Mar 20, 2013

‘பரதேசியின் குறையும்...நிறையும்.


நண்பர்களே...
பரதேசியை மூன்று முறை பார்த்து விட்டேன்.
ஒவ்வோரு முறை தரிசனத்திலும் எனக்கு வரங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.
பரதேசியை நிறை சொல்லி பாராட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையிலும்...
குறை சொல்பவர்கள்  'பெரியப்பாவுக்கு இருக்கும் வைப்பாட்டிகளை விட’ குறைவான எண்ணிக்கையில் இருப்பதையும் உணர முடிகிறது.
குறை சொல்லும் கூட்டத்தில்  கொடியேற்றுபவன் யார் எனவும்
அறிய முடிகிறது.

பாலாவின் படங்களில் பொதுத்தன்மை நிலவுகிறது என பொத்தாம் பொதுவாக
குற்றம் சொல்கிறார்கள்.
அப்படி பார்த்தால்...  ஹிட்ச்ஹாக், ராபர்ட் பிரஸ்ஸன்,குரோசுவா என அனைவரையும் இந்த வட்டத்துக்குள் கொண்டு வந்து சாத்தி சாகடிக்கலாம்.

குறை சொல்லும் கோமான்கள் ஆரண்ய காண்டத்தையும், ஆடுகளத்தையும்
ஒப்பிட்டு பரதேசிக்கு எஃப். ஐ. ஆர் எழுதுகிறார்கள்.
இவர்கள் எழுதும் எப்.ஐ.ஆர்களுக்கு  காலம் தீர்ப்பெழுதும்.


ஒரு ரசிகனாக பரதேசியில் உள்ள குறைகளை சொல்ல அனுமதியுங்கள்.
மிகப்பெரிய குறை வேதிகா.
அவளது நடிப்பும், உடல் மொழியும் சகிக்கவில்லை.
வேதிகா  பிதாமகன் லைலாவின் அப்பட்டமான ஜெராக்ஸ்.

 ‘பிதாமகன் லைலாவை’ ரசிக்க முடிந்தது.
காரணம் அந்த கதாபாத்திரம் பிரஷ்ஷாக இருந்தது.
 ‘நந்தா லைலாவிற்கு’ நேர் எதிராக இருந்தது.

அதர்வா கூட  ‘பிதாமகன் சூர்யாவை’ சில இடங்களில் பிரதிபலித்து கடுப்பேற்றினான்.
இவர்கள் குறை குடங்களாக காட்சியளித்த காட்சிகளுக்கு...
முழுப்பொறுப்பும் பாலாவையே சேரும்.

அதே போல் பந்தியில் உட்கார்ந்தவனுக்கு பறிமாறாமல் இருப்பதும்,
பரிகசிப்பதும் அபத்தக்காட்சிகள்.
பந்தியில் உட்கார்ந்து விட்டால் பரம எதிரியைக்கூட எழுப்ப மாட்டார்கள் .
 “காலையிலிருந்தே வெறும் வயித்தோட வேலை செய்றீயே” என
அதட்டும்  ‘ஒட்டுப்பெருக்கியின் பெரியம்மை’ போன்றவர்களைத்தான் யதார்தத்தில் சந்திக்க முடியும்.

இசையை பற்றி எல்லோருமே தர்ம அடி கொடுத்து விட்டார்கள்.
அந்தக்கூட்டத்தில் முதல் ஆளாக அடிக்க ஆசைப்பட்டது நாந்தான்.
இளையராஜாவை விட சிறந்த பின்னணி இசை,
அமைக்க ஆள் அமையும் வரை திரும்ப அவரிடமே போங்கள் பாலா.
தப்பில்லை.

மொத்தப்படத்தையே  குறியீடாக அமைத்த பாலாவிற்கு பலத்த கரகோஷம் செய்யுங்கள்.
இலங்கை தமிழர்கள்,
மலேசியா,சிங்கப்பூர் மற்றும் வளை குடா நாடுகளுக்கு வளைத்துச்செல்லப்படும் தமிழர்கள்,
கார்ப்பரேட் கங்காணிகளால் வதைக்கப்படும் சாப்ட்வேர் சந்ததிகள்...
என பாதிக்கப்படும் பாட்டாளிகளின் அனைவரது வாழ்க்கைக்கும்
இப்படம் குறியீடே.

எனக்கு கலைஞரும் கங்காணியும் ஒன்றாகப்படுகிறார்கள்.
காரணம் கலைஞரின் கடந்த கால வரலாறு.
இருந்தாலும் இப்போது,
வெள்ளைக்காரியை எட்டி மிதிக்க காலை ஓங்கியபடி
கூட்டணியை  முறித்ததும்...
‘கங்காணியின் பொட்டி காட்டும் நாடகமும்... ஒன்றா ?
காலம்தான் சொல்லும்.



பரதேசியை மீது வைக்கப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் உள்ள அம்சங்களும் அதற்கான விளக்கங்களும்.

சாலூர் மக்கள் என்ன ஜாதி என்று காட்டப்படவில்லை.

ஜாதிப்பெயரை சொல்ல சென்சார் இப்போது அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் நம் நாட்டில் இப்போது சாதிகள் இல்லை.
ஒழிந்து விட்டது.
எனவே இனி சினிமாக்கரன் ஜாதி பெயரை சொல்லி கதை விட முடியாது.
இருந்தாலும் சாலூர் மக்கள் எந்தப்பிரிவைச்சார்ந்தவர்கள் என்பதை பாலா
விசுவலாக காட்டி உள்ளார்.

அக்காலத்தில் நிலவிய ஜாதிக்கொடுமைகள் சொல்லப்படவில்லை.

தனது ஜாதியை சேர்ந்த  ‘ஒட்டுப்பெருக்கியை’  ‘அங்கம்மாவின் தாய்’ மருமகனாக ஏற்க மறுப்பது பொருளாதார ஏற்ற தாழ்வே.
ஆனால்  ‘ஒட்டுப்பெருக்கி’ வேலை தேடிப்போன இடத்தில்,
ஹோட்டலில்  ‘மேட்டுகுடியினர்  இடத்தில்’ உட்கார்ந்ததுக்கு அடி வாங்குகிறானே...அது ஜாதிக்கொடுமை.

தாழ்த்தப்பட்டவர்கள் தரையிலும், உயர் குடியினர் உயரத்திலும் உட்கார்ந்து சாப்பிடுவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தோளில் ஒட்டுப்பெருக்கி கை வைத்ததற்கு கங்காணி பார்க்கும் பார்வையில்
ஜாதீயக்கொடுமை இருக்கிறது.

எரியும் பனிக்காடை ஏன் அப்படியே படமாக்கவில்லை ?

எதற்கு அப்படியே எடுக்க வேண்டும் ?.

சினிமா என்பது விசுவல் மீடியா.
அதற்கு தோதுப்படும் காட்சிகள், கதாபாத்திரங்களை மட்டுமே ஒரு படைப்பாளி எடுத்துக்கொள்வான்.

எரியும் பனிக்காட்டிற்கு வக்காலத்து வாங்குபவர்கள் இது வரை அதற்கு ஒரு பதிவாகிலும் எழுதி வெளிச்சம் போட்டுள்ளீர்களா?

ஏன் சாலூர் மக்களை வறண்ட பகுதிகளிலேயே நடத்திக்கூட்டிப்போக வேண்டும்.

கங்காணிக்கு ஜெட் ஏர்வேசில் இடம் கிடைக்கவில்லை!.


 கங்காணி, தனது அடிமைகளை மற்றவர்கள் கண்ணில் படாமல்
அழைத்து செல்லவே விரும்புவான்.

தண்ணீரை ஏன் வாய் வைத்து குடிக்க வேண்டும்?

ஊரில் ‘தேங்காய் சிரட்டையில்’குடித்த மக்கள்,
மாக்களாக மாறி விட்டார்கள் என்பதற்கே,
நீர் நிலைகளில் வாய் வைத்து குடிகின்ற ஷாட்டை போட்டார் பாலா.

சாலூர் பஞ்சப்பிரதேசமா ?

நிச்சயமாக இல்லை.
அவர்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
அவர்கள் ‘ரெமி மார்ட்டின்’ குடிக்க வழியில்லை என கத்தவில்லை.
விமர்சிப்பவர்கள் தங்கள் வாழ்வியலோடு சாலூர்வாசிகளை ஒப்பிட்டு தப்பாக கணிக்கிறார்கள்.

போகிற வழியில் ஒரு கோயில் கூடவா இல்லை ?

1930களில் இருந்த கோயில்கள் இன்று எப்படி இருக்கிறது ?
பார்த்தாலே வாந்தி வரும் வர்ணம் அடிக்கப்படாத கோயில்களை காட்ட முடியுமா உங்களால்?

அட... அட்லீஸ்ட்... டெம்ப்ளேட் இல்லாமல்... பதிவெழுதிக்காட்டுங்கள்.

மிக முக்கியமான ‘மத மாற்றம்’ பற்றிய விமர்சனங்களுக்கு
அடுத்தப்பதிவில் பதில்.

29 comments:

  1. நன்றி நண்பனே...அசத்தி இருக்கிறீர்கள்..தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வா நண்பா.
      நீண்ட நாள் காத்திருத்தலுக்கு பின் ஒரு பின்னூட்டம் இட்டு களிப்பூட்டி
      விட்டாய்.
      நன்றி.

      Delete
  2. அஜித் சொன்னமாதிரி அயாம் வெறி டயர்டு ...

    மாத்தி மாத்தி தாளிக்குராங்கய்யா . இப்பல்லாம் விமர்சனம்னு டைட்டில் பாத்தாலே பத்திக்கிட்டு எரியுது .

    எந்த ஒரு படக் கதையையும் ஒரு வரில முடிச்சுடலாம் . படத்தோட ரிசல்ட்டும் அப்டிதான் நல்லாருக்கு, நல்லால்ல அவ்ளோதான் . அதவிட்டுட்டு நோங்கி நொந்கெடுக்குறாங்க.

    அவங்க அவங்க ரசனைக்கு விட்ருங்கப்பா . முடியல . சினிமா விமர்சனம் படிக்குறது இதுதான் கடசி .


    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நொந்திட்டீங்க.

      என்ன செய்வது !
      நல்ல படத்தை நாறடிக்காவிட்டால் சிலருக்கு குஷ்டம் வந்து விடும்.

      Delete
  3. விவேகமில்லா கேள்விகளுக்கு அருமையான பதில்கள்

    ReplyDelete
    Replies
    1. எழில் மேடம்...
      படத்தை திட்டி எழுதும் சாகசக்காரர்கள் தமிழில் விளையாடுபவர்கள்.
      இலக்கிய வியாதிகள்.
      வெட்டி வீசினால்தான் அடங்குவார்கள்.

      Delete
  4. நல்ல பதில்கள்தான். பாலாவும் தவறு செய்திருக்கிறார் இல்லை என்று சொல்லவில்லை, ஆனாலும் "பரதேசி" ஒரு நல்ல படம் என்பதில் உண்மை ரசிகனுக்கு மாற்று கருத்து ஏற்பட வாய்ப்பில்லை.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச்சொன்னீர்கள் கும்மாச்சி.

      Delete
  5. சார், பின்னிவிட்டீர்கள் ""அவர்கள் ‘ரெமி மார்ட்டின்’ குடிக்க வழியில்லை என கத்தவில்லை"" இனி ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு பஞ்சை எதிர்பார்கிறேன் ஹ ஹ இது அல்லவா சவுக்கடி .... மிக்க நன்றி

    இப்படிக்கு ,
    இயக்குனர் பாலாவின் ரசிகன் .........

    ReplyDelete
    Replies
    1. அடுத்தப்பதிவில் பாருங்கள் பஞ்சை.

      Delete
  6. வேதிகாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது! முக்கியமாக அந்த பஞ்சாயத்து காட்சி, மாயாவி படத்தில் ஜோதிகா பாத்ரூம் வழியாக ஒரு குழந்தைக்கு சைகை செய்வார், குழந்தை "அக்கா அக்கா" என்று சொல்லும். அந்தக் காட்சி நினைவிற்கு வந்தது. அந்தக் காட்சியில் அதர்வாவின் ரியாக்ஷனும் அருமையாக இருந்தது. 100% ரசித்துப் பார்த்தேன்.

    இசையில் ராஜா இல்லாதது குறை தான் என்றாலும், எத்தனை நாளைக்குத் தான் ராஜாவை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியும்? மற்றவர்களும் வரவேண்டும் தானே. ராஜா அளவிற்கு ஜி.வியிடம் எதிர்பார்ப்பது தவறு. இப்போதிருக்கும் டெம்ப்ளேட் இசையமைப்பாளர்களுக்கு மத்தியுல் ஜி.வி எவ்வளவோ தேவலாம். அவரது ஆயிரத்தில் ஒருவனே அசத்தலாக இருந்தது. பரதேசியும் 'பரவாயில்லை, பையன் இன்னும் கொஞ்சம் நல்ல படங்கள் கிடைத்தால் தேறிவிடுவான்' என்கிற ரீதியில் தான் இருந்தது. இந்த வயதிற்கு இந்த இசை நிச்சயம் அதிகம் தான்.

    // அட... அட்லீஸ்ட்... டெம்ப்ளேட் இல்லாமல்... பதிவெழுதிக்காட்டுங்கள்.//

    அதச் சொல்லுங்க முதல்ல... கடுப்பாகுது இவனுக பதிவ படிக்கிறதுக்கே!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...எனக்கு வேதிகா பிடிக்காமல் போனதற்கு காரணம் பிதாமகன் லைலாதான்.
      அவள் செய்த சேட்டைகளையே வேதிகா பிரதிபலித்திருந்தாள்.
      ஒரு வேளை விருமாண்டி அபிராமி போல் அல்லது பருத்தி வீரன்
      பிரியாமணி போல் அமைந்திருந்தால் பிடித்திருக்குமோ என்னவோ.

      மணிரத்னம் இளையராஜாவை விட்டு ரஹ்மானிடம் வந்த போது அந்த வாய்ப்பு கச்சிதமாக பயன்படுத்தப்பட்டது.
      ஜீ.வி அதே போன்ற அரிய வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டு விட்டான்.

      பண்டிட் குயின் படத்தில் நஸ்ரத்பதே அலிகான் தனது இசையால் பதறவைத்திருப்பார்.
      அதைப்போல காட்சி பரதேசியிலும் இருக்கிறது.
      ஆனால் நம்மை பதற வைப்பதற்கு பதில் சிதற வைத்தான் ஜீ.வி.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
      [ எனது நண்பர் ஒருவருக்கும் வேதிகா நடிப்பு பிடித்திருக்கிறது ]

      Delete
  7. ஏன் பந்தியில் பரிகசிப்பதாக காட்சி அமைக்கபட்டதென அறிய நாஞ்சில் நாடனின் இந்த அற்புதமான சிறுகதையையும் படித்துவிடுங்கள்.
    http://azhiyasudargal.blogspot.com/2011/01/blog-post_21.html
    அதர்வாவின் பெயர் ஏன் ராசா எனபதையும் அறியலாம்.
    நாஞ்சில் நாடன் பரதேசியில் பங்களித்து தற்செயலானது அல்ல. :-)

    ReplyDelete
  8. நன்றி நண்பரே...
    தங்கள் புண்ணியத்தால் ‘இடலக்குடி ராசா’ கதையை படித்து விட்டேன்.
    அந்தக்கதையிலிருந்துதான் அதர்வா காரெக்டர் படைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்டேன்.

    ஆனால் சிறு கதையில் உள்ள சிச்சுவேஷனும்...
    பரதேசியில் உள்ள சிச்சுவேஷனும்...
    வேறு வேறு.

    ரசிகர்களுக்கும் ஊரார்களுக்கும் பெரியப்பாவின் மரணம் தெரியும்.
    ஒட்டுப்பொருக்கிக்கு தெரியக்கூடாது என்றுதான் ஊரே நினைக்கிறது.
    அப்படி இருக்கையில் பந்தியில் உட்கார்ந்தவனை எழுப்பி பெரியப்பனை தேடிப்போ என கதாநாயகி விரட்டுவதும்...
    ஊரார் பறிமாறாமல் பரிகசிப்பதும் அபத்தமான காட்சிகளாக அமைந்து விட்டது.

    இப்போதும் சொல்கிறேன்.
    பாலா இக்காட்சியில் சறுக்கி விட்டார்.

    சினிமாவும் இலக்கியமும் வேறு தளங்கள்.
    ஒரு ஷாட் மாற்றிப்போட்டாலே எல்லாமே தலை கீழாகப்போய்
    விடும்.

    ReplyDelete
  9. மறுமொழிக்கு நன்றி! நானிருக்கும் ஊரில் இன்னும் பரதேசி பார்க்க கிடைக்கவில்லை. பொதுவாக அந்த காட்சியை பற்றி உங்களின் கருத்தை பார்த்ததும் அந்த சிறுகதை ஞாபகம் வந்ததால் பகிர்ந்து கொண்டேன். "ஏன் அந்த காட்சி அமைக்கப்பட்டது..." என்று படம் பார்க்காமலே அனுமானித்து எழுதியது தவறு தான் என புரிகிறது உங்கள் பதிலை படித்ததும்.
    பால 'இடலாக்குடி ராசா' சிறுகதை பற்றியும் அதன் தாகம் பற்றியும் முன்னரே ஒரு முறை எழுதியுள்ளார்.

    ReplyDelete
  10. " கார்ப்பரேட் கங்காணிகளால் வதைக்கப்படும் சாப்ட்வேர் சந்ததிகள்... "


    மிகவும் பொருத்தம் அற்ற முரண் வாதம் . . .



    படம் எடுத்த பாலாவை விட

    படம் பார்த்து விட்டு நீங்கள் அதிகம் யோசனை செய்வது

    அதிர்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
  11. அய்யா அறைகுறை...
    சாப்ட்வேர் தொழிலில் கங்காணிகளுக்கு கவர்ச்சிகரமான பெயரிட்டு சாக்லேட் தடவி பேச கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.

    வேறொரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வாய்ப்பு வந்த என் தங்கை மகனை 20,00,000 லட்சம் கொடுத்து விட்டு வெளியேறு.
    இல்லையேல் கொத்தடிமையாக இரு என கட்டிப்போட்டிருக்கிறார்கள்.

    எனது நண்பர் அமெரிக்காவில் வதை பட்ட வரலாறும் எனக்குத்தெரியும்.
    பாலாவுக்கும்.

    கண்ணை மூடிக்கொண்ட பூனைகளுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம்.

    குரங்கு பெடல் = அரைகுறையாக சைக்கிள் ஓட்டுதல்.

    ReplyDelete
  12. " உங்கள் பின்னுட்டங்கள் தரமாகவும்,காரமாகவும் இருந்து என்னை இயக்கட்டும். "


    அய்யா அறைகுறை...

    Ok

    "வேறொரு கம்பெனியில் நல்ல சம்பளத்தில் வாய்ப்பு வந்த என் தங்கை மகனை 20,00,000 லட்சம் கொடுத்து விட்டு வெளியேறு.
    இல்லையேல் கொத்தடிமையாக இரு என கட்டிப்போட்டிருக்கிறார்கள்."


    அவ்ளோவா . . .


    குரங்கு பெடல் = சைக்கிள் கற்று கொள்ளுதல்

    மிக்க நன்றி . . .

    ReplyDelete
    Replies
    1. துபாய்க்கு வேலைக்கு போன இடத்தில் ஜெர்மனிக்கு டிரெய்னிங் அனுப்பி உள்ளார்கள்.
      அதற்கு இப்போது கங்காணி கணக்காக இருபது லட்சம் கேட்டு உள்ளார்கள்.

      இன்னும் நிறைய சோக வரலாறு உள்ளது.
      அதை இணையத்தில் எழுத முடியாது.
      சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
      எனது எண்ணுக்கு போன் செய்யுங்கள் சொல்கிறேன்.

      நானும் குரங்குபெடல் போட்டு சைக்கிள் கற்றவந்தான்.
      இப்போது நன்றாக ஒட்டுவேன்.
      நீங்கள் குரங்குப்பெடலில் குரங்குப்பிடியாக இருக்கிறீர்கள்.

      நன்றி.

      Delete
  13. கொஞ்சம் கூட யோசிக்காமல் விமர்சனங்கள் சொல்வது எளிது. .அதை புரிந்துக்கொகொள்ளாமல் பேசிக்கொண்டிருக்கின்றனர். .ஜஸ்டிபிகேசன் செய்யும் காட்சிகள் ஏராளம். .அடுத்த பதிவு சீக்கிரம் எதிர்ப்பார்க்கிறேன் . .மலம் தின்று நாறும் வாயுடைய சாருவுக்கு பதிலையும். .

    ReplyDelete
    Replies
    1. அடுத்தப்பதிவுக்கு கொஞ்சம் படிக்க வேண்டி உள்ளது.
      விரைவில் வெளியிடுகிறேன்.

      Delete
  14. தன் மனதிற்கு குறைந்தபட்ச திருப்தி ஏனும் அழிக்கும் படங்களை மட்டுமே எடுக்க நினைக்கும் பாலா அவர்களின் படங்கள் மீது செலுத்தப் படவேண்டியது இம்மாதிரியான பார்வை தான்.நடுநிலை விமர்சனங்களும்,அளவான பாராட்டுதலும் மட்டுமே பாலா போன்ற படைப்பாளிகளை துடிப்புடன் இயங்கச் செய்யும்."பரதேசி " என்ற பதத்தை பாலாவைத் தவிர வேறு யாராலும் ஒரு திரைப்படத்திற்கு தலைப்பாக வைத்திருக்க முடியாது சார்.பாலா வின் படைப்பாற்றல் பெற்றுள்ள பரிணாம வளர்ச்சி அசாத்தியமானது சார்.நான் படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. பலரும் பாராட்டும் படைப்பாளியை மட்டமாக விமர்சித்து தன்னை உயர்ந்த இடத்தில் இருப்பதாக காட்ட நினைக்கும் மன நோய் இந்த கூட்டத்திடம் இருக்கும் பொதுத்தன்மை.

      தகுதியானவர்களை பாராட்டுவதால் போது நாம் வளர்கிறோம்.
      திட்டுவதால் அவர்கள் தளர்கிறார்கள்.

      Delete
  15. Hello,

    Please read this review "http://www.athishaonline.com/2013/03/blog-post_19.html" which is written by Athisha and give ur comments abt the doctor character. I too from the same Dalit community and also my mother from valparai and my grandpa was working like mesthri(like kangani). We came up bcoz of the education we got from the english missionaries.

    ReplyDelete
    Replies
    1. அதிசா பதிவை ஏற்கெனவே படித்து விட்டேன்.
      மதமாற்றத்தை பற்றி விரிவாக இன்று எழுதிய பதிவில் விரிவாக குறிப்பிட்டு உள்ளேன்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  16. http://maruthupaandi.blogspot.in/2013/03/blog-post_22.html

    மேலே குறிப்பிட்டுள்ள பதிவை நீங்கள் படித்தீர்களா இல்லையா என்று தெரியவில்லை . படிக்கவில்லை என்றால் அவசியம் படியுங்கள் .

    ReplyDelete
  17. ஏற்கெனவே படித்து விட்டேன்.
    பதிவுலகில் எழுதப்பட்ட மிகச்சிறந்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று.

    தமிழ் மணம், திரைமணத்தில் இணக்கப்படும் சினிமாப்பதிவுகளை ஒன்று விடாமல் படித்து விடுவேன்.

    ReplyDelete
  18. I used to read ur articles and ur explanations for the movies i liked and it gives different perception from my view. This one in particular simply great and i shared this in fb

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.