Sep 22, 2010

The divingbell and the butterfly-தன்னம்பிக்கையின் உச்சம்


பட்டர்ப்ளை என்ற பெயர் வந்தாலே பிரெஞ்ச் இயக்குனர்கள் கலக்கி விடுவார்கள் போல.....இப்படி ஒரு படத்தை எடுத்த இயக்குனர் Julian Schnabel க்கு முதலில் ஒரு பிரஞ்ச் கிஸ்.

விடாமுயற்ச்சியுடன்...தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதனின் உண்மைக்கதை.

42 வயதான Baubyக்கு தீடீரென்று ஸ்ட்ரோக் வந்து எல்லாமே செயல் இழந்து விடுகிறது....ஒன்றை தவிர....இடது கண் இமை மட்டும் துடிக்கிறது.இந்த நிலையில் தன்னுடைய சுயசரிதை எழுதி அதுதான் இந்தப்படம்..எப்படி எழுதினார்?????ஒரு நிமிசம் டைம் தருகிறேன்.கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் கலைஞரிடம் சொல்லி கலைமாமணி வாங்கி தருகிறேன்..மனிதமுயற்ச்சியின் உச்சத்தை தொட்டிருக்கிறார் இக்கதாநாயகன்..

மருத்துவ உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாகசொல்லிக்கொண்டு வரும்போது தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்...இப்படி எழுத்துக்களை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்ச்சி விவரிப்பதற்க்கே எனக்கு தலை சுற்றுகிறது.

அடிப்படையில் இந்த இயக்குனர் ஒரு ஒவியர்..எனவே படத்தையும் ஒவியமாக வரைந்து தள்ளிவிட்டார்..இக்கதாநாயகனின் நிலை வைத்து நம்மை பிழிய பிழிய அழ வைத்து இருக்கலாம்..மாறாக கதாநாயகனுக்கு வரும் காதல்,காமம்,கோபம்,பாசம்,வெறுப்பு என்று அனைத்தையும் நம் மீதேபடரவிட்டது இயக்குனரின் வெற்றி..

படத்தின் ஆரம்பக்காட்ச்சிகளில் காமிராதான் கதாநாயகன்..இக்காட்ச்சிகளின் நேர்த்திக்கு ஒளிப்பவாளருக்கு அனுஸ்க்காவை வைத்து ஒரு உம்மா...

இந்தப்படத்தை தேர்வுசெய்து எழுத காரணம் இருக்கிறது.மதுரையில் இருந்து வந்து படுத்து விட்டேன்.பத்து நாள் பேதி.. எல்லாபார்ட்சும் தகறாறு பண்ணுகிறது.மனைவி டிவி,இண்டர்னெட்,ரீடிங் எல்லாவற்றுக்கும் தடை போட்டுவிட்டாள்..காஸ்ட் அவே பட டாம்ஹேங்க்ஸ் போல ஆகிவிட்டேன்..இன்னும் உபாதைகள் தீரவில்லை.கொஞ்சம் தெம்பு வந்ததும் முதல் முயற்ச்சியாக இப்படத்தை எழுதிவிட்டேன்...சற்று சிரமப்பட்டு...

ஆனால் எந்திரனுக்கு வரும் அதீத விளம்பரங்கள்,செய்திகள்,பில்டப்புகள் தரும் மரண அவஸ்தைக்கு மற்றதெல்லாம் ஜுஜுபி......
இந்தப்பதிவை என் இனிய மருத்துவர் டாக்டர் மனோகரனுக்கு காணிக்கையாக்குகிறேன்

9 comments:

  1. உடல் குறைபாடுள்ளவர்களை சோகம் பிழிய காட்டுவதை அவர்களின் இயற்கையான எல்லா உணர்வுகளையும் காட்டுவது மிகச் சிறந்ததாக கருதுகிறேன். ஒரு நல்ல படத்தை பரிந்துரைத்ததற்காக நன்றி!

    ReplyDelete
  2. சார்...
    இப்படத்தின் கதாநாயகனத்தான Quantum of solace படத்தில் காமெடி பீஸ் ஆக்கியிருப்பாங்க...இப்படத்தை பாதிதான் பார்க்க முடிஞ்சது..

    விரைவில் உடல் நிலை பழைய நிலைக்கு வந்துரும்.

    அப்பப்ப மானாட மயிலாட பாருங்க. சீக்கரமே சரியாயிடும்.....

    ReplyDelete
  3. //தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்...இப்படி எழுத்துக்களை கோர்த்து வார்த்தைகளை உருவாக்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.//

    கண்ணைக் கட்டுது. :)
    சத்தியமா விடாமுயற்சிக்கு இதை விட பெரிய example இருக்காது.

    ReplyDelete
  4. பின்னுட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி குழந்தைக்கு ஸ்பெசல் தேங்ஸ் .அது சரி...மானாட..மயிலாட எப்போது பார்ப்பது?????????சாப்பாட்டுக்கு முன்னா..பின்னா????

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல அறிமுகம்,இதையும் விரைவில் பார்க்கிறேன்.நீங்கள் சொன்ன அத்தனையும் பார்த்துவிட்டேன்.நன்றி,மானாட்ட மயிலாட்ட எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.:)))

    ReplyDelete
  6. நண்பர் கீதப்பிரியன்..நான் எழுதிய அனைத்தையும் பார்த்தற்க்கு நன்றி....இதையும் பார்த்துவிட்டால் நமீதா இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருவார்..இச்சலுகை செப்ட்டம்பர் 30 வரை மட்டுமே...

    ReplyDelete
  7. //42 வயதான Baubyக்கு தீடீரென்று ஸ்ட்ரோக் வந்து எல்லாமே செயல் இழந்து விடுகிறது....ஒன்றை தவிர....இடது கண் இமை மட்டும் துடிக்கிறது...

    மருத்துவ உதவியாளர் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்கொண்டு வரும்போது தேவையான எழுத்தில் இடது கண்ணை பிளிங்க் செய்வார்..//

    சொல்லி கொண்டு வருவார் என்றால் காது எப்படி கேட்கும்..?

    ReplyDelete
  8. லக்குமணன்..படம் பாருங்கள்

    ReplyDelete
  9. ரொம்ப அற்புதமான படம். ஒவ்வொரு காட்சியும் கண்களுக்கு விருந்து.அழுவாச்சி அழுவாச்சியா வரும். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.