Sep 21, 2012

A Touch Of Spice - 2003 \ Greece & Turkey \ ‘ மசாலா ’ உலகசினிமா.\ பாகம் = 01

நண்பர்களே...
 ‘மசாலா’ தலைப்பிட்டு...
இங்கே உங்களை வரவழைத்ததற்கு காரணம் இருக்கிறது.
பதிவை படித்த பின்னும்...படம் பார்த்த பின்னும்...
இதை விட...
பொருத்தமான தலைப்பிருக்க முடியாது என ஒத்துக்கொள்வீர்கள்.

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில்,
இடம் பெற்ற காவியங்களில்...
ஜூலை 12ம் தேதி திரையிடப்பட்ட
இக்காவியம்...பலத்த கரகோஷம் பெற்றது.



ஹேராமைப்போலவே,
இப்படத்தின் இயக்குனர் Tassos Boulmetis...நம்மை வரலாற்றின் பக்கம் அழைத்து செல்கிறார்.


இப்படத்தை பார்ப்பதற்கு முன்  ‘இஸ்தான்புல்’ நகரத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வது நல்லது.

இஸ்தான்புல் வரலாற்றை தெரிந்து கொள்ள கிளிக்கவும்.

இது போன்ற உலகசினிமாக்கள் மூலமாகத்தான்...
கொஞ்சமாவது சரித்திரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.
இல்லையென்றால் சரித்திரம் தெரியாத தரித்திரனாகவே இருந்திருப்பேன்.

இப்போது துருக்கியின்  ‘அரசியல் சரித்திர கேக்கிலிருந்து’ சிறு துண்டு இதோ...

By 18 September 1922, the occupying armies were expelled, and the new Turkish state was established. On 1 November, the newly founded parliament formally abolished the Sultanate, thus ending 623 years of Ottoman rule. The Treaty of Lausanne of 24 July 1923, led to the international recognition of the sovereignty of the newly formed "Republic of Turkey" as thesuccessor state of the Ottoman Empire, and the republic was officially proclaimed on 29 October 1923, in the new capital of Ankara.[11] The Lausanne treaty stipulated a population exchange between Greece and Turkey, whereby 1.1 million Greeks left Turkey for Greece in exchange for 380,000 Muslims transferred from Greece to Turkey.[39]

யோவ்...  ‘உ.சி.ர’ ! ...
[ என் பதிவுலக நண்பர்கள் வைத்த...எனக்கும் பிடித்த... செல்லப்பெயர் ]
ஏய்யா! உசிரை வாங்குற...
இந்த வரலாறு தெரியலன்னா...விளங்காதா ? என கோபிக்க உங்களுக்கு  ‘உரிமை’ இருக்கிறது.
விளக்கமளிக்க எனக்கு  ‘கடமை’ இருக்கிறது.

ஒருவர், “ இந்தாங்க திருப்பதி லட்டு ” எனத்தருகிறார்.
 ‘திருப்பதி’ எந்த திசை ? என அறியாதவராயிருந்தாலும்...
 ‘திருப்பதி லட்டு’ சுவையில் உங்களை வீழ்த்தி விடும்.
நீங்கள் திருப்பதி சென்றவராயிருந்தால்...
அந்த லட்டின் மகிமை,கிடைத்தலருமை,புனிதம் எல்லாம் உங்கள் சிந்தனையில் ஓடி..
கைகள் தானாக... பிரசாதம் வாங்க...பவ்யமாக... நீளும்.

வரலாறு படித்தவர்களும், ‘கட்டடித்தவர்களும்’ வாருங்கள்...
படத்திற்குள் செல்வோம்.

இப்படத்தின் முதல் ஷாட்,
இன்று முதல்...
உங்கள் சிந்தையில் பத்திரமாக இருக்கப்போகிறது.

அழகிய மார்பகங்கள்...
குளோசப்பில் பளீரென...பிரம்மாண்டமாக தெரிகிறது.
இக்காட்சியின் தீடீர் தாக்குதல்...
சிந்தையில்,  ‘உணர்ச்சிகள்’ கொப்பளிப்பதற்குள்...
ஒரு குழந்தை ‘திரை வலதில்’ காட்சிப்படுத்தப்படுகிறது.
முதல் ஷாட்டின் சில பிரேம்களிலேயே...
நம்மை காமுகனாக்கி...
அடுத்த சில நொடிகளில்,
நம்மை குழந்தையாக்கி...
‘மேஜிக்’ செய்திருக்கிறார் இயக்குனர்.

குழந்தை, பால் குடிக்க மறுக்கிறது.
தாயின் கரங்கள்...கொஞ்சம் சர்க்கரையை மார்பின் மேல் தூவுகிறது.
உடனே குழந்தை மார்புக்காம்பை கவ்வி பலமாக உறிஞ்சத்துவங்குகிறது.
 'A Touch Of Spice' என்ற தலைப்பு திரையில் ஒளிர்கிறது.


படத்தின் முதல் காட்சியிலேயே... தலைப்பின் மகிமையை உணர முடிகிறது.

இலக்கியம் [திரை இலக்கியம் & நூல் இலக்கியம்]
கலவி [ஹேராமில்...சாகேத்ராம் & அபர்னா சங்கமிப்பது.]
கவிதை
தாய்மை
இவை அனைத்துமே நம்மை மயங்கச்செய்வதில்...
சம வலிமை படைத்தவை.

பல்கேரிய கம்யூனிஸ்ட் அறிக்கையில் உள்ள சில வாசகங்கள்...
 ' Motherhood is a Noble Function...
Because We All Have Mothers'...
தாய்மையின் பெருமையை உணர்த்துகிறது.

தாய்மைக்கு முதலிடம்...
குழந்தையின் தனித்தன்மை...
ஒரு சேர உணர முடிகிறது.

ஒரே ஒரு காட்சியை வைத்து...ஒரு பதிவை ஓட்டி விட்டான்...
என சிலர் நினைக்கக்கூடும்.

எழுத்துலக மாமேதை சுஜாதாவிடம்....
‘அணுகுண்டு செய்வது எப்படி?’ என அரைப்பக்கத்திற்குள் எழுதி தரச்சொன்னார் ஒரு பத்திரிக்கைக்காரர்.
சுருங்கச்சொல்லி விளங்கச்செய்வதில் மேதையான சுஜாதாவே... அதிர்ச்சியில் உறைந்து போனார்.

இந்தப்படத்திற்கும்...பல பதிவுகள் தேவைப்படுகிறது.

இதற்கான நியாயத்தன்மை காண...காணொளி காண்க...



  

11 comments:

  1. Its my delight that you have started a series on this movie, I have watched this 5 years back - still i would love to see your view of the same. I am sure I would get to see and learn something new.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இப்படத்தை ஏற்கெனவே பார்த்திருப்பது மகிழ்ச்சியே.
      எனது பதிவின் மூலம்...சில புதிய கருத்துக்களை சொல்ல உழைப்பேன்.

      Delete
  2. have you given a break to 'HEY RAM'?

    ReplyDelete
    Replies
    1. இந்த மினி தொடர் முடிந்ததும்...ஹேராம் நெடும் தொடர் தொடரும்.

      Delete
  3. #இது போன்ற உலகசினிமாக்கள் மூலமாகத்தான்...
    கொஞ்சமாவது சரித்திரத்தை தெரிந்து கொள்ள முடிகிறது.#

    factu factu factu

    ReplyDelete
    Replies
    1. டாண்...டாண்...டாண்னு கருத்திசைவு தெரிவித்தமைக்கு நன்றி.

      Delete
  4. இந்த படத்திற்காக முன்னுரையே அட்டகாசமா இருக்கு..
    நிச்சயம் நல்ல படம் என்பது உறுதி..
    டவுன்லோட் போட வேண்டியது தான்

    ReplyDelete
    Replies
    1. உடனே,படத்தையும் பார்த்து விட்டு கருத்துரைக்கவும்.

      Delete
  5. அண்ணே ஒரு சோக காமெடி ஆயிடுச்சி.

    இந்த படத்தை டவுன்லோட் செய்யலாம்னு போய் search ல "A Touch of Spice" னு டைப்பறதுக்கு பதில் அவசரத்துல "Touch of Spice" னு மட்டும் டைப்பி, டவுன்லோட் போட்டுட்டேன். முழுசா டவுன்லோட் ஆன பின்னாடி பார்த்தா...... அந்த கொடுமைய எங்க போய் சொல்லுவேன். நான் "A" போடாம விட்டதால, அது 'வேற' A படமா டவுன்லோட் ஆகி இருந்தது, அதுவும் அட்டகாசமான தரத்துல.

    ReplyDelete
    Replies
    1. அடடா...அது கில்மா ‘மசாலா’வாச்சே.

      Delete
  6. BARFI HINDI FILM ALSO A WORLD CLASS FILM I EXPECT BARFI REVIEW FROM U

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.