Jul 30, 2012

Hey Ram- சுஜாதா,கமல்,மகேந்திரன்... முட்டாள்களா? \ 2000 \ ஹேராம் =016


போன ஹேராம் பதிவு மிகவும் சூடாகி விட்டது.
அதை பற்றி கிளைமாக்சில் பார்ப்போம்.

 ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’
கவியரசரின் தெய்வ வாக்கு மீண்டும்...மீண்டும் என் வாழ்வில் தொடர்கிறது.
அவரது அடுத்த வரி...என்னை எப்போதுமே வெளியே கொண்டு போய் விட்டு விடும்.


ஹேராம் பதிவின் மிக முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.
இந்தக்காட்சியை நடந்து முடிந்த...
‘சரித்திரத்தின் ஆவணமாக’ எடுத்து கொள்ள வேண்டும்.

உணர்வுகளுக்கு தீனி போடும் களமாக ஆக்கி விடக்கூடாது என்பதை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால்...
Hey Ram Is An Experiment With Truth By Kamal Haasan

இப்பதிவின் தொடக்கமாக... வேறொருவரின்... பதிவின் தொகுப்பை...
முதலில் பார்ப்போம்.
*********************************************************************************
” ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.


1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. 


கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.


ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 


ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். 
அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.


என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்”.


முழுப்பதிவையும் படிக்க இங்கே செல்லவும்

வேறொரு தளத்தில் எழுதப்பட்ட இக்கருத்தை தனது பதிவில் வெளியிட்டவர்

திரு.அலி என்ற இஸ்லாமிய சகோதரர்.
பத்திரிக்கையாளர்.
இப்பதிவுதான் கமலுக்கு கிடைத்த ஆஸ்கார்.
**********************************************************************************

 வெள்ளைக்காரன் புத்தியை புரிந்து கொண்டு... எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில்  சாகேத் ராம் வீட்டுக்கு திரும்புகிறான்.
கூர்க்கா செத்து கிடப்பது வன்முறை வீட்டுக்குள் வந்து விட்டதை ராமோடு நாமும் புரிந்து கொள்கிறோம்.
சூழ்நிலையை இன்னும் சரியாக கணிக்க தவறியதால்...வெகு எளிதாக அடிக்கப்பட்டு வீழ்கிறான்.
 பியானோவில் கட்டி வைக்கப்படுகிறான்.

பியானோ ‘தீமட்டிக் எக்ஸிஸ்டெண்ட்டாக’ ஹேராம் படத்தில் தொடர்ந்து காட்டப்படுகிறது. 
‘படிப்பவன்’ என்றால் பிரேமில் புத்தகங்கள் இருக்கும்.
 ‘குடிப்பவன்’என்றால் டாஸ்மாக் சரக்கிருக்கும்.
ராம் ‘ இசைப்பவன்’ என்பதை காட்ட  பியானோ இருக்கிறது.
பியானோ, அம்ஜத்-ராம் நட்பின் சின்னமாக  ‘ராமரானாலும்,பாபரானாலும்’ பாடலில் காட்டப்பட்டது.
 மீண்டும் பியானோ,ராம்-அபர்னா காதலின் சின்னமாக இருவரும் இணைந்து வாசித்த கவிதை காட்சியில் பங்கு பெற்றது.

 வன்முறையாளர்கள், கண்களுக்கு பியானோவாக தெரியாது.... மரத்தாலான  மேஜையாகத்தான் தெரியும்.
ராம்-அபர்னா காதல் வாழ்க்கையை கட்டமைத்த பியானோவில்...  ராம் கட்டப்பட்டிருப்பது முரண்.

 அல்தாப் வாயில்  ‘கத்தியை’ கவ்விக்கொண்டு பால்கனி வழியாக போகிறான். 

‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேசனாக’ அபர்னாவின் அலறலும்....
 ‘இண்டர்னல் கம்போசிஷேனாக’ ராமின் கதறலை வடிவமைத்துள்ளார்  ‘இயக்குனர் கமல்’ .

இதையே  ‘இண்டர்னல் கம்போசிஷேனில்’ அபர்னா கற்பழிக்கப்படுவதையும்...  ‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேனில்’ கமல் கதறுவதையும்... காட்டத்தெரியாதா  ‘இயக்குனர் கமலுக்கு’?

வன்முறையை வலிந்து காட்டி காசு பார்க்கும் ஈனப்பிறவி அல்ல கமல்.

அவருக்குள்ள சமூக அக்கறைக்கு...பொறுப்பு உணர்ச்சிக்கு இந்த ஒரு  ‘ஷாட் கம்போசிஷேசன்’ போதும்.  

தனது நீண்ட நாள் ஆசையை தணித்து கொண்ட அல்தாப்...
இப்போது மற்றவர்களை வரவேற்கிறான்.

 ‘இவன் எனக்குப்போதும்’என்று ஒருவன் மட்டும் ராமோடு இருக்க மற்றவர்கள் அபர்னாவை சீரழிக்க செல்கிறார்கள்.

ராமோடு இருக்க ஆசைப்பட்டவன் ‘ஹோமோசெக்ஸ்’விரும்பி.

அவன் ராமை தடவுவதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும்.  இக்காட்சியில் நடித்த நடிகர் பெயர் சத்யஜித்.
 ‘பதினாறு வயதினிலே’ படத்தில் டாக்டராக நடித்தவர். *********************************************************************************

இவரை, நான் தயாரித்து இயக்கிய  ‘ஆர்.எஸ்.தென்னமரக்குடி எண்ணெய்’ விளம்பர படத்தில் மாடலாக்கினேன்.
அப்போது ஹேராம் வெளியான நேரம். அந்த அனுபவத்தை இடைவேளையின் போது பகிர்ந்து கொண்டார்.

அவரிடம்  கமல்.... ‘ஹோமோ’காரெக்டர் பற்றி  சொல்லவேயில்லை..
அக்காரெக்டர் தன்மையை... சப்-டெக்ஸ்டாக காட்ட விரும்பியிருக்கிறார்
 ‘இயக்குனர்’ கமல்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகவும் நேசிக்கும் இஸ்லாமிய சகோதரர்களை மிக மோசமாக காட்ட விரும்பவில்லை.

இப்பதிவை படிக்கும் வரை சத்யஜித்துக்கு...தனது காரெக்டர் பற்றி தெரியப்போவதில்லை.

இக்காட்சியின் இறுதி கட்டமாக... மாடியிலிருந்து சத்யஜித் கீழே விழும் காட்சி பற்றி குறிப்பிடும் போது...
 “நான் நடிக்கப்பயப்பட்டேன்.
தைரியமா வாங்க...
நான் விழுந்து காண்பிக்கிறேன்.
அதை வந்து...முதல்ல  பாருங்க....என்று பால்கனியின் விளிம்புக்கு அழைத்துப்போய்....
தள்ளி விட்டு விட்டு போய் விட்டார்...பாவி மனுஷன் ”.
என்றார் சத்யஜித். 

**********************************************************************************

பல நேரங்களில் நடிகர்களை இப்படி ஏமாற்றித்தான் படமெடுக்க முடியும்.

நான் ஒரே ஒரு டயலாக்கை ஐம்பது டேக் எடுத்திருக்கிறேன்.
அந்த கஷ்டமான....நீளமான.... டயலாக்.... ‘வாவ்’
 அந்த  ‘பெரிய டயலாக்’ மாடலுக்கு எக்ஸ்பிரஸிவாக வரவேயில்லை.

கேமிராவை ஒட விட்டு... காமிரா பீல்டுக்கு வெளியே நின்று கொண்டு... காட்சிக்குறிய  ‘எம்மோட்டிவ்னஸ்ஸை’ கொண்டு வர ...
 கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
இப்போது கேமராவுக்கு வெளியே நின்று கொண்டு...
 நான் நடித்து கொண்டிருந்தேன்.
  “ அட நாயே...இந்த சின்ன டயலாக்கை... பேசத்தெரியாம... என்ன மயித்துக்கு... மாடல்னு வந்து... உயிரை வாங்குற” என்ற டயலாக்கை எனக்குள் பேசிக்கொண்டு...
 என் கோபத்தை ஒரு சதவீதம் கூட முகத்தில் காட்டாமல்....
“இதை பாரும்மா...ஐம்பது டேக்குமே... ஒ.கே டேக்குதான்...
ஆனா உங்கிட்ட இன்னும் பெட்டர்  ‘வாவ் ’ஒண்னு இருக்கு...
 எனக்கு அது வேணும்...”
இப்படி கால் மணிநேரம் கூசாம புளுகி தள்ளினேன்.
 இறுதியாக...
 “ உனக்கு எந்த ரெஸ்ட்டாரண்ட் பிடிக்கும்”
 “பார்க் ஷெரடன் தக்‌ஷின்”

 “ஆக்டர்ல யாரை பிடிக்கும்”
“ஷாருக்னா உயிரு”

 “உனக்கு பக்கத்து டேபிள்ள ஷாருக் வந்து உக்காந்தா உனக்கு எப்படி இருக்கும்?”
“வாவ்”
கட்...
டேக்... ஒ.கே.

இப்படி அனுபவப்பட்ட ஹிட்ச்ஹாக்,. “ நடிகர்கள் அனிமல்ஸ்”
என்று சொன்னார்.
இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை போட்டு உடைத்ததுக்கு வாங்கி கட்டிக்கொண்டது தனிக்கதை.

நடிப்பை பற்றி...சில வார்த்தைகள்....
நாடகத்தில்....நடிப்பை இரண்டு வகைகளாக பிரித்தார்கள்.
ஒன்று...மெத்தட் ஆக்டிங்.
இரண்டு....நேச்சுரல் ஆக்டிங்....
இவ்விரண்டையும் தனக்கே உரிய வகையில் உள்ளடக்கி
‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ உருவாக்கியது சினிமா.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்’ஷாட்டின் கால அளவுக்குள் அடங்க வேண்டும்.
இது சினிமா மீடியத்தின் நிர்ப்பந்தம்.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ நடிகர் மட்டும் தீர்மானிக்க முடியாது.
நடிகர்,இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,எடிட்டர்...ஏன் கலை இயக்குனர் கூட சேர்ந்து  உருவாக்குவதுதான்  ‘ஸ்கீரின் ஆக்டிங் ’
ஆனால், ரசிகர்கள் கை தட்டல்... கிடைப்பது நடிகனுக்கு மட்டுமே.

 ‘ஹ்யூமன் எமோஷன்சை’ எட்டு வகைகளாக மேற்கத்திய தத்துவம் பிரிக்கிறது.
நம் இந்தியாவில் ஒரு படி மேலே போய் ஒன்பது வகைகளாக பிரித்தார்கள்.   அதை ‘நவரசம்’என ஒரே பெயரில் அடக்கினார்கள்.

‘நவரசத்திலும்’ கொடி கட்டி பறந்தது உலகிலேயே இரண்டே பேர்தான்.
ஒன்று...நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இரண்டு...கமல்ஹாசன்.

அல்பசினோவாக இருக்கட்டும்...
மார்லன் பிராண்டோவாக இருக்கட்டும்...
உலகின் ஜாம்பவான்கள் அனைவருமே ஒரு சில வகை நடிப்பில் மட்டுமே கொடி கட்டி ஜெயித்தவர்கள்.
ஒனபதிலும் ஜெயித்தவர்கள் சிவாஜி,கமல் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட நான்கு நடிகர்களின் மாஸ்டர்பீஸ் படங்கள் அனைத்தையும் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

நடிப்பை பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன்.
அப்போது கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல் அனைத்தையும் சொல்லித்தருகிறேன்.
காத்திருக்கவும்.
அது வரை அல்பசினோ மாதிரி நடிக்க வருமா என்று உங்கள் வட்டத்தில் ஜல்லி அடித்து கொண்டிருங்கள்.

நாடக நடிப்பை விட சினிமா நடிப்பு மிகக்கடினமானது.
சினிமாவில் ஷாட் பை ஷாட்டாக எடுக்கப்படுவதால்
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ தேவைப்படும்.
உதாரணமாக...ஹேராம் முந்தைய பதிவின் ஒன்றில் குறிப்பிட்டதை எடுத்துக்கொள்வோம்..


ராணி முகர்ஜி :  “கராச்சியில என்ன சாப்டீங்க”

அந்த ‘கிக்’ குரலில்  ‘டயலாக் டெலிவரி’, பேஸ் ரியாக்‌ஷன், பாடி லாங்குவேஜ் அனைத்திலும் சரஸக்கலையின் உச்சத்தை தொட்டிருப்பார் ராணி முகர்ஜி.

கமல் உடலுறவு முடிந்த களைப்பு...திருப்தி...அனைத்தையும் தனது
 ‘பேஸ் ரியாக்‌ஷன்’...மற்றும் ‘பாடி லாங்குவேஜில்’ கொண்டு வந்து
பக்கத்தில் படுத்திருப்பார்.
இது ஒரு ஷாட்.

[இப்பட ஷூட்டிங் நாட்களில் இருவருமே  ‘வாழ்ந்திருக்கிறார்கள்’.
இந்த விஷயத்தில் நம்ப ஆள்  ‘கிண்டன்’]

இதற்கு கவுண்டர் ஷாட்...


கமல் :  “அப்ப இண்ணைக்கு ராத்திரி பால்கனியில படுத்துக்கலாம் ”

என்று வழிவார் பாருங்கள்....
சான்ஸே கிடையாது...அப்படி ஒரு நடிப்பு...

இந்த இரண்டு ஷாட் எடுப்பதற்க்கு நடுவில் இடைவெளியில் பல மணி நேரம் தேவைப்பட்டிருக்கும்.
இயக்குனர் கமலும்,ஒளிப்பதிவாளர் திருவும் மட்டுமே அறிந்த உண்மை.
பல மணிநேர இடைவெளியில் நடிகர் கமலும், ராணி முகர்ஜியும்  ‘நடிப்பை’ விட்டு வெளியில் வந்து...
மீண்டும் அடுத்த ஷாட்டில்... ‘ நடிப்பிற்குள்’ வந்து...
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ மெய்ன்டெய்ன்ட் பண்ணத்தெரிந்தால் மட்டுமே அடுத்த ஷாட்டில் நடிக்க முடியும்.  

இது போன்ற அவஸ்தைகள் பற்றி...
கொஞ்சம் கூட தெரியாத காரிகன் வகையறாக்கள்...  கமல்,சுஜாதா,மகேந்திரன்னு...
ஆரம்பிச்சு தமிழ் சினிமா ஜாம்பவான்கள் அனைவரையும் முட்டாள்கள் என தீர்ப்பெழுத முடிகிறது.
முழு விபரம் அறிய எனது முந்தைய பதிவின் பின்னூட்ட யுத்தத்தை காண்க...    

*********************************************************************************

இந்தப்பதிவில் நாம் யாரும் காரிகன் வகையறாக்களை காயப்படுத்தி பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

 நானும் காரிகனும் நடத்திய யுத்தம்...
‘ கிளேடியேடர் ஸ்டைல்’
 இருவரில் ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்.

நான் காமெடி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து கொண்டு... தப்பித்து போய் ஆடியன்ஸோடு உட்கார்ந்து கொண்டேன்.
ஆடியன்சாக வந்த கிஷோகரையும் அவன் பகைத்தது... வெற்றி சுலபமாகியது. அதற்கு பிறகு தர்ம அடிதான்.

 ஆனால் இந்த யுத்தம்...எனக்கு பிடிக்கவில்லை.
என்னுடைய கிரியேட்டிவ் எனர்ஜி போய்... முழுக்க நெகட்டிவ் எனர்ஜி இயங்கியது.

இனி இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை.

 பின்னூட்ட யுத்தம் காண... கிளிக்கவும். 

**********************************************************************************  

ஆனால் நேர்மையான கருத்து மோதலை வரவேற்கிறேன்.

நான் கருந்தேள் பதிவில்  ‘சைனாவை கட்டமைத்த மாமேதை’ மாவோவை... பற்றி அவரிடம் வாதிட்டேன்.
 எனக்கு ஆதரவாக கணேசன் வந்தார்.
கருந்தேளும் பெருந்தன்மையாக ஒத்து கொண்டார்.

 ஒரு வாதம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இருவருமே உதாரணமாக நடந்து கொண்டோம்.
எங்களது கருத்து மோதல்கள் எங்கள் நட்பை மேலும் வளப்படுத்துகிறது.


அவர் சமீபத்தில் எனது கடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
நிறைய பேசினோம்...
நிறைய சிரித்தோம்.
இப்படி பேசி சிரிக்க... இன்னும் மோதுவோம்.

அந்த ஆரோக்கிய மோதல் இருவருக்கும் நல்லது.

ஹேராம் படத்தின் காட்சியை காணொளியில் காண்க...

மீண்டும் ஹேராமை...அடுத்த பதிவில்... விரிவாக காண்போம். இப்பதிவில்  குறைகள் இருப்பின்  மன்னிக்க.

20 comments:

  1. தல வணக்கம்! என்ன என்னோட டேஷ்போர்டில் உங்களோட இந்த பதிவு இரண்டு தரம் பதிவிட்டிருப்பதாக காட்டுகிறது? # அது ஒரு மேட்டரே இல்லை என்னும் போதும், தலைக்கு இன்னமும் சித்தபிரம்மை தெளியலயோன்னு ஒரு சின்ன டவுட் , அம்புட்டுத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. எங்க தெளிய விடுறானுங்க...
      அந்த குழப்பம்... லைட்டா இருக்கத்தான் செய்யுது...

      Delete
  2. மீண்டும் ஒரு நல்ல அலசல்! அதிலும் ஹேராமில் முஸ்லிம்கள் மட்டும் அநீதி காரர்களாக காட்டப்படவில்லை என்பதற்கும், கமலின் படமாக்கம் பக்கச்சார்பில்லாமல் நின்றிருக்கிறது என்று நிரூபித்த இடமும் செம, நல்ல வாதமும் கூட!

    # கட்டாயம் அத பண்ணியே ஆகணும், இல்லன்னா அப்புறம் இந்த பதிவில் வேறு யாராச்சும் வந்து , இந்துக்களுக்கு சார்பான கமலை தூக்கிப்பிடிக்கும் அடி முட்டாள்ன்னு பட்டம் குடுத்திட்டு போயிருவாங்கோ!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி...தம்பி.

      ///கட்டாயம் அத பண்ணியே ஆகணும், இல்லன்னா அப்புறம் இந்த பதிவில் வேறு யாராச்சும் வந்து , இந்துக்களுக்கு சார்பான கமலை தூக்கிப்பிடிக்கும் அடி முட்டாள்ன்னு பட்டம் குடுத்திட்டு போயிருவாங்கோ!///

      முட்டாள்னு பட்டம் கொடுத்தால்...முட்டாளிடம் நான் அதை வாங்குவதில்லை என்று திருப்பி கொடுத்து...நாம புத்திசாலின்னு நிருபிச்சுரணும்.

      Delete
    2. ///முட்டாளிடம் நான் அதை வாங்குவதில்லை என்று திருப்பி கொடுத்து...நாம புத்திசாலின்னு நிருபிச்சுரணும்.///

      இந்த டீலிங் நல்லா இருக்கே!

      Delete
  3. தல ஒரு சின்ன வேண்டுகோள் உங்களது பதிவில் அலி என்ற இஸ்லாமிய சகோதரரது விபரணத்துக்கு முன்னால் வருகின்ற பந்தி அமைப்பு ஓக்கே! ஆனால் அதன் பிறகு வருகின்ற பந்திகளில் போதிய இடைவெளி இன்மையால் படிக்க கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. ஒரே வரியை திரும்ப திரும்ப இரண்டு முறை வாசிக்கும் படி ஆகிறது. கொஞ்சம் கருத்தில் எடுதால் நலம். சொன்னது பிழை என்றால் மன்னிச்சூ!

    ReplyDelete
    Replies
    1. காரிகன் பண்ண வேலையை... என்னுடைய பிளாக்ஸ்பாட் பண்ணுது...

      நான் போதிய இடைவெளி கொடுத்துதான் டைப் செய்துள்ளேன்.
      பதிவேற்றும் போது எல்லாம் கன்னாபின்னான்னு ஆயிடுது...
      அந்த குழப்பத்துலதான் இரண்டு தடவை பதிவேற்றியது.

      வைரஸ் ஏதும் ஏவி விட்டுட்டானுங்களா?
      இல்ல...ஏவல்..பில்லி...சூன்யம்...வச்சிட்டானுங்களா.
      தெரியல தம்பி.

      எப்படியும் சரி பண்ண பாக்குறேன்.
      சரியாகுலன்னா...கேரளா போய் மந்திரிச்சுட்டு வர்றேன்.

      Delete
    2. ஏது பில்லி சூனியமா? வந்த குத்தத்துக்காக என்னோட பிளாக்குக்கும் சைடு எஃபக்டு இருக்குமா? # ஐயையோ கேரளா எனக்கு ரொம்ப தூரமேடா.... என்ன பண்றது? பேசாம நாமளே நமக்கு மந்திரிச்சு தாயத்து கட்டிட வேண்டியது தான்!

      Delete
  4. பஞ்சாயத்து முடியல போல..இன்னும் தாக்கம் இருக்கு போல...அப்புறம் ஹேராம் பத்தின பார்வை ....கண்டிப்பா பார்க்கனும்.
    நமக்கு அந்த அளவுக்கு புரியுமா என்பது சந்தேகமே...

    ReplyDelete
    Replies
    1. மழை நின்றாலும்...தூவானம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

      வாய்ப்பு ஒன்று...நான் எழுதறதை...படிச்சுட்டு பாருங்க...

      வாய்ப்பு இரண்டு....எதுவும் படிக்காம பாருங்க...

      என் நண்பர் சொல்றார்...இரண்டாவதுல...பெட்டரா விளங்குது.

      சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.

      Delete
  5. சார்,
    படத்தை டவுன்லோட் பண்ணி ஒரு வாட்டி பார்த்தேன்..ஆனா நீங்க சொன்னா "சத்யஜித்" மேட்டர் எனக்கு புதுசா இருக்கு...மொத்தமா இந்த தொடரை முடிங்க, அப்புறமா ஒரு வாட்டி ஹேராம் பார்க்கிறேன்...

    ReplyDelete
  6. நன்றி ராஜ்...

    சத்யஜித்த எனது மாடல் கோஆர்டினேட் வழியாகத்தான் புக் செய்தேன்.
    அப்போது அவர்தான் ‘பதினாறு வயதினேலே’ டாக்டர் என்று எனக்கு தெரியாது.
    சூட்டிங் ஸ்பாட்டில்தான் தெரிந்து கொண்டேன்.
    “‘பதினாறு வயதினேலே’ படத்திற்கு பிறகு ஏன் உங்களுக்கு வாய்ப்பில்லையே ஏன்?” என ஆச்சரியத்துடன் கேட்டேன்.

    “என்னை மொத்த தமிழ் இன்டஸ்ட்ரியே... ஹிந்தி நடிகன் என நினைத்து மறந்து விட்டது” என்றார்.
    “கமல் ஞாபகம் வச்சு இந்த ரோலை குடுத்தார்” என நினைவு கூர்ந்தார்.

    ReplyDelete
  7. நாங்க உங்க கடைக்கு வந்தப்ப ஆல்ரெடி நைட்டு. அது மட்டும் சாயங்காலமா இருந்திருந்தா இன்னும் ரொம்ப நேரம் மொக்கைய போட்டுருப்பேன். தப்பிச்சீங்க :-)

    ReplyDelete
    Replies
    1. அடடா...
      நாம பேசினது மொக்கையா?
      சக்கை.

      Delete
  8. உங்கள் பதிவில் என் பெயரா? நம்பவே முடியவில்லை. என் கருத்துக்களை, வாதங்களை நல்ல முறையில் எடுத்துக் கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      உங்கள் பின்னூட்டத்துக்கு...நான் சரியாக பதிலளிக்காமல் கருந்தேளை தாக்க பயன் படுத்தினேன்.
      அந்த குற்ற உணர்வு இன்றும் என்னிடம் உண்டு.
      அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

      கமல் விஷயத்தில் நாம் இருவரும் மாறுபட்டாலும்...
      மாவோ விஷயத்தில் நாம் ஒன்று.
      சல்யூட்... தோழர்.

      Delete
  9. சார் என்னை நினைவிருக்கா? நான் தங்களின் தொடர் வாசகன். ( fallower ) நான் அதிகம் பின்னூட்டம் இடுவதில்லை.
    எப்போதாவதுதான் அதற்கு நேரம் கிடைக்கிறது. இருந்தாலும் சில மாதங்களுக்குமுன் தாங்கள் தங்கள் பதிவின் பின்னூட்டத்தில் யாரையோ நாகரீகமற்றமுறையில் ஏசியிருந்ததைகண்டு கடந்த 21/05/12 அன்று ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன் அது "தங்களின் பதிகளையும் அது தரும் சினிமா பற்றிய அனுபவத்தையும் தொடர்ந்து வாசித்து வருபவன் என்றமுறையில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மேல் எனக்கு தனி மரியாதை உண்டு ஆனால் சமீபகாலமாக நீங்கள் மற்றவறைப் பற்றி எழுதும்போது வெளிப்படுத்தும் வார்த்தைகள் நாகரீகமானதாக இல்லையே ஏன்? இது எனக்குள் உங்கள் மீதான மதிப்பை மறுபரிசீலனை செய்யத்தூண்டுகிறது. தயவுசெய்து நாகரீகமான வார்த்தைகளில் கடுமையான விமர்சனத்தை தொடருங்கள். சொல்வதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்." இதுதான்.
    நினைவிருக்கும் என நினைக்கிறேன் என்றபோதும் நீங்கள் தொடர்ந்து உங்கள் பினூட்டப் போர்களில் அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிப்பதோடல்லாமல் அரசின் கனிமவளசுரண்டலை எதிற்கும் மாவோயிஸ்டுகள், அனுமின்நிலைய பாதுகாப்பின்மைக்கு எதிராக போராடும் கூடங்குளம் மக்கள் என அரசு தன் பணத்தாசைக்கும் பதவிமோகத்திர்கும் எதிராய் எழும் எந்த குரலையும் அடக்க தேசவிரோத சட்டத்தை தன் கையில் எடுப்பதப்போல் நீங்களும் எதிராளிகள்மேல் முட்டாள், அறிவிலி என தனிமனித தாக்குதல் தொடங்கிவிடுகிறீர்கள். இது ஒரு தவிற்கப்படவேண்டிய மோசமான மனப்போக்கு. இதை நான் சொல்வதால் உங்கள் பார்வையில் நானும் ஒரு அதிகப்பிரசங்கியாகவோ அல்லது சிஸோபோர்னியாவாக [ஆளவந்தான் ‘நந்து’ காரெக்டர்] கருதப்படலாம் என பயமாக உள்ளது. பரவாயிலை படைப்பாளியின் படைப்போடு ஒன்றியிருக்களாம் ஆனால் படைப்பாளியோடு தள்ளித்தான் இருக்கவேண்டும். இனி இவ்வாரான பின்னூட்டங்களும் என் தரப்பிலிருந்து வராது. சொல்வதில் தவறு இருந்தால் மீண்டும் மன்னிக்கவும்.

    ReplyDelete
  10. நண்பரே...உங்களை ஞாபகம் இருக்கிறது.
    ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்து செல்லும் பின்னூட்டங்களை நானும் ஆரோக்கியமாக விவாதிக்க தயார்.
    எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

    ‘நாம் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்’ என்ற பொன் வாசகத்தை என்றும் மறப்பதில்லை.

    நீங்களே என்னுடன் ஒரு விவாதத்தை தொடங்குங்கள்.
    ஹேராம் படத்தில் எது வேண்டுமென்றாலும் விவாதியுங்கள்.
    காத்திருக்கிறேன்.
    ஒட்டு மொத்தமாக மாபெரும் இந்தியக்கலைஞர்களை தரக்குறைவாக
    பேசுபவனிடம் எப்படி நாகரீகமாக உரையாட முடியும்.?

    என் குருக்களை தரக்குறைவாக வாதிப்பவனிடம் எப்படி நடக்க வேண்டும்? இதுதான் டாபிக்.

    நீங்கள் தொடங்குங்கள்.காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. ஈகோவை சீண்டிப் பார்க்கும் தருணங்களிலே யாராயிருந்தாலும் தன் இயல்பான மன நிலையில் இருந்து வெளியில் இருப்பார். முகமூடி அணிந்து தர்க்கம் செய்பவன் ஏன்? என்று யோசித்தாலே இது வெளிப்படை. தேவையற்ற வாக்கு வாதம் நம்மை இழிவு படுத்தும் முகமூடியின் நோக்கம் ஜெயித்து விடுகிறது.

    ReplyDelete
  12. நூற்றுக்கு நூறு...தங்கள் கருத்தில் உடன் படுகிறேன்.

    நன்றி நண்பரே!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.