May 24, 2012

Hey Ram-[ஹேராம்=004]யுத்தம்... துவக்கம்...


ரவீந்த்ரநாத் தாகூர்,சத்யஜித்ரே போன்றவர்கள்....
அங்கம் வகித்த கல்கத்தா லிட்ரரி அசோசியேசன்....
படம் வெளியான கொஞ்ச நாட்களில்...கமலுக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் என கேள்விப்பட்டேன்.
கலவரம் நடந்த கல்கத்தா பூமியிலேயே...
படம் பாராட்டப்படுவது மிகவும் கவனத்துக்குரிய ஒன்று.
கலவரத்தை.... பாரபட்சமாக காட்டியிருந்தால் கமலை கிழித்திருப்பார்கள்.
ஒரு படம் தவறான கருத்தை வலியுறுத்துகிறது என்றால்...
ஒரே வாரத்தில் படம் தூக்கப்பட்டு விட்டாலும்...
ஒரு வருடத்துக்கு வாதப்பிரதிவாதங்கள்...
அனல் பறக்கும் வரலாறு.... வங்காளத்துக்கு இருக்கிறது.

ஹேராம்... கமலின்.... 'ஞான குரு' அனந்துக்கு அஞ்சலி சொல்லி துவங்குகிறது.
ரகுபதி ராகவ... ராஜா ராம்.... என்ற காந்தியின் பேவரைட் பாடல்...
கமலின் உச்சக்குரலில்....டைட்டிலில் ஒலிப்பதே...
படத்தின் முதல் குறியீடு.
படத்தின் சென்டர் பாய்ண்ட்.... முதல் ஷாட்டிலேயே சொல்லப்பட வேண்டும்.
ஹேராமின் சென்டர் பாய்ண்ட்... காந்தியும்...அவரது கோட்பாடுகளான அகிம்சை,சமத்துவம்,சகோதரத்துவம்தான்.
காந்தியின் சிறப்பே.....சுதந்திரத்தை விட... ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியது.!
இந்திய சுதந்திர... சரித்திரத்தையும்....
காந்தியின்... சத்திய சோதனையையும்....
முழுமையாக படித்திருந்தால்தான் இந்த கருத்து விளங்கும்.

[குழந்தையின் சிரிப்பும்...மகாத்மாவின் சிரிப்பும்...
இருவரும் ஒரே வயதில் இருப்பதை... உணர முடிகிறதா!]


1999ல் துவங்கும் படம்....பிளாக்&ஒயிட்டில் இருக்கிறது.
நிகழ் காலம் கலர் லெஸ்ஸாக இருப்பதை குறியீடாக்குகிறார்.
[கலர்லெஸ்ஸாக இருப்பதற்க்கு காரணம் பாபர் மசூதி,ராமர் கோயில்,
உலக மயமாக்கல்,2ஜி எதை வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள்]
இக்காட்சியில் சாகேத்ராம் மரணப்படுக்கையில் இருக்கிறார்.
அவரது பேரன் ராமும்,சிகிச்சை தருகின்ற... டாக்டர் முன்னுவும்.... நண்பர்கள்.
நிகழ்காலத்தில்...பிறப்பால் இந்துவாகிய ராமும்,பிறப்பால் முஸ்லீமாகிய முன்னுவும் நண்பர்கள்.
கடந்த காலத்தில் சாகேத்ராமும்...அம்ஜத்தும் நண்பர்கள்.
ஆங்கில இலக்கியத்தில் இப்படி காரெக்டர்களை அமைப்பது 'புக் எண்ட்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கமல் காரணத்துடன்தான்... இந்த வகையில்... இப்பாத்திரங்களை உருவாக்கி உள்ளார்.

பேரனின்... டயலாக்கின் மூலமாக படத்தின் ஜேனர்.....
ஆட்டோ பயாக்ராபி,பிக்‌ஷன்,திரில்லர் மூன்றும் கலந்த கலவை ...என ஆடியன்சுக்கு சொல்லப்படுகிறது.

கமல் ஹேராமில் எழுத்தாளர்[கதை,திரைக்கதை,வசனம்],இயக்குனர்,நடிகர் என மூன்று அவதாரம் எடுத்திருக்கிறார்.

முதல் காட்சியில்...எழுத்தாளர் கமல்...
காந்தியை மகாத்மா என வலியுறுத்துகிறார்.
ஆனால் முன்னொரு காலத்தில்.... நடிகர் கமல் ஒருபத்திரிக்கை பேட்டியில்...
 “ காந்தியை மகாத்மா என சொல்ல மாட்டேன்...நல்ல மனிதன் என ஒத்துக்கொள்வேன்” என்றார்.

கமல் ஹேராமை உருவாக்க நிறைய படித்தார்.
தகவல் சேகரித்தார்.
இந்த தேடலில் காந்தியை... மகாத்மா எனக்கண்டு கொண்டார் போலும்.



சாகேத்ராம் முகம்... மார்பிங்கில் மண்டையோடாக மாறி...
கடந்தகாலத்தில் பிரவேசிக்கிறது படம்.
இங்கே... கடந்த காலத்தை வண்ணத்தில் காண்பிக்கிறார்.
ஏன்?எதற்கு?எப்படி?
மூன்றுக்கும் விடை.... அடுத்தப்பதிவில்...

இந்த முதல் காட்சியே... நண்பர்களுக்கு வேறு விதமாகத்தோன்றலாம்.
போஸ்ட்மாடர்ன்...முறைப்படி கதை அமைந்திருப்பதால் அப்படித்தான் தோன்றும்...தோன்றவேண்டும்.
180 டிகிரியில்... படத்தை பார்த்து விமர்சித்தால்.... அனர்த்தம் வரும்.
360 டிகிரியில்... படத்தை பார்க்கும் போது அர்த்தம் புரியும்.


போஸ்ட்மாடர்ன் இலக்கியத்தை பார்த்தாலோ...
படித்தாலோ....ஒவ்வொருவருக்கும்....ஒவ்வொரு விதமாகத்தான் புரியும்.
இந்த நூற்றாண்டு மக்களுக்கு... இப்படித்தான் கதை சொல்லப்பட வேண்டும் என்பது இல்லை.இது போஸ்ட் மாடர்னுக்கு ஆகச்சிறந்த வியாக்கியானம்..
தமிழில்...சிறந்த போஸ்ட் மாடர்ன் இலக்கியம்...
சுந்தர ராமசாமியின்...ஜே...ஜே...சில குறிப்புகள்.
சிறந்த படம்...ஹேராம்.

பதிவுலகிலேயே உள்ள எழுத்துக்களை...
படிக்கும் போதே... உங்களுக்கு புரியும்...
நான்...
எனது...
நான் சொல்கிறேன்....
நாடே கொண்டாடும் நல்ல படத்தை...ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில்... தூ... என துப்புவது...
ஒரே ஒரு கடிதத்தை... அடிப்படையாக வைத்துக்கொண்டு...
இலங்கையில்... இந்திய ராணுவம் அகிம்சை வழியில் செயல்பட்டது என பொய்யுரைப்பது....
புளியம் கொம்பை பிடிக்கச்சொல்வது...
எல்லாமே போஸ்ட் மாடர்ன் காரெக்டர்கள்.
[ஹி..ஹி...நானும்தான்]

உங்கள் கருத்தை பின்னூட்டமாக இடுங்கள்.
இத்தொடரை வெற்றிகரமாக எழுத....ஆதரித்தும்...எதிர்த்தும் வரும் பின்னூட்டக்களே என்னை இயங்கச்செய்யும்.  

20 comments:

  1. ஏற்கனவே பார்த்து இருந்தாலும் (உங்கள மாதிரி உலக சினிமா அறிவு இல்லாத காரணத்தினால் அதிகம் என்னை ஈர்க்கவில்லை )ஆனால் இப்போ நீங்க எழுதுகிற தொடர் பதிவுகளை படிக்கும் போது இந்த ஹே ராம் படத்துல என்னமோ இருக்கு அப்படிங்கிறது மட்டும் புரியுது .கண்டிப்பா பார்க்கணும் அப்படிங்கிற எண்ணத்தை தூண்டுகிறது..

    ReplyDelete
  2. நண்பரே!
    நானும் இப்படத்தை வெளியீட்டின் போது பார்த்து விட்டு புரியாமல்... நண்பர் கருந்தேளை விட காட்டமாக விமர்சித்திருக்கிறேன்.

    இப்படத்தை இப்போது பார்க்கும்போதுதான் இதன் ஆழம்...அகலம்...உயரத்தை ஒரளவுக்கே புரிய முடிந்திருக்கிறது.
    நான் புரிந்ததை மட்டுமே உங்களிடம் பகிர ஆசைப்பட்டேன்.
    பார்த்தவுடன் புரிவதற்க்கு இப்படம் தேவர் மகன்...அல்ல.
    அதையும் தாண்டி புதிரானது....உயர்வானது.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பா,
    உலக சினிமாவுடன் ஒப்பிட்டு நம்ம உள்ளூர் படம் பற்றியும், படத்தின் நாயகனின் மன உணர்வு பற்றியும் சிறப்பாக அலசியுள்ளீர்கள்.
    பதிவின் கீழே உள்ள பஞ்ச் டாப்பு

    ReplyDelete
    Replies
    1. நண்பரே! பாராட்டியதற்க்கு நன்றி.

      அது என்னமோ தெரியல..என்ன மாயமோ தெரியல... நிரூபன் பாராட்டை படிச்சா...லேசா அந்தரத்துல பறக்குறேன்...

      Delete
  4. //முதல் காட்சியில்...எழுத்தாளர் கமல்...
    காந்தியை மகாத்மா என வலியுறுத்துகிறார்.
    ஆனால் முன்னொரு காலத்தில்.... நடிகர் கமல் ஒருபத்திரிக்கை பேட்டியில்...
    “ காந்தியை மகாத்மா என சொல்ல மாட்டேன்...நல்ல மனிதன் என ஒத்துக்கொள்வேன்” என்றார்.

    கமல் ஹேராமை உருவாக்க நிறைய படித்தார்.
    தகவல் சேகரித்தார்.
    இந்த தேடலில் காந்தியை... மகாத்மா எனக்கண்டு கொண்டார் போலும்//
    இருக்கலாம்....
    I would like to add few more points in your next post.
    Eagarly awaiting for that.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...உங்கள் கருத்தை கேட்க நானும் ஆவலாயிருக்கிறேன்.
      அடுத்தப்பதிவு எழுத நிறைய உழைப்பு தேவைப்படுகிறது.ப்ளீஸ்...காத்திருக்கவும்.

      Delete
  5. படம் வெளிவந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், படத்தை பற்றி..பல தகவல், அலசல்களை அடக்கிய ஓர் அருமையான தொடர் உருவாகி கொண்டிருப்பதை இப்பதிவின் மூலமே உணர முடிகிறது..காத்திருக்கிறேன்..இன்னும் நிறைய எழுதுங்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தம்பி குமரா...உன் வார்த்தைகள் 7.50 ரூபாய் விலை ஏற்றப்பட்ட காஸ்ட்லி பெட்ரோல்.

      நன்றி.

      Delete
  6. இன்னும் நிறைய எழுதுங்கள் தோழரே...!வாழ்த்துக்கள்....
    கமல் எனக்கு தெரிந்த காலத்தில் இருந்து தன்னை ஒரு காந்தியவாதியாகவே காட்டிக்கொள்கிறார்(எனக்கு வயது மிகவும் குறைவு) அந்த பாதிப்பில்தான் இந்த படம் வந்தது என நான் கருதுகிறேன். தமிழ்சினிமாவில் மாற்றுமுயற்சிகள் செய்யும் நோக்கில் வந்த கமல் படங்கள் வந்த நேரத்தில் கிடைத்த பாராட்டுகளைவிட பிற்காலத்தில் நிறைய பெயர் பெற்றது..ஆனால் அவற்றில் பல வேற்றுமோழி படைப்புகளின் தாக்கத்தில் வந்தவை எனக்கு மிகவும் பிடித்த தேவர்மகன் உட்பட. ஆனால் ஹேராம் அப்படி இல்லை என்று நம்புகிறேன். தான் ஒரு நட்சத்திரமான காலத்திலிருந்து சர்ச்சைகளை எதிர்கொள்பவர் அவர். ஆதலால் இந்த மாதிரி குற்றச்சாட்டுகளை அவர் பொருட்படுத்தாது அவரது பணியை தொடருவார் என நம்புகிறேன். அவரைபற்றி எழுதும் உங்கள் பணியும் தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. எவரெஸ்டில் ஏறத்தேவையான ஆக்ஸிஜன் கொடுத்து விட்டீர்கள்...நன்றி நண்பரே...

      Delete
  7. //கடந்த காலத்தை வண்னத்தில் காண்பிக்கிறார்.
    ஏன்?எதற்க்கு?எப்படி?
    மூன்றுக்கும் விடை.... அடுத்தப்பதிவில்...//
    அடுத்த பதிவிற்கு ஆவலாய் உள்ளேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆவல்தான் எனக்கு அவல்.
      நன்றி நண்பரே!

      Delete
  8. பதிவு அருமை... ஆனால் ரொம்பவும் ஜவ்வு :)

    ReplyDelete
    Replies
    1. //பதிவு அருமை... //
      கை தட்டலுக்கு நன்றி.

      // ஆனால் ரொம்பவும் ஜவ்வு :)//
      தலை குட்டலுக்கும்... நன்றி.
      அடுத்தப்பதிவு... பாஸ்ட் கட்டிங்தான்.ஒகேவா...

      Delete
  9. one of the best tamil film

    ReplyDelete
    Replies
    1. தமிழில் வந்த தரமான படங்களில் நிச்சயமாக...தைரியமாக சேர்க்கலாம்.

      போன பதிவில்... நான் இணைத்துள்ள...
      ஹேராம் பற்றி எழுதிய ஆய்வாளர்கள்...
      மிகப்பெரிய மேதைகள்.
      அவர்கள் ... இந்தியாவிலேயே இணையற்ற படமாக... ஹேராமை சொல்கிறார்கள்.

      கருத்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  10. all the best to give a good article

    ReplyDelete
  11. athu sari what is the connection between ipkf and post modernisation. open the eyes and read between lines.
    -surya

    ReplyDelete
  12. இந்த தொடரை கவனமாக படித்து வாருங்கள்.
    விடை கிடைத்து விடும்...மிஸ்டர் அனானி...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.