
1965ல் இப்படத்தை இயக்கி சிறந்த வெளிநாட்டுப்படத்திற்க்கான ஆஸ்கார் பரிசை அள்ளியிருக்கிறார்கள் Jan Kadar&Elmar Klos

இப்படத்தின் கதை அமைப்பு தமிழக மீனவர்களை சிங்களப்பேய்கள் வதைப்பது போல் வலிக்கும்.வலிக்கவில்லையென்றால் உங்கள் பெயர் கலைஞர்.
இரண்டாம் உலகப்போரில்.... இன்று ஸ்லோவாக்கியாவாக இருக்கும்.... அன்றைய செக்கோஸ்லோவாக்கியாவில் நடந்த இனப்பேரழிவை படம் போட்டு காட்டுகிறது கதை.
நகரமா..கிராமமா..என இனம் பிரிக்க முடியாத அழகிய இடம்.யூதர்களை ஒழித்து அனைத்தும் ஆர்ய மயமாக்கும் படலம்.திட்டம் போட்டு சட்டமாக்கிவிட்டார்கள் யூதர்கள் சொத்தை ஸ்வாகா பண்ண.ஆர்யர்கள் அல்லவா...ஆக்கிரமிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்களாயிற்றே!எல்லா இனத்திலும் நல்லவர்கள் உண்டே!அப்படி ஒருவன்தான் நம் நாயகன் டோனிபிரட்கோ.
ஆர்யனாக இருந்தாலும் மிக மிக நல்லவன்.அவனுக்கு பரிசாக மெயின் ரோட்டில் ஒரு யூதருடைய கடையை வழங்குகிறான் அவனது சகலை[லோக்கல் போலிஸ் உயர் அதிகாரி...சுருக்கமாக நாஜி அடிமை]

உரிமை வழங்கப்பட்ட கடிதத்துடன் வருகிறான் டோனி.... கடைக்கு....கடையின் உரிமையாளர் முதிய விதவை ரோஸலியா.
டெய்லரிங்கிற்க்கு தேவையான ஊசி,நூல்,பட்டன் விற்க்கும் கடை.டோனி கடிதத்தை காட்டி கரடியாக கத்துகிறான்.மூதாட்டிக்கு பார்வை வீக்...கேட்க்கும் திறன் அதைவிட வீக்....கடைக்கு வந்த கஸ்டமராக டீரீட் செய்கிறாள் பாட்டி.
இந்த காமெடியிலிருந்து காப்பாற்ற வருகிறார் ஒரு ஆரியர்ஆனால் மனிதகுல மாணிக்கம்.பாட்டியின் குடும்ப நண்பர்.பாட்டியிடம் டோனியை கடை வேலைக்கு வந்த உதவியாளனாக அறிமுகம் செய்து வைக்கிறார்.பாட்டிக்கு பரம திருப்தி.பாட்டி இருவருக்கும் டீ கொண்டு வர உள்ளே போகிறாள்.கடையின் நிலமையை காட்டுகிறார் நண்பர்.சரக்கேயில்லை.காலிப்பெருங்காய டப்பா...சகலை ஏமாற்றி விட்டதாக கொதிக்கிறான் டோனி.சமரசம் செய்கிறார் நண்பர்.


பாட்டியிடம் வேலை செய்வது போல் நடி.....
வருமானத்துக்கு யூதர்கள் நல நிதியிலிருந்து வாராவாரம் கணிசமான தொகை தருவதாக வாக்களிக்கிறார்.மனிதாபத்துடன் ஏற்றுக்கொள்கிறான் டோனி.இதற்க்கப்புறம் வருகின்ற காட்சிகளெல்லாம் அன்பேவா காமடிதான்.

யூதப்பாட்டியை காப்பாற்றினானா?
காட்டிக்கொடுத்தானா?
இதுதான் கிளைமாக்ஸ்.
ஆனால் ஒன்று இந்த டோனி கலைஞர் மாதிரி புத்திசாலியில்லை.அண்ணாசமாதியில் உண்ணாவிரதம் இருக்கத்தெரியவில்லை.