May 28, 2013

ஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்.


Hey Ram \ 2000 \ INDIA \ ஹேராம் = 034 
‘கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவோடு பேசிக்கொண்டிருக்கிறார்...
சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்...
சூதாடிக்கொண்டு இருக்கிறார்...
இடர்கள் மிகுந்த அதன் ஒவ்வொரு குகையாகத்தட்டி திறந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் சினிமா மொழியை உருவாக்குவதற்காக,
அதன் கலா பூர்வமான வேர்களை உயிர்பிப்பதற்காக அவர் தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாதிரிகளாக கருதப்படும் அனைத்தும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கமல்ஹாசன் பரிசோதித்து பார்த்ததின் நீட்சியே’ - மனுஷ்ய புத்திரன். 

நண்பர்களே...
ஹேராமில்,  ராம் - மைதிலி திருமணக்காட்சிகள்,
அய்யங்கார் திருமணச்சடங்குகளை மிகச்சிறப்பாக பதிவு செய்ததை,
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மிகவும் சிலாகித்து பாராட்டி எழுதி இருக்கிறார்.
அம்புஜம் கதாபாத்திரத்தில் ஹேமமாலினி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கண்ணாலேயே கணவனுக்கு கட்டளை பிறப்பிப்பதும்,
கட்டளைகளை சரியாக உள்வாங்கி உப்பிலி அய்யங்கார் ‘ஆடுவதும்’ ...
கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

‘வைஷ்ணவோ ஜனதோ...
தேனே கஹியேஜெ...
பீடு பராயி ஜானேரே’
என, பெண் பார்க்கும் படலத்தில்...
மைதிலி, காந்திக்கு பிரியமான பாடலைப்பாட,
மைதிலியின் பெற்றோர் பெருமிதத்தில் பூரிப்பார்கள்.
மைதிலியின் குடும்பமே காந்தியின் பக்தர்கள் என்பதை இக்காட்சியிலேயே
எஸ்டாபிளிஷ் செய்திருக்கிறார் இயக்குனர் கமல்.

ராம் - மைதிலி கண்கள் கலந்து திருமணம் நடக்கிறது.


சாப்பாட்டுப்பந்தி நடக்கும் போது,
மொட்டை மாடியில் நண்பர்களோடு உரையாடுகிறான் ராம்.
ராமின் முகத்தில் கல்யாணக்களையே இருக்காது.

வேதா : என்ன...கல்யாண மாப்ள யோசிச்சிண்டிருக்கே ?

ராம் : இங்க சாவகாசமாக என் கல்யாணம் நடந்திண்டிருக்கு.
டெல்லியில ஒரு பெரிய விவாகரத்தே நடந்துண்டிருக்கு.
‘வேர்ல்டு பிக்கஸ்ட் பொலிட்டிக்கல் டிவ்வோர்ஸ்’

யக்ஞம் : சரி...தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு.
இந்த பாக்கிஸ்தான் பிரிஞ்சது நல்லதுங்கறேன் நானு.
அந்த ரேட் கிளிஃப் செறங்கை நறுக்கி எறியற மாதிரி 
சர்ஜரியே பண்ணிட்டான்.

வேதா : யாருடா அந்த ரேட் கிளிஃப் ?

யக்ஞம் : என் சித்தப்பா.

வேதா : ஓஹோ...

யக்ஞம் : என்னடா ஒத்துக்கறான்.

வேதா : சரி...ஒத்துக்கல. யாருடா அது ?

ராம் : இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் பிரிக்கிற கோடு எதுன்னு
நிர்ணயம் பண்ணின மகானுபாவன்.

இக்காட்சியில் உள்ள வசனத்தின் மூலம் ராம்-மைதிலி திருமணக்காலத்தை கணக்கிடலாம்.
மேலும் பிரிவினையை ஆதரிக்கும் பாத்திரமாக ‘யக்ஞம்’ காரெக்டரையும்,
பிரிவினையில் உடன்பாடில்லாத பாத்திரமாக‘ராம்’ காரெக்டரையும் படைத்துள்ளார் படைப்பாளி கமல்.
பிரிவினையில் முரண்பட்ட கருத்துக்கள் இந்துக்களிடம் நிலவியதை இக்காட்சி சித்தரிக்கிறது.
முஸ்லீம்களிடமும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்த்தை  ‘அம்ஜத்’ காரெக்டர் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதை பின்னால் பார்க்க இருக்கிறோம்.

 இந்திய - பாக்கிஸ்தான் எல்லைக்கோட்டை வகுத்த ரேட் கிளிஃப் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவை அணுகவும்.

ரேட் கிளிஃப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு....


வசந்தா மாமி மயக்கமாகிறார்.
யக்ஞம் டாக்டர் என்பதால் பரிசோதிக்கிறான்.
இக்காட்சியில்  ‘ஸ்கிரிப்ட்டில்’ உள்ள சில வசனங்கள்,
சென்சாரால் நீக்கப்பட்டு உள்ளது.
அந்த வசனங்களை  ‘அடித்து’ அடையாளப்படுத்தி உள்ளேன்.

யக்ஞம் : மாமி, 24 மணி நேரம் இருக்குமா...
நீங்க கடைசியா சாப்டு ?...
ம்...பட்னி...
உங்களுக்கு எதுக்கு இந்த வயசில காந்தி விளையாட்டெல்லாம் ? வேலையெல்லாம் ?

அம்புஜம் : காந்தி வெளயாட்டா ?

யக்ஞம் : அவர்தான் உபவாசம், பாஸ்ட்ன்னு கடைசி நிமிஷம் வரைக்கும்,
எல்லோரையும் இழுத்தடிச்சுட்டு காரியம் ஆனதும் ,
ஒடம்பு கெடாம டக்குன்னு நிறுத்திடுவார்.

அம்புஜம் : என்ன சொல்றார் ? 
மஹாத்மாவை கேலி பேசற மாதிரி இருக்கே ?

பாஷ்யம் : இவா வம்சமே அப்படித்தான்.
லோகம் பூரா ஒண்ண ஒத்துண்டாலும்...இவா ஒத்துக்க மாட்டா.
என் ஒறவுக்காரன்.
ம்...காந்தி என்ன...பகவானையே கேலி பேசுவான்.

யக்ஞம் : ம்...உறவுக்காரரே... ‘ஐ யாம் ஜஸ்ட் பீயிங் பிராக்டிகல்.
மாமி...நான் மகாத்மாவை கேலி பேசல.
‘ஆஸ் எ டாக்டர்’...இந்த மாதிரி ஒடம்ப கவனிச்சுக்காம பட்னி கெடக்கறது தப்புன்னு சொல்றேன். அவ்வளவுதான்.

அம்புஜம் : நானும் நீங்களும் பட்னி கெடந்தா, 
மாமி மாதிரி மயக்கம்தான் வரும்.
மஹாத்மா பட்னி கெடந்தா சுதந்திரம் வரும்.
நீங்க சாப்பிட்டேளா ?

யக்ஞம் : [ நக்கலான விமர்சனம் புரிந்தவனாய்...அசடு வழிய ]
வயிறு திம்முன்னு நெறஞ்சுடுத்து.

அம்புஜம் : அது ‘கேஸ்’ஆ இருக்கும்...போய் சாப்ட்றுங்கோ.

வசந்தா மாமி கலகலன்னு சிரிக்க இக்காட்சி நிறைவு பெறுகிறது.

இக்காட்சியில் காந்தியின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை
கமலின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
காந்தியின் உண்ணாவிரதப்போரட்டம்,
அந்தக்காலத்திலேயே விமர்சிக்கப்பட்டதை...
யக்ஞம் கதாபாத்திரம் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.
காந்தியை எந்த விமர்சனமும் இல்லாமல் பக்தர்கள் போல்,
அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதை அம்புஜம் கதாபாத்திரம் மூலம் எடுத்துக்காட்டி உள்ளார் கமல்.

இக்காட்சியில் போட்டி போட்டு யக்ஞமாக நடித்த ஒய்.ஜி. மகேந்திரனும்,
அம்புஜமாக நடித்த ஹேமமாலினியும்,
பாராட்டுக்குறியவர்கள்.

வைஷ்ணவோ ஜனதோ & வாரணம் ஆயிரம் பாடலையும்... திருமணக்காட்சிகளையும் காணொளியில் காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

8 comments:

  1. எப்படி இத்தனை தகவல்கள் கிடைத்தது...! நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஹேராம் படத்தில் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கிறது நண்பரே.

      Delete
  2. SUPER - SUPER - SUPER. THANK YOU VERY MUCH

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி...முத்துகிருஷ்ணன் அவர்களே.

      Delete
  3. Why Vasantha mami didn't have food? Is there a reason ?

    ReplyDelete
  4. வசந்தா மாமிதான்... தனது தம்பியான சாகேத் ராமை வளர்த்தவர்.
    இத்திருமணத்தில் அவர் அதீத அக்கறை கொண்டுள்ளார்.
    தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் அவர் ஓடியாடி வேலை செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
    வெறும் காப்பியை மட்டுமே குடித்துக்கொண்டு ஓடியாடி வேலை செய்ததின் விளைவே அவரது மயக்கம்.
    ராம் மீது அவர் கொண்டுள்ள அதீத அன்பே அவரை சரியாக சாப்பிடாமல் வேலை செய்ய வைத்தது.
    வேறு எந்தக்காரணத்துக்காகவும் அவர் பட்டினி கிடக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. Thanks much for your analysis.. really a good one...!

      Delete
    2. Miga nunukkamana aaivu... mikka nandri!

      Delete

Note: Only a member of this blog may post a comment.