
John Boyne நாவலை படமாக்கியவர் Mark Homan.
ஆனநதவிகடனில் எஸ்.ராமகிருஸ்ணன் அற்புதமாக அறிமுகம் செய்து இருந்தார் இப்படத்தை.
படித்தவர்கள் விலகி வேறு பிளாக் போய்விடுங்கள்.மற்றவர்கள் பின் தொடருங்கள்.
ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்த வதை படலம்தான் கதைக்களம்.இந்த கொலைக்களம் பற்றி அறியாமல் இந்த ஊருக்கு வருகிறான் ப்ரூணோ என்கிற ஜெர்மானியச்சிறுவன் பெற்றோரோடு, கூடவே சகோதரியும்...
தந்தை ஹிட்லரின் ராணுவ அதிகாரி..
தூரத்தில் இருக்கும் பேக்டரியின் உயரமான சிம்னியில் இருந்து வரும் கரும் புகையில் யூதர்களின் ஆவி கலந்திருப்பதை அறிந்ததும் துடிக்கிறாள் ப்ரூனோவின் தாய்...ரசிக்கிறார்கள் தந்தையும் சகோதரியும்...இது எதுவும் அறியாத ப்ரூனோ யூதக்கேம்பில் வசிக்கும் ஸ்மியூல் என்ற யூதச்சிறுவனோடு இருக்கிறான் நட்ப்போடு..அந்த நட்ப்பின் ஆழம் அவனை மரணத்துக்கு கூட்டி செல்கிறது.ஆயிரம் யூதர்கள் கொல்லப்படுவதை ரசித்த ப்ரூனோவின் தந்தை, தன் மகனை மரணப்படுகுழியிலிருந்து மீட்க துடிக்கும் தவிப்புதான் கிளைமாக்ஸ்..

டிவி,செய்திதாள்களில் வரும் மரணச்செய்திகள் எதுவுமே நம்மை பாதிப்பது இல்லை...உற்றார்...உறவினர் அச்செய்திகளில் இல்லாதவரை....

1995ல் திரு.நாகேஸ் அவர்களை தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக ஒப்பந்தம் செய்யச்சந்தித்தேன்.வெளிநாடு செல்வதாகக்கூறி மறுத்தார்.சூழ்நிலை புரியாமல் வற்ப்புறுத்தினேன்.செய்தித்தாளை தூக்கிப்போட்டு ,இந்தச்செய்தியில் நீயோ..உன் சொந்தக்காரங்களோ இருந்திருந்தால் இங்கு வந்திருக்கமாட்டாய் என கோபித்தார்.செய்தித்தாளை காலையிலேயே படித்து விட்டுத்தான் சென்றிருந்தேன்.
செய்தி...பெட்ரோல் டேங்கர் லாரி மீது மணமகள் குடும்பத்தார் சென்ற வண்டி மோதி அனைவருமே மரணம்...மணமகளை தவிர...
இச்செய்தியின் பாதிப்பில் நாகேஸிருந்தார்..நான் இல்லை..
வெளிநாடெல்லாம் அவர் செல்லவேயில்லை என்பதை பிற்பாடு தெரிந்து கொண்டேன்..
இப்படம் பார்த்த பிறகு புரிந்து கொண்டேன்... நாகேஸ் ப்ரூனோவின் தாய் கேரக்டர்.....
நான்....????????????????
