Nov 1, 2012

முக்தா சீனிவாசனுக்கு...பதிலடி.

நண்பர்களே...
நாயகன் உருவாக்கத்தில் இருந்த நெருக்கடிகளை...
கமல் மற்றும் திரு.முக்தா சீனிவாசன் ஆகிய இருவரது கட்டுரைகளிலும்  வெவ்வேறு கோணத்தில் பார்த்தோம்.


இந்த இரண்டு கட்டுரைகளிலும்...
காட்பாதர் - கொப்பல்லோ - நியூயார்க் -
கமல் - மணிரத்னம் - திரு.முக்தா சீனிவாசன் - பம்பாய் ஆகிய
ஏழு காரணிகளை முதன்மையாக காணலாம்.

இருவருமே பல விஷயங்களில் ஒத்த கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.

1 நாயகன்... முக்தா பிலிம்ஸ் தாயாரித்தது.
2 மணிரத்னம்தான் இயக்கியது.
3 காட்பாதர் படம்...கமல்,மணிரத்னம்,திரு.முக்தா சீனிவாசன் மூவருக்குமே பிடித்தது.
4 உலகப்புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை  ‘நாயகனை’
உலகின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்வு செய்தது.

இன்னும் பல கருத்துக்களை... சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால், உங்களுக்கு போரடிக்கும்.
எனவே, நீங்கள் ஆவலுடன் எதிபார்க்கும் மேட்டருக்கு போய்விடுகிறேன்.

Time Magazine's All-TIME Movies (1923-2005)
by deadmonger created 11 Apr 2011 | last updated - 11 Apr 2011
"ALL-TIME" 100 Movies is a compilation by Time magazine featuring 100 of the best films released between March 3, 1923 (when the first issue of Time was published) and early 2005 (when the list was compiled). 
The list was compiled by critics Richard Schickel and Richard Corliss and generated significant attention, receiving 7.8 million hits in its first week alone

நாயகன் படம் 1987 ல் வெளி வந்து...இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆண்டுகள் ஆகி விட்டது.
உலகப்புகழ் பெற்ற  ‘டைம்’ பத்திரிக்கையும்...
‘நாயகன்’ படத்தை உலகின் தலை சிறந்த நூறு படங்களில் ஒன்றாக சிறப்பித்திருக்கிறது.
எனவே கமல்  ‘நாயகன்’ உருவாக்கத்தை நினைவு கூர்ந்து
ஹிந்து பத்திரிக்கையில் எழுதி இருக்கிறார்.

கமலின் மொத்தக்கட்டுரையுமே படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் புகழ் பாடுகிறது.
திரு.முக்தா சீனிவாசனின் மொத்தக்கட்டுரையும் கமலை குறை சொல்லி எழுதப்பட்டிருக்கிறது.

கமலின் கட்டுரையில் தயாரிபாளரை பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி இருக்கிறார்.
லேசாக  ‘உப்புத்தாள்’ போட்டு... உரசியும் இருக்கிறார்.
ஆனால் பதிலுக்கு திரு.முக்தா சீனிவாசனின் மொத்தக்கட்டுரையுமே...
ஆசிட் அபிஷேகம்.

திரு.முக்தா சீனிவாசனின் கட்டுரை...அபத்தங்களின் தொகுப்பு.
அபத்தங்களை ஆராய்ந்ததில்...முக்கிய மூன்று காரணிகள் புலப்பட்டது.

1 கமலின் கட்டுரையை சரியாக உள் வாங்கவில்லை.
2 காட்பாதர் படத்தையும் புரிந்து பார்க்கவில்லை.
3 அவர், தான் தயாரித்த நாயகன் படத்தையே புரிந்து கொள்ளவில்லை.

கமல் கட்டுரையின் தலைப்பே... மணிரத்னம் சொன்ன வாசகம்.
‘Of course Velu Nayakan doesn’t dance’

திரு .முக்தா சீனிவாசன் கட்டுரையின் தலைப்பே அபத்தத்தின் உச்சம்.
Living in past glory
இன்று  ‘விஸ்வரூபம்’ எடுத்து ஹாலிவுட்டை தன்னை நோக்கி திருப்பிய  ‘சகலாகலா வல்லவனுக்கு’ இப்படி தலைப்பிட்டது...
அவரது அறியாமை வெளிச்சம்.

கமல் கருத்துரையை  ‘கலரிலும்’,
திரு. முக்தா சீனிவாசன் கருத்துரையை  ‘கலர்லெஸ்ஸாகவும்’
 இனம் பிரித்துள்ளேன்.

We flew down Jim Allen, the action director and cinematographer, from England.
He’d worked out the stunts for films like Sholay.
But Mr. Srinivasan packed him off after three days, saying he couldn’t afford him.
“We can’t keep spending like this,” he told me.
“I think Hindi films have spoilt you.”
But in the three days he was here, he gave Mani and P.C. Sreeram (the cinematographer) many ideas.
As he spoke, they actually took down notes about how to topple a car and how to show a bullet leaving a head and how you can shift focus and make a stunt look more effective.
When Jim left, I was totally down.
Mani doesn’t show his emotions.
But I decided to use the props I’d got for other films, like polystyrene bottles that I could bring down and break on Inspector Kelkar’s head.
We had gone into such details.
As far as using international artist Jim Allen, he was charging a huge amount 
(almost Rs. 2,00,000 per day), that too in dollars, which was not feasible in those days.
I could not concede to this request,
since it meant engaging in illegal and unethical hawala transactions. 
Moreover, the stunts that Mr. Allen suggested were already in vogue. 
Mani would have come up with a better scene had Kamal not insisted on copying from
The Godfather
ஜிம் ஆலன் என்கிற பிரிட்டன்  ‘ஆக்‌ஷன் கம் ஒளிப்பதிவு இயக்குனரை ’...
கமல் பரிந்துரைத்திருக்கிறார்.
திரு.முக்தா சீனிவாசன் மறுத்திருக்கிறார்.

கமல் நடித்து வெளியான படம்...
சாகர் \ 1985 \ இந்தி \ இயக்கம் :  ‘ஷோலே’ புகழ் ரமேஷ் ஷிப்பி

‘ஷோலே’ படத்தில் பணியாற்றிய  ‘ஜிம் ஆலனை’...
பயன்படுத்த கமல் ஆசைப்பட்டதில் தவறிருக்கிறதா என்ன ?

ஜிம் ஆலன் பணியாற்றியிருந்தால்...1987 ல் வந்த நாயகன் இன்னும் சிறப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் ஜொலித்திருக்கும் என்பதை ஷோலே படம் பார்த்தவர்கள் சொல்ல முடியும்.
பாவம்...திரு.முக்தா சீனிவாசன் ஷோலேயும் பார்க்கவில்லை போலும்.

There was no budget for makeup, so I spoke to my guru, Michael Westmore.
I’ve trained under him, and we worked together for the first time on Oru Kaidhiyin Diary.
I learnt how to apply old-age makeup myself in front of a magnifying mirror, with just an assistant standing by with a fan to dry layer after layer of wrinkled-latex on my face.
There was no budget for the costumes, so Sarika moved in.


When Mani Ratnam narrated the story, he told me that he wanted to make a realistic film with real characters, which meant no makeup and the use of Tamil attire like the dhoti and lungi.
He was not interested in bringing in either a Hollywood stuntman or a makeup man.
I felt that Velu Naicker did not need a “Hollywood” makeup man and costumer.
In fact it was Kamal Haasan’s idea to bring such people in.
Our company had a makeup man and costumers who were all paid by me.
To state that there was no budget for makeup and costumes is absurd.

கமலுக்கு மேக்கப் கலையிலுள்ள ஆர்வமும், நிபுணத்துவமும் உலகமறிந்ததே.
அதே போல் திரு .முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கியுள்ள படங்களில் மேக்கப் தரம்  ‘பிரமாதமாக’ இருக்கும்.
ஏனெனில், அவரது கம்பெனி மேக்கப் கலைஞர்கள்
வீடுகளுக்கு வெள்ளையடிப்பதிலும் வல்லவர்கள்.

நான் இங்கே திரு.முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த சில திரைப்படங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

1 தேன்மழை
2 நினைவில் நின்றவள்
3 நிறைகுடம்
4 அருணோதயம்
5 தவப்புதல்வன்
6 அன்பைத்தேடி
7 அவன் - அவள் - அது
இந்தப்படங்களில் ஒரு பொதுத்தன்மையிருக்கும்.
வியாதிகளை மையப்படுத்தி கதை பின்னப்பட்டிருக்கும்.
கேன்சர், மாலைக்கண், அம்னீஷியா, கர்ப்பப்பை கோளாறு, ஆண்மைக்குறைவு, துரித ஸ்கலிதம், சொப்ன ஸ்கலிதம், விரை வீக்கம் ...
இப்படி சகலவிதமான வியாதிகளை தெரிந்து கொண்டதே
திரு.முக்தா சீனிவாசன் படங்களை பார்த்துதான்.

இப்போதும் டெங்கு காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்ற புதிய வியாதிகள்  ஐயா இயக்கத்தில் படமெடுக்க காத்திருக்கின்றன.

But when the time came, Mani was standing there glumly, and Sreeram was sitting with his head in his hands.
I thought there was a technical glitch.
I said, “What is the problem? I’m ready. Let’s go.”
He showed me a small note from the producer saying that the day’s quota of film stock had been used up, and they had to wait till he sanctioned new stock.
This was the producer’s way of making sure we shot responsibly, without going overboard with takes.
I was livid.


Before going into a shooting schedule, I had always ensured that the all the film rolls needed for the schedule were made available so that the shooting could go on without interruption. Mani asked for 15 rolls of film for 10 days of shooting.
On the evening of the seventh day, Mani’s assistant director Govindarajan asked for an extra roll, since they had exposed all the 15 rolls.
Since the Kodak company opened only in the morning, Kamal Haasan gave the film rolls that he had purchased for his earlier movie.
I paid him for these rolls. However, P.C. Sreeram did not use it, as it was old stock.

70 பிலிம் ரோல்கள் தேவை என திட்டமிட்டு,
100 ரோல்களில் நாயகனை படமாக்கினார்கள் என கேள்விப்பட்டேன்.

இயக்குனர் சங்கர், இயக்குனர் பாலா ஆகியோர்... 
500 ரோல் சர்வ சாதரணமாக உபயோகித்து எந்திரன், அவன் - இவன் எடுக்கின்றனர்.

நாயகன் போன்ற உலகத்தரமான சினிமாவிற்கு 100 ரோல் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது அவசியமா ? அநாவசியமா? 
நீங்களே விடை எழுதிக்கொள்ளுங்கள்.

கமல் வரவழைத்த பிலிம் ரோலை... பி.சி.ஸ்ரீராம் உபயோகப்படுத்தவில்லை என்று திரு.முக்தா சீனிவாசன் சொல்லியிருப்பதற்கு விளக்கம்.
‘கோடாக் கம்பெனி கோடவுன்’ அல்லாமல்... 
வெளியில் ஸ்டாக் வைக்கப்பட்ட பிலிம் ரோலை... 
லேபில் கொடுத்து  ‘பாஹ் டெஸ்ட் ரிசல்ட்’ பார்த்த பிறகே 
ஒளிப்பதிவாளர்கள் உபயோகிப்பார்கள்.
இருந்தாலும்  ‘ரிஸ்க்’ கருதி...
ஸ்டாக் வைக்கப்பட்டபிலிம் ரோலை எந்தக்காரணம் கொண்டும்... 
பெரிய ஒளிப்பதிவாளர்கள் உபயோகப்படுத்தவே மாட்டார்கள்.

To generate and invest Rs. 1 crore in a Tamil movie in 1986 and market and release it without any problem was a huge task.
As a senior producer, I was always interested in seeing that the distributors who bought the movie made profits.
Making a movie is a team effort.
The producer takes the entire risk and his contribution cannot be undermined.
G. Venkateswaran bought negative rights only after I sold all the areas.
But he insisted that he would put his name as producer and receive the awards the movie got.
I had to agree since I had suffered a loss even after selling all the areas.

திரு.முக்தா சீனிவாசன் அவர்கள்,
நான் தயாரித்த  ‘சகலகலா வல்லவர்’ என்ற ராஜ் டி.வி  தொடருக்கு பேட்டியளிக்கையில்,
தனக்கு நியாயமான லாபம் கிடைத்தது என்று குறிப்பிட்டார்.
இப்போது மாற்றி சொல்லக்காரணம் என்ன?

We — Mani, myself, Sreeram, Thotta Tharrani (the art director whom I’d introduced in Raajapaarvai) — were all collaborating as a team.

கமல் கட்டுரை முழுவதும், 
 ‘நாயகனை உருவாக்கிய நாயகன்’  மணிரத்னத்தின் பங்கை 
சிலாகித்து விட்டு...
இந்த இடத்தில் மணி ரத்னம், பி. சி. ஸ்ரீராம், தோட்டாதரணி என எல்லோரும் ஒத்திசைத்து உழைத்து உருவாக்கியதை 
குறிப்பிட்டுள்ளார். 

I have nothing against Kamal Haasan taking credit for the success of Nayakan

நாயகன் வெற்றியில் கமல் தனக்கு மட்டுமே பங்கு என பெருமை தேடுவதில் தனக்கு ஆட்சேபம் இல்லை என திரு.முக்தா சீனிவாசன் கருத்துரைத்ததில் விஷமத்தனம் மட்டுமல்ல...
கால் நூற்றாண்டு விஷமும் இருக்கிறது.

A good artist is one who gets inspired from a movie. 
The scene where Kamal Haasan cries on seeing the dead body of his son is copied from 
The Godfather, and he imitates Marlon Brando. 

This scene was booed by the audience, because it never fit the character and lacked nativity. 

திரு.முக்தா சீனிவாசன், காட்பாதர் படத்தை புரியாமல் பார்த்து தொலைத்திருப்பது இங்கேதான் வெட்ட வெளிச்சமாகிறது.

காட்பாதரில் மார்லன் பிராண்டோ,
தனது மகன் இறந்த செய்தி கேட்டு அழுகையை அடக்கி...
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆர்டர் கொடுப்பார்.
பிராண்டோ உணர்ச்சி வயப்படாமல்... அறிவு பூர்வமாக செயல்பட்டார் என கொப்பல்லோ காட்சியமைத்திருக்கிறார்.
பிராண்டோவும் அப்படித்தான் நடித்திருக்கிறார்.

காட்பாதரின் டிரான்ஸ்கிரிப்ட் இதோ...

DISSOLVE TO: The Don's office at night where Tom Hagen is somberly having a drink.
A slow, somber version of the Title Theme is heard. 
The Don enters. -night

VITO CORLEONE
 (holding out his hand for Tom's drink) Give me a drop...
(then, after sipping the drink and handing it back to Tom)
My wife is crying upstairs. 
I hear cars coming to the house. 
Consiglieri of mine, 
I think you should tell your Don what everyone seems to know...

TOM
Ah, I didn't tell Mama anything.
I was about to come up and wake you just now and tell you...

VITO CORLEONE
But you needed a drink first.

TOM (shaking his head, then says quietly)
Yup...

VITO CORLEONE
Well, now you've had your drink.

TOM (his voice breaking)

They shot Sonny on the Causeway. 
He's dead.

VITO CORLEONE (exhales, bows his head; physically shaken and weakened)
I want -- all inquiries made.
 I want no acts of vengeance.
I want you to arrange a meeting, 
with the heads of the Five Families.
This war stops now.
[The Don, weakly standing, goes to embrace Tom. 
Then he begins to exit]

VITO CORLEONE
Call Bonasera -- we need him now.
[The Don exits, as Tom dials the phone]

CUT TO: Bonasera, frightened, waiting by an elevator at his funeral parlor -night

TOM (OS, into phone)

This is Tom Hagen. 
I'm calling for Vito Corleone, at his request. 
Now -- you owe your Don a service. 
He has no doubt that you will repay it. 
Now -- he will be at your funeral parlor in one hour. 
Be there to greet him.

CUT TO: The basement of Bonasera's funeral parlor. 
From the elevator, two men carry a stretcher forward. 
Tom and the Don follow as Bonasera, frightened, watches. -night

VITO CORLEONE
Well, my friend -- are you ready to do me this service? 

BONASERA (nervously)
Yes -- What do you want me to do?

VITO CORLEONE
I want you to use all your powers -- and all your skills.
I don't want his mother to see him this way...
(then, after the Don uncovers the blanket, revealing Sonny's mangled face, shaken)
Look how they massacred my boy...

ஆனால் கமல் மகன் சடலத்தை பார்த்த பிறகு...
வசனமே பேசவில்லை.
உணர்வு பூர்வமாக அழுகையை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
காப்பி...காப்பி...எனக்கதறி அழுபவர்களே...
இரண்டு படத்தையும் நன்றாக பாருங்கள்.
அப்போது புரியும்...
பிராண்டோ நடிப்பு வேறு...கமல் நடிப்பு வேறு.

*********************************************************************************
நாயகனில், கமல் தனது மகன் சடலத்தைப்பார்த்து டயலாக் பேசுவதாகத்தான் திரைக்கதையில் இருந்தது.
அதற்குறிய வசனத்தையும் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதி விட்டார்.
டேக்கில், வசனம் பேசி நடித்த கமல் பாதியில் நிறுத்தி விட்டார்.
கமல் மணியை பார்த்தார்.
மணி பாலகுமாரனை பார்த்தார்.
“ இவ்வளவு பெரிய சோகம் நடந்திருக்கு...
இந்த இடத்துல டயலாக் பேசிகிட்டு அழுவறது அபத்தமாயிருக்கு” என்றார் பாலகுமாரன்.

என்ன பண்ணலாம் ?  என்பது போல் கமலை பார்த்தார் மணி.
கமல்... “ நான் ஒண்ணு பண்றேன்...சரியா வருதா பாருங்க” என்றார்.
‘கமலின் அழுகை, 
மயில் அகவுவது போல் ஆரம்பித்து...பிளிறலாக உருவெடுத்தது’
என எனது நிகழ்ச்சிக்கான பேட்டியில் வர்ணித்தார் பாலகுமாரன்.

நாடே பாராட்டிய அழுகை காட்சியை...தியேட்டரில் ஊளையிட்டார்கள் என வக்கிரமமாக குறிப்பிட்டுள்ளார் திரு.முக்தா சீனிவாசன். 

ஒரு சராசரி இந்தியத்தந்தையின் உணர்ச்சி கொந்தளிப்பை மட்டும் வெளிப்படுத்தினார் கமல்.
ஊரே போற்றும்  ‘டானின்’ புகழ், அந்தஸ்து என எல்லாவற்றையும் ஒத்தி வைத்த...பாசமிகு தந்தையின் கதறல் மட்டுமே...
அந்த நடிப்பில் வெளிப்பட்டதால்தான்
அக்காட்சியை இயக்குனர் மணிரத்னம் அங்கீகரித்தார்.
*********************************************************************************
அடுத்தப்பதிவில்,  ‘நாயகன் = காட்பாதர் காப்பி’ என்ற பிரச்சாரத்திற்கு பதிலளிக்கிறேன்.


கமலின் பிரசித்தி பெற்ற அழுகையை காணொளியில் காண்க...




45 comments:

  1. இதை..இதைதான் எதிர்பார்த்தேன்...பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  2. நல்ல பதிவு சார்! எல்லாத்தயும் பொறுத்துக்கலாம் பட், அந்த கமலோட அழுகையை உதாசீனப்படுத்தியது கடுப்பாக்குது! யாரு சார்! திரு.முக்தா சீனிவாசன் அவர் பேரையே இந்த மேட்டருக்கு பிறகுதான் கேள்விப்படுறன் அவர் இயக்கிய படங்களையும்தான்!! :D

    ReplyDelete
    Replies
    1. திரு.முக்தா சீனிவாசன் தமிழ் திரைப்படத்துறையில் பன்னெடுங்காலம் இருந்தவர்.
      நான் மிகவும் மதிக்கும் இயக்குனர்.
      அவரது படங்களில் ஆபாசம்,வன்முறை இருக்கவே இருக்காது.

      எனக்களித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டது...
      “ நாலு பேருக்கு நல்லதுன்னா வன்முறை செய்யலாம் என்ற கருத்தாக்கத்தில் உடன்பாடில்லை ”.

      அவர் பேட்டியளிக்க, போட்ட நிபந்தனை எனக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது.
      பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கிய...
      ஆதரற்றவர்களுக்கான சிறுவர் பள்ளியை நடத்தும்...
      ‘பாலமந்திர் டிரஸ்டுக்கு’ 5000 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும்.

      Delete
    2. அருமையான மனிதராய் இருக்காரே! அவர் கோபத்திலும் ஏதாவது நியாயம் இருக்கவேண்டுமே?

      Delete
    3. பணத்தை கொட்டி படம் எடுத்தும் பேர் கமலுக்கும் மணிரத்தினதிட்கும் சென்று விட்டதே என்ற ஆதங்கம். வேறென்ன..

      Delete
  3. இதை தான் உங்க கிட்ட இருந்து எதிர்பார்த்தேன் சார்...வழக்கம் போல் கலக்கல்..

    ReplyDelete
  4. வாங்க ராஜ்...

    இந்தக்கட்டுரையை எழுத சற்று கஷ்டமாக இருந்தது.
    திரு.முக்தா சீனிவாசன் நான் மிகவும் நேசிக்கும் கலைஞர்.
    கமலை பற்றி அபத்தமாக கருத்துரைத்ததால்தான்...
    மறுத்து உரைக்க வேண்டி வந்தது.

    ReplyDelete
  5. கமல் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்பதற்க்கான அடையாளங்களே அவரின் படங்கள். ஒன்று மற்றொன்றுடன் பொருந்துவதில்லை...
    அவர்படங்கள் தனித்துவம் வாய்ந்தவை என்பதை விட எப்போதும் உலகளவில் பேசப்படுபட தகுதி உள்ளவை என்பதே உண்மை ...

    கிணத்து தவளைகளின் ஹாலிவுட் மொக்கைகள்
    http://multistarwilu.blogspot.in/2012/10/blog-post_31.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  6. Kamal - and Muktha Srinivasan have forgotten Maestro ilayaraja's contribution..........but you too..........

    ReplyDelete
    Replies
    1. கமல் இளையராஜாவை பற்றி சொல்லவில்லை.
      ஆனால் திரு.முக்தா சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
      [முக்தா கட்டுரையை முழுவதும் படிக்கவும்.]

      நான் அடுத்தப்பதிவில்தான், அந்த மேட்டருக்கு வருகிறேன்.

      Delete
  7. ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் ஒருவித எருமையைபிடிக்க ,வேலியில் ரசாயனப்பொடியை தூவி வைப்பார்கள்.. பொடியின் வாசத்தால் இழுக்கப்பட்டு எருமை வந்து வேலியில் சிக்கிக்கொள்ளும்.. வேலி எருமையின் உடலை கிழிக்குமாம்.. ரசாயனமும் உடலில் ஊறி மிகுந்த வலியை உண்டக்கும்.. அப்போது எந்த எருமையின் ஓலம் ..இதைதான் இந்த காட்சியில் கமல் வெளிப்படுத்தினார் என்று எங்கோ படித்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் எளிய பின்னூட்டத்திற்கு நன்றி.

      Delete
  8. மெனக்கெட்டு ஒரு கமெண்ட் டைப்பண்ணேன்.. திரும்பவும் லாகின் கேட்குது.. லாகின் பண்ணி பார்த்தால் கமெண்ட்டை காணவில்லை.. பின்னூட்டம் போடுவதை எளிமையாக்குங்கள் சார்!!

    ReplyDelete
  9. As usual you wrote this as a kamaladhasan..Your article is a rubbish one. It shows that you are not matured. I will say both their statements are correct from their point of view. Don't write any rubbish like this to support Dr.(:-)) Kamalahasan blindly

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் ரப்பிஷ்,
      உங்கள் பின்னூட்டம் ‘சைபர் கிரைம்’ பிரிவுக்கு அனுப்பும் தரத்தில் இல்லை.
      இன்னும் பெட்டரா முயற்சிக்கவும்.

      Delete
  10. அண்ணே தூள்! இந்த ஆப்பு எல்லா துளையையும் அடைக்கும், சில பேருக்கு 'டாரு டாரு' ன்னு கிழியும். அப்படியே திரு சீனிவாசனின் அண்ணன் மறைவுக்கும் நாயகன் வியாபரத்திற்க்கும் முடிச்சு போட்ட அபத்தத்தை பத்தியும் சொல்லி இருந்தீங்கன்னா நல்லா இருக்கும்.

    முக்தாவின் பதிவுக்கு லிங்கு கொடுத்த சாருகேசிங்க, நடுநிலை நந்தனார்களா இருந்தாங்கன்னா உங்களுடைய இந்த பதிவுக்கும் லிங்க் கொடுக்கணும். இல்லை உங்களை போல சொந்தமா ஒரு பதில் பதிவாவது போடணும். செய்ய மட்டங்க. லிங்க் கொடுக்க மட்டும் தெரிஞ்சவங்களுக்கு உண்மையில் இதுல ஏதாவது விஷயம் தெரிஞ்சு இருந்தா தானே சொந்தமா எழுதறதுக்கு.

    உங்க அடுத்த பதிவுக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. அடுத்தப்பதிவு சும்மா அதிரும்ல..

    ReplyDelete
  12. முக்தா "சீ"னி சொல்கிறார்... கமலால் நாயகன் ஓடவில்லை என்று...அப்படின்னா அவரே ஹீரோவாக நடித்திருக்க வேண்டியது தானே....

    நாயகன் ஹிந்தி ரீமேக் ப்ளாப் ஆனது... ஆனால் கமலின் ஹிந்தி டப்பிங் நாயகன் நன்றாக ஓடியது வடக்கில்.... அது தான் கமலின் வல்லமை....

    காட்பாதரை விரிவாக விவரித்தது சில சேட்டைகார கருந்தூள்களுக்கு செம நெத்தியடி....

    ReplyDelete
    Replies
    1. காட்பாதர் இந்தப்பதிவில் சாம்பிள்தான்.
      அடுத்தப்பதிவு முழுக்க காட்பாதர்தான்.

      Delete
  13. //நாடே பாராட்டிய அழுகை காட்சியை...தியேட்டரில் ஊளையிட்டார்கள் என வக்கிரமமாக குறிப்பிட்டுள்ளார் திரு.முக்தா சீனிவாசன். //

    வக்கிரமமாக !! என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம் என்ன இருந்தாலும் சினிமாவிற்கு ஒரு தனி வரலாறு கொடுத்தவர் அல்லவா ?

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும்...
      நாடே நினைவில் வைத்துக்கொண்டாடும் அந்தக்காட்சியை கேவலப்படுத்திய மனிதரை இதை விட நாகரீகமாக குறிப்பிட எனக்கு தெரியவில்லை.

      தமிழ் சினிமாவில் திரு.ராமநாராயணன்...எந்த இடம் உண்டோ அதற்கு பக்கத்தில்தான் இவருக்கு இடம் உண்டு.
      முழுக்க...முழுக்க சினிமாவை வியாபாரத்தன்மையுடன் அணுகிய கோடம்பாக்கவாசிகளுள் ஒருவர். அவ்வளவே.

      Delete
  14. Arivu jeevi ulaga cinema rasigane


    Thiru MUKTHA SRINIVASAN kooriathu andrya akaalakattathil 100 film roll enbathu evvalavu periathu,aanaal ungal methavi thanam indraya 700 roll galudan andra 100 ai oppidugirathu.Appadi endraal anru 170latcham sambalam vaangia ungal kamal indru en 7 crore ketkiraar.

    Aduthu ULAGA CINEMAVAI nam tamil kalaignargalum kaattuvaargal,tamilanaagia kamal en velinaatu stunt mastarai alaikiraar,en ingu yaarume illaya

    Naayaganukku appuram kamal evvalavu padam thayarithaar,athilellam en antha velinaatu stunt mastarai poda villai,aduthavargal panathil palam thinbathu enna nyayam endru thaan ketkiraar thiru muktha avargal

    KAMAL antha alugai nadippu nandraaga thaan ullathu,aanaal oru vanmuraiyaalan,than uyirukke anjaathavan than magan irantha bothu saatharana manithan pol aluvathil logic illai endra arthathil thaan koori irukiraare thavira kamal nadippai kurai koora villai

    aaga otham ivargal iruvarum sernthu 25 varudam mun edutha padathai kevala paduthiathu mattum illamal,oru nalla director manirathinam avargalayum kevalapaduthugiraargal

    ReplyDelete
    Replies
    1. உலக மகா அறிவு ஜீவி நான்கடவுளே...

      ரொம்ப பதட்டத்தில் இருக்கிறீர்கள்.
      பதறிய காரியம் சிதறும்.
      உ.ம்.திரு.முக்தா சீனிவாசன் குறிப்பிட்ட கமல் சம்பளம் 17 லட்சம்.
      உலக மகா அறிவு ஜீவி தாங்கள் குறிப்பிட்டது 170 லட்சம்.
      எது உண்மை ?

      நான் குறிப்பிட்டது 500 ரோல்.
      உலக மகா அறிவு ஜீவி நீங்கள் குறிப்பிட்டது 700 ரோல்.

      இதோடு தொடர்பு படுத்தி இன்று கமல் கேட்பது 7 கோடி என்ன நியாயம்?
      என்று கேட்ட தங்கள் ஆய்வுத்திறமை என்னை மயக்கம் அடைய வைத்து விட்டது.

      உங்கள் அறிவுத்திறமை என் போன்ற ஆசாமிகளுக்கில்லை.
      உங்களோடு வாதிட முடியாது.
      வடிவேலு பாணியில் சொல்கிறேன்...முடியல.

      Delete
  15. சொன்ன மாதிரியே வந்து வாசித்தும் விட்டேன். :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.

      திரு. முக்தா சீனிவாசன் கட்டுரையை மட்டும் கருத்தில் கொண்டு தாங்கள் இட்ட பதிவைப்படித்தேன்.
      அதன் விளைவே உங்களை எனது பதிவில் உரசினேன்.

      தங்கள் அனுபவம் ,பட்டறிவின் மூலம் மிக நாகரீகமாக பின்னூட்டத்தின் மூலம் எதிர் கொண்டீர்கள்.
      உங்களுக்கு என் நன்றியையும் மன்னிப்பையும் சமர்ப்பிக்கிறேன்.

      ஆனால் நீங்கள் எழுதிய பதிவை வரிக்கு வரி மறுக்கிறேன்.

      Delete
    2. //உங்களுக்கு என் நன்றியையும் மன்னிப்பையும் சமர்ப்பிக்கிறேன்.//

      மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை! இந்த விஷயத்தில் நாம் மாறுபட்டாலும், சினிமா ஆர்வலர்கள் என்ற முறையில் வேறோர் விஷயத்தில் நாளை ஒத்துப்போகலாம். நன்றி!

      //ஆனால் நீங்கள் எழுதிய பதிவை வரிக்கு வரி மறுக்கிறேன்.//

      மறுப்பதில் எந்தத் தவறுமில்லை. எதுவாயிருப்பினும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதே நல்ல அறிகுறிதான்! நன்றி!

      Delete
  16. //காட்பாதரை விரிவாக விவரித்தது சில சேட்டைகார கருந்தூள்களுக்கு செம நெத்தியடி//

    அடடா! :-)))

    ReplyDelete
  17. அட்ரா சக்கை! அட்ரா சக்கை! அட்ரா சக்கை! சரியான போடு போட்டீங்க!!
    - கமலை இகழ்ந்தோரை கிழி கிழியென கிழிக்கும் சங்கம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      கமலை கிழிகிழியென கிழிக்கும் சங்கத்தலைவர் இது வரை வரவில்லை கவனித்தீர்களா !

      ஆனால் உறுப்பினர்கள் படையெடுப்பு அதிகமாக இருக்கிறது.

      Delete
  18. பதிவு சூப்பர்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டம் சூப்பரோ சூப்பர்.

      Delete
  19. ///* கமலின் மொத்தக்கட்டுரையுமே படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் புகழ் பாடுகிறது.

    * திரு.முக்தா சீனிவாசனின் மொத்தக்கட்டுரையும் கமலை குறை சொல்லி எழுதப்பட்டிருக்கிறது.

    * கமலின் கட்டுரையில் தயாரிபாளரை பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி இருக்கிறார்.

    * லேசாக ‘உப்புத்தாள்’ போட்டு... உரசியும் இருக்கிறார்.
    ஆனால்

    * பதிலுக்கு திரு.முக்தா சீனிவாசனின் மொத்தக்கட்டுரையுமே...
    ஆசிட் அபிஷேகம்.

    திரு.முக்தா சீனிவாசனின் கட்டுரை... அபத்தங்களின் தொகுப்பு.//

    அண்ணே! நமக்கு ஆங்கில வாசிக்க வருங்களா?? ஏன் கேக்கிறேன்னா.. உங்க பதிவைவிட அபத்தமாக கமலோ, முக்தாவோ உளறவில்லை! அபத்தத்தின் மொத்த உருவமே உங்க பதிவுதான்ண்ணே! நீங்கதான் "அபத்தசிகாமணி" பட்டம் பெற்ற வின்னர்! :-)

    ***பிராண்டோ நடிப்பு வேறு...கமல் நடிப்பு வேறு.***

    ஆஹா எம்புட்டுப் பெரிய கண்டுபிடிப்பு! :))))

    நீங்க நல்லாயிருக்ணும்ண்ணா!

    ReplyDelete
  20. I seriously think you should remove the moderation for this kind of controversial post. You could clean up later if anybody abuses! :)

    ReplyDelete
  21. ///* கமலின் மொத்தக்கட்டுரையுமே படத்தின் இயக்குனர் மணிரத்னத்தின் புகழ் பாடுகிறது.///


    கமல் புகழும், கமலே பாடுது! அது தெரியலையா???


    ***Had the producer been more cooperative and had he had more vision, Mani would have ensured that the film came out better. ***

    இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா???

    அப்போ நாயகன் நல்லா வரலையா? குறைகள் நிறைந்த படமா?

    மணியும் முக்தாவும் இல்லைனா, நாயகன், "ஹே ராம்", "விக்ரம்" லெவலுக்கு வந்து நாசமாப் போயிருக்கும்! அதுதான் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. திரு.வருண் அவர்களே...
      உங்கள் பதிவும்..பின்னூட்டமும் படித்து விட்டேன்.

      எனது அடுத்தப்பதிவே...உங்களுக்கு பதில்.

      Delete
  22. நான் ஒரு தீவிர கமல் ரசிகன். இருப்பினும் இந்த கட்டுரையில் எனக்கு உடன்பாடு இல்லை.
    ஒரு சரித்திர வெற்றி பெற்ற ஒரு படத்தை பற்றி பின்னொரு காலத்தில் கூறும்
    பொது சிறிது அவையடக்கம் வேண்டும். தயாரிப்பாளர் என்ற முறையில் முக்தாவுக்கு
    சில பிரச்சினைகள் இருந்திருக்கலாம். அந்த காலகட்டத்தில் நாயகன் போன்ற திரைபடத்தை
    தயாரிக்க முன்வந்ததே பெரிய விஷயம். ஒருங்கிணைந்து செயல்படும் போது, அணியில் உள்ள மற்றவர்கள்
    மத்தியில் விட்டு கொடுக்காமல் பேச வேண்டும். இத்தனை வருடங்கள் கழித்து, முக்தா நாயகனை
    வியாபாரமாக தான் பார்த்தார் என்று கூறுவது சரியல்ல. இது அவருக்கு அவமானத்தையே ஏற்படுத்தும்.
    இதற்கு அவர் எதிர்வினை ஆற்றாமல் இருக்க, முற்றும் துறந்த துறவியாக தான் இருக்க வேண்டும்.
    இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு கமலே பொறுப்பு.

    பதிவிட்டவருக்கு : நீங்கள் சிறிது உணர்ச்சிவசப்படாமல், நிகழ்வுகளையும் எதிர் நிகழ்வுகளையும் , காரண காரியத்தோடு,
    நடுநிலைமையுடன் ஆராயவும். இதை விட்டு நீங்கள் வெளியே வருவதன் மூலமே உங்கள் நடுநிலைமை மதிக்கப்படும்.
    உங்களுடைய எதிரிகள், உங்களை தீவிர கமல் வெறியராக மாற்றி உங்களின் நடுநிலைமையை கேள்விகுறிக்கு உள்ளக்குகிறார்கள்.

    தவறேதும் இருப்பின் மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே...
      திரு.முக்தா சீனிவாசன், நாயகன் படத்தைப்பற்றியும்...
      கமலின் நடிப்பைப்பற்றியும் சிலாகித்து புகழ்ந்து...
      என்னிடம் பேட்டியளித்து...அந்தப்பேட்டி ராஜ் டிவியிலும்...
      உலகமெங்கும் தமிழர்கள் வாழும் பகுதியிலுள்ள
      தனியார் தொலைக்காட்சிகள்,
      என்னிடம் உரிமை வாங்கி ஒளிபரப்பின.

      ஆனால் இப்போது நேர் மாறாக ஹிந்து பத்திரிக்கையில் எழுதி உள்ளார்.

      கமல் பற்றி எழுதுவதால் மட்டும்...எனக்கு எதிராக கருத்துரைகள் வரும்.
      அதை எதிர் கொண்டுதான் ஆக வேண்டும்.

      அடுத்தப்பதிவுக்கு இன்னும் நிறைய எதிர் கருத்துக்கள் வரும்.
      அதற்காக உண்மையை எழுதாமல் பயப்படுவது கோழைத்தனம்.

      என் மீது அக்கறை கொண்டு ஆலோசனை வழங்கியதற்கு
      மிக்க மகிழ்ச்சி.
      நன்றி.

      Delete
    2. நமக்கு இது புதிய தகவல்...இந்த முறண்பாட்டை பதிவில குறிப்பிட்டிருக்கலாம்.

      Delete

  23. <>

    பிரச்சினைகள், எடுத்து வைக்கப்படும் கருத்தாலோ அல்லது விவாத பொருளாலோதான் ஏற்படுகிறது. ஒரு அணியாக செயல்படும்போது , அணியில் உள்ள மற்றவர்களை குறை கூறி செயல்படுதல் ஒற்றுமையை குலைக்கும். மேலும் பெரிய வெற்றிக்கு பின் விரும்ப தகாத நிகழ்வுகள் பற்றி பேசுவது பிரச்சினைக்கே வழிகோலும்.

    அன்று முக்தா பேசியது வழக்கமான பாராட்டு. இவ்வுலகில் ஓர் அணியில் செயல்படும் எல்லோரும் செய்ய கூடியது.
    இன்று இவர் ஆரம்பித்தது கமலுக்கான எதிர்வினை. கமலால் ஆரம்பிக்கப்பட்டது.

    சில உண்மைகள் , தவறுகள் தேவையில்லாத நேரத்தில் வெளிப்படுவது சரியா? இந்த உண்மைகள் எதை தரப்போகின்றன.

    இவர்கள் இப்போது பேசுவது, மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட சங்கடங்கள். இதில் நீங்க நடுநிலைமையை தேடுவதும் , ஒருவருக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பதும் உங்கள் நடுநிலைமையை கேள்விக்குறிக்கு உள்ளாக்கும்.

    நன்றிக்கு நன்றி. :-)

    ReplyDelete
    Replies
    1. this is such a nice and sensible argument.....

      Delete
    2. crying scene in nayagan was made like this,velu never cried in his life,so 1st time velu nayagan crying so it sounds so weird.hats off to the team and for the idea. Dayavan is a Hindi remake of the Tamil movie Nayagan,'Godfather' offer no one can refuse - Times Of India http://articles.timesofindia.indiatimes.com/2010-06-13/mumbai/28277490_1_godfather-raajneeti-feroz-khan

      http://articles.timesofindia.indiatimes.com/2010-06-13/mumbai/28277490_1_godfather-raajneeti-feroz-khan



      Delete
    3. http://articles.timesofindia.indiatimes.com/2010-06-13/mumbai/28277490_1_godfather-raajneeti-feroz-khan pl c this

      Delete
    4. that crying scene how it got made.1st time a man crying in his life.so the idea of crying sounds so weird for a DON who never cried in his life.hats off to the team and idea.

      Delete

Note: Only a member of this blog may post a comment.