

ஒரு மெகா டிபார்ட்மெண்டல் ஸ்டோரின் கண்காணிப்பு காமராவின் மானிட்டரை கண்காணிப்பதே நம் நாயகனின் வேலை.
ஆள் பார்ப்பதற்க்கு இப்போதைய பிரபு சைஸ்.மனசு சின்னதம்பி பிரபு.பணியாட்கள் செய்யும் திருட்டை ரசிக்கிறான்.சிம்ரன் சைஸில் ஜூலியா என்ற பிகரை மானிட்டரில் பார்த்ததும் காதல் வெடிக்கிறது.
அதன் பின் ஐயாவின் முழு நேர வேலை அம்மணியை மானிட்டரில் தொடர்வது...வீட்டுக்கு போகும் போதும் துரத்துவது....இதுதான் ஐயா மொத்தப்படமே.


படம் முழுக்க அவள் எதிரிலேயே வராமல் கண்ணாமூச்சியாடிவிட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவள் பக்கத்தில் போய் ஹலோ சொல்லி அமர்கிறான்.அவ்வளவுதான் படம்னு டைரக்டரு டக்குனு முடிச்சிட்டாரு.மண்டைகாஞ்சி போச்சுன்னு எழுதினால் அதுதான் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பொய்.
இப்படம் பார்த்தவர்கள் இனி எந்த மெகா மாலில் நுழைந்தாலும் இப்படத்தின் நாயகன் ஜராவையும்,நாயகி ஜூலியாவையும் கண்கள் தேடும்.இதுதான் இயக்குனரின் வெற்றி.
மிஷ்கின் கையில் இப்படத்தின் டிவிடி கிடைக்காமலிருக்க கர்த்தர் கருணை வழங்கட்டும்.
வெற்றிமாறன் பார்க்க..... வெக்காளியம்மன் வரம் தரட்டும்.
தமிழக அரசியல் சூழலுக்கு பொருத்தமான ஒரு வியட்நாம் கவிதை
வாழ்பவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
இறந்தவர்களும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்கள்
களத்தில் அணிவகுத்து நிற்கின்றன
இல்லை,மக்கள் என்றும் சரணடையப்போவதில்லை!
பழி வங்கும் நாள் வரும்.
நாள் ஏப்ரல் 13
படத்தின் மொத்த வசனத்தையும் ஒரு விசிட்டிங் கார்டு பின்னால் எழுதி விட்டார் போலும்.அத்தனை சுறுக்..
ReplyDeleteஉங்கள் விமர்சனம் போலவா?
அறிமுகத்திற்கு நன்றி, பார்க்க முயல்கிறேன்
ReplyDeleteநன்றி மைதீன்.
ReplyDelete//உங்கள் விமர்சனம் போலவா?//
மன்னிக்கவும்.எப்போதும் சொல்வதுதான்...நான் விமர்சனம் எழுதுவது இல்லை...உலக சினிமாக்களை அறிமுகம் செய்து வைக்கிறேன்.சுறுக்கமாகத்தான் எனக்கு எழுத வரும்.அதுதான் என் ஸ்டைல்.எனது ஆசான் சுஜாதா.
kemarakangalil pugunthu
ReplyDeletekelada kathal enratho....!