நண்பர்களே...
எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா அவர்கள் குருதிப்புனல் படத்தை பற்றியும்,
கமலை பற்றியும் அபத்தமாக பேசிய உரையை காணொளியாக காண நேரிட்டது.
அப்பதிவை இட்டவரே,
செப்டம்பர் 30 அன்று ஒரு மொட்டை மாடியில் நடந்த
‘மாபெரும் பொதுக்கூட்டத்தில்’ சாரு பேசியதை அன்றே ஒரு பதிவு போட்டிருக்கிறார்.
இப்போது மீண்டும் அந்த அபத்தத்தை காணொளியாக போட்டதன்
‘உள் நோக்கம்’ அப்பட்டமாக தெரிகிறது.
சாரு ‘குருதிப்புனல்’ படத்தை,வெளியான காலத்தில் இருந்து எதிர்த்து வருகிறார்.
இப்போதும் குருதிப்புனலை மட்டரகமாக பேசியதைக்கேட்டதும்
‘இந்த மனுஷன் இன்னுமா வளரவில்லை’ என ஆச்சரியப்பட்டேன்.
குருதிப்புனல் பற்றி சாருவின் பொய் பரப்புரையின் ஒரு முள்ளையாவது முறிப்பதே இப்பதிவின் நோக்கம்.
இந்தியத்திரை மேதைகளுள் ஒருவரான கோவிந்த் நிகாலனி உருவாக்கிய ‘துரோக்கால்’ என்ற திரைப்படத்தின் கதையை வாங்கி கமல் திரைக்கதை அமைத்து வெளியிட்ட படம்தான் ‘குருதிப்புனல்’.
இயக்கம் & ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம்.
பாடல்கள் இல்லாமலும், முதன் முதலாக டால்பி ஸ்டீரீயோ [ 4 டிராக்] ஒலியுடனும் தயாரித்து வெளியிட்டார் கமல்.
குருதிப்புனல் நக்சலைட்டுகளை மோசமாக சித்தரித்து உள்ளது என நோட்டிஸ் ஒன்றை தயார் செய்து, தியேட்டர் வாசலில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்தாராம் சாரு.
கமலை திட்டி, அவரது ரசிகர்கள் மத்தியிலேயே கலாட்டா செய்தாராம்.
கமல் ரசிகர்கள் போட்டு சாத்தி விட்டார்களாம்.
அன்று கமல் ரசிகர்கள் கொடுத்த அடிக்கு இன்று வரை கதறிக்கொண்டு இருக்கிறார் போலும்.
சாருவின் அபத்த உரையிலிருந்து ஒரு துளி விஷம்...
\\\ சாரு : குருதிப்புனல் படத்தில் நக்சலைட் ஒருவன் தன் மனைவியின் ஜாக்கெட்டுக்குள் பணத்தை செருகிச்செல்வான்.
இப்படி ஒரு காட்சி \\\
நக்சலைட் இயக்கத்தில் மிக உயர்வான பொறுப்பில் இருப்பவன்,
டூரிங் தியேட்டர் திரைக்குப்பின்னால் தனது காதல் மனைவியை சந்தித்து பேச வருவான்.
அவன் மிக அழகாக இருப்பான்.
அவன் காதல் மனைவி தோற்றத்தில் மிகச்சாதரணமாக இருப்பாள்.
ஆனால் நக்சலைட் போராளிக்கு, அவள் ஐஸ்வர்யா ராய் போல் தோற்றமளிப்பதாக அந்த காரெக்டை மிக உயர்வாக சித்தரித்து இருந்தார் கமல்.
அரசியல்,இலக்கியம், வாழ்க்கை என எல்லாவற்றிலுமே
வெளித்தோற்றத்தில் மயங்காமல் ‘உள் அழகை’தரிசிப்பவர்கள்,
‘நக்சலைட் போராளிகள்’ என்ற உண்மையை பறை சாற்றவே
அக்காட்சியும், அந்த காரெக்டரும் படைக்கப்பட்டிருக்கிறது.
அவள் கொண்டு வந்த மீன் குழம்பை,
போராளி ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு ஒன்றே போதும்.
அவள் வெக்கப்பட்டு சிரிக்கும் போது, அப்படியே குழைவான் போராளி.
கவுதமியிடம் கமல் குழையும் காட்சி ஒன்று வரும்.
எனக்கு அந்தக்காட்சி சரியாக நினைவில் இல்லை.
காரணம், போராளியின் காதல் காட்சியையே எனது மூளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.
எனவே, நக்சலைட் போராளியின் காதல் காட்சி ‘ஷாட் பை ஷாட்’
இன்றும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது.
காதலும் காமமும் கலந்து கவிதையாக ஜொலித்தக்காட்சியை எப்படி மறக்க முடியும் ?
ஹலோ மிஸ்டர் சாரு,
முதலில் பெண்களின் ஜாக்கெட்டை விட்டு வெளியே வாருங்கள்.
குருதிப்புனலில், இந்து போலிஸ் ஆபிசரை விட உயர்வாக
இஸ்லாமிய போலிஸ் ஆபிசர் படைக்கப்பட்டிருப்பது கண்ணுக்கு தெரியும்.
இஸ்லாமியச்சிறுமியின் கற்பு பறி போவதை தடுக்க, ஒரு இந்துப்பெண் தனது கற்பை பறி கொடுக்க முன் வரும் தியாகம் புரியும்.
குருதிப்புனல் படம் நக்சலைட்டை தவறாக சித்தரிக்கிறது என்ற
பொய் பிரச்சாரத்தை கேள்விப்பட்டு கமல் அப்போது மிகவும் வருத்தமுற்றார்.
“ எனது பேனாவில் ஒரு துளி மை கூட அவர்களை தவறாக சித்தரிக்கவில்லை.
மாறாக படத்தில் எனது காரெக்டர்தான் 'சோரம்' போவதாக சித்தரித்திருக்கிறேன்.
கடமையில் தவறாத கண்ணியவான்களாக நாசர், அர்ஜூன் காரெக்டர்களை
படைத்துள்ளேன்” என குறிப்பிட்டார் கமல்.
திரு. சாரு அவர்களே...
நீங்கள் பெண் அவயங்களை பச்சையாகக்குறிப்பிட்டு ‘சரோஜா தேவி’ படைப்புகளை உங்கள் பக்தர்களுக்கு படையுங்கள்.
உங்களுக்கு தெரியாத சினிமா பற்றி பேசவோ எழுதவோ செய்யாதீர்கள்.
ஏற்கெனவே பல விவகாரங்களில் உடைந்த மூக்கு கொஞ்சமாவது மிஞ்சட்டும்.
நண்பர்களே...
சித்தாந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட குருதிப்புனலுக்கும் நிறைய படித்து
ஆய்வு செய்துதான் எழுத முடியும்.
நீங்கள் ஊக்கமளித்தால் எழுதுகிறேன்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.