Nov 28, 2012

சாருவுக்கு ‘சினிமாவும்’ தெரியாது.

நண்பர்களே...

எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்கள் குருதிப்புனல் படத்தை பற்றியும்,
கமலை பற்றியும் அபத்தமாக பேசிய உரையை காணொளியாக காண நேரிட்டது.
அப்பதிவை இட்டவரே,
செப்டம்பர் 30 அன்று ஒரு மொட்டை மாடியில் நடந்த
‘மாபெரும் பொதுக்கூட்டத்தில்’ சாரு பேசியதை அன்றே ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
இப்போது மீண்டும் அந்த அபத்தத்தை காணொளியாக போட்டதன்
‘உள் நோக்கம்’ அப்பட்டமாக தெரிகிறது.


சாரு  ‘குருதிப்புனல்’ படத்தை,வெளியான காலத்தில் இருந்து எதிர்த்து வருகிறார்.
இப்போதும் குருதிப்புனலை மட்டரகமாக பேசியதைக்கேட்டதும்
‘இந்த மனுஷன் இன்னுமா வளரவில்லை’ என ஆச்சரியப்பட்டேன்.

குருதிப்புனல் பற்றி சாருவின் பொய் பரப்புரையின் ஒரு முள்ளையாவது முறிப்பதே இப்பதிவின் நோக்கம்.

இந்தியத்திரை மேதைகளுள் ஒருவரான கோவிந்த் நிகாலனி உருவாக்கிய ‘துரோக்கால்’ என்ற திரைப்படத்தின் கதையை வாங்கி கமல் திரைக்கதை அமைத்து வெளியிட்ட படம்தான்  ‘குருதிப்புனல்’.
இயக்கம் & ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.
பாடல்கள் இல்லாமலும், முதன் முதலாக டால்பி ஸ்டீரீயோ [ 4 டிராக்] ஒலியுடனும் தயாரித்து வெளியிட்டார் கமல்.

குருதிப்புனல் நக்சலைட்டுகளை மோசமாக சித்தரித்து உள்ளது என நோட்டிஸ் ஒன்றை தயார் செய்து, தியேட்டர் வாசலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்தாராம் சாரு.
கமலை திட்டி, அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கலாட்டா செய்தாராம்.
கமல் ரசிகர்கள் போட்டு சாத்தி விட்டார்களாம்.
அன்று கமல் ரசிகர்கள் கொடுத்த அடிக்கு இன்று வரை கதறிக்கொண்டு இருக்கிறார் போலும்.

சாருவின் அபத்த உரையிலிருந்து ஒரு துளி விஷம்...

\\\ சாரு : குருதிப்புனல் படத்தில் நக்சலைட் ஒருவன் தன் மனைவியின் ஜாக்கெட்டுக்குள் பணத்தை செருகிச்செல்வான்.
இப்படி ஒரு காட்சி \\\

நக்சலைட் இயக்கத்தில் மிக உயர்வான பொறுப்பில் இருப்பவன்,
டூரிங் தியேட்டர் திரைக்குப்பின்னால் தனது காதல் மனைவியை சந்தித்து பேச வருவான்.
அவன் மிக அழகாக இருப்பான்.
அவன் காதல் மனைவி தோற்றத்தில் மிகச்சாதரணமாக இருப்பாள்.
ஆனால் நக்சலைட் போராளிக்கு,  அவள் ஐஸ்வர்யா ராய் போல் தோற்றமளிப்பதாக அந்த காரெக்டை மிக உயர்வாக சித்தரித்து இருந்தார் கமல்.
அரசியல்,இலக்கியம், வாழ்க்கை என எல்லாவற்றிலுமே
வெளித்தோற்றத்தில் மயங்காமல்  ‘உள் அழகை’தரிசிப்பவர்கள், 
‘நக்சலைட் போராளிகள்’ என்ற உண்மையை பறை சாற்றவே
அக்காட்சியும், அந்த காரெக்டரும் படைக்கப்பட்டிருக்கிறது.
அவள் கொண்டு வந்த மீன் குழம்பை,
போராளி ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு ஒன்றே போதும்.
அவள் வெக்கப்பட்டு சிரிக்கும் போது, அப்படியே குழைவான் போராளி.
கவுதமியிடம் கமல் குழையும் காட்சி ஒன்று வரும்.
எனக்கு அந்தக்காட்சி சரியாக நினைவில் இல்லை.
காரணம், போராளியின் காதல் காட்சியையே எனது மூளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
எனவே, நக்சலைட் போராளியின் காதல் காட்சி  ‘ஷாட் பை ஷாட்’
இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது.
காதலும் காமமும் கலந்து கவிதையாக ஜொலித்தக்காட்சியை எப்படி மறக்க முடியும் ?

ஹலோ மிஸ்டர் சாரு,
முதலில் பெண்களின் ஜாக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள்.
குருதிப்புனலில், இந்து போலிஸ் ஆபிசரை விட உயர்வாக
இஸ்லாமிய போலிஸ் ஆபிசர் படைக்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியும்.
இஸ்லாமியச்சிறுமியின் கற்பு பறி போவதை தடுக்க, ஒரு இந்துப்பெண் தனது கற்பை பறி கொடுக்க முன் வரும் தியாகம் புரியும்.

குருதிப்புனல் படம் நக்சலைட்டை தவறாக சித்தரிக்கிறது என்ற
பொய் பிரச்சாரத்தை கேள்விப்பட்டு கமல் அப்போது மிகவும் வருத்தமுற்றார்.
“ எனது பேனாவில் ஒரு துளி மை கூட அவர்களை தவறாக சித்தரிக்கவில்லை.
மாறாக படத்தில் எனது காரெக்டர்தான்  'சோரம்' போவதாக சித்தரித்திருக்கிறேன்.
கடமையில் தவறாத கண்ணியவான்களாக  நாசர், அர்ஜூன் காரெக்டர்களை
படைத்துள்ளேன்” என குறிப்பிட்டார் கமல்.

திரு. சாரு அவர்களே...
நீங்கள் பெண் அவயங்களை பச்சையாகக்குறிப்பிட்டு  ‘சரோஜா தேவி’ படைப்புகளை உங்கள் பக்தர்களுக்கு படையுங்கள்.
உங்களுக்கு தெரியாத சினிமா பற்றி பேசவோ எழுதவோ செய்யாதீர்கள்.
ஏற்கெனவே பல விவகாரங்களில் உடைந்த மூக்கு கொஞ்சமாவது மிஞ்சட்டும்.

நண்பர்களே...
சித்தாந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட குருதிப்புனலுக்கும் நிறைய படித்து
ஆய்வு செய்துதான் எழுத முடியும்.
நீங்கள் ஊக்கமளித்தால் எழுதுகிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

23 comments:

  1. தலிவரப்பற்றியெல்லாம் அப்படி பேசப்படாது..ஹி ஹி...அந்த வீடியோ லிங்கையும் இணைத்திருக்கலாமே

    ReplyDelete
    Replies
    1. திரை மணத்தில் அந்தப்பதிவின் விபரம் கிடைக்கிறது.

      பாருங்க...செம காமெடியா இருக்கும்.
      அந்த வீடியோ ஓளிப்பதிவாளரை ‘காக்க காக்க 2’ படத்தில்
      பயன் படுத்தலாம்.

      Delete
    2. antha videola oru background music varum parunka... appidiye thalaivar vajeththerichchalla pesura mathiriye irunthichu....

      Delete
  2. வீடியோ லிங்க்கை கொடுக்காமல் போய்ட்டீங்களே அண்ணா..
    குருதிப்புனல் படத்தை ரொம்பவும் புகழ்ந்து பேசுவார் அப்பா..அந்த காலத்துல நல்ல போலிஸ் படமென்றும், இங்க அவர் அப்ப இருந்த இடத்துலக்கூட சைனிஸ் நண்பர்கள், மலாய் நண்பர்கள் கூட படம் வாங்கி பார்த்ததாகவும் கூறுவார்.ரொம்ப நாள் இப்படிருக்க. படத்தை டவுன்லோடு பண்ணி மூன்று முறை பார்த்தேன்..அர்ஜூனை துன்புறுத்தும் காட்சியையும் இறுதி காட்சியில் கமலின் நடிப்பையும் தோற்றத்தையும் மறக்கவே முடியாது..தமிழ் சினிமாவில் ஒரு நல்ல போலீஸ் படம்..கவுதம் மேனன் கூட படத்தை தனக்கொரு இன்ஸ்பிரேஷன் என்று சொன்னதாக நினைவு..
    அருமையான பதிவு..மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அந்தப்பதிவைப்பற்றிய விபரம் திரை மணத்தில் இருக்கிறது.

    டிஷ்யும்,டிஷ்யும் இல்லாத பரபர ஆக்‌ஷன் மூவி.
    இப்போது பார்த்தாலே சலிக்காது.
    அப்போது கேக்கவா வேண்டும்.
    எனவேதான் உன் தந்தையாருக்கும்,பிற மொழி நண்பர்களுக்கும் பிடித்து இருக்கிறது.

    வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி குமரா.

    ReplyDelete
  4. இங்க மண்டை என்றால் ஒலக எழுத்தாளர் சாரு என்று அர்த்தம் கொள்ளவும் ....

    ////இப்போ தான் பிச்சைகாரன் ப்ளாக்கை பார்த்தேன். மண்டை சொல்லிருக்கு, கமல் ஒன்னுமே தெரியாம படம் எடுக்குறாராம். சொல்றது யாரு, christopher nolanக்கு திரைக்கதை சொல்லி கொடுத்த மண்டை. குருதி புணல் படத்துல நக்சலைட் அவன் பொண்டாட்டி ஜாக்கெட்ல அஞ்சு ருபாய் திணிச்ச மாதிரி காமிச்சிருக்க கூடாதம். யோய் அவன், அவன் பொண்டாட்டி ஜாக்கெட்ல தான்யா பணத்தை திணிச்சான், ஒரு சில கிழடுங்க பேங்காக் போய் பேத்தி வயசு இருக்குற பொண்ணு ஜாக்கெட்லையே திணிக்குதுங்க. அதை இலக்கியம்னு வேற சில குஞ்சுங்க சொல்லுதுங்க. அப்புறம் இன்னொரு நக்சலைட் பதினெஞ்சு வயசு பொண்ணை கெடுக்குற மாதிரி ஒரு காட்சி வருதாம், நிஜத்துல அது மாதிரி எல்லாம் நக்சலைட் செய்ய மாட்டாங்களாம்.

    அட முட்டாளே.. அந்த படத்தில் அந்த பெண்ணை கெடுக்க வருவது நக்சலைட் இல்லை. ஆயுதம் சப்ளை செய்பவன். அதை தெளிவாக செல்லும் வசனமும் படத்தில் உண்டு. படம் புரியலைன்னா புரிஞ்சவங்க கிட்ட கேட்கனும். கள்ளு குடிச்ச குரங்கு மாதிரி மைக்கை முன்னாடி நீட்டின உடனே உளறக் கூடாது.

    ஒன்னுமே தெரியாத கமல் IIT Mumbai ல உரையாற்றி இருக்கிறார், தெரியுமா உங்களுக்கு? மெத்த படித்ததாக பீத்திக் கொள்ளூம் நீங்க தலை கீழா நின்னும் தண்ணி குடிச்சா கூட அங்க இருக்குற வாட்ச்மேன் உள்ள கூட விடமாட்டான்.Englishல ஒரு லீவ் லட்டர் எழுதச் சொன்னா துணைக்கு ஆள் தேடுற நீங்க எல்லாம் கமலை பத்தி பேசவே கூடாது.

    கமல் IIT mumbaiயில் பேசிய உரை இங்கே. எப்படியும் உங்களுக்கு புரியாது, குஞ்சுங்க கிட்ட கேளுங்க மொழிபெயர்த்து தருவாங்க. இங்கே இந்த லிங்க் தருவதற்க்கு காரணம் கமல் எங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக அல்ல, உங்களுக்கு கமலை பற்றி விமர்சணம் செய்ய அல்ல, அவரின் படம் பார்ப்பதற்கே தகுதியும் அருகதையும் இல்லை என்பதற்காகவே./////

    இவன் - Senthil Kumar (சாரு விமர்சகர் வட்டம் )

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      கோக்கோ கோலாவை கேரளாவில் போய் எதிர்த்த சூரன் நான் என வழக்கம் போல தன்னைத்தானே புகழ்ந்து கின்னஸ் சாதனை படைத்தவர் இவர்.
      இவர் சமீபத்தில் மலேசியாவில் கோக்கோ கோலாவை கையில் ஏந்தி போஸ் கொடுத்து தன் பொய் முகத்தை தானே கிழித்து காட்டியிருக்கிறார்.
      இந்த பிச்சைக்காரன்களுக்கு இதேல்லாம் கண்ணில் படாதா !

      வருகைக்கும்...சாருவைப்பிழிந்ததற்கும் நன்றி.

      Delete
  5. ஹேராமிற்கு அடுத்தது 'குருதிப்புனல்'... சூப்பர் :-)

    ReplyDelete
  6. ஸ்பாம் மெயில் என்றால் என்னவென்று தெரியாத முட்டாள் எல்லாம் கமலை விமர்சிக்க தொடக்கி விட்டாங்கள். முதலில் அந்த சாரு முட்டாளை ஸ்பாம் மெயில் என்றால் என்னவென்று படிக்க சொல்லுங்கள். முதலில்
    அந்த முட்டாளின் காலை நக்கி திரியும் பதிவர் பிச்சைகாரனுக்கு பாடம் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ‘புனை பெயருக்கேற்றார்’ போல் அதிரடியாக பின்னூட்டம்
      இடுகிறீர்கள்.
      வாழ்த்துக்கள்.

      Delete
  7. குருதிப்புனலுக்கு ஹிந்தி விளக்க உரை வந்தால் தான் "சாரு" புரிந்து கொள்வார்...

    ஏன்னா இந்த ஆளுக்கு ஹிந்தி படம் தான் புரியுமாம்....

    ReplyDelete
  8. ஹிந்திப்படத்தைக்கொண்டாடுவார்.

    தமிழ் படத்தை, தனக்கு வேண்டியவர்கள் படமென்றால் தூக்கி வைத்து கொஞ்சுவார்.
    உ.ம் மிஷ்கின் நட்பாக இருந்த காலத்தில் வந்த ‘நந்தலாலா’.

    ReplyDelete
  9. Who is சாருநிவேதிதா? hoo! இசைஞானி அவர்களுக்கு இசை அறிவு கிடையாது என்று சொன்னவரா?

    ReplyDelete
  10. தமிழ் படத்தை, தனக்கு வேண்டியவர்கள் படமென்றால் தூக்கி வைத்து கொஞ்சுவார்.
    உ.ம் மிஷ்கின் நட்பாக இருந்த காலத்தில் வந்த ‘நந்தலாலா’. அப்படி கொஞ்சியதின் பலன்தான் ஐட்டம் சாங்கில்(யுத்தம் சேய்) தலைகாட்ட முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. சூட்டிங் பண்ணும் போது ரெண்டு பேரும் கொஞ்சிகிட்டாங்க...
      படம் ரீலிசுக்குள்ளே அடிச்சுகிட்டாங்க.
      அதனாலேயே, மிஷ்கின் மேக்சிமம் எடிட்டிங்ல சாருவை தூக்கிட்டாப்ல...

      தமிழ் சினிமா ஒரு ‘உலக மகா நடிகனை’ பெறுகின்ற வாய்ப்பை இழந்தது.

      Delete
  11. the best dialouge oriented tamil action movie is kuruthipunal - the master piece from kamal.

    i am expecting a detailed narration of Master piece for this movie from you.

    Please do it we will learn how to enjoy the great movie with details. thanks

    ReplyDelete
  12. குருதிப்புனல் தலைப்பு எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதியுடையது கமல் அவரிடம் அனுமதி பெற்றுப் பயன்படுத்தினார். தமிழ் திரைப்படத்தின் முதல் டி.டி.எஸ் திரைப்படம்.கேன்சர் நோயாளியான மகேஷ் என்பவர் இசையமைத்த திரைப்படம். கமல் நடித்த நாயகனுக்கு அடுத்து குருதிப்புனல் நான் அடிக்கடி பார்க்கும் படம்...!அங்காடித் தெரு மோசமான படம் என்று சொன்னவர் சாரு..!அன்றிலிருந்தே அவர் ரசனை எப்படி என்று தெரியும்.

    ReplyDelete
  13. Mr.World cinema fan, 'உலக சினிமா' அப்படினா என்ன? விளக்கம் தரவும்.

    ReplyDelete
  14. சாரு தனது 60வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளது. அதை கொண்டாட எங்கேயாவது வெளியூர் சென்று கொண்டாடலாம் என்று திட்டமிட்டு தனது ஆடுகளை கூப்பிட்டால் பல ஆடுகள் தலைமறைவாகியுள்ளன. சில முட்டாள் (9) ஆடுகள் மாட்டுபட்டுள்ளன. ஆனால் நிதி போதாது. மாட்டுபட்ட ஆடுகள் மிடில் கிளாஸ் ஆடுகள் .

    ஆகவே கொண்டாட பணம் தேவை. அப்பணத்தை கமல் தருவதாக ஒத்து கொண்டால் கமலை உலக நாயகனாக உலகமெங்கும் பிரச்சாரம் செய்ய தயார் என சாரு சொன்னதாக ஆடுகள் எம்மை தொடர்பு கொண்டு கூறின.
    அத்துடன் கமல் இதுவரை நடித்த அனைத்து படங்களை உலக திரைப்படங்களாக கூறி பிரச்சாரம் செய்ய தயாராம்.

    ஆனால் முக்கிய குறிப்பு - இந்த பிரச்சாராம் இந்த வருடம் வரை மட்டும் தான். அடுத்த வருடத்துக்கு மாதம் மாதம் பணம் (பிச்சை) தர வேண்டும்.

    விஸ்வரூபம் படம் அடுத்த வருடம் வருவதால் கட்டாயம் அடுத்த வருடம் பணம் தரப்பட வேண்டும். இல்லாதுவிடில் எதிர்மறையான விமர்சனம் மிக உக்கிரமாக இருக்கும் என சாரு எச்சரித்ததாக ஆடுகள் தெரிவித்தன.

    ReplyDelete
  15. அண்ணே, எப்படியாவது குட்டி கரணம் போட்டு, கமல் கிட்ட இருந்து ஒரு திட்டோ, துப்போவாவது வாங்கிட மாட்டோமான்னு சாரு துடியா துடிக்கிறாரு. கமலாவது இவரை கண்டுக்கிறதாவது? அவருக்கு தெரியாதா விஷயமுள்ள ஆளுங்க யாரு, டுபாக்கூருங்க யாருன்னு. சிலர் நல்ல பேர் எடுத்து லைம் லைட்ல இருக்க மாட்டோமான்னு பாடு படுவாங்க, அது கண்டிப்பா தம்மால முடியாதுன்னு நினைக்கிறவங்க, Negative பாதையை தேர்ந்து எடுப்பாங்க. சாரு ரெண்டாவது ரகம்.

    ReplyDelete
  16. அண்ணே! சொப்பனசுந்தரி யார் வச்சியிருக்காங்க என்ற ரகசியம் அவருக்கு தெரியும்.

    ReplyDelete
  17. பதிவர் பிச்சைகாரனின் பதிவில் நான் போட்ட பின்னூட்டம்

    பதிவர் பிச்சைக்காரனுக்கு.
    முக்தா இதுவரை தான் நாயகன் படம் மூலம் நட்டம் அடைந்ததாக சொல்லவில்லை. கமலின் முக்தா விமர்சன நேர்காணலின் பின்னரே இவ்வாறாக கதையை விட்டு வருகின்றார்.
    நாயகன் படத்தை முழுமையாக விற்ற பின் (மொத்த செலவுகளும் ஜீவி யின் தலையில் கட்டப்பட்டது) முக்தாவுக்கு எப்படி நட்டம் வரும்.

    ஜீவி யின் "G .V. Films" ஒரு லிஸ்டட் கம்பெனி. அந்த கம்பனிக்கு வரும் நட்டத்துக்கு ஜீவி பொறுப்பாக மாட்டார். (நீங்கள் படித்தவராக இருந்தால் இது புரியும்)

    "G .V. Films" லிஸ்டட் கம்பெனி ஆக காரணம் அது ஆரம்ப காலங்களில் உழைத்த லாபம் தான். நஷ்டம் எடுக்கும் கம்பனியை லிஸ்டட் கம்பனியாக பதிவு செய்ய முடியாது.

    நாயகனுக்கு பின் ஜீவி அக்னி நட்சத்திரம், தளபதி, மே மாதம், இந்திரா, சொக்கத்தங்கம், தமிழன் போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.

    அந்த கம்பனிக்கு நட்டம் மே மாதம், இந்திரா, சொக்கத்தங்கம், தமிழன் போன்ற படங்களால் வந்திருக்கும். தமிழன் ஒரு மெகா பட்ஜெட் படம். ஆனால் வசூல் இல்லை.

    நீங்கள் ஒரு ஆன்மீக நாட்டம் உடையவர். ஒருத்தரை ஞான குருவாக கொண்டவர் (அவருக்கும் ஞானத்துக்கும் என்ன சம்மந்தமோ தெரியவில்லை) என்று அடிக்கடி புலம்புகிறீர்கள்.
    ஆன்மீக நாட்டம் உடையவரால் இப்படி காழ்ப்புணர்வுடன் இன்னொருவரை வன்மத்துடன் தாக்க முடியாது.
    நீங்கள் உங்களுக்கு காழுப்புணர்வு இல்லை. உண்மையை வெளிப்படுத்தினேன் என்று சல்லாப்பு சொல்லலாம். இதையெலாம் நம்புவதற்க்கு நாங்கள் உங்கள் சாரு வட்ட வாசகர்கள் போல் பலியாடுகள் அல்ல.

    எந்த சராசரி மனிதனும் உங்கள் பதிவை படித்தால் கமல் மீது காழ்ப்புணர்வும் குரோதமும் கொண்ட ஒருவரால் பதியப்பட்ட பதிவு என்பதனை அறிந்து கொள்வர்.

    நீங்கள் எப்படி என்றாலும் எழுதி கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நீங்கள் ஆன்மீக வாதி, ஆன்மீக நாட்டம் உடையவர் என்று வேடம் போட்டு கொள்ள வேண்டாம். அது ஆன்மீக வாதிகளுக்கு இழுக்கு.


    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.