Nov 9, 2012

Detachment \ 2011 \ English \ U.S.A \ ...நல்லாசிரியனாய்...பண்பிலே தெய்வமாய்.



நண்பர்களே...
ஹேராம், டச் ஆப் ஸ்பைஸ் ஆய்வுத்தொடர்களுக்கிடையில்...
நாயகன் படத்துக்கு...
குறுகிய காலத்தொடர் எழுத நிர்ப்பந்தம் ஆகி விட்டது.
இரண்டு முக்கிய படங்களை அறிமுகப்படுத்தி விட்டு
தொடர்களை தொடர்கிறேன்.

பூமியில் பிறந்த அனைவரும்...ஆசிரியரும், குருவும் அமையப்பெற்றிருப்போம்.
ஆசிரியரே... குருவாக அமையப்பெறுவது வரம்.
எனது ஆசிரியர்கள் அனைவருமே குருவாக இருந்தார்கள்.
[ ஒரு சிலர் மட்டுமே விதிவிலக்கு ]
இப்படம் என் ஆசிரிய குருக்களை நினைவுக்குள் கொண்டு வந்தது.


பிரிட்டிஷ் இயக்குனர் டோனி கேய் [ TONY KAYE] படமெடுப்பதில் சிங்கம்.
சிங்கம் குட்டி போடுவது போல்...மூன்றே படங்கள்.
கொசுறாக ஒரு டாகுமெண்டரி.
அப்பப்ப, புவாவுக்கு... விளம்பரப்படம்...மியூசிக் ஆல்பம்... இத்யாதி.

இயக்குனர் டோனி...எழுத்தாளர்,நடிகர்,ஒளிப்பதிவாளர்,ஓவியர், திரைக்கதையாளர், இசையமைப்பாளர், கவிஞர் என எதற்கு நீட்டல் ?
சுருக்கமாக   ‘கமல்’.
இருந்தும் நண்பர் கருந்தேளால் கொட்டப்படாமலும்...
நண்பர் ஹாலிவுட் பாலாவால் கழுவி ஊற்றப்படாமலும்...
தப்பித்து வரும் பாக்கியவான்.


இயக்குனர் டோனி  ‘அட்ரியன் பிராடியுடன் ’ [ ADRIEN BRODY ] இணைந்து
2011ல் வெளியிட்ட படம்  ‘டிடாச்மெண்ட்’.
இப்படத்தின் தயாரிப்பாளர்... அட்ரியன் பிராடி என்பது விசேஷ அம்சம்.
அட்ரியன் பிராடி என்றதும் நினைவுக்கு வருவது...
‘இந்திரா காந்தி மூக்கு’ +  ‘பியானிஸ்ட்’.
அலட்டாம நடிச்சு, பேர் வாங்கும் பேர்வழி.

நோபல் பரிசு பெற்ற  சிந்தனையாளர் ஆல்பர்ட் கேம்யூவின் தத்துவம்
தொடக்க டைட்டிலிலேயே வருகிறது.
" AND NEVER HAVE I FELT SO DEEPLY AT ONE  AND THE SAME TIME 
SO DETACHED FROM MYSELF AND SO PRESENT IN THE WORLD "
-  ALBERT CAMUS - 
இச்சிந்தனையைத்தான் படமாக்கியுள்ளார் இயக்குனர் டோனி கேய்.

Albert  Camus = (1913-1960)
French Writer and  Philosopher = Representative of   'Atheistic  Existentialism'
Noble Prize Winner (1957) =  for his writings against capital punishment in the essay "Réflexions sur la Guillotine"  (Reflections on the Guillotine).

Central Theme of his ‘Philosophy’ = Meaning of Human Existence is ‘ABSURD’ = Senselessness =
Paradox of the Absurd = 'Sisyphean plight' = Mythological Image who, for his perfidy, is doomed  forever to roll uphill a heavy stone, which always rolls down again.

Camus Frame of Mind = A hopelessly  lonely man in the  'absurd' - inhumane-modern-capitalist world. 
 'Revolts’ and ‘Revolutions’ are illusory.

தத்துவப்படம் என தலை தெறிக்க வேண்டாம்.
90 % மகிழ வைக்கும்...10 % நெகிழ வைக்கும்.

அமெரிக்காவில் ‘போஸ்ட் மாடர்ன் மாணவர்கள்’ நிறைந்த ஒரு பள்ளிக்கு  'டெம்ப்ரவரி' வாத்தியாராக வருகிறார் மிஸ்டர் பார்த் [ ADRIEN BRODY ].
பேச்சுக்கு பேச்சு  'FUCK'ஐயும்,  ‘முணுக்’ கோபத்தையும் வைத்திருக்கும்
வன்முறை மாணவர்களை...
அன்பும்...கண்டிப்பும் கலந்து கையாளுகிறார்.
வாழ்நாளை எண்ணிக்கொண்டிருக்கும் தாத்தாவை விடுதியில் வைத்து பராமரிக்கிறார்.
சக ஆசிரியர்களிடம் நேசமாயிருக்கிறார்.
 ‘அன்பே சிவமாய்’ வாழும் மிஸ்டர் பெர்பெக்ட்.

மிஸ்டர் பார்த்தின், கடந்த கால சிக்கல்களையும்...
நிகழ் கால போராட்டங்களையும் விவரிக்கும் போக்கில்...
அட்டாச்மெண்ட், டிட்டாச்மெண்ட் பற்றியும்...
Paradox of the Absurd’ என்ற கருத்தாக்கத்தையும் குழைத்து பதவுரை எழுதுகிறது  படம்.

படத்தில் மிகவும் ரசித்த காட்சியை... ‘ஒரு சோறு பதமாக’ தருகிறேன்.

பணி முடிந்து திரும்பும் பார்த்தை வழி மறிக்கிறாள் பதின் வயது பாலியல் தொழிலாளி.
பார்த்  'அவளிடமிருந்து' விலகிச்செல்கிறார்.
“ பத்து டாலர் கிடைக்குமா...பசிக்கிறது” என்பாள்.

பசியால் வாடும் பதின் வயது பாலியல் தொழிலாளியை
தனது வீட்டில் உணவிருக்கிறது என அழைத்துச்செல்வார் பார்த்.
இக்காட்சியின் பின் புலமாக...
சிவப்பு வண்ணம் பூசப்பட்ட சுவர் இருக்கும்.
இரண்டு காரெகடர்களும் வெளியேறிய பின் அந்த சிவப்பு சுவற்றுக்கு சின்னதாக ஒரு  ‘பாஸ்ட் ஜூம்’ போட்டிருப்பார் இயக்குனர்.
முதலாளித்துவ சமூகம் பட்டினி போடும்...
 ‘மனித நேயம்’ சாப்பாடு போடும்... என்பதே இக்குறியீடு.


*********************************************************************************
இக்காட்சி  ‘செம்மலர்’ என்ற சிவப்பு இலக்கிய பத்திரிக்கையில் வந்த
ஒரு குட்டிக்கதையை நினைவு படுத்தியது.
நினைவிலிருக்கும் கருத்தை தழுவி...
இன்றைய சூழலோடு பொருத்தி ...
எனது நடையில் தர முயற்சிக்கிறேன்.

பவர் கட் இல்லாமலேயே இருட்டாயிருக்கும் சாலையில் அழகிய இளம் பெண்
போய்க்கொண்டு இருக்கிறாள்.
வெளிச்சத்தில் அவள் அமலா பாலைக்கூட தோற்கடிக்கலாம்.
இருட்டை சாக்காக்கி ...வாலிபன் ஒருவன் அவளை பாலோ செய்வதை காண முடிந்தது.
அவளை நெருங்க சந்தர்ப்பம் தேடும் நடையில் தொடர்கிறான்.
கண்ணும் கருத்தும் காமத்திலிருப்பதால் என்னை கவனிக்கவில்லை.
சந்தர்ப்பம் கிடைத்தால் அவளை வீழ்த்தி விடுவான் என்றெண்ணி...
 “டேய்... நில்லுடா” என ஓங்கிய குரலில் என் இருப்பை தெரியப்படுத்தினேன்.
இரண்டு பெண்ணைப்பெற்று பாதுகாத்து வளர்த்த சராசரி இந்திய தகப்பனின் அனுபவத்தில் விளைந்த சாதரண உத்திதான்.
நான் நினைத்தபடி அக்கோழை பயந்து அவளையும் தாண்டி ஓடி விட்டான்.
அவள் நின்று என்னை பார்த்தாள்.
அவள் நன்றி சொல்வாள் என எண்ணினேன்.
“ கஷ்டப்பட்டு அவனை தொடர வைத்தேன்.
அவனுக்கு விருந்தாகி...இன்றிரவாவது...சாப்பிட நினைத்தேன்.
கெடுத்து விட்டீர்களே...பெரியவரே ” என்றாள்.

நமது அரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம், சமூகம் எல்லாவற்றின் மீதும் வைத்த விமர்சனமாக இக்கதை அதிர்வு ஏற்படுத்தியது.
*********************************************************************************

இக்கதையும்...இப்படமும்...கேம்யூவும் எழுப்பும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்.
 ‘மனித நேயம்’ சாப்பாடு போடுவது எப்போது ?

படத்தின் இறுதிக்காட்சியில் பாஸிட்டிவ்வாக விடை சொல்லி இருக்கிறார்
இயக்குனர்.
மனிதநேயத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் கிளைமாக்ஸ் இது.
இப்படம் உங்களிடம் இருக்கும் மனித நேயப்பண்பிற்கு நீர் ஊற்றும்.

விருதுகள் பற்றிய தகவல்கள் விக்கிப்பீடீயாவிலிருந்து காப்பி பேஸ்ட்... 
On September 9, 2011, Detachment screened in competition at the 
37th Deauville American Film Festival in France
It won both the Revelations Prize and the International Critics' Award.
On September 18, Detachment was announced as the Closing Night Film at the 
Woodstock Film Festival, where Kaye was the recipient of the Honorary Maverick Award.
 On October 12, 2011, Detachment screened in competition at the Valenciennes International Festival of Action and Adventure Films in Japan, where it won the Grand Prize and the Audience Award.

Later, on October 26, the film screened in competition at the 
24th Tokyo International Film Festival.
It received the award for Best Artistic Contribution, sharing honors with the film Kora.
Detachment also screened in competition at the 35th São Paulo International Film Festival and won the Audience Award for Best Foreign Language Film, sharing honors with Chicken with Plums.
On November 16, Detachment screened at the 53rd Muestra Internacional de Cine in Mexico.
In January 2012, Detachment won Best Picture at the Ramdam Film Festival in Tournai, Belgium.

படத்தின் காணொளி காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

6 comments:

  1. //பேச்சுக்கு பேச்சு 'FUCK'ஐயும், ‘முணுக்’ கோபத்தையும் வைத்திருக்கும்
    வன்முறை மாணவர்களை...//

    சார், அமெரிக்காவுல தொண்ணூறு சதவிகிதம் மாணவர்கள் இப்படிதான் இருப்பாங்க.. அது வன்முறை மாணவர்கள் அல்ல.. அங்கே அவர்கள் பருவத்துக்கே உரிய இயல்பு அது. ( பள்ளிப் படிப்புடன் பெற்றோர் செலவு செய்வதை நிறுத்திவிட, தன் சொந்த முயற்சியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு அகங்கார உணர்வு அது)

    ReplyDelete
    Replies
    1. 90% மாணவர்கள் இயல்பே அப்படி ஆகி விட்டாலும் அது வாழ்வியல் முறை ஆகி விடாது.
      அந்த வன்முறையிலிருந்து அவனை பாதை மாற்றாமல் விட்டதால்தான் தியேட்டரில் மிஷின் கன்னை எடுத்து சரமாறியாக சுடுகிறான்.

      இப்படம் பெற்றோர் செய்யும் தவறையும் சுட்டி காட்டுகிறது.
      இப்படத்தில் வரும் ‘பெற்றோர் சந்திப்புக்கு’...
      ஒருவரும் வரமாட்டார்கள்.

      Delete
  2. ட்ரைலர் அமர்க்களம்.. கண்டிப்பாக பார்க்கிறேன்.. இந்த பதிவைப் படித்த பிறகு எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் "கிறிஸ்டபர் நோலன்" பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.. நன்றி..

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் "கிறிஸ்டபர் நோலன்" பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.///
      எழுதுங்கள்.
      அவரது பாலோவிங்,மெமண்டோ பற்றி விரிவாக எழுதவும்.

      Delete
  3. Thanks for sharing...Watched this movie after reading your blog and really liked it...Now going through your other articles...

    ReplyDelete
  4. Thanks for sharing this. Watched this movie after reading your blog and liked the movie...going through your other write ups..

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.