May 5, 2012

பாலாஜி சக்திவேல்... தமிழ் சினிமாவின் பிரம்மா!


வழக்கு எண் இன்று காலை காட்சி பார்த்து விட்டேன்.
கோவை அர்ச்சனா தியேட்டர் புரஜெக்டர் இன்று முதல் புனிதமாகி விட்டது.
ஆளிலில்லாத இருக்கைகள் நாணி தலை குனிந்து இருந்தது.
குனிந்த தலையை நிமிரச்செய்யும் பொறுப்பு ரசிகர்களே...உங்கள்
கையில்தான் இருக்கிறது.
916 ஹால்மார்க் தரத்தில் எடுக்கப்பட்ட தமிழ் உலக சினிமா.
ஒரு தலை ராகம்,16 வயதினிலேக்கு கொடுத்த ஆதரவை தமிழ் மக்கள் கொடுப்பார்களா?

காதலில்... வெற்றி கண்டு.... கல்லூரியில்... பெயிலானதால் கிடைத்த அனுபவம்...இத்தனை அற்ப்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறது.
இப்படி ஒரு படத்தை தந்த பாலாஜி சக்தி வேலுக்கு.... என்ன கைமாறு செய்யப்போகிறேன்?

நேரில் பார்த்தால் நெஞ்சாரத்தழுவலாம்...அதுவும் முடியாது...அவரும் என்னை மாதிரியே சைசு.
இப்போதைக்கு இந்தப்பதிவுதான்....இந்தக்குசேலனின்.... அவல்.
பாலாஜிக்கு.... எந்தக்காலத்திலும் அவல் பிடிக்கும்.

நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின்...
நாம் பார்க்காத...பார்க்க விரும்பாத ...
வாழ்க்கையை பதிவு செய்துள்ளார்.
வலுவான கதைக்கு... திரைக்கதை உத்தியில்... பல்வேறு சாகசங்களை செய்து பிரமிக்க வைக்கிறார் பாலாஜி சக்திவேல்.


கதாநாயகி... மாவோயிஸ்டாக உருமாறும் இறுதிக்காட்சிக்கு கை தட்டாத கரங்கள்....வெறும் விறகுகள்.
அவளது தந்தை ஒரு கம்யூனிஸ்ட் போராளி என்பதை விசுவல் ட்ரீட்மெண்டில் விவரித்ததற்க்கு ஒரு ரெட் சல்யூட்.

எங்கேயிருந்து சார் பிடிச்சீங்க... அந்தக்கதாநாயகன்!
நான்... அவன்கிட்ட ரோட்டுக்கடையில...
இட்லி வாங்கி சாப்பிட்ட பீலிங் வருது.
அவன் முறுக்கு கம்பெனியில் பிழிபடுவதை...
 கொதிக்கும் எண்ணெய் உக்கிரத்தோடு...
படமாக்கிய விஜய்மில்டனுக்கு நன்றி.பாராட்டு.

பெண்களும்...பெண் பிள்ளைகளை பெற்றவர்களும் இப்படத்தை பார்ப்பது...அவசியம்.
குறிப்பாக... பெண் பதிவர்கள்...ஊமைத்தங்காய் பஜ்ஜி... பதிவையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இப்படத்திற்க்கு ஆதரவு தெரிவியுங்கள்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்... இந்த நாட்டிலே...
என்ற பாடலை பின்னணியாக ஒலிக்கவிட்டு...
இது வரை ஆண்ட திராவிடக்கட்சிகளுக்கு ஆப்படித்திருக்கிறீர்களே!
பாலாஜி சக்திவேல்...
நீங்கள்தான்... தமிழ் திரை உலகின் சேகுவேரா...

காவல்துறை... பணநாயகத்தின் ஏவல்துறை... என்பதை நீங்கள் சொல்லிய பாணி....தமிழ்நாட்டிலுள்ள அத்தனை லஞ்சப்போலிசையும்...
ஒரு கணம் திடுக்கிட வைக்கும்...

இப்படத்தை... பின்னணி இசையில்லாமல் எடுத்திருந்தால் படத்தின் உயரம் இன்னும் அதிகரித்திருக்கும்.
வெளி நாட்டு விருதுக்காக இப்படத்தை அனுப்பும் போது...
செய்து பாருங்கள்...பாலாஜி சக்திவேல்.
இப்படத்தில் பின்னணி இசை இல்லாததற்க்காகவே தனிப்பாராட்டு பெறுவீர்கள்.
அந்த பிச்சைக்காரன் பாடலை...
கிளைமாக்சில் பின்னணியாக ஒலிக்கச்செய்தீர்களே...
ஆயிரம் மின்னல் தாக்கிய எபெஃக்ட் கிடைத்தது.

படத்தின் டிடிஎஸ் ஒலி படத்தின் கவிதைத்தன்மையை சற்று குலைத்தது.
தேவையில்லாமல் சரவுண்ட் ஸ்பீக்கரில் வந்த சப்தங்கள்... படத்தோடு
ஒன்ற விடாமல் எரிச்சலளித்தது.

சத்யஜித்ரே,ரித்விக் கதக் உயரத்தை தொட முயற்ச்சித்தீர்களே...
அதற்க்கு தமிழ் ரசிகர்கள் என்ன பரிசு வழங்கப்போகிறார்கள்?
சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் காத்திருக்கிறேன்.

இப்படத்தின் டிவிடி...ப்ளூ ரே வெளியிடும் உரிமையை...
உலகின் தலை சிறந்த படங்களை மட்டும் வெளியிடும் கிரைட்டிரியன் நிறுவனத்தார்... வாங்குவது நல்லது.
அவர்களுக்கு இதை விட சிறந்த தமிழ் படம் இப்போதைக்கு இல்லை.

இப்படத்தை நாளைக்கு மறுபடியும் பார்க்கப்போகிறேன்.
வசனத்தை தவிர்த்து... விசுவல் ட்ரீட்மெண்டில்... படத்தை நகர்த்தி....
உலகின் எந்த உலக சினிமா இயக்குனருக்கும் நான் சளைத்தவன் இல்லை என
பாலாஜி சக்திவேல் உலகிற்க்கு செய்தி சொல்லியிருக்கிறார்.
அது உண்மைதான்... என எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்லுவேன்.

34 comments:

  1. படம் அபார வெற்றி என்று சொல்லலாம்... உங்கள் ஊரில் எப்படியென்று தெரியவில்லை... இங்கே அரங்கு நிறைந்த காட்சிகள்...

    இறுதிக்காட்சி மட்டும் எனக்கு பிடிக்காததால் என் கைகள் விறகுகளாக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டி இருக்கிறது...

    ReplyDelete
  2. இந்தப்படத்தை பாராட்டியும்...
    அக்மார்க் நாணயத்துடன் குறைகளையும்...
    சுட்டிக்காட்டி எழுதியுள்ள கைகளை...
    விறகு என்று எப்படி சொல்ல முடியும்?

    ReplyDelete
  3. இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் கேள்விப்பட்ட வரை படம் நான் எதிர்பார்க்கும் ஒரு தமிழ்ப்படத்திற்கான அத்தனை விடயங்களையும் கொண்டதாக இருக்கும் போல தெரிகிறது. தியேட்டர்ல பார்க்க முயற்சிக்கிறேன். இல்லாட்டி வழக்கம்போல டிவிடி தான்.

    ReplyDelete
    Replies
    1. ஹாலிவுட் ரசிகரே!
      படத்தை தியேட்டரில் பார்ப்பது...
      உங்களுக்கும்...
      படைத்த படைபாளிக்கும்...
      மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும்.

      Delete
  4. இன்று தான் பரூக் பீல்ட்ஸ் இல் பார்த்தேன்..எனக்கும் ஆச்சர்யம்..இங்கு படம் முடிந்தவுடன் அனைவரும் கை தட்டினர்..என்னையும் சேர்த்து...உங்களின் விமர்சனம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நான் ப்ரூக்பீல் வேண்டுமென்றே தவிற்த்து அர்ச்சனா தியேட்டருக்கு போனேன்.
      அர்ச்சனா தியேட்டர்காரன்... ஹவுஸ்புல் ஆனால் கூட ஏசி போடமாட்டான்.
      அந்த புழுக்கம்..படத்தின் நிஜத்தன்மையை காட்டமாக உணரச்செய்யும்...என எதிர்பார்த்துதான் போனேன்.
      படத்தின் வெப்பத்தை...
      தியேட்டர் புழுக்கம்... மிகச்சரியாக 4டி எபெக்டில் உணர்த்தியது.
      என்றும் ஏசி போடாத... அர்ச்சனா தியேட்டர் வாழ்க!

      Delete
  5. //கோவை அர்ச்சனா தியேட்டர் புரஜெக்டர் இன்று முதல் புனிதமாகி விட்டது.//
    இந்த ஒற்றை வரியிலேயே படத்தின் தரம் தெளிந்து விட்டது! பிரமாதமான வரிகளை பதிவு நெடுகிலும் கோர்த்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்!!

    படத்தின் promo பெரிதாக கவரவில்லை.. அதனால் படம் லேட்டாக டி.வி.டி வாங்கிப் பாக்கலாமோன்னு நினைச்சேன்.
    இந்த அருமையான விமர்சனத்தை பார்த்துவிட்டு.. இனியும் டி.வி்.டிக்கு காத்திருக்க மாட்டேன்!! நன்றி.

    ReplyDelete
  6. ஒரு உன்னதமான படைப்பிற்கு அற்புதமான விமர்சனம். இம்மாதிரி திரைப்படங்கள் வெற்றி பெறா விட்டால் தமிழ்சினிமாவின் எதிர்காலம் மிகப்பெரிய ?யே

    ReplyDelete
    Replies
    1. இப்படத்திற்க்கு மிகப்பெரிய வெற்றியை தமிழ் ரசிகர்கள் தர ஆயத்தமாகி விட்டார்கள் என்று நண்பர்களின் எஸ்.எம்.எஸ் செய்திகள் சொல்கிறது.
      வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      Delete
  7. இவ்வளவு ரசித்து ருசித்து நேசித்து ஒரு தமிழ் படத்தை விமர்சித்து வழங்கியுள்ளீர்கள்..இங்க நான் இருக்கிற இடத்துல இந்த படம் இன்னும் தியேட்டர்ல வரல..வந்தால் கட்டாயம் பார்க்கிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கே.எல் சென்றாவது பார்த்து விடு குமரா...
      மிட் வேலியில்
      கட்டாயம் ரீலிஸ் ஆகியிருக்கும்.

      Delete
  8. உங்களின் விமர்சணம் அருமை

    படத்தை பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களோடு தியேட்டரில் பார் சதீஷ்...

      Delete
  9. Replies
    1. வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  10. Very Interesting... But we don't have chance see the film in Bangalore...:-(

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் படம் வெற்றியடைந்து விட்டது.
      இதனால் கட்டாயம் கர்நாடகத்தில் படம் வெளியாகும்.
      காத்திருந்து பார்த்து விடுங்கள்.

      Delete
  11. மனதை கனக்க செய்த படம்.

    உங்களை போல மறுபடியும் பார்த்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது.பல முறை பார்த்து பரவசப்படவேண்டிய படம்.

      Delete
  12. நல்ல விமர்சனம் மாப்ள...மக்களின் ஆதரவு கண்டிப்பா இருக்கும்..நல்ல படைப்பாகத்தான் இருக்கும் என்று உங்களின் எழுத்துக்கள் மூலம் அறிந்து கொண்டேன் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உதிரிபூக்களுக்குப்பிறகு....
      நல்ல தமிழ் சினிமாவை தலை நிமிர வைப்போம் என ரசிகர்கள் நிரூபித்து விட்டார்கள்...மாப்ள.

      Delete
  13. நல்ல படம் ஆனால் இறுதி காட்சியில் யதார்தத்தை மீறி சினிமா புகுந்துவிடுகிறது. நீங்கள் சொல்வதுபோல் பின்னணி இசை சற்று உறுத்தலாகவே உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. இறுதிக்காட்சி வலிந்து திணிக்கப்படவில்லை.
      அதற்க்குறிய நியாயத்தை... முந்தைய காட்சிகளிலேயே பொதிந்து வைத்திருக்கிறார் இயக்குனர்.
      மறுபடியும் படத்தை பாருங்கள்.
      இறுதிக்காட்சிக்கான தொடர்புகளை ...தேடுங்கள்.

      Delete
  14. நான் படத்துக்கு போனதுக்கு காரணம் உங்க மெசேஜ் மட்டுமே.. கருமம் அந்த படத்துக்கு வரவேமாடனு சொன்ன என் நண்பன் கூட உங்க மெசேஜ் பாத்துட்டு வந்தான்.. பிரமாதமான படம்.. அந்த லெனின் புக் காட்டும் போது எதுக்குடா சம்மந்தமே இல்லாம வருதேன்னு யோசிசேன்.. கடைசில கலகிடாங்க.. இந்த படத இத விட நல்ல விமர்சனம் பண்ணவே முடியாது..

    ReplyDelete
    Replies
    1. என் எஸ்.எம்.எஸ் உங்கள் நண்பரையும் இழுத்து வந்த செய்தி கேட்டு... மிகுந்த மகிழ்ச்சி.

      //இந்த படத இத விட நல்ல விமர்சனம் பண்ணவே முடியாது..//
      என் மேல் கொண்ட தனித்த அன்பின் காரணமாக இப்படி பாராட்டி உள்ளீர்கள்.
      நன்றி.
      என்னை விட மிக அற்ப்புதமாக இப்படத்திற்க்கு விமர்சனங்கள் பதிவுலகில் காணக்கிடைக்கிறது.
      சுமாராக எழுதுபவர்கள் கூட...
      இப்படத்திற்க்கு மிகச்சிறப்பாக எழுதி உள்ளனர்.
      இதுவே படத்தின் வலிமையை காட்டுகிறது.

      Delete
  15. பெங்களூர்ல வரட்டும். பார்க்காம உடுரதில்லை. நீங்கள் கூப்பிட்ட பொது ஒரு மீட்டிங்கில் இருந்ததால் கட் செய்யவேண்டிவந்துவிட்டது. இப்போது அழைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      கோவை வந்தாவது படத்தை பார்த்து விடுங்கள்.
      நான் இந்த ஞாயிறு பெங்களூரூ வருகிறேன்.
      சந்திப்போம்.

      Delete
  16. except some dramatic scenes (especially last 20 mins) its good movie.. but not world class because of some commercial elements... Nobody dares to be Andrei Tarkovsky in tamil industry :(

    ReplyDelete
  17. Good movie... but last 20 mins are for commercial purpose.. True artist should not compromise for money.. Nobody dares to be Andrei tarkovsky in Tamil film industry :(

    ReplyDelete
  18. நான் ஒரு சாதா ரசிகனுங்க.உடனே பவர் ஸ்டார் படத்துக்கு போ போ னு சொல்லி ஜாதி பிரிச்சிடாதிங்க.வ எ 18/9 காதல் மாதிரி அழுத்தம் இல்லாம போனதுக்கு காரணம் என்ன?விமர்சனம் படிக்காமல் போனதாலா?எனது மனைவி,தம்பி,நண்பர் மற்றும் நான் நால்வருக்குமே படம் விஷேசமாக தெரியவில்லை.நல்ல படம் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.அழுத்தமான படமா?மறுபடியும் உங்களை தியேட்டருக்கு வர சொல்லுதா என்றால் இல்லை என்றே சொல்லலாம்.கனா கண்டேன் படத்தில் கே வி ஆனந்த் செய்தது போல பல சிறப்பான காட்சியமைப்புகள் இருந்தாலும் மனதில் நிற்க மறுக்கிறது.திரு பாலாஜி சக்திவேலின் படம் பார்க்க சென்றேன் பாலாஜி தெரிந்த அளவு படம் தெரியவில்லை என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நல்ல படம் என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை எனச்சொல்கிறீர்கள்.
      ஆனால் குழப்பமாக இருக்குறீர்கள்.
      இந்த வார விகடன்,குமுதத்தில் வழக்கு எண் பற்றிய விமர்சனம் இருக்கிறது.
      படியுங்கள்.
      உங்கள் குழப்பத்துக்கு விடை கிடைத்து விடும்.

      Delete
  19. Viva Zapata! (1952)Elia Kazan
    Marlon Brando, Jean Peters and Anthony Quinn
    watch this film and review it i'm waiting ur the better person to review this film u have guts

    ReplyDelete
  20. ulaga cinemakalai ungal molamaga arinthu kolvathil magizchi

    ReplyDelete
  21. ungal mulamaga cinemavai arinthu kolvathil mazhichi

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.