Feb 11, 2014

இஷ்டத்துக்காக ‘படிப்பவள்’...கஷ்டத்துக்காக ‘படுப்பவள்’.


நண்பர்களே...
இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி,
கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு.
நேர்மையான படைப்பாளிகளுக்கு நேரிடும் நெருக்கடிகள்,
 ‘நல்ல படங்களாக’ மாறி நன்மை பயக்கின்றன.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பாஸ் கியரஸ்தமியின் படங்கள் இரானில் திரையிடப்படுவதில்லை.
இருந்தாலும் இடம் பெயரவில்லை.
காரணத்தை அவரே கூறுகிறார்...

"When you take a tree that is rooted in the ground, and transfer it from one place to another, the tree will no longer bear fruit. 
And if it does, the fruit will not be as good as it was in its original place. 
This is a rule of nature. 
I think if I had left my country, I would be the same as the tree." —Abbas Kiarostami.

வெறுமையான பாடல் காட்சிகளுக்காக,
வெளிநாடு போகும் கோமாளிகள்தான்...
நமக்கு கிடைத்த சாபம்.
நாடு விட்டு நாடு தாவினாலும்,
நல்ல படமெடுக்கும் படைப்பாளி...
இரானுக்கு கிடைத்த வரம்.

பிரான்சுக்கு பறக்கிறார்.
‘சர்டிபைட் காப்பி’ [ Certified Copy ] என பிரமாதமா ஒரு படம் கொடுக்கிறார்.
ஜப்பானுக்கு  ஜம்ப் பண்ணுகிறார்.
'லைக் சம்ஒன் இன் லவ்’ என ஜம்முன்னு ஒரு படம் கொடுக்கிறார்.

Like someone in Love | 2012 | Japanese | Directed by : Abbas Kiarostami.


அப்பாஸ் கியரஸ்தமியின் படங்களில்,
முதல் ஷாட்டே அசாதாரணமாக இருக்கும்.
இப்படத்தில், கேமராவை கதாநாயகியாக்கி...
முதல் ஷாட்டை அமைத்துள்ளார்.
அசத்தலான கோணத்தில், காட்சியின் களத்தை ஒரே ஷாட்டில் விவரிக்கிறார்.

பரபரப்பான இரவு விடுதி.
பலான பெண்கள்.
பலானதை மேய வந்த  ‘பண பலன்கள்’.
கதாநாயகி தனிமையில் செல்போன் பேசிக்கொண்டு இருக்கிறாள்.
எதிர்முனையில் பேசுபவன் காதலன் என அவளது உரையாடலே தெளிவாக்குகிறது.
அதோடு, அவன் ஒரு சந்தேகப்பேர்வழி என்பதையும் சித்தரிக்கிறது.

‘பக்கத்து டேபிள்’ செல்போனை நோண்டுவதை நிறுத்தி,
கதாநாயகியின் பேச்சை உற்றுக்கவனித்து,
‘நான் வேண்டுமானால் பேசி சந்தேகத்தை தீர்த்து வைக்கவா’ என்பது போல் சைகை செய்கிறது.
‘பக்கத்து டேபிளின்’ உடல் மொழியே,
‘தோழி’ என படம் வரைந்து பாகம் குறிக்கிறது.

இவ்வாறு, ஒவ்வொரு ஷாட்டிலும்...
பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.


மற்றொரு உச்சபட்ச சுவாரஸ்ய களத்தை மட்டும் சொல்கிறேன்.
வெளிச்சத்தில் ‘கல்லூரி மாணவி’யாகவும்,
இருட்டில் ‘இரவு ராணி’யாகவும் பணியாற்றும் கதாநாயகி.
‘மாணவியை’ காதலிக்கும் காதலன்.
‘இரவு ராணியை’  ‘புக் செய்த’ 80 வயது பேராசிரியர்.
மூவரையும் ஒரே காரில் ஏற்றி விடுகிறார் இயக்குனர்.


இக்காட்சியில் இருக்கும் சுவாரஸ்ய திருப்பங்களை,
படத்தை பார்த்து அனுபவியுங்கள்.
இறுதிக்காட்சியில் வரும் ‘அப்ரப்ட் எண்டிங்கில்’ [ Abrupt Ending ] திடுக்கிடுங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.