Jan 25, 2013

கமலுக்கு ரஜினியின் ஆதரவு...



நண்பர்களே...
கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டு விட்டது.

கமலின் ஆருயிர் நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நண்பனுக்கு இடுக்கண் வரும் போது உதவும் நண்பனாய் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அவருக்கு என் நன்றி.



கமலுக்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அன்பர்களுக்கு...
மீலாது நபி வாழ்த்துக்கள்.
நீங்கள்தான் மெஜாரிட்டியாக இருப்பீர்கள் என நானும்...
கமல் போலவே நம்புகிறேன்.

தடை உத்தரவு பெற்ற குறுகிய கால சாதனையாளர்களுக்கு,
எம்ஜியார் பாட்டை பரிசளிக்கிறேன்.
காணொளி காண்க...


6 comments:

  1. Yes, Kamal will win. We support.

    ReplyDelete
  2. இன்றுதான் அவருக்கு ஞானோதயம் பிறந்ததா. நேற்றுவரை அவர் அமைதி காத்தது ஏன். படம் மிகப்பெரிய வெற்றி என்று வௌியூரிலும்,வௌிநாட்டில் இருந்தும் செய்தி வந்தப்பிறகா அல்லது கமல் வெல்லப்போகிறார் என்று தெரிந்துக்கொன்டு கமலுக்கு கிடைத்துள்ள நன்மதிப்பிலும், விளம்பரத்திலும் பாதியை அபகரிப்பதற்காகவா. இந்த விஷயத்தில் அவர் கடைசிவரை மவுனமாகவே இருந்திருக்கலாம். அல்லது ஆரம்பத்திலேயே கமலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  3. நாளை நல்ல செய்தியை எதிர்பார்ப்போம்..கலைஞானியை ஆதரிப்போம்.

    ReplyDelete
  4. //http://www.maalaimalar.com/2013/01/24130843/kamalhasan-fans-gatherd-in-fro.html

    தயாளன் கூறும்போது கமல் ரசிகர்கள் எப்போதுமே பொறுமை காக்க கூடியவர்கள். கமல் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம். எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. இதே நிலை நீடித்தால் பொங்கி எழுவோம்.

    திரையுலகினருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கமல் முதல் ஆளாக நிற்பார். ஆனால் விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக இல்லை. இது கண்டிக்கத்தக்கது என்றார்.///

    இதை படித்து தான் இந்த அறிக்கையை ரஜினி விட்டிருப்பாரோ?

    ReplyDelete
  5. சார், படம் சூப்பர்... வேலந்தாவலம் தியேட்டர் பற்றி கூறியதற்கு நன்றி..

    ReplyDelete
  6. wrong news check your facts correctly.its running in andhra,kerala and banglore.it will be shown in all the booked theaters in these 3 states from sunday.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.