
சூப்பர் பாஸ்ட் மூவி எது என்று கேட்டால் “ஸ்பீட்” என்பார்கள் பலர்.....
“டேக்கன்” என்பார்கள் சிலர்.......
விங் மைக்ரேசன் என்பார்கள் இந்த ஆவண படத்தை பார்த்த அனைவரும்.
63 சீட் வாங்க...கொடுக்க இரண்டு கட்சிகள் நடத்திய குறும்படம்தான் உலகிலேயே விறுவிறுப்பான சரண்டர் காவியம் என்று என் நண்பர் சொல்கிறார்.
நாப்பது கிலோ மீட்டர் காரில் பயணம் போங்கள்.
செல் போனில் பேசிக்கொண்டே குறுக்கே வரும் பாதசாரிகள்....
டிராபிக் விதி மதியாமல் வரும் ஆட்டோக்கள்....
மாமூல் கொடுத்த திமிரில் வரும் மண் லாரிகள்....
என ஆயிரம் காரணிகளை தவிற்த்து ஸ்தலம் போய் சேர்ந்தால்...... நீங்கள் வழி படும் கடவுள் அருள்தான் காரணம்.
ஆனால் நாப்பதாயிரம் கிலோமீட்டர் ஆக்ஸிடெண்ட் இல்லாமல் பயணிக்கிறது பறவைகள்.
அந்த பயணத்தை மிக வேகமான திரைப்படமாக நமக்கு வழங்கியவர்கள்

Jacqus cluzaud,Mickel Debats,Jacques Perrin.நான்கு வருடம்,7 கண்டங்களில் படமாக்கியுள்ளார்கள்.


விறுவிறுப்பான மசாலா படத்திற்க்கான பாட்டு,நடனம்,சண்டைக்காட்சி...என அனைத்தும் உண்டு.ஏன் வில்லன் கூட உண்டு.துப்பாக்கியோடு வரும் அந்த கொடிய மிருகத்தின் பெயர் “மனிதன்”.
இந்த ஆவணப்படத்திற்க்கு இணையான பிரமிப்பு.... தயாரித்த விதத்திலும் கிடைக்கிறது .

இப்படத்திற்க்காக பதிவு செய்யப்பட்ட பிலிம் நெகட்டிவ் நீளம் எவ்வளவு தெரியுமா? அதிகம் இல்லை ஜெண்டில் மேன்.... 590 மைல் நீளம்.அவ்வளவுதான்.
இந்த செய்தி பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் காதுக்கு போனால் வந்தது ஆபத்து...600 மைல் நெகட்டிவில் எந்திரன் பார்ட் 2 எடுக்க கிளம்பி விடுவார்.
590 மைலை அழகாக வெட்டி ஒட்டி நமக்கு காண்பித்தது 89 நிமிடம்.
அதான்.... படம் பறக்குது.

இரண்டு மாசம் ஒரே லொக்கசனில் தொடர்ந்து சூட் பண்ணியதில் கிடைத்த அத்தனை ஷாட்களும் வைரங்கள். எதை எடுப்பது...எதை விடுப்பது என்று குழம்பாமல் கோகினூர்வைரமாக .....
ஒரு நிமிடத்திற்க்கும் குறைவான ஒரே ஒரு ஷாட்டை.... தேர்வு செய்தார் எடிட்டர் திலகம்.

வானத்தில் பறவைகள் பறப்பதை மிக அருகில் காமிராவும் பறந்து பதிவு செய்திருக்கிறது.எப்படி???????????

ஸ்டார்க்ஸ்&பெலிக்கன்ஸ் வகைப்பறவைகள் முட்டையிலிருந்து வெளி வரும்போது எதை பார்க்கிறதோ அதையே தாயாக நினைத்து பழகுமாம்.செயற்க்கை முறையில் அடை காத்து குஞ்சு வெளியே வரும்போது மனிதனை பழகவிட்டு டிரெய்னிங் கொடுத்து அந்த பறவைகளின் காலில் காமிராவைப்பொருத்தி பாலுமகேந்திராவாக்கியிருக்கிறார்கள்.
[இத்தகவலை எனக்கு சொன்னவர் என் நண்பர் ஜெயராமன்.காமிராவை திருமணம் செய்து கொண்டு காட்டிலேயே 365 நாளும் இருக்கிறார்.
உலகின் Top 50 வைல்டு லைப் போட்டாகிராபரில் இவரும் ஒருவர். ]

பாராகிளைட்,ஹாட் ஏர் பலூன்,டிரக் என உலகின் அனைத்து வாகனங்களிலும் பயணித்து படமாக்கியிருக்கிறார்கள்.ஒளிப்பதிவில் ஜாம்பவான்கள் அனைவரும் பணிபுரிந்திருக்கிறார்கள்.அதில் ஒருவர் படமாக்கும் போது தவறி விழுந்து தன்னுயிரையே பலி கொடுத்திருக்கிறார்.

இயற்க்கையை நேசிக்க நம் பிள்ளைகளுக்கு பாடம் நடத்த வேண்டாம்.இப்படத்தை காண்பியுங்கள்.அது போதும்.
மிக நல்ல படம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி தலைவ்ரே,விரைவில் பார்க்கிறேன்.
ReplyDelete//இயற்க்கையை நேசிக்க நம் பிள்ளைகளுக்கு பாடம் நடத்த வேண்டாம்.இப்படத்தை காண்பியுங்கள்.அது போதும். //உண்மை
ReplyDeletetorent லின்க் ஏதாவது இருக்கா.. :-))
ReplyDeleteThanks a lot for sharing Sir.I have just got this DVD..
ReplyDeletethanks for sharing
ReplyDeleteகீதப்பிரியன்@ராமன்@லேகா@ஜெகதீஷ்குமார்
ReplyDeleteஅனைவரின் வருகைக்கும் கனிவான கருத்துக்கும் நன்றி.
நண்பர் ராமன் அவர்களே...எனக்கு நெட்டில் டவுண்லோடு பண்ணி பார்க்கும் பொறுமையும் தொழில்நுட்ப அறிவும் எள்ளவும் கிடையாது.நண்பர் கருந்தேள் அல்லது கீதப்பிரியனிடம் தொடர்பு கொண்டு கேட்கவும்.உதவ முடியாமைக்கு வருந்துகிறேன்.
அட , நீங்க கோயம்புத்தூர்காரரா.. நல்லது. உங்ககிட்ட இருந்தா சொல்லுங்க வாங்கிக்கறேன்.:-))
ReplyDeleteண்ணா...நம்முளுக்கு திலுப்பூருங்களா!! நெம்ப சந்தோசமுங்க....வாங்கண்ணா....கடைக்கு
ReplyDeleteஇதைப்போன்ற டாக்குமெண்டரிகள் இன்னும் பார்க்கத் துவங்கவில்லை. அப்படி அக்கௌண்ட்டைத் துவக்கும்போது, இதிலிருந்து ஆரம்பித்து விடுகிறேன் :-) .. கொஞ்ச நாளாக நோ இண்டர்நெட். எனவேதான் இந்தத் தாமதம். லேட்டாக வந்தாலும் லேடஸ்டாக வந்துவிட முயல்கிறேன் :-)
ReplyDeleteசூப்பர் ஃபாஸ்ட் மூவி? கனவு நாயகன் ராமராஜன் நடித்த படங்களீல் எதையாவது பார்க்கவும். அதன்பின், அவைதான் ஃபாஸ்ட் மூவிகள் என்று ஒத்துக்கொள்வீர்கள் :-)
ReplyDelete//இதைப்போன்ற டாக்குமெண்டரிகள் இன்னும் பார்க்கத் துவங்கவில்லை. அப்படி அக்கௌண்ட்டைத் துவக்கும்போது, இதிலிருந்து ஆரம்பித்து விடுகிறேன்//
ReplyDeleteஅன்பார்ந்த நண்பரே!நானும் இதில் இருந்துதான் தொடங்கினேன்.கோணங்களில் இப்படத்தை பார்க்கும் பாக்கியம் கிட்டியது.
ராமராஜன் பாவம்....விட்ருங்க.
இப்படிப்பட்ட படங்கள் எனக்கு பிடித்த விஷயம்.அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteநானும் இப்படியொரு விமர்சனம் எழுதியுள்ளேன். வந்து வாசித்து பகிரவும்.நன்றி.
http://tmaideen.blogspot.com/2011/03/blog-post.html
நன்றி மைதீன்.நிச்சயம் உங்கள் பதிவை படிக்க வருகிறேன்.
ReplyDeleteவலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html
நன்றி எஸ்கே..தங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மிக்க நன்றி.
ReplyDelete