Nov 16, 2012

Hey Ram \ 2000 \ India \ கொலையும்...யுத்தமும் குற்றமா ? / ஹேராம் = 028

நண்பர்களே...

கமல்  'HATS OFF' பதிவை படித்தவர்கள் இப்பதிவை படிக்க வேண்டாம்.
ஏனென்றால் இரண்டும் ஒன்றே.இப்பதிவை மேம்படுத்திதான் அப்பதிவை உருவாக்கினேன்.
நன்றி.


*******************************************************************************
ஹேராமில் சாகேத்ராம் - அபயங்கர் உரையாடலை ஆய்வு செய்து வருகிறோம்.
இப்பதிவில் இயக்குனர் கமலின் தனிச்சிறப்பான பணியினை காணவிருக்கிறோம்.
ஒரே ஷாட்டில்... பல்வேறு அர்த்தங்களை அடுக்கடுக்காக அடுக்கி வித்தை புரிந்ததை இப்பதிவில் என்னால் முடிந்த வரை விளக்கி உள்ளேன்.


அபயங்கர் உரையாடலை தனி வண்ணத்திலும்...
சாகேத்ராம் உரையாடலை தனி வண்ணத்திலும் கொடுத்து உள்ளேன்.

அபயங்கர் : “ லிசன்...குத்தம் செஞ்சாத்தான் தண்டனை...
கடமையை செஞ்சா தண்டனை கிடையாது.
கொலை குத்தம்னா...யுத்தமும் குத்தம்.
பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது... 
கொலை எப்படி குத்தமாகும்? ”.
***************************************************************************
இந்த உரையாடல்கள்,
1939ல் இரண்டாம் உலகப்போரில்,
பிரிட்டனை  ‘இந்திய தேசிய காங்கிரஸ்’ நிபந்தனையுடன் ஆதரித்தது...

இதை ஏற்காமல் சுபாஷ் சந்திர போஸ்  ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற கொள்கைப்படி பிரிட்டனுக்கு எதிரான நாடுகளுடன் கை கோர்த்து
‘இந்திய தேசிய ராணுவத்தை’ நிறுவி போரிட்டது...
1942ல், காந்திஜி  ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கி பிரிட்டனுக்கு நெருக்கடி கொடுத்தது...
ரஷ்யாவுக்கு ஆதரவாக,
இரண்டாம் உலகப்போரை...மக்கள் போராட்டமாக அறிவித்து,
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில்...
இந்தியாவைச்சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் பங்கெடுக்க மறுத்தது என வரலாற்றின் பல்வேறு பக்கங்களை புரட்டி பார்க்க வைக்கிறது.
***************************************************************************
போலிஸ்காரர்கள் நிரம்பிய ஜீப் வருவதைக்கண்டு அபயங்கர்,
ராமை இழுத்துக்கொண்டு டிராமில் ஏறுகிறான்.

போலிஸ் ஜீப் வரும் போது,
பார்வையாளராகிய நாம் நுட்பமாக கவனித்தால்...
கீழ் வரும்  ‘காட்சி சித்தரிப்புகள்’ காண முடியும்.

போலிஸ் ஜீப் வரும் போது ரோட்டின் இடது புறம்,
‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு கிடக்கிறது.
மாட்டு வண்டி குடை சாய்ந்து கிடக்கிறது..
வண்டியிலிருந்த மூடைகள் சிதறி கிடக்கிறது.

டிராமில் கணிசமான மக்கள் இருக்கிறார்கள்.
அபயங்கர் உரையாடல் தொடர்கிறது.
 அபயங்கர் : “ பட்டாளத்துல சேர்ந்து சண்டை போடும் போது கொலை எப்படி குத்தமாகும் ?.

 ராம் : “ நான் பட்டாளத்துக்காரனில்ல...நான் வெறும் சிவிலியன்”

அபயங்கர் : “ திஸ் ஈஸ் சிவில் வார் பிரதர்”
மேற்கண்ட அபயங்கர் - ராம் உரையாடலின்போது  டிராம் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும்.
போலிஸ் ஜீப் வரும் போது பின் புலத்தில் இருந்த...  
‘தொலைவுக்காட்சி சித்தரிப்புகள்’...
ராம் - அபயங்கர் பின் புலமாக  ‘அண்மைக்காட்சி சித்தரிப்புகளாக’ தெளிவாக காண முடிகிறது.

வன்முறையில் ‘வண்டி மாடு’ கொல்லப்பட்டு  ‘பல நாட்கள்’ ஆகி விட்டது..
மாட்டு வண்டி  ‘தலை கீழாக’குடை சாய்ந்து கிடக்கிறது.
வண்டியிலுள்ள மூட்டைகள் சிதறி கிடக்கின்றது.
பூதாகரமாக உப்பிக்கிடக்கும் மாட்டு வயிற்றினுள்ளே...
ஒரு நாய் மாட்டின் சதையை தின்று கொண்டு இருக்கிறது.
இதற்கு முந்தைய காட்சியில் காட்டப்பட்ட நாயும்...
இதுவும் வெவ்வேறு.
அது கருப்பு...இது வெள்ளை.
அதாவது, உயிரோடு இருக்கும் ‘வெள்ளை நாய் தின்று கொண்டு இருக்கிறது’.
ஊர் ரெண்டு பட்டது...வெள்ளைக்கார கூத்தாடி நாய்க்கு கொண்டாட்டம்.
‘வெள்ளை நாய்’ குலைத்து நமது கவனத்தை ஈர்க்கிறது.
இது இயக்குனர் கமலின் சாமர்த்திய உத்தியாகும்.

அபயங்கரும், ராமும்  ‘துர்நாற்றத்தை’ உணர்வதை...
இருவரது  ‘உடல் மொழி’ மூலம் தெளிவாக உண்ர்கிறோம்.
‘கலவரத்தின் கால அளவை’ ‘துர்நாற்றத்தின்’ மூலமாக பார்வையாளருக்கு உணர்த்தியது...
இயக்குனர் கமலின்  ‘மாஸ்டர்பீஸ்’ பங்களிப்பு.

செத்துக்கிடக்கும் மாடு, பலநாள்கள் கடந்தும் அகற்றாமல் கிடக்கிறது.
 அரசு நிர்வாகம்  ‘குடை சாய்ந்து’ விட்டது.
‘விரைந்து செல்லும்  போலிஸ் ஜீப்’...
அரசு நிர்வாகம் மெல்ல மெல்ல நிலமையை கையகப்படுத்துவதற்கு சாட்சி.
 ‘டிராமில் கணிசமாக  பயணிக்கும் மக்கள்’....
கலவரம் சகஜ நிலைக்கு மீள்கின்ற தன்மையை சொல்கிறது.

மேலும் இக்காட்சியில் அறியப்படுவது...
கவிழ்ந்து கிடக்கும் ‘இந்திய மாட்டு வண்டி’ = சகோதர்களான 
இந்து -முஸ்லிமை மோத விட்டு வேடிக்கை பார்த்த வெள்ளை அரசின் சதிக்கு பலியாகி கவிழ்ந்து போன  ‘ஷராவர்தி’ பொம்மை அரசு.

ஓடிக்கொண்டிருக்கும் ‘வெள்ளையரின்  டிராம்’ =  ‘அதிகார வெள்ளைக்கார அரசு’ பாதிப்பில்லாமல் இயங்குவது.

செத்து கிடக்கும் மாடு,
துர்நாற்றம்,
உயிரோடு இருக்கும்  ‘வெள்ளை நாய்’,
தலை கீழாக கவிழ்ந்த வண்டி,
சிதறிக்கிடக்கும் மூட்டைகள்...மூலமாக
கலவரத்தின் கடந்த கால நிலையையும்.......

இயங்கிக்கொண்டிருக்கும் டிராம்,
பயணிக்கும் மக்கள்,
சாகேத் ராம்,
அபயங்கர்,
போலிஸ் நடவடிக்கை...மூலமாக
கலவரத்தின் நிகழ் கால நிலையையும்
ஒரே ஷாட்டில் கையகப்படுத்தியது இயக்குனர் கமலின் கை வண்ணம்.
உலகசினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது புது விருந்து.
அடர்த்தியான அர்த்தங்களை ஒரே ஷாட்டில் பொதிந்துரைத்த
இயக்குனர் கமலுக்கு  'HATS OFF'.

அபயங்கர் : “ நாடு இருக்கிற சிச்சுவேஷன்லே நாம எல்லோருமே சோல்ஜர்ஸ்தான்” 

“ இந்த புக்கை படி- இது தடை செய்யப்பட்ட புஸ்தகம்.
அட்டையை பிரிக்காம படி.
இது வீர சா...”
இந்த டயலாக் முழுமை பெறாமல் முடிவடைகிறது.
இந்த  ‘சாமர்த்தியத்திற்கு’ காரணம் இயக்குனரா...சென்சாரா தெரியவில்லை.
ஆனால், ‘வீர சாவர்க்கர்’  என்று...
ஹேராம் திரைக்கதை புத்தகத்தில் இருக்கிறது.
வீர சாவர்க்கர் ஆர்.எஸ்.எஸ் பிதாமகர்களில் முக்கியமானவர்.
அவரை பற்றி விளக்கமாக விக்கிபீடியாவில் காண்க.
வீர சாவர்க்கர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்.

அபயங்கர் : “ பொழச்சிருந்தா மறுபடியும் சந்திப்போம்...
வந்தே மாதரம் !”.
டிராமை போலிசார் வளைக்கின்றனர்.
முற்றுகையிடுவதைக்கண்டு அபயங்கர்
கங்கையில் பாய்ந்து தப்பிக்கிறான்.
போலிசார் சுடுகின்றனர்.
THE THEN HUNTER IS NOW BEING HUNTED.
நேற்று வேட்டையாடியவன்...இன்று வேட்டையாடப்படுகிறான்.

அபயங்கர் தப்பிப்பதை ராம் பார்க்கிறான்.
இக்காட்சி நிறைவு பெறுகிறது.

கலகக்காரர்களின் ஆட்டம் முடிவடைந்து விட்டது.
எண்ணற்ற  'இந்து - முஸ்லீம் சகோதரர்கள்' மடிந்து விட்டார்கள்.
‘வெள்ளை நாய்’ உயிரோடு இருக்கிறது.
உயிரோடு இருக்கும் கலவரக்காரர்களை,
போலிசார்  ‘வழக்கம் போல்’
லேட்டாக வந்து வேட்டையாடுகிறார்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இக்காட்சியை காணொளியில் காண்க...


11 comments:

  1. can any one extract the HeyRam movie tamil version dialouge....

    ReplyDelete
  2. படக்காட்சிகளை அனுபவித்து எழுதியுள்ளீர்! படிக்க இனிமை!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

    ReplyDelete
  4. your narration is so nice, the dialouges between two is so sharp, and it tells the lots of story and philosophy.

    Thank you for your great analysation and narration.

    Keep doing

    ReplyDelete
  5. your narration is so nice, the dialouges between two is so sharp, and it tells the lots of story and philosophy.

    Thank you for your great analysation and narration.

    Keep doing

    ReplyDelete
    Replies
    1. ஹேராம் திரையில் எழுதப்பட்ட திருக்குறள்.
      உரை எழுதியதால் கிடைத்த பாராட்டை... ‘திருவள்ளுவருக்கே’ சமர்ப்பிக்கிறேன்.

      Delete
  6. you are back with a bang. Good.

    ReplyDelete
    Replies
    1. எல்லா புகழும்...பாராட்டும் ‘படைத்தவனுக்கே’.

      Delete
  7. விரும்பி அழைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.