Feb 5, 2013

பதிவர்களின் எழுச்சி !.


நண்பர்களே...
கடந்த ஞாயிறு 03-02-2013 அன்று கோவைப்பதிவர்கள் சங்கம்,
பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்தியது.

பதிவர் அகிலாவின் ‘சின்னச்சின்ன சிதறல்கள்’ என்ற கவிதை நூலை வெளியிட்டவர் திரு.கண்ணன் கனகராஜ் [இலக்கிய ஆர்வலர்] .
பெற்றுக்கொண்டவர் திரு.மகேந்திரன் [ தெருவோர மனநலம் குன்றியவர்களை பராமரிக்கும் சமூக ஆர்வலர்] .

பதிவர் கோவை மு.சரளாவின் ‘மவுனத்தின் இரைச்சல்’ என்ற கவிதை நூலை வெளியிட்டவர் திரு.கோவை ஞானி [மிகப்பெரிய தமிழ் அறிஞர் ].
பெற்றுக்கொண்டவர் திரு.ஆனந்த் [ ஆசிரியர்,ஆனந்தம் மாத இதழ் ].

பதிவர் ஜீவானந்தம் எழுதிய ‘கோவை நேரம்’ என்ற பயண நூலை
வெளியிட்டவர் திரு.ஓஷோ ராஜேந்திரன் [ இலக்கிய ஆர்வலர் ].
பெற்றுக்கொண்டவர் திரு.யோகநாதன் [ ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு
பராமரிக்கும் இயற்கை ஆர்வலர் ].

அனைவருமே சிறப்பாக பேசினர்.
சிறப்புரை ஆற்றிய பதிவர் கலாகுமரன் பேச்சு ‘சுறுக்..நருக்’.

தலைமை ஏற்று உரை நிகழ்த்திய அண்ணாச்சி திரு.எட்வின் [ தமிழக வியாபாரிகள் சம்மேளனம் ] , தனது வெள்ளந்தியான பேச்சினால் அசத்தினார்.
அவர் கையை மறைத்த மோதிரம் என்னை மிகவும் கவர்ந்தது.
கரண்ட் கட்டான நேரத்தில்,  சட்னி, துவையல் அரைக்க வசதியான  ‘டூ இன் ஒன் மோதிரம்’.


நூலாசிரியர்கள் மூவரில் பெண் சிங்கங்கள் கச்சிதமாக பேசினர்.
நமது ஆண் சிங்கம் ‘கோவை நேரம்’ ஜீவா கர்ஜிப்பார் என நினைத்தேன்.
அவர் பேச ஆரம்பிக்கும் போது எனக்கு தும்மல் வந்தது.
சைலண்டாக தும்மி விட்டு பார்த்தேன்.
ஜீவா முடித்து விட்டார்.
எப்படிப்பேசுவது என தமிழக அரசியல்வாதிகள் ஜீவாவிடம் கற்றுக்கொள்வது நலம்.

ஜீவாவின் அடியொற்றி அடியேன்,  ‘இரண்டு செகண்ட்’ நன்றியுரை [அனைவருக்கும் நன்றி ] .

நூலாசிரியர்களின் உற்றார் உறவினர் என கணிசமான கூட்டம் அரங்கை
நிரப்பியது.
ஆனால் கோவைப்பதிவர்களின் கூட்டம் ‘குறுந்தொகையை’
நினைவு படுத்தியது.

ஒன்றை தெரிந்து கொண்டேன்.
ஒரு நிகழ்ச்சியோ...திரைப்படமோ...
கஷ்டப்பட்டு தமிழக அரசிடம் 144 தடையுத்தரவு வாங்கி விட வேண்டும்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

15 comments:

  1. பதிவிற்கு நன்றி...ஹிஹிஹி...இன்னொரு சிங்கம்...

    ReplyDelete
    Replies
    1. முக்கியமான ஒன்றை மறந்து விட்டேன் ஜீவா.
      நாறிப்போன பக்கோடா + ஆறிப்போன காபியும் கொடுத்து ஆறாயிரம் ரூபாய் பிடிங்கிய மங்களா இண்டர்நேஷனல் ஹோட்டலுக்கு
      ‘நன்றி’ சொல்ல மறந்து விட்டேன்.

      Delete
  2. //அடியொற்றி அடியேன், ‘//
    // ‘குறுந்தொகையை’//
    // 144 தடையுத்தரவு வாங்கி விட வேண்டும்.//

    ஹா ஹா ஹா நீங்கள் கூற விழைந்தது காண கச்சிதமாக புரிந்தது... மூவருக்கும் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களாகிய கோவை பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. புரிந்ததற்கு நன்றி நண்பரே.

      இதை விட எளிமையாக இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கருத்தை சொன்ன ‘விஸ்வரூபம்’...
      24 அமைப்புகளுக்கு மட்டும் புரியாமல் போனதுதான்...
      எனக்கு இன்னும் புரியவில்லை.

      Delete
  3. //சைலண்டாக தும்மி விட்டு பார்த்தேன்.
    ஜீவா முடித்து விட்டார்.//

    உங்க அக்மார்க் நக்கல் தெரியுதே இங்க..!

    ReplyDelete
    Replies
    1. நக்கலா...நானா !...
      நண்பரே...என் மேல் ஏன் இந்த வீண் பழி !

      Delete
  4. ஜீவா - முகநூலில் கர்ஜிக்கிறார்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. முகநூல் காட்டில் கர்ஜிக்கும் ஜீவா சிங்கம் !
      மைக்கை பாத்தா மட்டும்...தொண்டையில கிச்..கிச்..

      Delete
  5. அடுத்த முறை எட்வின் சாரை பார்க்கும் போது கேட்டு வாங்கிடலாமா சார். உண்மையை சில இடங்களில் சொல்லலாம் /சொல்லக்கூடாது .உங்களுக்கே புரியும் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. எட்வின் அண்ணாச்சி கோவப்பட மாட்டாங்க...தன்னை பற்றி வரும் விமர்சனத்தை பெரிது படுத்தமாட்டார் எனக்கருதுகிறேன்.

      Delete
  6. அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி சுரேஷ்.

      Delete
  7. // ‘சுறுக்..நருக்’// நன்றி...
    //தமிழக அரசியல்வாதிகள் ஜீவாவிடம் கற்றுக்கொள்வது நலம். //
    ஆமா பொது ஜனங்க ரொம்பவே கஷ்டப்படராங்க...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.