Oct 20, 2011

BLISS [Turkish]2007-பெண்ணே நீ ஒழிக...


பெண்ணாய் பிறத்தற்க்கே மாதவம் செய்திடல் வேண்டும் எனக்காலகாலமாக ஜல்லியடித்து ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரை கொடுமைப்படுத்தப்படும் இனம் பெண்ணினம்.
வாச்சாத்தி கொடுமைக்கு நிவாரணம் பெற எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது?
ஒவ்வொரு நொடியும் பெண்கள்.... உலகில் ஏதாவது ஒரு மூலையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அந்த துன்பக்கடலின் ஒரு துளிதான் மரியம்.
அந்த அனிச்ச மலருக்கு வயது 17.

துருக்கி தேசத்து மலைகிராமத்தில் ....
நெடிதுயர்ந்த மலையின் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கும்...
 சலனமில்லாத குளத்தின் கரையில்...
 துவைத்துப்போட்ட துணி போல் கிடக்கிறாள் மரியம்.
படத்தை உற்று பாருங்கள்.
அந்த இளங்குருத்தின் குருதி தொடை வழியே வழிந்தோடி குளத்து நீரில் கலப்பதை காண முடியும்.

முதல் காட்சி....முதல் ஷாட்டிலேயே இத்துன்பத்தை...துயரத்தை காட்டிய விதத்திலேயே 'நான் ஒரு உலகசினிமா வித்தகன்' என்பதை சொல்லி விட்டார் இயக்குனர் Abdullah Oguz.

நடந்த கொடுமைக்கு நிவாரணம் தேடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணை மேலும் ரணமாக்குவதானே நமது குல வழக்கம்.
தாயில்லாத மரியத்துக்கு பேயாக சித்தி.
கற்பழிக்கப்பட்ட பெண்ணை அழிப்பதுதான்....எங்குமே சாத்திரம்...சம்பிரதாயம். “தொங்கு”என கயிரை பரிசளிக்கிறாள் சித்தி.
உடலும்,மனமும் ரணமாகிப்போன மரியத்துக்கு ஆதரவு அன்றும்...இன்றும்...என்றும் ஒரே ஒரு பாட்டிதான்.

அவரிடம் கூட தன்னைக்குலைத்த மாபாதகனை காட்டிக்கொடுக்க மறுக்கிறாள் மரியம்.
மரியத்தை ஒழிப்பது எப்படி என்று ஊரே ஒன்று கூடி பேசுகிறது.
முடிவாக ஒரு ராணுவ வீரனிடம் பணியை ஒப்படைக்கிறார்கள்.
கொலைக்களனாக இஸ்தான்புல் நகரத்தை தேர்ந்தெடுத்து மரியத்தை பலியாடாக அழைத்துச்செல்கிறான்.
புண் பட்ட மரியத்தின் மனதுக்கு ஒவியம் போல் காட்சியளிக்கிறது இஸ்தான்புல் நகரம்.
நகரம் மறைந்திருக்கும் நரகம் என்பதறியா பேதை.
ராணுவத்தில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக பணிபுரிந்தவனுக்கு போட்டுத்தள்ள சரியான இடம் சொல்லியா தர வேண்டும்?

துடிக்கும் துப்பாக்கியால் மரியத்தின் உயிரை குடிக்க முடியாமல் தவிக்கிறான்.
காரணம்....சிறு வயது முதல் அவனால் நேசிக்கப்பட்டவள் மரியம்.
தன்னை நேசித்தவன்... யாசிப்பது உயிர்... என்பதறிந்து  “எடுக்கவேண்டாம்....கொடுக்கிறேன்”என தற்கொலைக்கு துணிகிறாள்.
 “தூயவனே! செல்...என் தந்தையிடம் சொல்...
மரியம் மாசற்றவள்.....சொர்க்கத்தில் என் தாயை சந்திக்க செல்கிறேன்” என மரணத்தை நோக்கி மரியம் பாய்கையில் தடுத்து விடுகிறான் மாவீரன்.
பல்லாயிரம் உயிரைக்குடிக்கும் அணு உலையை திறக்கத்துடிக்கும் மத்திய அரசா அவன்?
மனிதநேயம் மிகுந்த மனிதன்.

இக்காட்சியை நூறு முறை பார்க்க வேண்டும் நமது படைப்பாளிகள்.
நடிப்பு,ஒளிப்பதிவு,எடிட்டிங்,பின்னணி இசை ...இவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு ஒரு காட்சியை எப்படி வீர்யமாக்குகின்றன என்பதற்க்கு இலக்கணம் இக்காட்சி.
இது போன்ற படங்களை நேசித்து பார்க்கும் படைப்பாளிகளிடம் வேலாயுதமும் ஏழாம் அறிவும் தோன்றாது.

வாழ நினைத்தால் வாழலாம்....
வழியா இல்லை பூமியில்.... என புறப்பட்ட ஜோடிக்கு அடைக்கலம் தருகிறார் ஒரு பேராசிரியர்.
அலை கடலில் ஒரு தோணி...
அதில் வாழ்வதே என் பாணி....
என உல்லாசப்படகில் உலகம் சுற்றும் வாலிபன் அவர்.



அவரது தாடி மட்டும் வெள்ளையில்லை.. மனமும்.. என எண்ணுகிறாள் மரியம். 
அவர்,  பாலா....பாலிடாலா....என சந்தேகிக்கிறான் மாவீரன்.

மரியத்தை கெடுத்த மாபாவி யார்? என்ற முதல் கேள்வியிலிருந்து....
பேராசிரியர் நல்லவரா?கெட்டவரா?
மரியத்தை மாவீரன் ஏற்றானா?மறுத்தானா?
மரியம் வாழ்வாளா?வீழ்வாளா?
துப்பாக்கி வெடிக்குமா?வெடிக்காதா?
[மரியத்தின் உயிரைக்குடிக்க நினைத்த துப்பாக்கி... இன்னொரு காட்சியில் குளோசப்பில் காட்டப்படுகிறது.
துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]
என பல துணை கேள்விகளோடு படம் பயணிக்கிறது.


வாருங்கள்....அவர்களோடு பயணித்து விடை தேடுவோம்.

என் முதல் பதிவில் குறிப்பிட்டபடி...
களவாணியில் நம்பிக்கையாகி....
 இன்று வாகை சூடி...
 நட்சத்திரமாக ஜொலிக்கும் இயக்குனர் ஏ.சற்க்குணத்துக்கு...
 இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

29 comments:

  1. பிளிஸ் என்றொரு கில்மா படமும் இருக்கிறது.அப்படத்திற்க்கு பதிவெழுத எனது நண்பர் கில்மா ஸ்பெஷலிஸ்ட் சிபி இருக்கிறார்.

    ReplyDelete
  2. சிபி யை கில்மா பட விமர்சகர் என்பதை நான் கண்டிக்கிறேன்..( ஹி..ஹி ..ஹி அவர்கிட்டே பிளிஸ் பட சிடி கொடுத்து இருக்கீங்களா ..?அப்புறம் உங்க விமர்சனம் அருமை.இந்த படம் வாங்கி இருக்கிற அவார்ட் பத்தி சொல்லவே இல்ல ..

    ReplyDelete
  3. மாப்ள அடிச்சு துவச்சிட்டீங்க விமர்சனத்துடன் அரசியலையும். கலக்கலா இருக்குங்க நன்றி...சிபி மேட்டரில் கடைசில நீங்களுமா ஹிஹி!

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம் சார்..இது ‘நல்ல’ ப்ளிஸ்-னு சொன்னதுக்கும் நன்றி.

    ReplyDelete
  5. அருமையான வார்த்தைகளால் சுவாரசியமாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள். பிளிஸ் என்றொரு கில்மா படமும் உண்டா? சரிதான்... நீங்கள் எழுதிய படத்தை டிவிடி கடையில் கேட்டு கில்மா படத்தை அவர் கொடுத்துவிட்டால் என்னாவது...?

    ReplyDelete
  6. // பிளிஸ் என்றொரு கில்மா படமும் இருக்கிறது.அப்படத்திற்க்கு பதிவெழுத எனது நண்பர் கில்மா ஸ்பெஷலிஸ்ட் சிபி இருக்கிறார். //

    ஏன் நான் இல்லையா... படத்தின் பெயரை ஆங்கிலத்தில் spell பண்ணவும்...

    ReplyDelete
  7. வணக்கம் அண்ணாச்சி,
    நலமா?

    வன் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் நிலையினைப் பற்றி அழுத்தமாகச் சொல்லும் திரைக் காவியத்தின் விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.

    விமர்சனம் அருமை.
    ஒளிப்பதிவு + காட்சியமைப்பு பற்றி நீங்கள் இவ் இடத்தில் சிறப்பாக விளக்கியிருப்பது இப் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  8. @கோவை நேரம்
    வாங்க நண்பரே!

    //சிபி யை கில்மா பட விமர்சகர் என்பதை நான் கண்டிக்கிறேன்..( ஹி..ஹி ..ஹி அவர்கிட்டே பிளிஸ் பட சிடி கொடுத்து இருக்கீங்களா ..?]//

    யாரங்கே...
    சிபிக்கு கில்மா பிளிஸ் டிவிடி ஒரு பார்சல்.

    ReplyDelete
  9. @கோவை நேரம்

    //இந்த படம் வாங்கி இருக்கிற அவார்ட் பத்தி சொல்லவே இல்ல ..//
    ஸாரி...
    இப்படத்தின் டிவிடி கவரில் 21 அவார்டுகள் பெற்ற படம் என்ற தகவல் மட்டுமே உள்ளது.
    விக்கிபீடீயாவில் அது பற்றிய விரிவான தகவல் இல்லை.

    ReplyDelete
  10. @விக்கியுலகம்
    //மாப்ள அடிச்சு துவச்சிட்டீங்க விமர்சனத்துடன் அரசியலையும். கலக்கலா இருக்குங்க நன்றி...//

    என்னை பாதித்த அரசியல் நிகழ்வுகளை எப்படியாவது எனது உலகசினிமா பதிவில் கோத்து விடுவேன்.
    பாராட்டுக்கு நன்றி நண்பா...

    //சிபி மேட்டரில் கடைசில நீங்களுமா ஹிஹி!//

    சிபியின் கில்மா பட விமர்சனத்தை விரும்பிப்படிப்பவன் என்ற உரிமையில் விளையாடினேன்.

    ReplyDelete
  11. @செங்கோவி
    //நல்ல விமர்சனம் சார்..இது ‘நல்ல’ ப்ளிஸ்-னு சொன்னதுக்கும் நன்றி.//
    இது வரை நான் எழுதிய படங்களில் இப்படி ஒரு பிரச்சனை வந்ததில்லை.
    எனவேதான் எச்சரித்தேன்.
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. @கணேஷ்

    //அருமையான வார்த்தைகளால் சுவாரசியமாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள். //
    உங்கள் பாராட்டு தனித்துவமானது.மிக்க மகிழ்ச்சி.

    //பிளிஸ் என்றொரு கில்மா படமும் உண்டா? சரிதான்... நீங்கள் எழுதிய படத்தை டிவிடி கடையில் கேட்டு கில்மா படத்தை அவர் கொடுத்துவிட்டால் என்னாவது...?//

    உலகசினிமா பிளிஸ் டிவிடி கவரே கவிதையாக இருக்கும்.
    கில்மா பிளிஸ் டிவிடி கவரே கில்மாவாக இருக்கும்.

    ReplyDelete
  13. @பிலாசபி பிரபாகரன்
    நண்பரே....நான் தங்கள் பதிவை படிக்கவே முடிவதில்லை. உங்கள் பிளாக் தோன்றிய உடனே கறுப்பு திரை ஒன்று வந்து மறைக்கிறது. அதில் swap என்ற வார்த்தை மட்டும் எச்சரிக்கை செய்கிறது. அதன் பிறகு எந்த பிளாக்கும் தெரிவதில்லை. கூகிள் அக்கவுண்டை குளோஸ் செய்து பின்னர் புதிதாக உள் நுழைய வேண்டி உள்ளது. இப்பிரச்சனைக்கு தயவு செய்து தீர்வு சொல்லவும்.

    >>> பிளிஸ் என்றொரு கில்மா படமும் இருக்கிறது.அப்படத்திற்க்கு பதிவெழுத எனது நண்பர் கில்மா ஸ்பெஷலிஸ்ட் சிபி இருக்கிறார்.<<<

    //ஏன் நான் இல்லையா... படத்தின் பெயரை ஆங்கிலத்தில் spell பண்ணவும்...//

    கில்மா பிளிஸ்ஸின் பெயரும் ஆங்கிலத்தில் ஒன்றுதான்.BLISS

    ReplyDelete
  14. @நிரூபன்
    நண்பரே!
    தங்கள் கருத்துரையையும்,பாராட்டையும் இதயத்தில் பத்திரப்படுத்தி உள்ளேன்.

    ReplyDelete
  15. Dear WCF
    yeah super twice i have seen that movie very good movie in all aspects esp the cinematography, mariem's acting, good screenplay esp the climax make the viewers understand actually what had happened to her. credits to Abdullah oguz. that's what we call as a directors touch. great movie to watch and enjoy.
    another suggestion for you for the benefit of all of your readers
    "The story of weeping camel" mongolian film.
    the climax music of this movie haunt you for a long period and you will believe that climax incident is really indeed true and thats the greatness of this film.
    i do not know whether you had already commented on that movie. keep it up
    good work interwined with contemporary politics.
    anbudan
    sundar g ( rasanai )

    ReplyDelete
  16. அருமையான விமர்சணம்

    ReplyDelete
  17. @www.rasanai.blogspot.com
    அருமை நண்பர் சுந்தர்ஜீ....
    பிளிஸ் படத்தை இரண்டு தடவை பார்த்து...ரசித்து... படத்தை கொண்டாடி பின்னூட்டம் இட்டுள்ளீர்கள்.
    மிக்க மகிழ்ச்சி.
    தாங்கள் குறிப்பிட்ட படத்தை இது வரை பார்க்கவில்லை.
    டிவிடி கிடைத்ததும் பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  18. @வைரை சதீஷ்
    அருமைத்தம்பியே!
    உனது வருகையும்...பாராட்டும் மகிழ்ச்சியை தந்தது.

    ReplyDelete
  19. Dear WCF
    thanks for the encouraging comments. if you see bliss you can understand that even a layman viewer (esp tamil cinema rasigan) can easily understand the film even without subtitiles. that kind of good and clear screenplay + Direction is a big plus for this film. moreover it will surely suit the tamil cine audience taste.
    just want to know whether you had changed the clock time of your computer to US date/timing format. pl make it to indian system. thanks
    anbudan
    sundar g (rasanai)

    ReplyDelete
  20. நீண்ட நாட்களுக்கு பின்னர் வருகிறேன்.
    விமர்சனம் அசத்தல். இப்படியான படங்கள் இங்கே பெற்றுக்கொள்வது கடினம் இணையத்தில்தான் பார்க்கவேண்டும்

    ReplyDelete
  21. @WWW.rasanai.blogspot.com
    சுந்தர் ஜீ...தாங்கள் அறிவுறுத்தியபடி இந்திய நேரத்துக்கு மாற்றி அமைத்து விட்டேன்.

    சப் டைட்டில் இல்லாமலே இப்படம் பார்த்து ரசிக்கலாம் என்ற தங்களது கருத்து...
    இப்படத்துக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு.
    மீண்டும் வந்து பின்னூட்டமிட்ட உங்கள் அன்பிற்க்கு நன்றி.

    ReplyDelete
  22. @மதுரன்
    தங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி தருகிறது நண்பரே!

    ReplyDelete
  23. விமர்சனம் அழகு.. படித்தவர்கள் அனைவரும் பார்க்க தூண்டும்

    ReplyDelete
  24. @சி.பி.செந்தில் குமார்
    நண்பரே!உங்கள் பாராட்டை உங்கள் பிறந்த நாள் ட்ரீட்டாக ஏற்று மகிழ்கிறேன்.

    ReplyDelete
  25. தலைவரே,
    நல்ல படம் பற்றிய அறிமுகம் செய்தீர்கள்,சீக்கிரமே பார்க்கிறேன்,//துப்பாக்கிக்கு குளோசப் ஷாட் போட்டால் அது வெடிக்க வேண்டும் என்பது மாமேதை ஹிட்ச்ஹாக் கடைப்பிடித்த கோல்டன் ரூல்.]//
    அருமையான அபூர்வமான மேற்கோள்,நன்றி

    ReplyDelete
  26. கதையை நேரடியாக சொல்லாமல் காட்சிகளில் விளக்கிய விதம் அருமை ... நல்ல விமர்சனம் ...

    ReplyDelete
  27. @கீதப்பிரியன்
    நண்பரே!
    நீண்ட நாள்களுக்கு பிந்தைய தங்களது வருகை...மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.தங்கள் கரங்களால் பதிவெழுதப்பட பல நல்ல சினிமாக்கள் காத்து கிடக்கின்றது.

    ReplyDelete
  28. @அனந்து
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. படம் பார்த்தேன்.. கதாநாயகி சிம்ரன் சாயலில் இருக்கிறார். தமிழில் எடுக்கலாம். இத் திரைப்பட இயக்குனர் 'தொட்டி ஜெயா' படத்தை காப்பியடித்தாரோ என எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது. சிம்பு, த்ரிஷாவை வைத்து இப் படத்தை யாராவது தமிழில் எடுக்க முன்வருவாரானால் தமிழிலும் வெல்லும். விருதுகள் நிச்சயம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.