இனத்தாருக்குள் போர்.
15. கொலையுடன் கலந்த விபச்சாரம்.
16. பைத்தியம்.
17. ஆராய்வின்மை.
18. இனத்தானை தெரியாமல் கொல்லுதல்.
19. லட்சியத்திற்காக தியாகம் செய்தல்.
20. சுற்றத்திற்காக தியாகம் செய்தல்.
21. உணர்ச்சியில் எல்லோரும் தியாகம் செய்தல்.
22. காதலித்தவளை அவசியத்திற்காக கைவிடல்.
23. உயர்ந்தவன் - தாழ்ந்தவன் போர்.
24. விபச்சாரம்.
25. காதல் கொலைகள்.
26. காதலித்தவன் காதலித்தவளின் குற்றத்தை கண்டு பிடித்தல்.
27. காதலுக்கு தடைகள்.
28. விரோதியை காதலித்தல்.
29. ஆசை.
30. கடவுளுடன் போர்.
31. குற்றமாக எடுத்த பொறாமை.
32. தவறான முடிவு.
33. காணாமல் போனவளை மீண்டும் அடைதல்.
34. மனநோய்.
35. காதலித்தவர்களின் தொலைவு.
36. காதலால் ஏற்படும் சக்திக்கு மீறிய குற்றங்கள்.

[ கார்லோ கோஸியின் 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ நல்ல வேளையாக 1964லேயே நமக்கு தமிழில் தந்து விட்டார் அ.பாபநாசம் அவர்கள்.
இன்று கார்லோ கோஸியின் 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ பற்றிய குறிப்புகள் இணையத்தில் கூட கிடைக்கவில்லை.
_________________________________________________________________________________

நண்பர்களே...
கார்லோ கோஸி 36 ‘டிராஜிக் சிச்சுவேஷன்கள்’ என பகுத்து தொகுத்து எழுதியதை,
அப்படியே மொழிபெயர்த்து நமக்கு தந்துள்ள திரு,அ.பாபநாசம் அவர்களுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது..

Carlo Gozzi [ 1720 - 1806 ]



கார்லோஸ் கோஸி பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவிற்குள் செல்க...

கார்லோ கோஸி எழுதிய [ Carlo Gozzi \ 1720 - 1806 ],
36  ‘டிராஜிக் சிச்சுவேஷன்களின்’ [ 36 Tragic Situations ] ஆங்கில வடிவத்தை  ‘இணையத்தில்’ எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மாறாக,  ‘ஜியார்ஜஸ் போல்டி’ [ Georges Polti \ 1867 - 1946 ] எழுதிய...
36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’ [ 36 Dramatic Situations ]  இணையத்தில் தாராளமாக கிடைக்கிறது.

Georges Polti [ 1867 - 1946 ]

36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்களை’ அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவினுள் செல்க... 

 கார்லோ கோஸி [ 1720 - 1806 ] எழுதியதை அடிப்படையாக வைத்து,
மிகச்சிறிய மாற்றங்களுடன் தனது கருத்தாக்கத்தை வடிவமைத்து உள்ளார் ஜியார்ஜஸ் போல்டி [ 1867 - 1946 ] .
எனவேதான்  36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’  புத்தகத்தின்
அறிமுக உரையிலேயே கார்லோ கோஸி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.


“Gozzi maintained that there can be but thirty-six tragic situations. 
Schiller took great pains to find more, but he was unable to find even so many as Gozzi.”
Goethe.

கார்லோ கோஸி பற்றி, 

அ.பாபநாசம் குறிப்பிட்டுள்ளார்.

ஜியார்ஜஸ் போல்டியும் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கிய மேதை ‘கோத்தே’யும் குறிப்பிட்டுள்ளார்.



36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்கள்’ நூலை முழுமையாக படிக்க விக்கிப்பிடீயாவிற்குள் செல்க...

நல்லவேளை... கார்லோ கோஸி கி.பி. 1720ல் பிறந்தார்.
இல்லையென்றால்,
ஜியார்ஜஸ் போல்டியின் 36 ‘டிரமடிக் சிச்சுவேஷன்களை’ ,
தமிழில் மொழி பெயர்த்த ‘பதிவர் கருந்தேள்’  
‘காப்பியடிப்பதில் கோஸியும் கமலும் ஒன்றே’ என்றே தனது பதிவை துவங்கி இருப்பார்.

நண்பர்களே...
யார் வேண்டுமானாலும் விதிகளை...கோட்பாடுகளை...வகுக்கலாம்.
ஆனால்,
உலகில் உள்ள அனைத்து இலக்கியங்கள், நாடகங்கள், சினிமாக்களை
இந்த விதிகளுக்குள்தான் அடக்கம் என்று சொல்ல முடியாது.
சொல்லவும் கூடாது.

கோஸி, போல்டி இருவர் எழுதிய 36  ‘விதிகளுக்குள்’

[ 1 ] ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்தை எப்படி அடக்குவீர்கள் ?

[ 2 ] ரஷ்ய இலக்கிய மேதை  ‘அண்டன் செக்காவ்’ எழுதிய 'பச்சோந்தி’ சிறுகதையை எந்த கோட்பாடின் கீழ் வரையறுப்பீர்கள் ?

[ 3 ] உலகிலேயே தலை சிறந்த இலக்கிய காப்பியங்கள், 
நமது ராமாயணம், மகாபாரதம். 
இந்த இரண்டிலும் இயங்கும் விதிகளை வகுக்க, 
ஆட்களும் போதாது...
அவர்களுக்கு ஆயுசும் போதாது.  

உலகம் இருக்கின்ற வரை, 
புதிய கோட்பாடுகள் புறப்பட்டு...
இலக்கியம், நாடகம், சினிமா என எல்லாவற்றையும்... 
புதுப்பித்துக்கொண்டே இருக்கும். 

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

4 comments:

  1. 36 வகையான டிராமடிக் சிச்சுவேசன்கள் அந்தகாலத்திலேயே உருவாக்கிவிட்டார்கள் என்பதை அறிந்தேன்! அதிசயம்தான்! தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்...கருத்துக்கும்...நன்றி.

      Delete
  2. உலகிலேயே தலை சிறந்த இலக்கிய காப்பியங்கள் நமது ராமாயணம், மகாபாரதம்.
    இந்த இரண்டிலும் இயங்கும் விதிகளை வகுக்க ஆட்களும் போதாது...அவர்களுக்கு ஆயுசும் போதாது.

    உலகம் இருக்கின்ற வரை,
    புதிய கோட்பாடுகள் புறப்பட்டு...
    இலக்கியம், நாடகம், சினிமா என எல்லாவற்றையும்...
    புதுப்பித்துக்கொண்டே இருக்கும். // வெல்டன்...

    ReplyDelete
    Replies
    1. /// வெல்டன் ///

      ஒரு வாசகம்தான்...அதுவும் திருவாசகம்.
      நன்றி ஜாக்கி.

      Delete

Note: Only a member of this blog may post a comment.