Jun 13, 2013

சைக்கிளை திருடு...காதலியை ஓட்டு.



“ ஒரு நொடி மாறுவதால் வாழ்க்கையின் ஒரு இருபது நிமிடத்தில்
என்னென்ன விஷயங்கள் நடந்து விடுகின்றன என மூன்று விதமாக கற்பனை செய்து பார்க்கும் இப்படம் உலகம் முழுக்க மிகுந்த வரவேற்பையும் விருதுகளையும் பெற்றது.

தெருவில் கடக்கும் மனிதர்களின் கதையை போட்டாக்களால் சொல்வதும்,
கருப்பு - வெள்ளை, கார்ட்டூன், கிராபிக்ஸ், ஸ்லோமோஷன் என்று திரைப்படத்துக்கே உரிய அனைத்து தொழில் நுட்பங்களையும் அழகாக பயன்படுத்தி இருப்பதும் இப்படத்தின் சிறப்பு.” - செழியன்.

நூல் : உலக சினிமா [ பாகம் - 1 ] \ இரண்டாம் பதிப்பு \ 2008
வெளியிடு : விகடன் பிரசுரம்.

RUN LOLA RUN \ 1998 \ Germany \ Directed by : TOM TYKWER \ பாகம் - 5.

உலக சினிமாவை என்னுள் விதைத்த துரோணர் ‘செழியன்’ அவர்களது முன்னுரையோடு இப்பதிவை துவங்குவதில் பெருமை கொள்கிறேன்.
_________________________________________________________________________________

[ 1 ] முதலில் லோலாவின் ஓட்டத்தோடு நம்மை இணைத்துக்கொள்வோம்.


முதல் ஓட்டம் : 
மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
லோலா பாலத்தின் கீழ் புகுந்து ஓடுகிறாள்.

இரண்டாம் ஓட்டம் : 
மேம்பாலத்தில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது.
லோலா பாலத்தின் கீழ் புகுந்து ஓடுகிறாள்.
ஆனால் கேமரா கோணங்களால் இக்காட்சி மாறுபடுத்தப்பட்டு உள்ளது.

மூன்றாம் ஓட்டம் : 
லோலா பிளாட்பாரத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
லோலா ஓடும் பிளாட்பாரத்தின் உயரத்திற்கும் சற்றுக்குறைவான தளத்தில், 
தரைத்தளத்தில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் அடுத்த ஷாட்டில் மெட்ரோ ரயில் மேம்பாலத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
லோலா பாலத்தின் கீழ் புகுந்து ஓடுகிறாள்.

இயக்குனர் டாம் டிக்கர் மூன்று ஓட்டங்களில் உள்ள ‘நேர வேறுபாட்டை’
மெட்ரோ டிரெய்ன் மூலமாக விளக்குகிறார்.
முதல் ஓட்டத்தில் மெட்ரோ டிரெய்ன் பாலத்தில் பாதியில் வந்து கொண்டிருக்கும்.
இரண்டாவது ஓட்டத்தில் மெட்ரோ டிரெய்ன் முதல் ஓட்டத்தில் இருந்த தூரத்தை விட சற்று அட்வான்சாக இருக்கும்.
காரணம் லோலா நொண்டியபடி சற்று தூரம் ஓடியதால் சில நொடிகள் லேட்டாக வருகிறாள்.
மூன்றாவது ஓட்டத்தில் ‘நாயைத்தாண்டி’ வேகமாக ஓடி வந்ததால் அட்வான்சாக வந்து விடுகிறாள்.
எனவே முதல் ஓட்டத்தில் மெட்ரோ டிரெய்ன் காட்டப்பட்ட தூரத்திற்கு டிரெய்ன் சில நொடி லேட்டாக வந்து சேருவதை காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர்.
ஹேட்ஸ் ஆப் டாம் டிக்கர்.
_________________________________________________________________________________
[ 2 ] மெட்ரோ ரயில் பாலத்துக்குப்பிறகு, 
ஒரு நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் ஓடுகிறாள்.
இந்த ஓட்டம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
முதலாம் ஓட்டம் : 
லோலா ஓடுவதை காமிரா அவளது ஓட்டத்திற்கு இணையாக பக்கவாட்டில் நகர்ந்து படம் பிடித்திருக்கிறது. 
எனவே நதியின் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
லோலாவின் ஓட்டம் சில ஷாட்டுகள் ‘ஸ்லோ மோஷனலில்’ காட்டப்பட்டுள்ளது.
லோலா ஓடுவது ‘க்ரீன் மேட்’ மெத்தடில் ஸ்டூடியோவில் படம் பிடிக்கப்பட்டு பின்புலக்காட்சியாக ‘நதிப்பாலத்தை’ இணைத்துக்காட்டியுள்ளார் இயக்குனர்.
எடிட்டிங் மூலமாக... வேண்டுமென்றே பார்வையாளனை வதைக்கும் வகையில் ‘டிஸ்டர்ப்’ செய்கிறார் இயக்குனர்.

இரண்டாம் ஓட்டம் : 
காமிரா கோணங்களை மாற்றி அமைத்து மிகுந்த அழகியலோடு லோலாவின் ஓட்டத்தையும்...பின்புலத்தில் நதியின் தோற்றத்தையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.



மூன்றாம் ஓட்டம் : 
கேமரா, லோலாவின் முன்புறமாக இருந்து... 
அவளது ஓட்டத்திற்கு இணையாக பின்புறம் வேகமாக நகர்ந்து காட்சிப்படுத்தியுள்ளது.
எனவே நதியின் தோற்றம் ‘பிரேமிற்குள்’ வரவில்லை.
லோலாவின் ஓட்டமும்...பாலமும் மட்டுமே...காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
_________________________________________________________________________________

[ 3 ] அடுத்து வரும் காட்சியில்,
முதலாம் ஓட்டத்தில், 
நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி, சம வயது ஆணிடம் உரையாடுகிறாள்.
[ சம வயது ஆண், லோலாவின் தந்தை என்பது பின்னால் வரும் காட்சியின் மூலம் தெரிய வரும்.]
அவள், தங்கள் காதலை உலகறியச்செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும்...
காதலை மறைத்து வாழும் கொடுமையை ஆதங்கமாகவும் 
தனது உரையாடலில் கொட்டித்தீர்க்கிறாள்.

இரண்டாம் ஓட்டத்தில் ஒருவர் காரில் காத்திருக்கிறார்.
அவரது கார் காரேஜின் ‘ஆட்டமடிக் டோர்’ மெலெழுகிறது.
[ இவர்  ‘மேயர்’ என்பதும், லோலாவின் தந்தையின் நண்பர் என்பதும் மூன்றாவது ஓட்டத்தில் பின்னர் ஒரு காட்சியில் விளக்கப்படுகிறது.]

மூன்றாவது ஓட்டத்தில் இது போன்ற எந்தக்காட்சியும் வரவில்லை.
பதிலாக லோலா போக்குவரத்து அதிகமில்லாத சாலையை கடக்கும் ஷாட் வரும்.
இந்த ஷாட்டுக்கு நேரிடையாக போய்விடுகிறார் இயக்குனர்.
இக்காட்சியை கேமரா கிரேனில் மேலிருந்து கீழாக இறங்கி படம் பிடித்திருக்கிறது.
பிளாட்பாரத்தின் ஓரமாக கிரேன் மையம் கொண்டு இக்காட்சியை படம் பிடித்துள்ளது.

இரண்டாவது ஓட்டத்தில், 
இந்த ஷாட்...
அதாவது லோலா போக்குவரத்து அதிகமில்லாத சிறிய சாலையை கடப்பது...
காமிரா சாலையின் குறுக்காக ‘டிராக் & டிராலியில் பயணித்து படம் பிடித்துள்ளது.

முதலாவது ஓட்டத்தில் காமிரா கிரேனில் நடு ரோட்டில் மையம் கொண்டு மேலிருந்து கீழிறங்கி படம் பிடித்துள்ளது.
_________________________________________________________________________________
[ 4 ] அடுத்தக்காட்சி...கன்னியாஸ்த்ரீகள்.



முதலாம் ஓட்டம் : பிளாட்பாரத்தில் கன்னியாஸ்த்ரீகள் கூட்டமாக வருகின்றனர்.
லோலா அவர்களுக்கு மத்தியில் ஓடி கடக்கிறாள்.

இரண்டாம் ஓட்டம் : பிளாட்பாரத்தில் கன்னியாஸ்த்ரீகள் கூட்டமாக வருகின்றனர்.
லோலா அவர்களுக்கு மத்தியில் ஓடி கடக்கும் போது,
கருப்பு கூலிங்கிளாஸ் அணிந்த கன்னியாஸ்த்ரீயை மட்டும்  
‘அனிச்சை செயலாக’ திரும்பி பார்த்து விட்டு ஓடுவாள்.

மூன்றாவது ஓட்டம் : கன்னியாஸ்த்ரீகளை பார்த்து விலகி சாலையில் இறங்கி ஓடுகிறாள்.
_________________________________________________________________________________
[ 5 ] அடுத்தக்காட்சி ...சைக்கிள்காரன்.

      
முதலாம் ஓட்டம் : ஒரு அழகிய வாலிபன் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வருகிறான்.

சைக்கிள்காரன் : “ஹே உனக்கு சைக்கிள் வேணுமா ?

திரும்பி அவனை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

சைக்கிள்காரன் : “ 50 மார்க்...புத்தம் புதுசு” 
[ மார்க் = ஜெர்மன் காசு, பணம்,துட்டு, MONEY...MONEY ]

 'நோ' எனச்சொல்லி விட்டு தொடர்ந்து ஓடுகிறாள்.



சைக்கிள்காரனுக்கு ‘பிளாஷ் பார்வேர்டு’ காட்சிகள், 
‘ராபிட் ஃபயர் ஸ்டில் ஷாட்டுகளாக காட்சியளிக்கிறது.

ராபிட்ஃபயர் ஷாட் : 
சைக்கிளில் செல்பவனை இரண்டு தடியர்கள் துரத்துகின்றனர்.
சைக்கிளோடு அவனை கீழே தள்ளுகின்றனர்.
அடிஅடியென அடி பின்னுகிறார்கள்.
காயம் ஓரளவு ஆறிய நிலையில் நர்சோடு ஒன்றாக அமர்ந்து ரெஸ்டாரண்டில் உண்கிறான்.
இருவரும் காதல் மொழி பேசுகின்றனர்.
அவளை திருமணம் செய்து கொள்கிறான்.
ஐரோப்பிய பாரம்பரிய திருமண ஆடையுன் இருவரும் கேமராவிற்கு  போஸ் கொடுக்கின்றனர்.

இரண்டாவது ஓட்டம் : 
அழகிய வாலிபன் சைக்கிளை ஓட்டி வருகிறான்.

சைக்கிள்காரன் : ஹேய் சைக்கிள் வேணுமா ?

லோலா : [ ஓடிக்கொண்டே ] வேண்டாம்.

சைக்கிள்காரன் : 50 மார்க்... புதுசை விட நல்லது.

லோலா : ஆனா திருடியது...

[ எனச்சொல்லி விட்டு அவனை லட்சியம் செய்யாமல் ஓடுவாள்.]

ராபிட் ஃபயர் ஷாட் :
பிளாட்பார ஓரத்தில் கிடக்கிறான்.
வறுமை, அவன் தோற்றத்தில் பரிபூரணமாக குடியேறி  இருக்கிறது.
பசி மயக்கத்தில் சாய்ந்து கிடக்கிறான்.
தாடியுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறான்.
பார்க்கில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணோடு பேச விழைகிறான்.
அவள் அவனை புறக்கணித்து எழுந்து செல்கிறாள்.
பப்ளிக் டாய்லட்டில் தரையில் உட்கார்ந்து கொண்டு போதை ஊசியை கையில் ஏற்றுகிறான்.
மரணத்தை தழுவுகிறான்.

மூன்றாவது ஓட்டம் : 
கன்னியாஸ்த்ரிகளுக்கு நடுவில் ஓடாமல்,
சாலையில் இறங்கி ஓடும் போது சைக்கிள்காரனுடன் மோதுவது போல் ஒரு நிலை ஏற்படும்.

சைக்கிள்காரன் : ஹே...பார்த்து...

லோலா மோதாமல் சமாளித்து ‘ஸாரி’ சொல்லி விட்டு ஓடுவாள்.

சைக்கிள்காரன் வேகமாக சைக்கிளை மிதித்து, 
லோலாவை தாண்டி முந்துவான்.

பின் லோலா ஓடும் திசைக்கு எதிர்புறம் செல்லும் சாலையில், 
சைக்கிளை திருப்பி சென்று விடுவான். 

மூன்றாவது ஓட்டத்தில், ராபிட் ஃபயர் ஷாட்டுகள் இல்லை.

மாறாக, 
அவன் ஒரு ‘பாஸ்ட் புட் ரெஸ்டாரண்ட்’ கடைக்கு சென்று 
உணவை ஆர்டர் செய்கிறான்.
அங்கே, மானியின் பணத்தை மெட்ரோ ரயிலில் எடுத்துச்சென்ற 
‘குப்பைப்பொறுக்குபவன்’ இருக்கிறான்.

அவன் சைக்கிள்காரனை பார்த்து...

“ எனக்கும் ஒரு நேரம் பாரேன்.
வாழ்க்கை சில நேரம் காமெடியா இருக்கு.

வா...உனக்கு ஒரு டிரிங்ஸ் வாங்கித்தாரேன்” என்கிறான்.

சைக்கிள்காரன் : ஒனக்கு சைக்கிள் வேணுமா ?
ஸ்பெஷல் விலை....70 மார்க்தான்.

குப்பை பொறுக்குபவன் சைக்கிளை பார்ப்பதுடன் இக்காட்சி முடிவடைகிறது.

_________________________________________________________________________________

லோலாவின் ஓட்டத்தில் எதிர்ப்படும் சில கதாபாத்திரங்களுக்கு,
‘எதிர்காலத்தை’ வடிவமைத்ததில் இயக்குனர்   ‘அரிஸ்டாட்டில் மெத்தடில்’ காஸ் & எபெக்ட்ஸை மெய்ண்டெய்ன் செய்திருக்கிறார்.
அதை மனோ வேகத்தில் படம் பிடித்துக்காட்டியுள்ளார்.
இது மிகவும் அபூர்வம்.

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி.
ரன் லோலா ரன் அடுத்தப்பதிவில் முடிவடையும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

5 comments:

  1. சுவாரஸ்யமான சுறுசுறுப்பான ஓட்டம்...

    என்னவொரு கவனிப்பு...!

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஓடி...ஓடி...பின்னூட்டமிடும் உங்களை விட லோலாவின் ஓட்டம் சற்று குறைவுதான்.

      உங்கள் புன்னகை இல்லாவிட்டால்...
      எனது பதிவில் வெறுமையைக்காண்கிறேன்.

      நன்றி தனபாலன்.

      Delete
  2. I heared about this movie few years back in Vikatan i remember...but after reading your in detailed description about the technical aspects about the movie I'm eagerly waiting to watch the movie this weekend as i asked one of my friend for a downloaded copy of this movie.

    Hats off to your describing knowledge USR!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி விஸ்வா.

      Delete
    2. it s in youtube for free with subtitles!!

      Delete

Note: Only a member of this blog may post a comment.