Jul 30, 2012

Hey Ram- சுஜாதா,கமல்,மகேந்திரன்... முட்டாள்களா? \ 2000 \ ஹேராம் =016


போன ஹேராம் பதிவு மிகவும் சூடாகி விட்டது.
அதை பற்றி கிளைமாக்சில் பார்ப்போம்.

 ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’
கவியரசரின் தெய்வ வாக்கு மீண்டும்...மீண்டும் என் வாழ்வில் தொடர்கிறது.
அவரது அடுத்த வரி...என்னை எப்போதுமே வெளியே கொண்டு போய் விட்டு விடும்.


ஹேராம் பதிவின் மிக முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்.
இந்தக்காட்சியை நடந்து முடிந்த...
‘சரித்திரத்தின் ஆவணமாக’ எடுத்து கொள்ள வேண்டும்.

உணர்வுகளுக்கு தீனி போடும் களமாக ஆக்கி விடக்கூடாது என்பதை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால்...
Hey Ram Is An Experiment With Truth By Kamal Haasan

இப்பதிவின் தொடக்கமாக... வேறொருவரின்... பதிவின் தொகுப்பை...
முதலில் பார்ப்போம்.
*********************************************************************************
” ஹேராமைப் போன்றதொரு கதைக்களத்தில் பெரும்பணத்தைக் கொட்டி, போட்ட பணம் வருமா, வராதா என்று அஞ்சாமல், தனக்கு சோறு போடும் தமிழ் சினிமாவுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட கமலின் எண்ணம், ஏனைய கலைஞர்களுக்குப் பாடம்.


1947ல் கொல்கத்தாவில் நடந்த இந்து, முஸ்லிம் கலவரத்தைப் படமாக்கியிருந்த விதம், சினிமாவுக்கும் சரி, கமல் சொல்ல வந்த கருத்துக்கும் சரி, நல்ல தீனி. 


கடந்த காலக் கொல்கத்தாவைக் காட்ட அமைத்த பிரம்மாண்ட அரங்குகளைக் கலவரத்தின் போது எரித்ததாகக் காட்டப்பட்ட காட்சிகளில், அவற்றைக் கொளுத்தும்போது, தமிழ் ரசிகர்களின் ரசனையை நம்பி காசைப் போட்டு எரித்து, அந்தத் தீயிலேயே கையைச் சுட்டுக்கொண்டாரே என்றுதான் எனக்குத் தோன்றும்.


ஹேராம் ஒரு இந்து மதச்சார்புப் படம் என்று வாதிடுபர்கள், கலவரக் காட்சிகளில் இந்துக்களும், சீக்கியர்களும், முஸ்லிம்களுக்குச் செய்த கொடுமைகளைக் காட்டப்பட்ட காட்சிகளில்தான் குரூரம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 


ஒரு சீக்கிய முதியவர், 5 அல்லது 6 வயதே நிரம்பிய ஒரு இஸ்லாமியச் சிறுவனைத் தீயில் போடுவார். 
அதேபோல, ஒரு இந்துச் சிறுவன், ஒரு இஸ்லாமிய முதியவரைக் குத்திக் கொல்வான்.


என்னதான் கதைக்காக, படத்தின் நாயகனாக வரும் இந்துவின் மனைவி, இஸ்லாமியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுக், கொலை செய்யப்பட்டதாகக் காட்ட வேண்டியிருந்தாலும், அதை ஈடுசெய்ய, கலவரத்தின் போது இந்துக்கள் செய்த கொடுமையையும் காட்டியது கதையின் நடுநிலைமைக்கு, ஒரு சோறு பதம்”.


முழுப்பதிவையும் படிக்க இங்கே செல்லவும்

வேறொரு தளத்தில் எழுதப்பட்ட இக்கருத்தை தனது பதிவில் வெளியிட்டவர்

திரு.அலி என்ற இஸ்லாமிய சகோதரர்.
பத்திரிக்கையாளர்.
இப்பதிவுதான் கமலுக்கு கிடைத்த ஆஸ்கார்.
**********************************************************************************

 வெள்ளைக்காரன் புத்தியை புரிந்து கொண்டு... எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில்  சாகேத் ராம் வீட்டுக்கு திரும்புகிறான்.
கூர்க்கா செத்து கிடப்பது வன்முறை வீட்டுக்குள் வந்து விட்டதை ராமோடு நாமும் புரிந்து கொள்கிறோம்.
சூழ்நிலையை இன்னும் சரியாக கணிக்க தவறியதால்...வெகு எளிதாக அடிக்கப்பட்டு வீழ்கிறான்.
 பியானோவில் கட்டி வைக்கப்படுகிறான்.

பியானோ ‘தீமட்டிக் எக்ஸிஸ்டெண்ட்டாக’ ஹேராம் படத்தில் தொடர்ந்து காட்டப்படுகிறது. 
‘படிப்பவன்’ என்றால் பிரேமில் புத்தகங்கள் இருக்கும்.
 ‘குடிப்பவன்’என்றால் டாஸ்மாக் சரக்கிருக்கும்.
ராம் ‘ இசைப்பவன்’ என்பதை காட்ட  பியானோ இருக்கிறது.
பியானோ, அம்ஜத்-ராம் நட்பின் சின்னமாக  ‘ராமரானாலும்,பாபரானாலும்’ பாடலில் காட்டப்பட்டது.
 மீண்டும் பியானோ,ராம்-அபர்னா காதலின் சின்னமாக இருவரும் இணைந்து வாசித்த கவிதை காட்சியில் பங்கு பெற்றது.

 வன்முறையாளர்கள், கண்களுக்கு பியானோவாக தெரியாது.... மரத்தாலான  மேஜையாகத்தான் தெரியும்.
ராம்-அபர்னா காதல் வாழ்க்கையை கட்டமைத்த பியானோவில்...  ராம் கட்டப்பட்டிருப்பது முரண்.

 அல்தாப் வாயில்  ‘கத்தியை’ கவ்விக்கொண்டு பால்கனி வழியாக போகிறான். 

‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேசனாக’ அபர்னாவின் அலறலும்....
 ‘இண்டர்னல் கம்போசிஷேனாக’ ராமின் கதறலை வடிவமைத்துள்ளார்  ‘இயக்குனர் கமல்’ .

இதையே  ‘இண்டர்னல் கம்போசிஷேனில்’ அபர்னா கற்பழிக்கப்படுவதையும்...  ‘எக்ஸ்டர்னல் கம்போசிஷேனில்’ கமல் கதறுவதையும்... காட்டத்தெரியாதா  ‘இயக்குனர் கமலுக்கு’?

வன்முறையை வலிந்து காட்டி காசு பார்க்கும் ஈனப்பிறவி அல்ல கமல்.

அவருக்குள்ள சமூக அக்கறைக்கு...பொறுப்பு உணர்ச்சிக்கு இந்த ஒரு  ‘ஷாட் கம்போசிஷேசன்’ போதும்.  

தனது நீண்ட நாள் ஆசையை தணித்து கொண்ட அல்தாப்...
இப்போது மற்றவர்களை வரவேற்கிறான்.

 ‘இவன் எனக்குப்போதும்’என்று ஒருவன் மட்டும் ராமோடு இருக்க மற்றவர்கள் அபர்னாவை சீரழிக்க செல்கிறார்கள்.

ராமோடு இருக்க ஆசைப்பட்டவன் ‘ஹோமோசெக்ஸ்’விரும்பி.

அவன் ராமை தடவுவதை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும்.  இக்காட்சியில் நடித்த நடிகர் பெயர் சத்யஜித்.
 ‘பதினாறு வயதினிலே’ படத்தில் டாக்டராக நடித்தவர். *********************************************************************************

இவரை, நான் தயாரித்து இயக்கிய  ‘ஆர்.எஸ்.தென்னமரக்குடி எண்ணெய்’ விளம்பர படத்தில் மாடலாக்கினேன்.
அப்போது ஹேராம் வெளியான நேரம். அந்த அனுபவத்தை இடைவேளையின் போது பகிர்ந்து கொண்டார்.

அவரிடம்  கமல்.... ‘ஹோமோ’காரெக்டர் பற்றி  சொல்லவேயில்லை..
அக்காரெக்டர் தன்மையை... சப்-டெக்ஸ்டாக காட்ட விரும்பியிருக்கிறார்
 ‘இயக்குனர்’ கமல்.
எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகவும் நேசிக்கும் இஸ்லாமிய சகோதரர்களை மிக மோசமாக காட்ட விரும்பவில்லை.

இப்பதிவை படிக்கும் வரை சத்யஜித்துக்கு...தனது காரெக்டர் பற்றி தெரியப்போவதில்லை.

இக்காட்சியின் இறுதி கட்டமாக... மாடியிலிருந்து சத்யஜித் கீழே விழும் காட்சி பற்றி குறிப்பிடும் போது...
 “நான் நடிக்கப்பயப்பட்டேன்.
தைரியமா வாங்க...
நான் விழுந்து காண்பிக்கிறேன்.
அதை வந்து...முதல்ல  பாருங்க....என்று பால்கனியின் விளிம்புக்கு அழைத்துப்போய்....
தள்ளி விட்டு விட்டு போய் விட்டார்...பாவி மனுஷன் ”.
என்றார் சத்யஜித். 

**********************************************************************************

பல நேரங்களில் நடிகர்களை இப்படி ஏமாற்றித்தான் படமெடுக்க முடியும்.

நான் ஒரே ஒரு டயலாக்கை ஐம்பது டேக் எடுத்திருக்கிறேன்.
அந்த கஷ்டமான....நீளமான.... டயலாக்.... ‘வாவ்’
 அந்த  ‘பெரிய டயலாக்’ மாடலுக்கு எக்ஸ்பிரஸிவாக வரவேயில்லை.

கேமிராவை ஒட விட்டு... காமிரா பீல்டுக்கு வெளியே நின்று கொண்டு... காட்சிக்குறிய  ‘எம்மோட்டிவ்னஸ்ஸை’ கொண்டு வர ...
 கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.
இப்போது கேமராவுக்கு வெளியே நின்று கொண்டு...
 நான் நடித்து கொண்டிருந்தேன்.
  “ அட நாயே...இந்த சின்ன டயலாக்கை... பேசத்தெரியாம... என்ன மயித்துக்கு... மாடல்னு வந்து... உயிரை வாங்குற” என்ற டயலாக்கை எனக்குள் பேசிக்கொண்டு...
 என் கோபத்தை ஒரு சதவீதம் கூட முகத்தில் காட்டாமல்....
“இதை பாரும்மா...ஐம்பது டேக்குமே... ஒ.கே டேக்குதான்...
ஆனா உங்கிட்ட இன்னும் பெட்டர்  ‘வாவ் ’ஒண்னு இருக்கு...
 எனக்கு அது வேணும்...”
இப்படி கால் மணிநேரம் கூசாம புளுகி தள்ளினேன்.
 இறுதியாக...
 “ உனக்கு எந்த ரெஸ்ட்டாரண்ட் பிடிக்கும்”
 “பார்க் ஷெரடன் தக்‌ஷின்”

 “ஆக்டர்ல யாரை பிடிக்கும்”
“ஷாருக்னா உயிரு”

 “உனக்கு பக்கத்து டேபிள்ள ஷாருக் வந்து உக்காந்தா உனக்கு எப்படி இருக்கும்?”
“வாவ்”
கட்...
டேக்... ஒ.கே.

இப்படி அனுபவப்பட்ட ஹிட்ச்ஹாக்,. “ நடிகர்கள் அனிமல்ஸ்”
என்று சொன்னார்.
இப்படி பட்டவர்த்தனமாக உண்மையை போட்டு உடைத்ததுக்கு வாங்கி கட்டிக்கொண்டது தனிக்கதை.

நடிப்பை பற்றி...சில வார்த்தைகள்....
நாடகத்தில்....நடிப்பை இரண்டு வகைகளாக பிரித்தார்கள்.
ஒன்று...மெத்தட் ஆக்டிங்.
இரண்டு....நேச்சுரல் ஆக்டிங்....
இவ்விரண்டையும் தனக்கே உரிய வகையில் உள்ளடக்கி
‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ உருவாக்கியது சினிமா.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்’ஷாட்டின் கால அளவுக்குள் அடங்க வேண்டும்.
இது சினிமா மீடியத்தின் நிர்ப்பந்தம்.
 ‘ஸ்கீரின் ஆக்டிங்கை’ நடிகர் மட்டும் தீர்மானிக்க முடியாது.
நடிகர்,இயக்குனர்,ஒளிப்பதிவாளர்,எடிட்டர்...ஏன் கலை இயக்குனர் கூட சேர்ந்து  உருவாக்குவதுதான்  ‘ஸ்கீரின் ஆக்டிங் ’
ஆனால், ரசிகர்கள் கை தட்டல்... கிடைப்பது நடிகனுக்கு மட்டுமே.

 ‘ஹ்யூமன் எமோஷன்சை’ எட்டு வகைகளாக மேற்கத்திய தத்துவம் பிரிக்கிறது.
நம் இந்தியாவில் ஒரு படி மேலே போய் ஒன்பது வகைகளாக பிரித்தார்கள்.   அதை ‘நவரசம்’என ஒரே பெயரில் அடக்கினார்கள்.

‘நவரசத்திலும்’ கொடி கட்டி பறந்தது உலகிலேயே இரண்டே பேர்தான்.
ஒன்று...நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
இரண்டு...கமல்ஹாசன்.

அல்பசினோவாக இருக்கட்டும்...
மார்லன் பிராண்டோவாக இருக்கட்டும்...
உலகின் ஜாம்பவான்கள் அனைவருமே ஒரு சில வகை நடிப்பில் மட்டுமே கொடி கட்டி ஜெயித்தவர்கள்.
ஒனபதிலும் ஜெயித்தவர்கள் சிவாஜி,கமல் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட நான்கு நடிகர்களின் மாஸ்டர்பீஸ் படங்கள் அனைத்தையும் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.

நடிப்பை பற்றி ஒரு தொடர் எழுத இருக்கிறேன்.
அப்போது கிளிப்பிள்ளைக்கு சொல்லித்தருவது போல் அனைத்தையும் சொல்லித்தருகிறேன்.
காத்திருக்கவும்.
அது வரை அல்பசினோ மாதிரி நடிக்க வருமா என்று உங்கள் வட்டத்தில் ஜல்லி அடித்து கொண்டிருங்கள்.

நாடக நடிப்பை விட சினிமா நடிப்பு மிகக்கடினமானது.
சினிமாவில் ஷாட் பை ஷாட்டாக எடுக்கப்படுவதால்
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ தேவைப்படும்.
உதாரணமாக...ஹேராம் முந்தைய பதிவின் ஒன்றில் குறிப்பிட்டதை எடுத்துக்கொள்வோம்..


ராணி முகர்ஜி :  “கராச்சியில என்ன சாப்டீங்க”

அந்த ‘கிக்’ குரலில்  ‘டயலாக் டெலிவரி’, பேஸ் ரியாக்‌ஷன், பாடி லாங்குவேஜ் அனைத்திலும் சரஸக்கலையின் உச்சத்தை தொட்டிருப்பார் ராணி முகர்ஜி.

கமல் உடலுறவு முடிந்த களைப்பு...திருப்தி...அனைத்தையும் தனது
 ‘பேஸ் ரியாக்‌ஷன்’...மற்றும் ‘பாடி லாங்குவேஜில்’ கொண்டு வந்து
பக்கத்தில் படுத்திருப்பார்.
இது ஒரு ஷாட்.

[இப்பட ஷூட்டிங் நாட்களில் இருவருமே  ‘வாழ்ந்திருக்கிறார்கள்’.
இந்த விஷயத்தில் நம்ப ஆள்  ‘கிண்டன்’]

இதற்கு கவுண்டர் ஷாட்...


கமல் :  “அப்ப இண்ணைக்கு ராத்திரி பால்கனியில படுத்துக்கலாம் ”

என்று வழிவார் பாருங்கள்....
சான்ஸே கிடையாது...அப்படி ஒரு நடிப்பு...

இந்த இரண்டு ஷாட் எடுப்பதற்க்கு நடுவில் இடைவெளியில் பல மணி நேரம் தேவைப்பட்டிருக்கும்.
இயக்குனர் கமலும்,ஒளிப்பதிவாளர் திருவும் மட்டுமே அறிந்த உண்மை.
பல மணிநேர இடைவெளியில் நடிகர் கமலும், ராணி முகர்ஜியும்  ‘நடிப்பை’ விட்டு வெளியில் வந்து...
மீண்டும் அடுத்த ஷாட்டில்... ‘ நடிப்பிற்குள்’ வந்து...
‘எம்மோட்டிவ் கண்டினியுட்டி’ மெய்ன்டெய்ன்ட் பண்ணத்தெரிந்தால் மட்டுமே அடுத்த ஷாட்டில் நடிக்க முடியும்.  

இது போன்ற அவஸ்தைகள் பற்றி...
கொஞ்சம் கூட தெரியாத காரிகன் வகையறாக்கள்...  கமல்,சுஜாதா,மகேந்திரன்னு...
ஆரம்பிச்சு தமிழ் சினிமா ஜாம்பவான்கள் அனைவரையும் முட்டாள்கள் என தீர்ப்பெழுத முடிகிறது.
முழு விபரம் அறிய எனது முந்தைய பதிவின் பின்னூட்ட யுத்தத்தை காண்க...    

*********************************************************************************

இந்தப்பதிவில் நாம் யாரும் காரிகன் வகையறாக்களை காயப்படுத்தி பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

 நானும் காரிகனும் நடத்திய யுத்தம்...
‘ கிளேடியேடர் ஸ்டைல்’
 இருவரில் ஒருவர் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்.

நான் காமெடி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து கொண்டு... தப்பித்து போய் ஆடியன்ஸோடு உட்கார்ந்து கொண்டேன்.
ஆடியன்சாக வந்த கிஷோகரையும் அவன் பகைத்தது... வெற்றி சுலபமாகியது. அதற்கு பிறகு தர்ம அடிதான்.

 ஆனால் இந்த யுத்தம்...எனக்கு பிடிக்கவில்லை.
என்னுடைய கிரியேட்டிவ் எனர்ஜி போய்... முழுக்க நெகட்டிவ் எனர்ஜி இயங்கியது.

இனி இது போன்ற பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை.

 பின்னூட்ட யுத்தம் காண... கிளிக்கவும். 

**********************************************************************************  

ஆனால் நேர்மையான கருத்து மோதலை வரவேற்கிறேன்.

நான் கருந்தேள் பதிவில்  ‘சைனாவை கட்டமைத்த மாமேதை’ மாவோவை... பற்றி அவரிடம் வாதிட்டேன்.
 எனக்கு ஆதரவாக கணேசன் வந்தார்.
கருந்தேளும் பெருந்தன்மையாக ஒத்து கொண்டார்.

 ஒரு வாதம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு இருவருமே உதாரணமாக நடந்து கொண்டோம்.
எங்களது கருத்து மோதல்கள் எங்கள் நட்பை மேலும் வளப்படுத்துகிறது.


அவர் சமீபத்தில் எனது கடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
நிறைய பேசினோம்...
நிறைய சிரித்தோம்.
இப்படி பேசி சிரிக்க... இன்னும் மோதுவோம்.

அந்த ஆரோக்கிய மோதல் இருவருக்கும் நல்லது.

ஹேராம் படத்தின் காட்சியை காணொளியில் காண்க...

மீண்டும் ஹேராமை...அடுத்த பதிவில்... விரிவாக காண்போம். இப்பதிவில்  குறைகள் இருப்பின்  மன்னிக்க.

Jul 25, 2012

Hey Ram- எழுத்தாளர் சுஜாதாவின் பார்வையில் ஹேராம்... \ 2000 \ ஹேராம் =015

ஐரோப்பிய திரைப்பட திருவிழா படங்களுக்கான பதிவுகளின் மத்தியில், ஹேராம் பதிவு தொடரும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கமினோ படத்தை, திரும்ப... திரும்ப பார்த்ததில்,
கமினோவுக்கு சிகிச்சையளிக்கும் நர்ஸ்கள்,
“ என்ன அண்ணா...இன்னிக்கு லேட்டு ” என விசாரிக்கும் அளவுக்கு நெருங்கி விட்டார்கள்.
கமினோவும், அவளது தந்தையும் ஏற்படுத்திய துக்கத்திலிருந்து தப்பிக்க ஹேராமுக்குள் புகுந்து கொண்டேன்.

ஹேராம் பற்றி,  ‘என் ஆசான் சுஜாதா’ சிலாகித்து எழுதியவைகளில் சிலவற்றை உங்களிடம் பகிர்வது...
கரும்பு தின்ன கூலியும் கொடுக்கும் விஷயம்.
 “ ஹேராம் இந்திப்படமோ தமிழ் படமோ மட்டும் அல்ல;
ஒர் இந்தியப்படம்.
அது உண்மைச்சம்பவத்தின் நிழலில் அமைக்கப்பட்ட ஒரு கற்பனைக்கதை.
‘டாமினிக் லாபியர்’ எழுதிய  ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்கிற புத்தகத்தில் மகாத்மா காந்தியை கொல்ல சதி செய்தவர்களில் மற்றொரு குழுவும் இருந்தது என்று போகிற போக்கில் குறிப்பிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் கமல் ஒரு சுவாரஸ்யமான கதை பின்னியிருக்கிறார்.
மொகஞ்சோதரா,கராச்சி,கல்கத்தா,சென்னை-தமிழ்நாடு,கோலாப்பூர்,டில்லி என்று நாடெங்கும் உலவும் கதை.
சாகேதராமன் என்கிற தென்னிந்திய பிராமண கதாநாயகன் கல்கத்தாவில் தன் பெங்காலி புதுமனைவியுடன் வாழத்துவங்கும் சமயத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் வந்து மனைவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுவதை கண் முன்னே பார்க்கிறான்.
ஒரு கணத்தில் வாழ்வில் அத்தனை எதிர்பார்ப்புகளையும் சந்தோஷங்களையும் இழந்தவனுக்கு மெல்ல மெல்ல அவன் மனைவி இறந்ததற்கு காரணம் மகாத்மா காந்திதான் என்பது மனதில் பதிவாகிறது அல்லது பதிய வைக்கப்படுகிறது.

உண்மை சம்பவத்தின் சாயலில் ஒரு கற்பனைக்கதையை பின்னுவதில் சங்கடங்களும் சந்தோஷங்களும் உள்ளன.
ஜே.எப்.கே,டே ஆப் த ஜேக்கல் [ J.F.K , Day Of The Jackal ]போன்ற படங்களுடன் இதை ஒப்பிட முடிகிறது.
சங்கடங்கள்,இவை-
உண்மை சம்பவங்களை அதிகம் திரிக்க முடியாது.
முக்கியமான சம்பவ மைல் கற்கள் அசைக்க முடியாதவை என்பது உலகமே அறியும்.
சாகேத்ராமன் கொன்றான் என்று சொல்ல முடியாது.
ஆனால் காந்தியை கொல்ல முயற்சித்தவன் சாகேத்ராமன் என்கிற அளவுக்கு உண்மையுடன் விளையாடலாம்.
உண்மைச்சம்பவத்தை படம் பண்ணுவதில் சந்தோஷங்களும் உண்டு.
படமா... நிஜமா... என்கிற பிரமிப்பை ஏற்படுத்தலாம்.
இந்தப்படத்தில் பல கட்டங்களில் இந்தப்பிரமிப்பு ஏற்படுகிறது.

உண்மையான இந்தியப்படம் இது.
கமல் மசாலா படங்களிலோ,  ‘கால் கிராம்’ கதையம்சம் கொண்ட படங்களிலோ நடிப்பதை இனி நிறுத்தி விடுவார் என்று சொல்ல முடியாது.
அந்தப்படங்களில் அவ்வப்போது நடித்தால்தான் இந்த படங்களையும் எடுக்க முடியும்.
என்னை கேட்டபோது,
 ‘இரண்டு வகை படங்கள்’ பண்ணுவதில் தயக்கம் இருக்க கூடாது.
அவருடைய அபார திறமை இரண்டு ஜாதிக்கும் பயன்படும் என்று சொன்னேன்.
‘ஹேராம்’ கமல் என்கிற மிகச்சிறந்த கலைஞனின் நடிப்புப்பயணத்தில் அடுத்த கட்டம்.
இந்திய சினிமாவில் கதை சொல்லும் பாணியிலும்,
இந்த தேசத்தின் பலதரப்பட்ட கலாச்சாரங்களை உள் வாங்கியதாகவும்... எடுக்கப்பட்டு,
சில படங்கள்தான்... வந்திருக்கின்றன ”.

நன்றி..
நூல் : ‘என்றும் சுஜாதா’
தேர்வும் தொகுப்பும் : எஸ்.ராமகிருஷ்ணன்.
உயிர்மை பதிப்பக வெளியிடு.

சூழ்நிலைகளை கவனிக்க தவறிய சாகேத்ராமன்,
மனைவியின் எச்சரிக்கையையும் மீறி புறப்பட்டு போய் ...
பூட்டப்பட்ட கடைகள் மட்டுமே இருக்கும் வீதியில்...
மோட்டார் பைக்கில் அலை பாய்ந்து கொண்டிருக்கும் தருணத்தில்...
நாமும் இணைந்து கொள்வோம்.

சீக்கிய இளம்பெண் ஒருத்தியை ஒல்லியான முஸ்லிம் வாலிபன் துரத்தி கொண்டு வருகிறான்.
தடுத்து நிறுத்த முற்பட்ட சாகேத்ராமை  அவமானப்படுத்தி விட்டு மீண்டும் துரத்த ஆரம்பிக்கிறான்.
அதிகமான முஸ்லிம்கள் கூட்டமாக கத்திக்கொண்டு வர,
பைக்கை வேகமாக முடுக்கி ஒல்லி முஸ்லிமை  தள்ளி விட்டு சீக்கியப்பெண்ணை பைக்கில் ஏற்றி தப்பித்து போகிறான் ராம்.
சீக்கியப்பெண்ணை அவளது வீட்டில் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு,
நன்றியை பெற்றுக்கொண்ட ராம்,
“ உங்கள் வீட்டில் டெலிபோன் இருக்கிறதா?” என்கிறான்.

டெலிபோனில் வெள்ளைக்காரன் உரையாடுவது....
         Hello, Saket Ram!
Mr. Hardwick speaking.

Yes, Yes. Of course l remember you!
How is Rick, Mortimer Wheeler?

Yes, but Mr. Ram.
What we can do?
lt is not totally upto
me to get tangled in your affairs.
The Hindus.. They want us
to get out all together.
and the Muslims. they want
us to give the country to them.
And l am helpless.

Look.. Tell you what..

Why don't You phone the
Congress office or perhaps...
you can even speak to
Mahatma Gandhi.
Hello....இந்த டயலாக்கை பேசும் வெள்ளக்காரனுக்கு,
‘இன்டர்னல் கம்போசிஷேசன் ஷாட்’மட்டும் வைத்திருக்கிறார்
 ‘இயக்குனர் கமல்’.
‘எக்ஸ்டர்னல் கம்போசிஷனாக’ வர வேண்டிய  ‘ராமின் குரல் ’ காட்டப்பட வில்லை.

ராம் காரெக்டர் இன்னும் வெள்ளைக்காரனை புரிந்து கொள்ளவில்லை என்பதையும், இக்காட்சி மூலம் புரிந்து கொள்கிறோம்.
சரியாக சொல்லப்போனால்...ராம் வெள்ளைக்காரனுக்கு போன் செய்தது...
“ ஈழத்தமிழர்களை சிங்களவன் கொடுமைப்படுத்துகிறான்...வாங்க ...வந்து காப்பாத்துங்க” ...என்று சோனியா காந்தியிடம் போன் செய்வதற்கு சமம்.

வெள்ளைக்காரன்தான்  ‘பவர் செண்டர்’ என்பதை காட்சிரீதியாக சொல்ல கிடைத்திருக்கும் வாய்ப்பை மிக கச்சிதமாக பயன்படுத்தி உள்ளார்
‘இயக்குனர் கமல்’.
இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்டி விட்ட சூத்திரதாரி வெள்ளையனே என, ஏற்கெனவே காட்டப்பட்ட குறியீடுகளுக்கும்... இந்த காட்சியிலேயே விடை சொல்லி விட்டார் இயக்குனர்.
ராம் என்ன பேசினான்?
எப்படி பேசினான்?
என்பதை வெள்ளைக்காரன் டயலாக்கிலும், உடல் மொழியாலும் உணர்ந்து கொள்கிறோம்.
ராமின் அபயக்குரலை,வெள்ளைக்காரன் அலட்சியப்படுத்துகிறான்.
நக்கலடிக்கிறான்.
கொடூரமான கலவரச்செய்தியை காதில் வாங்கிகொண்டே,
காப்பி குடிக்கும் வெள்ளைக்காரனும்...
ரோம் பற்றியெறியும் போது வயலின் வாசித்த  ‘நீரோ’மன்னனும்..
நேர் கோட்டில் இல்லையா!
‘இயக்குனர்’ கமலின் முத்திரை காட்சிகளுள் ஒன்றாக இதை கருதுகிறேன்.    
**********************************************************************************
க்யுண்டின் டொரண்டினோ,
கமலின் ஆளவந்தானில் [Tamil \  2001] இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சி இன்ஸ்பிரேஷனில்தான்...
கில் பில் [English \ 2003] படத்தில்... அந்த உத்தியை கையாண்டேன் என்ற பத்திரிக்கை செய்தி உண்மையோ பொய்யோ தெரியாது.
வயிறெறிந்து பேதியாகும், அதிஷா வகையறாக்களுக்கு சொல்கிறேன். டொரண்டினோவின் எல்லாப்படங்களையும் விட...
 'இயக்குனர் கமலின் ஹேராம் ஆளுமை' பல..பல மடங்கு மேலே....
என ஆணித்தரமாக இங்கே பதிவு செய்கிறேன்.

Jul 23, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-5 Final Part


கமினோவை ஐந்து பதிவுகளில் முடிப்பது சவாலாகவே இருந்தது.

‘குருவி’ ரசிகர்களுக்கும் புரியும்...எளிதான குறியீடுகளைப்பற்றி விளக்குவதை விலக்கி...
நிறைய காட்சிகளை, கோடார்டு பாணியில்  ‘ஜம்ப் கட்’ எடிட் செய்து...
 முடிக்க முயல்கிறேன்.

கமினோ படத்தை, கவியரசர் கண்ணதாசன் பாடலோடு ஒப்பீடு செய்யும் போது இப்பதிவு புதிய பரிமாணம் பெறுகிறது.
சாந்தி நிலையம் [1969 \ தமிழ்] என்ற  படத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையில் இடம் பெற்ற பாடல் இது.

கடவுள் ஒரு நாள், உலகை காண... தனியே வந்தாராம்.
கண்ணில் கண்ட மனிதரையெல்லாம், நலமா? என்றாராம்.

ஒரு மனிதன், வாழ்வே இனிமை என்றான்.
ஒரு மனிதன், அதுவே கொடுமை என்றான்.
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்.

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது.
காசும்,பணமும், ஆசையும்... இங்கே யார் தந்தது?
எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது.
இன்பம்,துன்பம்...என்னும் எண்ணம் ஏன் வந்தது?

இறைவனுக்கே இது புரியவில்லை.
மனிதனின் கொள்கை தெரியவில்லை.

பள்ளிக்கூடம் செல்லும் வழியில், கடவுள் நின்றாராம்.
பச்சை பிள்ளை, மழலை மொழியில்... தன்னை கண்டாராம்.
உள்ளம் எங்கும், செல்வம் பொங்கும் அன்பை தந்தாராம்.
உண்மை கண்டேன்...போதும் என்று வானம் சென்றாராம்.

பாடலை முழுமையாக கேட்க...
http://oldtamilmp3.blogspot.in/2009/09/shanthi-nilayam-1969.html

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் கொண்ட  ‘சிண்ட்ரெல்லா’ கருத்தாக்கம்... கமினோ படம் நெடுகிலும் இழையோடுவதை காணலாம்.
கண்ணதாசன் பாடலின் தத்துவத்திற்கு, நேர் முரணாக... மதவாதிகள் இயங்குவதையும் காண முடியும்.

கமினோவின் விருப்பமான  ‘வியன்னா’ குழப்பமடைய வைத்தாலும்,
ஏனையவற்றை நிறைவேற்ற எண்ணுகிறார் கமினோவின் தந்தை.
சூப்பர் 8எம்.எம். கேமராவில் கமினோவை படம் பிடிக்கிறார்.
அவள் விரும்பிய  ‘அறிவியல்  புனைவு’கதை நூலை வாங்கி படித்து காட்டுகிறார்.
இக்கதையின் நாயகர்  ‘மிஸ்டர் மீபல்ஸ்’ கமீனோவின் கற்பனை காட்சிகளிலும் இடம் பெறுவார்.
 ‘மீபல்ஸின்’ தோற்றம்  ‘அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின்’ மினியேச்சர் போல் அமைத்திருப்பதும் குறியீடே.
ஐன்ஸ்டைன், “ Imagination is greater than knowledge ” என அறிவியலை கடந்து அழகியலுக்குள் பிரவேசித்தவர்.


கமினோவின் விருப்பமான ‘சிவப்பு வண்ண ஆடையை’ ...
சொந்த ஊரான மாட்ரிட் நகருக்கு போய் வாங்க...காரில் விரைகிறார்.
கடையில் ஷோ கேஸில்...
கமினோவுக்காகவே காத்திருந்த ‘சிவப்பு வண்ண ஆடையை’ வாங்குகிறார்.
சூப்பர் 8 எம்.எம். பிலிம் ரோலை டெவலப்பிற்கு கொடுக்கிறார்.
மகளுக்கு பிடித்தமான கேக் வாங்க...பேக்கரிக்கு செல்கிறார்.
ஜீசஸ்சும் அங்கே இருக்கிறான்.
கமினோவை விசாரிக்கிறான்.
இவர், அவர்களது  ‘சிண்ட்ரெல்லா’ நாடகம் பற்றி விசாரிக்கிறார்.
கேக் வாங்கி,விடை பெறுகிறார்.
“குட் பை ஜீசஸ்”
வெளியே வந்ததும் கடை போர்டை பார்க்கிறார்.
                                    வியன்னா பேக்கரி
எல்லா திரைகளும் விலகி...தெளிவாகிறது.
மீண்டும் உள்ளே சென்று,
 “கமினோவுக்கு தர, உன்னிடம் கடிதம் இருக்கிறதா?:”

கமினோவின் அன்பிற்குறியவனை கண்டு கொண்ட ஆனந்தத்தில் காரில் விரைகிறார்.
பக்கத்து இருக்கையில்  ‘காதலின் சின்னம்’ வரையப்பட்ட கடிதம் இருக்கிறது.
கடிதத்தை பெருமிதத்துடன் பார்க்கிறார்.
                                                        டமார்
கண நேர கவனச்சிதறல்...ராட்சத லாரியில் மோதி  நொறுங்க போதுமானதாக இருந்தது.

கமினோவின் மரணத்தை நோக்கி நகர்ந்த திரைக்கதை, எதிர்பாராத திருப்பமாக
தந்தையின் மரணத்தை காட்டுகிறது.
கமினோவால் ஏற்பட்ட டிராஜிடி...இப்போது பன்மடங்கு பெருகி...கருணையில்லாமல் தாக்குகிறது.
ஹிரோஷிமா,நாகசாகி போல் நொறுங்கிப்போகிறோம்.

கமினோ, தோழி அனுப்பிய கவரை பிரித்து காட்டுமாறு தாயிடம் வேண்டுகிறாள்.
 ‘ஜீசஸ் லவ்ஸ் யூ’ என அச்சிடப்பட்ட  ஜீசஸ் படத்தை  ‘குறியீடாக’ அனுப்பியிருக்கிறாள் தோழி.
கமினோவிடம் காட்டுகிறார் தாயார்.

 “தயவுசெய்து என்னிடம் காட்டுங்கள் அம்மா”
கமினோவின் கண்களில்... உயிர் போய் விட்டது தெரிய வருகிறது.
போன் வருகிறது.
கணவன் உயிர் போய் விட்டது தெரிய வருகிறது.
குலுங்கி அழுகிறார்.
யதார்த்த மனுஷியாக பரிணாமம் பெற... இப்படியா  ‘இடுக்கண்’ வர வேண்டும்?
கணவனின் இறுதி சடங்கில் கூட இறுக்கமாகவே இருக்கிறார்.
பாதிரியார்கள் வழக்கம் போல,கமினோவின் தந்தை மரணத்திற்கு...
கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

கமினோவை வழியனுப்ப பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள் என அனைவரும் திரண்டு விட்டனர்.
ஹாஸ்டலிலிருந்து நூரியையும் அனுப்பி வைக்கிறார்கள்.
இருக்கைகள் காலியாக இருக்க,
நூரி பஸ்ஸில்  நின்று கொண்டே பயணிப்பது...குறியீடு.

கமினோவின் ஊரான மாட்ரிட் நகரில், அவளது நண்பர்கள் நடிக்கும்  ‘சிண்ட்ரெல்லா’ நாடகம் நடைபெறுகிறது.
நாடகம் நடக்கும் இடத்தில், ஆத்ம ரீதியில் கமினோ சஞ்சரிப்பது...டயலாக் மூலம் உணர்த்தப்படுகிறது.
டாக்டர்கள் ஆக்சிஜன் செலுத்தப்படுவதை நிறுத்துகிறார்கள்.
கமினோ தனது கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.

தான் விரும்பிய  ‘சிகப்பு ஆடை’ அணிந்திருக்கிறாள்.
ஜீஸசுடன் நடனம் ஆடுகிறாள்.
முத்தம் கொடுக்கிறாள்.

மரணப்படுக்கையில் படுத்திருக்கும் கமினோ முத்தம் கொடுப்பது போல் உதட்டை குவிக்கிறாள்.
தந்தை வருகிறார்.
 “அப்பா...”
தந்தையை கட்டி பிடிக்கிறாள்.
சிட்டுக்குருவிகள் கூட்டம் பறந்து... இருவரையும் கடக்கின்றன.


சிட்டுக்குருவிகள் பறப்பதை ஜன்னல் வழியாக பாதிரியார் பார்க்கிறார்.
கமினோவின் கண்கள் திறந்திருக்க,
இதழ்களில் நிரந்தர புன்னகையை விட்டு விட்டு...
ஆன்மா பறந்து விடுகிறது.

 ‘எதற்காகவோ’ பாதிரியார், வெறி பிடித்தவர் போல கை தட்ட...
டாக்டர்கள்,நர்ஸ்கள்,ஏனைய மத குருமார்கள் அனைவரும் கை தட்டலில் சேர்ந்து கொள்கிறார்கள்.
இது Faith.
ஒருங்கிணைந்த கை தட்டல்கள்... அபஸ்வரமாய் ஒலிக்கிறது.

கமினோவின் தாயும்,அக்காவும் மட்டுமே கதறியழுகிறார்கள்.
இது Human Sensuousness.

 ‘கனேனைஷேசன்’பிராஸசில், இறுதிப்பகுதியாக இறந்தவர்களை புகைப்படம் எடுப்பது வழக்கம்.
பாதிரியார் கமினோவை புகைப்படம் எடுக்கலாம் என தெரிவிக்கிறார்.
அதற்கு தாயார் எந்த சம்மதமும் தெரிவிக்காமல், கமினோவின் உடலை... மார்போடு கட்டித்தழுவி பாதுகாக்கிறார்.
அவர் மதவாத நம்பிக்கைகளுக்கு எதிராக, திரும்பி விட்டதன் குறியிடுதான் இக்காட்சி.

கமினோவில் கற்பனைக்காட்சியில் இடம் பெற்ற குறியீடுதான்...
கீழே உள்ள புகைப்படம்.
இதற்கான விளக்கத்தை முதல் பதிவில் சொல்லவில்லை.
இப்போது சொல்ல தேவையில்லை.

கமினோவின் இறுதிச்சடங்கு முடிந்த பின் வரும் காட்சிகள் அனைத்தும் குறியீடுகளாக காட்சியளிக்கிறது.

கமினோ கொடுத்த  ‘மிஸ்டர் மீபல்ஸ்’ கதைப்புத்தகத்தை ‘உபயோகமற்றவை’ என்ற கூடையில் போடாமல்...
ஷெல்பில் அடுக்கி வைக்கப்பட்ட நூல்கள் வரிசையில்....
 ‘கமினோ’ என்ற நூலுக்கு அருகில் வைத்து விட்டு குலுங்கி அழுகிறாள் நூரி.

கணவர் சூப்பர் 8 எம்.எம்மில்எடுத்த,
கமினோ ஆடிப்பாடும் காட்சிகள்...
பிறந்த நாள் கொண்டாட்டங்கள்...
என கடந்த காலத்தின் தருணங்களை திரையில் பார்க்கிறார் தாயார்.

இனி, ' போலி ' மத நம்பிக்கைகளை விடுத்து...
யதார்த்த உலகில் பிரவேசிப்பார்கள் என்ற நம்பிகையை இக்குறியீடுகள் தருகின்றன.

கமினோ என்றால், ஸ்பானிஷ் மொழியில்... பாதை என்று அர்த்தம்.
பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவில் உள்ள வாழ்க்கை போராட்டத்தை கடக்க எந்த பாதையை தேர்ந்தெடுப்பது  என்பதை காட்டியிருக்கிறார் இயக்குனர்.
அதே வேளையில் மதவாதிகள் உச்சந்தலையில் ஆணியடித்து ஆசனவாய் வரைக்கும் இறக்கியிருக்கிறார்.

                            'Aesthetics Replaces Faith'
‘மாபெரும் இயக்குனர் பெர்க்மன்’ மத நம்பிக்கைகளுக்கு மாற்றாக கலை இயங்கும் என நம்பினார்.
இக்கருத்தையே தனது படங்களின் பரப்புரையாக வைத்தார்.
கமினோ இயக்குனர் அதை... வழி மொழிந்திருக்கிறார்.

அரசியல் மாமேதை லெனின்,
 “ மனித இனம் தனக்குதானே தன்னம்பிக்கை கொள்ளும் வரை...
மத நம்பிக்கைகள் ஊன்று கோலாக இருந்து விட்டு, போகும்...”
என்ற கருத்தை சொன்னார்.

கமினோ,அவளது தந்தையும் மனித நேயம்,கலை,அறிவியல் என்ற அழகியலில் வாழ்ந்து மறைந்தார்கள்.
கமினோவின் தாயும்,அக்காவும் மதி மயக்கும் மத நம்பிக்கைகளிலிருந்து மீண்டு...தங்கள் மீது நம்பிக்கை கொண்டு அழகியலில் வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றவர்கள் எப்போது ஆரம்பிப்பார்கள்?

Jul 20, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-Part 4


கமினோவை பார்ப்பதற்கு முன்... மேல் நாட்டு கவிதை ஒன்றை பார்ப்போம்...
மேலுலகில் கடவுள்கள் வரிசையாக நின்று கொண்டு...
பூவுலகில் நாம் படும் துன்பங்களை பார்த்து...
ரசித்து, சிரித்துக்கொண்டிருப்பார்களாம்.
ஆனால், அவர்கள் பிடித்துக்கொண்டு நின்றிருந்த...
கோல்டன் பார் லேசாக சூடானது...
என முடித்திருப்பார் கவிஞர்.
  ‘சூடானது’... ஹ்யூமன் சென்சுயஸ்னஸ்.

Human Sensuousness = Aesthetics

கமினோவில் வருகின்ற பாதிரியார்கள் சேடிஸ்ட்களாக மட்டும் இயங்குவதை படம் முழுக்க காணலாம்.

கமீனோவின் தந்தை...  நூரி ஹாஸ்டலுக்கு வருகிறார்.
கையில் நூரியின் காதலன் புகைப்படம்,அவன் எழுதிய காதல் கடிதங்கள் அடங்கிய கவரும்...கிடாரும்.
நூரியை உள்ளே வைத்துக்கொண்டே...அவள் இல்லை என பொய்யுரைக்கிறார்கள்.
கவரை மட்டும் பெற்றுக்கொண்டு... கிடாரை அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இந்த கிட்டார்தான் கமீனோவின் கனவுலகில் குறியீடாக வந்தது.
கமீனோ... தனது  அக்காவை, சென்சுயஸ்னஸ் நிலையில் இருப்பதாக தனது கனவுலகை வடிவமைத்திருப்பது... அந்த காரெக்டரின் உயர்தன்மையை மேலும் லிப்ட் செய்கிறது.

கமினோவை, பாதிரியார்  ' Canonization ' மெத்தடில் ‘ செய்ன்ட் ’ [Saint] ஆக்க முயற்சிக்கிறார்.
 கனேனைசேஷன் என்பதற்கு விக்கிப்பீடீயாவின் விளக்கம்...
Canonization (or canonisation) is the act by which a Christian church declares a deceased person to be a saint, upon which declaration the person is included in the canon, or list, of recognized saints. Originally, individuals were recognized as saints without any formal process (as it is still done in the Orthodox Church). The process is most commonly used in, although not limited to, theCatholic Church.


கன்னியாஸ்திரி ஒருவர்... நூரியின் காதலன் புகைப்படம் மற்றும்
காதல் கடிதங்கள் அனைத்தையும் ரகசியமாக மறைத்து விட்டு...
நூரியை மூளைச்சலவை செய்கிறார்.
அவர் பரப்புரையில் இந்த வசனத்தை மட்டும் நினைவில் கொள்வோம்.
 “ நான் பஸ்ஸில் போகும் போது, இருக்கைகள் காலியாக இருந்தால் கூட நின்று கொண்டேதான் போவேன் ”

மீண்டும் ஆப்ரேஷன்...மீண்டும் நிலமை மோசம்...
மீண்டும் பாதிரியார்... மீண்டும் கனேனைசேஷன் பிராசஸ்...
முத்தாய்ப்பாக பாதிரியார் சொல்வது,
 “ Love Jesus ”
 “ That's What I Do ” என்கிறாள் கமினோ.
‘ஜீசஸ்’ என்ற வார்த்தை,  கடவுள் என்ற பதத்திலும்...
கமீனோவின் பாய் பிரண்டின் பெயர் என்ற பதத்திலும்...
இயங்கிய, இயக்குனரின் வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்.

மேலும், கமினோ பாய்ண்ட் ஆப் வியுவில்...
 ஜீசஸ் என்ற வார்த்தை... பாய்பிரண்டை மட்டும் குறிக்கிறது என்பதை பார்வையாளராகிய நாம் புரிந்து கொள்கிறோம்.
படத்தில் உள்ள கேரக்டர்கள் யாருக்கும் அது புரியவில்லை.
யார் புரிந்து கொள்ளப்போகிறார்கள்? என்ற  'Isotope'
சஸ்பென்ஸ் உத்திதான்...இப்படத்தின் ஹிட்ச்ஹாக் பேவரைட் பார்முலா.

 தந்தை வீட்டுக்கு போக...நூரி கமினோவுக்கு துணையாக இருக்கிறாள்.
ஷெல்பில் கிடாரை பார்த்ததும்...மீட்டி பாடுகிறாள்.

அப்போது,
 ‘காலியாக இருக்கும் மருத்துவமனையின் நீளமான வராண்டா ஷாட்’ போடுவார் இயக்குனர்.
பாதி இருட்டு...
பாதி வெளிச்சம்...
இருட்டு முன்னணியிலும்,வெளிச்சம் பின்னணியிலும் இருக்கிறது.
நூரிக்குள் இருக்கும் மதநம்பிக்கையை, இருட்டாகவும்...
சென்சுயஸ்னஸ்ஸை, வெளிச்சமாகவும்...
இக்குறியீட்டை கொள்ளலாமா?

மறுநாள் காலையில் திரும்பி போகும் போது,விதவிதமான மாடர்ன் டிரஸ் போட்ட ஜவுளிக்கடை பொம்மைகளை சென்சுயஸ்னஸ்ஸாக பார்க்கிறாள்.
ஒரு கணம்தான்...
மண்டைக்குள் ‘ மத நம்பிக்கை ’ அபாயமணி அடிக்க...
பார்வையை உடனே புறக்கணித்து,தலையை திருப்பி நடக்கிறாள்.
‘மத நம்பிக்கை’  என்ற வட்டத்திலிருந்து நூரி மீண்டு வருவாளா? என இக்காட்சி மூலம் கேள்வி எழுப்பி உள்ளார் இயக்குனர்.

நோயின் இறுதி வட்டத்துக்குள் வந்து விட்டாள் கமீனோ.
வலியின் தாக்குதலை தாள முடியாமல் அவள் கேட்கும் கேள்விகள்...
கர்த்தரை மீண்டும் சிலுவையில் அறையும் ஆணிகள்.
தான் விரும்பிய சிகப்பு ஆடையை வாங்கித்தரவும்...
வியன்னா... கூட்டிப்போகவும் வற்புறுத்துகிறாள்.

வியன்னாவா?
தந்தை குழம்புகிறார்.
நானும் குழம்பினேன்.
அடுத்த பதிவு வரும் வரை... நீங்களும் குழம்புங்கள். 

Jul 18, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை குற்றவாளியாக்கிய காவியம்-Part 3


நண்பர்களே...ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்ட... பதினோரு திரைப்படங்களையும் எழுதி விட்டு, ஹேராமை தொடர எண்ணியுள்ளேன்.
அனைவரும் பொறுத்தருள்க.

கமீனோ படத்தில் காட்டப்படுவது போல்...நம்மூரிலும் கார்ப்பரேட் சாமியார்கள் ஆசிரமங்களில் மூளைச்சலவை செய்யப்படுகிறது.
முதல் நாள்  ‘நானே கடவுள்’ என்கிறான்.
அடுத்த நாளே கைதானதும்... ஜாமீனுக்கு விண்ணப்பிக்கிறான்.
கடவுளுக்கு எதற்கு ஜாமீன்? என யோசிக்க வேண்டாமா...செம்மறியாடுகள்.?
 ‘மூளைச்சலவை’ யோசிக்க விடாது.

கமீனோவை பார்க்க வரும் தோழியோடு, நாமும் இணைந்து கொள்வோம்.
நோயாளிகளுக்கு நண்பர்கள் வருகை, என்றுமே உவகைதான்.
கமீனோ,நாட்டிய நாடகம் பற்றி விசாரிக்கிறாள்.
பாய் பிரண்ட் ஜீசஸ்... அதில்தானே இருக்கிறான்!.
நாடகக்குழுவினர் அனைவரும், அதே காஸ்ட்யூமோடு கமீனோவை பார்க்க வருவதற்கு... ஜீசஸ் திட்டமிட்டுள்ளான் என்ற செய்தியை தோழி சொல்கிறாள். அந்தக்கணமே...கமீனோ  கற்பனை உலகத்தில் பிரவேசிக்கிறாள்.
அந்த பரவச உலகை காண...நமது கற்பனை குதிரையை தட்டச்சொல்லி,சாதுர்யமாக  ஒதுங்கி விடுகிறார் இயக்குனர்.

நோயின் தீவிர பரவலை தடுக்க, கீமோதெரபி சிகிச்சை நடக்கவிருப்பதாக தந்தை கனிவோடு தெரிவிக்கிறார்.
நண்பர்கள் வருகைக்கு பிறகு அச்சிகிச்சையை  ஆரம்பிக்க ஆசைப்படுகிறாள்.
காரணம்...தலை முடியை இழக்க வேண்டியது வரும் என்ற அச்சத்தால்.
 “உன் விருப்பப்படியே செய்வோம்” என ஆதுரவாக தலையை தடவுகிறார்.
முடி கொத்தாக... கையோடு வருகிறது.

கிளாஸ்மேட்களை...பள்ளி அறையிலேயே சந்திக்க வருகிறாள்...முடி இழந்த கோலத்தோடு.
தோழியை பார்த்து... கண்ணடிக்கிறாள்.
இங்கே, கண்ணடித்தல்...கமீனோவின் உற்சாக மனநிலைக்கு குறீயீடாகிறது.
இக்குறியீட்டின் கனோட்டேஷன்...
பார்வையாளர்களை, துன்ப நிலைக்கு தள்ளுகிறது.
நண்பர்களை கடிதம் எழுதச்சொல்லி...வேண்டி விடை பெறுகிறாள்.

அதே நேரத்தில் தந்தை, வீட்டில் கமீனோ ரகசியமாக வைத்திருந்த பொருட்களை கண்டெடுக்கிறார்.
தான் பிறந்த நாள் பரிசாக வாங்கி கொடுத்த  ‘குட்டி மியுசிக் பாகஸ்’...
‘கமீனோவின் கனவுக்காட்சியில் காட்டப்பட்ட நூரியின் காதலன்’ புகைப்படம்...
அவன் நூரிக்கு எழுதிய காதல் கடிதங்கள்...

மருத்துவமனைக்கு முதன் முதலாக அக்கா நூரி வருகிறாள்.
வந்திருப்பவள்  ‘அக்கா ’ அல்ல...
மூளைச்சலவை செய்யப்பட்ட  ‘கன்னியாஸ்திரி’...
எனப்புரிந்து கொள்கிறாள் கமீனோ.

தந்தை வருகிறார்.
பாசத்தோடு நூரியை விசாரிக்கிறார்.
 “உன்னிடம் சேர வேண்டிய பொருள்கள்...
காரில் இருக்கிறது.
எடுத்துக்கொள்”என்கிறார்.
 “அப்புறம் பார்க்கலாம் ”
 கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்...உடனே ஹாஸ்டல் போகவேண்டுமென இயந்திரமாக செயல்படுகிறாள் நூரி.
கமீனோ பகலிலிருந்தே தூங்கிகொண்டே இருக்கிறாள்...என தாயார் கூறி...நூரியோடு டின்னர் சாப்பிட கிளம்புகிறார்.

மகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாது என மெதுவாக மியூசிக் பாக்சை ஷெல்பில் வைக்கிறார்.
“கண்டு பிடிச்சிட்டீங்களா ” என்கிறாள் கமீனோ.
தாய்&சகோதரி... ' இரண்டு தீவிரவாதிகளிடமிருந்து ' தப்பிக்க தூங்குவது போல் கமீனா நடித்திருக்கிறாள் என்பது குறியீடாகிறது.
அக்கா,  காதலனை மறந்து ' பாதை ' மாறியது...தன் விஷயத்தில் நடக்காது என தெளிவாக உரைக்கிறாள் கமீனோ.

' Human Sensuousness ' என்ற இயல்பான அடிப்படையில் கமீனோவும். தந்தையும்...
முரணாக...
‘ Faith ’ என்ற அடிப்படையில் தாயும்,நூரியும் இயங்குகிறார்கள்.

முக்கியமான கடிதம் ஒன்றை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறாள் கமீனோ.

 “ போஸ்டல் டிபார்ட்மெண்டை நம்ப முடியாது.
நானே அந்த லெட்டரை வாங்கி வருகிறேன் ”

 “ தாங்க் யூ...மிஸ்டர் போஸ்ட் மேன் ”
என கமினோ தந்தையின் கன்னத்தை தடவுவது,   என் கண்களி

எழுத முடியவில்லை.ஸாரி.

Jul 16, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை... குற்றவாளியாக்கிய காவியம்-Part 2

கோவை ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் சப்-டைட்டில் இல்லாமல் பார்த்த கமினோவை...நண்பரின் உதவியால் சப்-டைட்டிலோடு திரும்ப...திரும்ப...பார்த்து வருகிறேன்.
காரணம்...கருத்துப்பிழை வந்து விடக்கூடாது என்ற பயத்தால்..

நரை,திரை,பிணி,மூப்பு,சாக்காடு இவற்றை ஆராய்ச்சி செய்தார்... சித்தார்த்தன் என்ற ராஜகுமாரன்.
ஞானம் பிறந்தது.
புத்தரானார்.
புத்தமதம் கிடைத்தது.
புத்தமதம் மனிதநேயத்தை வளர்ப்பதாக அசோக சக்ரவர்த்தியால் பரப்பப்பட்டது.
புத்தமதத்தை ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு மனிதநேயத்தோடு நடந்ததா?
முள்ளிவாய்க்கால் சாட்சி சொல்லும்.

எல்லா மதங்களும் ஒரே அணிதான்.
எல்லா மக்களும் ஒரே அணிதான்...ஆனால் எதிர் அணியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வலியை ஏற்றுக்கொள்வதே கிருத்துவை அடையும் வழி என வலியுறுத்துகிறது மதம்.
மதத்தோடு... மருத்துவமும்... கை கோர்த்து கொண்ட  ‘முரண்பாட்டை’ கமினோவில் எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர்.

“மகளே...வலியை தந்த கர்த்தருக்கு நன்றி சொல்” எனக்கூறும்,
அதீத நம்பிக்கைகொண்ட கிருத்துவ தீவிரவாதியாக, தாயும்...
மதமோ...மருத்துவமோ...என் மகளை குணப்படுத்தினால் சரி...என சராசரி மனிதனாக தந்தையும்...இரு வேறு துருவங்களாக இயங்குவதை இப்படத்தில் காணமுடியும்.

மருத்துவமனையிலிருந்து கமீனோவும்,பொற்றோரும்...நூரியிடம் போனில் பேசுவதற்கு கூட ...கிறித்துவ தீவிரவாத அமைப்பு முன் கூட்டியே திட்டமிடுகிறது...கண்காணிக்கிறது....என்பதை காட்சி ரீதியாகவும்,
வசன ரீதீயாகவும் இயக்குனர் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளார்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருகிறார்கள்.
தாயால்,கமீனோவின் அறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.
தேவாலயத்தின்....இருண்ட பகுதி போல் இருக்கிறது.
கமீனோ மாற்றியமைக்கப்பட்ட அறையை விரும்பவில்லை என்பதை...அவளது கனவுக்காட்சி விளக்குகிறது.

அவளது நேசத்திற்குரிய எலி வருகிறது.
ஜன்னல் வழியே தாவிக்குதித்து பறந்து போகிறது.
அருகிலேயே டிஸ்னி வோர்ல்ட் காட்சியளிக்கிறது.
அறையில் கட்டிலில் குதித்து கும்மாளமிடுகிறாள் கமீனோ.
அவளது அறை பழையபடி கலர்புல்லாக காட்சியளிக்கிறது.
அறை முழுக்க சிறகுகள் பஞ்சு போல் பறக்கின்றன.


தாயார் வருகிறார்.
பின்னணி இசை ஆக்ரோஷமாக மாறுகிறது.
காமிரா கோணங்களால் தாயார்...  ராட்ஷச உயரமாக காட்டப்படுகிறார்.                   கமீனோ :  “நான் நல்லாயிட்டேன்.டான்ஸ் கிளாஸ் போகப்போறேன்.”                                   தாயார் : “ நோ...உன்னால் முடியாது. அங்கே பார்.”                                                     சுட்டி காட்டிய இடத்தில் சக்கர நாற்காலி இருக்கிறது.
கமீனோ தடுமாறி விழுகிறாள்.
எழ முயல்கிறாள்.
மீண்டும்...மீண்டும்...மீண்டும்....மீண்டும் விழுகிறாள்.


மீண்டும்....
புதிய மருத்துவமனை...புதிய பரிசோதனைகள்.... 
‘ஸ்கேன்’நர்ஸ் கொடூரமாக நடந்து கொள்கிறாள்.
டூட்டி நர்ஸ் கருணையுடன் நடந்து கொள்கிறாள்.
கமீனோ : “ உங்களைப்போல் எல்லோரும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.”
‘புரிந்து கொண்ட’டூட்டி நர்ஸ்:  “ஸ்கேன் நர்ஸ் அப்படித்தான்...
ரூடாக நடந்து கொள்வாள்.
அவள் கணவன் பிரிந்து சென்றதால் அப்படி ஆகி விட்டாள்.”

மீண்டும் ஸ்கேன்...
கமீனோ : [அழுது கொண்டே] “என்னை மன்னியுங்கள்.
எனக்கு நோய்வாய்ப்பட்ட அனுபவமில்லை.
அதனால் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை.
ஸாரி...உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபிப்பேன் "
பாறை இளகியது.
ஸ்கேன் நர்ஸ் : [கமினோவின் கன்னத்தை தடவியவாறு] “ நீ ஒரு தேவதை”

கமீனோவின் பிராத்தனை பலிக்கிறது.
 ‘ஸ்கேன் நர்ஸ்’ கணவன் வந்து சேர்ந்து விடுகிறான்.
கல்மிஷம் இல்லாத கருணை உள்ளம்...பிறருக்காக  ஜெபித்தால்...
கடவுள் செவி சாய்ப்பார் என்பது குறியீடாக்கப்பட்டுள்ளது.

கமீனோவின் அக்கா நூரியை...தங்கையை மருத்துவமனக்கு சென்று பார்ப்பதை... தள்ளிப்போடும் கிருத்துவ தீவிர வாத அமைப்பு, மாதம் தோறும் அத்தை வீட்டுக்கு மட்டும் சென்று வர அனுமதிக்கிறதே!
ஏன்?
விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
நூரியின் கூடவே வரும் அந்த அமைப்பின் உறுப்பினரிடம் கத்தையாக பணத்தை ஒரு கவரில் போட்டு கொடுக்கிறார் அத்தை.
அவரும் மூளைச்சலவை செய்யப்பட்டவரே!
இந்தக்காட்சி...  ‘மாமேதை’கார்ல் மார்க்ஸின் வரிகளை ஞாபகப்படுத்துகிறது.
 “சர்ச், தனது வழிபாடு மற்றும் கோட்பாடு முறைகளில்...பெரும்  மாற்றத்தை கொண்டு வர...கேள்வி எழுப்பப்பட்டால் கூட...பொறுத்துக்கொள்ளும்.
ஆனால்,அவர்களுக்கு வருகின்ற வருமானத்தை குறைக்கின்ற வகையில்...சிறு மாற்றத்தை கொண்டு வர... கேள்வி எழுப்பப்பட்டால், பொறுத்துக்கொள்ளாது.”

ஸ்பைனல் கேன்சர்...மருத்துவ சிகிச்சைக்கு அடங்காமல்...கமீனோவை மேலும்...மேலும் சிதைப்பதை,அடுத்த பதிவில் காண்போம்.     

Jul 14, 2012

Camino \ 2008 \ Spanish [Spain] கடவுளை...குற்றவாளியாக்கிய காவியம்-Part 1


ஐரோப்பிய திரைப்பட திருவிழாவில் இரண்டாம் நாள்...
இரண்டாம் காட்சியில் காட்டப்பட்ட படம்... முதல் தரமாக இருந்தது.
மருத்துவமனையில் 14 வயது சிறுமியின் உயிர் பிரிகிறது.
பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள் கை தட்டுகின்றனர்.
இந்தக்காட்சி ஏற்படுத்திய அதிர்ச்சியை எழுத்தில் கொண்டு வர முடியாது.
கமினோவில்...அதிர்ச்சிகளை அடுக்கி கொண்டே போயிருக்கிறார் இயக்குனர்.
அதிர்ச்சிகள் அனைத்தும் நிஜம்.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சப்-டைட்டில் வரவில்லை.
முதன் முதலாக... சப்-டைட்டில் இல்லாமல் ...பார்க்கும் பொன்னான வாய்ப்பு.
படத்தின் ஆன்மாவை... மிக நெருக்கமாக...சில சமயங்களில் முழுமையாக தரிசிக்க முடிந்தது.
கிடைத்த நீதி...இனி உலகசினிமாவை  ‘முதல் தடவை’ சப்-டைட்டில் இல்லாமல் பார்க்க வேண்டும்.

1985ல் Alexia Gonzalez-Barros என்ற 14 வயது வாழைக்குருத்தை  ‘நோயும்’...
‘கிருத்துவ தீவிரவாதமும்’ உருக்குலைத்த...உண்மை சம்பவத்தை படமாக்கி உள்ளார் இயக்குனர் Javier Fesser.

பிறப்பு...இறப்பு....இரண்டுக்கும் இடைப்பட்ட போராட்டமே வாழ்க்கை.
இப்போராட்டத்தை கடக்க, மதங்களும்...மருத்துவம் உள்ளிட்ட அறிவியல்களும்... உதவுகிறதா? என்ற கேள்விதான்,
இப்படத்தின் மையப்புள்ளியாக இயங்குகிறது.

 மருத்துவமனை...
உயிருக்கு போராடும் கமினோ... பாதிரியார்கள்,டாக்டர்கள்,நர்ஸ்கள்,உறவினர்கள் அனைவரும் கமினோவின் தாய் தலைமையில் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ட்ரீட்மெண்டை விட ஜெபிப்பதில்... நம்பிக்கை வைத்த கூட்டம்.

யாரிந்த கமினோ?
அவளுக்கு என்ன?
ஐந்து மாதம் பின்னோக்கி...பிளாஷ்பேக்கில் பயணிக்கிறது படம்.

பட்டாம்பூச்சிகள் படிக்கும் பள்ளிக்கூடம்.
சுறுசுறுப்பு+கலகலப்பு=கமினோ
தன் தோழியிடம் கண்ணடித்து பேசும் கமினோவை வர்ணிக்க நினைப்பதற்குள் அவளது தாயால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறாள்.
நட்ட நடு முதுகில் ஊசி ஏற்றி ரத்தம் எடுக்கப்படுகிறது.
 “டெஸ்ட் ரிசல்ட் வரட்டும்...ஒண்ணும் பயப்படத்தேவையில்லை.”
உலகம் முழுக்க டாக்டர்கள்...இதே டயலாக்தான்.

தோழியோடு டான்ஸ் கிளாசில் சேர ஆசைப்படுகிறாள்.
ஜவுளிக்கடை பொம்மை போட்டிருந்த  டிரஸ்சுக்கு ஆசைப்படுகிறாள்.
இரண்டுமே தாயால் நிராகரிக்கப்படுகிறது.
காரணம்... கர்த்தர்.
தாயார் தீவிரமான கர்த்தர் விசுவாசி.
மூத்த மகள் நூரியை, Opus Dei என்ற கிருத்துவ தீவிரவாத அமைப்பிடம் கொடுத்து விட்டாள்.
அவள்,  மூளைச்சலவை செய்யப்படுகிறாள்.
 “உன் பேமிலி நினைப்பே வரக்கூடாது...
அது பாவம்.
இனி நாங்கள்தான் பேமிலி.
இந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்... கர்த்தரை அடைய முடியும்.”

கமினோவுக்கு... அப்பா,அக்கா நூரி... என்றால் உயிர்.
கமினோவின் படுக்கைக்கு பக்கத்தில்,
மேரிமாதா சிலையும்,
கமினோ- நூரி இணைந்திருக்கும் புகைப்படமும் இருக்கிறது.
கமினோ தூங்கப்போகும் போது...
 “குட் நைட் அக்கா” என்பது... குறியீடு.

ஸ்டீரியோவில்... துள்ளல் இசை துடிக்க...கமினோ சுழன்றாடும் அழகை,
 மகள் அறியாமல்... சூப்பர்8 எம்.எம். கேமிராவில் படமாக்குகிறார் தந்தை.
நோய்... தனது முதல் சாட்டையை சொடுக்குகிறது.
 ‘சுளீர்’
வலியால் மகளின் நடனம் நின்று போனதை தந்தை கவனிக்கவில்லை.

 எதெற்கெடுத்தாலும் கர்த்தரை கொண்டாடும் அம்மாவிடம் பயம் மட்டுமே.
இருவருக்குமிடையே உள்ள வேறுபாட்டை காட்சி ரூபமாக சொல்லப்படுகிறது.
வீட்டிற்குள் சுதந்திரமாக வளைய வரும் சுண்டெலியை பிடிக்க பொறி வைக்கிறாள் அம்மா.
மாட்டிக்கொணட எலியை... “ மறுபடியும் மாட்டிக்கிட்டியா” என திறந்து விடுகிறாள் கமினோ.
தப்பித்து ஒடும் எலியிடம், “என்றாவது நீ எனக்கு திருப்பி நல்லது செய்வாய்” என்கிறாள்.
படத்தில் இந்த எலி மிக முக்கியமான குறியீடாக காட்டப்படுகிறது.

தோழியின் டான்ஸ் பிராக்டிஸ் கிளாசுக்கு போகிறாள் கமினோ.
அங்கே, அவளது கஸினை பார்த்தவுடன்....வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன...கமினோவுக்கு.
அவனை பார்த்ததும், கமினோவின் விழிகளில் ஏற்பட்ட மின்சாரத்தை சேமித்தால்...
தமிழ்நாட்டின் மின்வெட்டை தீர்த்து விடலாம்.

சமையல் கிளாசில்... தாள முடியாத தோள் வலி ஏற்படுகிறது.
கிளாஸ் முடிந்ததும்...அடைமழையில்....பிரியமானவனை காண...
 அவனது பேக்கரிக்கு வருகிறாள்.
காதலின் சின்னமான...ஹார்ட்டினை வரைந்து  ‘ஐ லவ் ஜீசஸ்’ என எழுதப்பட்ட காதல் கடிதத்தை வைத்திருக்கிறாள்.
ஜீசஸ்...அவனது பெயர்.
பேக்கரிக்குள்...கமினோவின் கிளாஸ்மேட்டோடு...
 ஜீசஸ் அன்னியோன்னியமாக பேசுவதைக்கண்டு...நாமும் உடைந்து போகிறோம்.
அடைமழை கூட.... கமினோவின் கண்ணீர் மழையை மறைக்க முடியாமல் தோற்றுப்போகிறது.

அடைமழையில் நனைந்து வந்த கமினோ...வலியால் துடிக்கிறாள்.
அம்மா: “ நனைஞ்ச டிரஸ்ஸை கழட்டிட்டு...வேற டிரஸ் மாத்தினா சரியாயிரும்.
காலை தூக்கு...”
கமினோ வலியால் கதற மட்டும் செய்கிறாள்.
அப்பா: “ ஏங்கண்ணு...இப்படி பண்ணுற...
காலை தூக்கினாத்தானே அம்மா டிரஸ் மாத்த முடியும்...”
கமினோ: “ இல்லைப்பா...காலைத்தூக்க  நினைக்கிறேன்.
என்னால முடியல....”

நோயின்... கொடூர ஆட்டத்தின்  அத்தியாயம் துவக்கப்பட்டு விட்டது...
மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு...விளக்கப்படுகிறது.
“ஸ்பைனல் கார்டில் ஆப்பரேஷன்...உடனே செய்யப்பட வேண்டும்.
பரலைஸ் ஆவதற்கு, வாய்ப்பிருக்கும்.... கிரிட்டிக்கலான ஆப்பரேஷன்.”

ஆப்பரேஷன் அப்பட்டமாக காட்டப்பட்டு...பார்வையாளனை அதிர வைக்கிறார் இயக்குனர்.
கமினோவின் வலியை... நம் மீது படரச்செய்யும் இயக்குனரின் உத்தி...மிகச்சரியாக வேலை செய்கிறது.
அதே சமயத்தில், ரசிகனை... கிளாஸ்ட்ரோ போபிக் சூழலில் வைத்து...
 அழுந்த வைக்காமல்...ஆசுவாசப்படுத்த, ஒரு தந்திரம் செய்கிறார்.
சர்ரியலிசப்பாணியில்...படம் முழுக்க கமினோவின் கற்பனை காட்சிகளை அமைத்து...அந்த பரவச உலகில் நம்மையும் பிரவேசிக்க செய்து வெற்றி காண்கிறார் இயக்குனர்.
சர்ரியலிஸக்கலையின் மாஸ்டர்... இயக்குனர் லூயி புனுவல் தரத்தில்... இப்படத்தின் சர்ரியலிஸக்காட்சிகள்.... மிகச்சிறப்பாக இருக்கின்றன.

கமினோவின் எலி வருகிறது.
ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து எழுந்து... எலியை தொடர்ந்து ஒடுகிறாள்.
மருத்துவமனையிலிருந்து...அழகிய கடற்கரைக்கு தாவுகிறது. 
அக்கா நூரி...,அவளின் மடியில் ஒரு வாலிபன் படுத்திருக்கிறான்.
அருகில் கிட்டார் இருக்கிறது.
பாய் பிரண்ட் ஜீசஸ்... கமினோவை பார்த்து புன்னகை புரிகிறான்.
தந்தை, சூப்பர் 8 எம்.எம். கேமிராவோடு வந்து படம் பிடிக்கிறார்.
நூரி கிட்டார் வாசிக்கிறாள்.
தண்ணீரில் கமீனோ காலை நனைக்கிறாள்.
சிட்டுக்குருவிகள் சிறகடித்து பறக்கின்றன. 


சிட்டுக்குருவிகள் பறந்து கடப்பதை... மருத்துவமனை ஜன்னல் வழியே கமினோவின் தந்தை பார்க்கிறார்.
கமினோவின் தாய்... பரபரப்பாக ஆப்பரேஷன் தியேட்டரை நோக்கி வருகிறார்.
பின்னணி இசை பரபரப்பாக ஒலிக்கிறது.
காற்று கொடூரமாக வீசுகிறது.
எலி பயத்தில் பதுங்குகிறது.
எல்லோருமே மாயமாக மறைகிறார்கள்.
தண்ணீரில்... மிகப்பெரிய வட்டமாக.... பள்ளம் ஏற்பட்டு... அத்தனை நீரும் நயகரா நீர்வீழ்ச்சி போல் பாய்கிறது.
பள்ளத்திற்குள் கமீனோ இழுக்கப்பட்டு கதறிக்கொண்டே மறைகிறாள்.

இக்காட்சிகளின் குறியீட்டின் விளக்கத்தை அடுத்த பதிவில் காண்போம்.

இப்படம் மட்டுமல்ல...திருவிழாவின் அனைத்து படங்களயும், இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து தரும் நண்பருக்கு...
இப்பதிவை அர்ப்பணிக்கிறேன்.

டிரைலர் காண...

Jul 11, 2012

Beauty And The Paparazzo\2010 [Portugal] நடிகையின் காதல்


கோவை ஐரோப்பிய திரைப்படதிருவிழாவில், இரண்டவது நாளில்...
 இரண்டு படம் திரையிடப்பட்டது.
முதல் படம் Beauty And The Paparazzo .
ரொமண்டிக் காமெடி வகையைச்சேர்ந்த இப்படத்தை
இயக்கியவர் Antonio-Pedro Vasconcelos.

மரியானா போர்ச்சுக்கல்... கொண்டாடும் டி.வி நடிகை.
எனவே அவளுக்கு கிடைக்கும் பணம்,புகழ், தொல்லை எல்லாமே அபரிமிதம்.

மரியானாவுக்கு நேரெதிராக ஜோவா.
திறமையான போட்டாகிராபர்.
ஆனால் பணம்,புகழ்,தொல்லை எல்லாமே குறைவு.
வயிற்றுப்பாட்டுக்கு...மரியானாவை துரத்தும் பப்பாராஸி ஆகி விட்ட
வாயுள்ள ஜீவன்.
இரு துருவங்களும் காதல் என்ற புள்ளியில் சங்கமிப்பதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
படத்தில் வரும் பெரும்பான்மையான காட்சிகள் நமது இந்தியப்படங்களில் ஏற்கெனவே பார்த்து ரசித்திருந்தாலும்...இப்படத்தையும் ரசிக்க முடிந்தது.
ஏழை-பணக்காரக்காதலை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசித்தோம்...ரசிக்கிறோம்....ரசிப்போம்.

தனக்கு கிடைத்த ‘அபரிமிதங்களிலிருந்து’ வெளியேற துடிக்கிறாள் மரியானா.
அதன் வடிகாலாக...தன்னை துரத்தி படமெடுக்கும் பப்பாரஸி எனதெரியாமலே ஜோவாவை காதலிக்கிறாள் மரியானா.
 ரெஸ்ட்டாரண்ட்டில் வேலை பார்ப்பதாக சொன்ன தற்காலிகப்பொய்யை நிரூபிக்க ஜோவாவின் திருவிளையாடல்கள் அனைத்தும் ஜாலி ஜாங்கிரிகள்.[சென்னை சரவணபவன் சூடான ஜாங்கிரி என்னுடைய ஆல் டைம் பேவரைட்]

தெருவில் கண்டெடுத்த கருப்பு வெல்வெட்டுக்கு...
 'டியுஸ் டே'[Tues Day] என செல்லப்பெயரிட்டு காதலின் அடையாளமாக வளர்க்கிறார்கள்.
பப்பராசி குட்டு வெளிப்பட்டு... ஜோடி பிரியும்போது...
 சேர்த்து வைக்கிறார்... நன்றியுள்ள 'டியுஸ் டே'.

அக்மார்க் அரிஸ்டாட்டில் பார்மில் சொல்லப்பட்ட இக்கதையை  ‘ஒ.கே ஒ.கே’ ராஜேசோ... ‘கலகலப்பு’ சுந்தர் சியோ பார்த்தால் கல்லா கட்டி விடுவார்கள்.

டிரைலர் காண...

Jul 10, 2012

A Friend Of Mine\ 2011 [Estonia] நட்பு நல்லது...

கோவை ஐரோப்பிய திருவிழாவின் முதல் படமே முத்தாக அமைந்து விட்டது.
இனி வருகின்ற படங்களையும் பார்த்து... என் சொத்தில் பத்து படங்களை சேர்க்க வேண்டும்.

நமது காலத்தின் மூன்று தலைமுறைகள தெரிந்து கொள்ளும் நல் வாய்ப்பை தருகிறது...எ ப்ரண்ட் ஆப் மைன்.
படத்தின் இயக்குனர் மார்ட் கிவாஸ்திக்கை [Mart Kivastik]...
‘எஸ்தோனியாவின் பாலாஜி சக்திவேல்’ எனப்புகழலாம்.
அதற்கான தகுதி இப்படத்தில் இருக்கிறது.

முதல் தலைமுறை..மேற்றி[Mati] ‘பில்டர் காபி’ கணவன்.
நூலகத்தில் வேலை.
வேலை முடிஞ்ச உடனே வீட்டு  ‘ஸ்ரீ தேவியை’ தேடி ஒடுற பார்ட்டி.
நூலகத்துல...ரோட்டுல...அஞ்சலி,ஹன்சிகா,காஜல்,அட... அனுஷ்காவே வந்தாலும் கண்டுக்காம போற ஜாதி.
 படுத்த படுக்கை மனைவியிடம்... அபரிமிதக்காதல் வைத்திருக்கும்...
 70 வயது மேற்றியிடம், நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
திரையில் முகம் காட்டப்படாத மணிப்புறாவுக்கு, மேற்றி புத்தகம் படித்து காட்டுவதும்...மணிப்புறாவின் தளர்ந்த கரங்கள் கணவனை தடவி கொடுப்பதும்
முதுமை காட்டிய இளமை திரைக்கவிதை.

மணிப்புறா மடிந்து போக....மதுவை நாடுகிறார்.
மதுவினால், நிம்மதி வருவதற்கு பதிலாக வாந்திதான் வருகிறது.
நிரந்தர நிம்மதி தேட, ஒரு பாலத்திலிருந்து ஜம்ப்...
ஆஸ்பத்திரி பெட்டில் லேண்ட்...
கழுத்தை சுற்றி, நெக் பிரேஸ்....
சில..பல..விலா எலும்புகள் தாறுமாறாக இடம் மாறியதால், விண்வெளி வீரன்  கவச உடை போல்... பேண்டேஜ் சுற்றி...பெட்டில் படுக்கப்போட்டு விடுகிறார்கள்.
மகளும்,பேரனும் பார்க்க வருகிறார்கள்.
இரண்டாம் தலைமுறையை சேர்ந்த...மேற்றியின் மகள்,  ‘கத்ரீனா கைப்பை’ தூக்கி சாப்பிடும் அசாதாரண அழகுப்புயல்.
மூன்றாம் தலைமுறையின் பிரதிநிதியான... பேரனுக்கும் தாத்தாவுக்கும் உள்ள உறவு படு ஸ்டாராங்.
பேரனின் பெயர்   ‘மாமேதை’ கார்ல் மார்க்ஸின் முதல் பெயர்...கார்ல்.

மகளிடம்,மேற்றி... “ உடம்பு ரெடியானதும்...கரெக்டா குதிக்கப்போறேன்”.
மகள் சிரிக்கிறாள்.
 “ஏன் சிரிக்கறே? ”
“அதுக்கு ரொம்ப நாள் ஆகுமே!...பெட்டிலிருந்து குதிக்கவே... மாசக்கணக்காகும்”.

அப்போது மருத்துவமனை பணியாள், ‘முதல் தலைமுறை’ 63 வயசு இளைஞன் சாசா ஆரவாரமாக நுழைகிறான்.
 சாசாவை பற்றி... இங்கே சொல்லியே ஆக வேண்டும்.
கதை நாயகனே இவன்தான்.
சுஜாதாவின்  ‘மாமா விஜயம்’படித்திருக்கிறீர்களா?
அந்த மாமாதான் சாசா.
சாசாவின் தடாலடி அன்பு இந்த உலகத்தில் எல்லோருக்கும் கிடைக்கும்.
தனது சாகசப்பொய்களால் சுற்றியிருப்பவர்களை சுவாரஸ்யப்படுத்தி விடுவான்.
கிராமத்தான்.
மாற்றியின் நூலகத்துக்கு நிரந்தர வாடிக்கையாளன்.
டால்ஸ்டாய்,தஸ்தாவெஸ்கி,மாப்பஸானை கரைத்து குடிப்பவன்.
அவன் தலையில் இருக்கும் நிரந்தர தொப்பியின் நிறம்...சிவப்பு.

முதல் தலைமுறைக்கு மற்றுமொரு பிரதிநிதி...மாற்றியின் சக ஊழியை ரூத்..
22 ஆண்டுகளாக.. மாற்றியுடன் பணிபுரிந்து கொண்டே காதலிப்பவள்.
சாசாவின் மனிதநேயப்பண்புகளால் கவரப்பட்டு சாசாவையும் காதலிப்பவள்.

உத்தமப்பெண் மேற்றியின் மகளுக்கு,
 நேரெதிராக... கிளியை விட்டு விட்டு குரங்கோடு குடும்பம் நடத்தும் கணவன்,
சிக்னலில் பக்கத்து காரில் ஆபாச சைகை காட்டும் அனிமல்,
அப்பார்ட்மெண்ட் படிக்கட்டிலேயே போதை மருந்து மயக்கத்திலும்...லெஸ்பியன் உறவிலும் ஈடுபடும் பெண்கள்...
 இன்றைய தலைமுறையின் வாரிசுகள்.

அயோக்கிய கணவனை திரையில் காட்சிப்படுத்தாமல்...தனிமைத்தீயில் தவமிருக்கும் மேற்றி மகளின் வலியை ரசிகனுக்கு கடத்துவதில் வெற்றி பெறுகிறார் இயக்குனர்.

மேற்றி,மருத்துவமனையிலிருந்து குணமாகி வீட்டுக்கு வரும் போது, படிக்கட்டில் வழியை மறித்தார் போல் மயங்கிக்கிடக்கும் லெஸ்பியன் பெண்கள்...
முதிய தலைமுறையை கவனிக்க தவறும் இன்றைய தலைமுறையின் குறியீடு.

மகள் வீட்டில் இருக்க மறுத்து....மீண்டும் வீட்டில் தனிமை துயரக்கடலில் நீந்துகிறார்.
துக்கத்திலிருந்து.... வெளியேற மறுக்கிறார்.
துக்கத்தை பன்மடங்குபெருக்கி...துக்கத்திலேயே அமிழ்ந்து கிடக்கும்... பைரானிக் அன்ஹேப்பி சிச்சுவேசனிலேயே இருக்க விரும்புகிறார்.

 சாசாவின் கிராமத்துக்கு அழைத்துப்போய், பொய் நாடகம் ஒன்றை அரங்கேற்றி, மேற்றியை துன்பச்சகதியிலிருந்து வெளியேற்றுகிறார்கள் சாசாவும்,ரூத்தும்.

முதல் தலைமுறையின் நற்பண்புகளை...
 மூன்றாம் தலைமுறை கார்லுக்கு கடத்துவதே...
 மிச்சமிருக்கும் வாழ் நாள் லட்சியமாக.... மேற்றி உணர்வதே கிளைமாக்ஸ்.

 ‘பை சைக்கிள் தீப்’ இயக்குனர் விட்டோரியா டிஸிகாவின்  ‘உம்பர்ட்டோ டி’படத்தின்  ‘பியூச்சர் பாஸிட்டிவ்’ தத்துவம் இப்படத்திலும் இயங்குவதை காணலாம்.

கிராமத்தின் அழகு...
மேற்றி,சாசா,ரூத்....முதிய தலைமுறை மூவருமே,
இலக்கிய நூல்கள் படிப்பவர்களாக காட்டப்படுவது...படத்தின் நுண்ணிய குறியீடுகள்.
படம் முடிந்ததும் எழுந்த கைதட்டல்கள்...ஒட்டு மொத்த டீமுக்கு கிடைத்த பரிசு.

டிரைலர் காண...

Jul 9, 2012

கோவையில்...ஐரோப்பிய திரைப்பட திருவிழா

நண்பர்களே...
கோவையில் ஐரோப்பிய திரைப்படவிழா நேற்று ஞாயிறு அன்று...
 சாதா ஸ்பெஷலாக துவங்கியது.
ஆனால் துவக்க நாள் ஸ்பெஷலாக A friend Of Mine என்ற எஸ்தோனியா நாட்டு திரைப்படம் திரையிட்டது...சம்திங் ஸ்பெஷல்.
[இப்படி ஒரு நாடு இருக்கிறதா?]

நிகழ்ச்சி விளம்பரமே செய்யப்படாமல் மிக ரகசியமாக நடத்தப்பட்டதன் ரகசியம் அறியேன்.
கோணங்கள் திரையிடலுக்கு வரும் அதே கூட்டம்தான் வந்தது.
 ‘நான் ஈ’ படத்துக்கு திரளும் கூட்டத்தில் பாதியாவது இங்கே திரட்டியிருக்க வேண்டாமா?
இப்படி ஒரு மெகா திரையிடலுக்கு...மெகா விளம்பரம் செய்ய மறந்து விடுகிறார்கள்.

13ம்தேதி வெள்ளிக்கிழமை வரை தினமும் இரண்டு திரைப்படங்கள் திரையிடுகிறார்கள்.விரிவான விபரம் காண...இந்த லிங்கை தொடர்க...
http://eeas.europa.eu/delegations/india/documents/more_info/eu_cultural_events/2012/euff_schedule-coimbatore.pdf

Jul 7, 2012

Hey Ram=014+Pantaleon Y Las Visitaderas\Spanish\ பாலியல் பாவைகள்

நண்பர்களே!
ஹேராம் தொடரை உலகசினிமாக்களின் பதிவுகளோடு இணைத்து எழுத திட்டமிட்டுள்ளேன்.
பின்னூட்டங்களில் உங்கள் ஆலோசனையை வரவேற்கிறேன்.

ராம்-அபர்னா காதல்....காமமாக கமழ்கையில்...நமக்கு அற்புதமான கவிதை கிடைக்கிறது.

                                                    [திரைக்கதையிலிருந்து]
அபர்னா கூறும் வங்கமொழிப்பாடல்,பிரபல கவிஞர் ஜிப்னானந்த தாசின் கவிதை...
வானிலே வெண்ணிலா
கானகப்பாதையில் சிறுத்தையின்
உடல் வாசனை.
என் இதயம் புள்ளிமான் போல.
இந்த இரவின் அமைதியில்
நான் எந்த வழியில்
போய்க்கொண்டிருக்கிறேன்.


என் உடலின் மீது
வெள்ளி இலைகளின் நிழல்.
புள்ளிமானை எங்கும் காணோம்.
நான் போகும் தூரமெல்லாம்
தங்கமான் - பயிரை,அறுவடை செய்யும் 
அரிவாள் போல அரை நிலா.
அந்த நிலா,மெல்ல மெல்ல,
நூற்றுக்கணக்கான பெண்மான்களின்
விழிகளின் உறக்க இருளுக்குள்
அமிழ்ந்து கொண்டிருக்கிறது.
[கவிதை... கலவியில் முடிகிறது]

இப்பாடலின் ஆரம்பத்தில் பியானோவை...ராம் ஒரு கையாலும்...அபர்னா ஒரு கையாலும் இசைப்பது போல் வடிவமைத்திருப்பதை பாராட்ட நான் வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்.
நண்பர்கள்... எங்கிருந்து சுட்டது என்று தேடிக்கொண்டிருக்கட்டும்.

கலவி முடிந்ததும்....அபர்னா கீழுதட்டை கடித்தவாறு, “கராச்சியில என்ன சாப்டீங்க”என்று கேட்பது...100% பூர்ண திருப்தி சம்போகம் என்பதன் குறியீடு.

அம்ஜத்தின் மனைவி வாங்கிக்கொடுத்த தாலியை கட்டும் ராம்...அபர்னாவின் விருப்பப்படி பேனா ரெட் இங்கால் திலகமிடுகிறான்.
இந்நிகழ்வுகளும் பச்சை வர்ணமிட்ட  பிரேமிற்க்குள்... ஷாட் கம்போசிஷேசன் பண்ணீயிருக்கிறார் இயக்குனர் கமல்.

காதல் வயப்பட்டிருக்கும் போது ஆபத்தை உணராமல் இருப்பது வீரபாண்டிய கட்டபொம்மனிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
 “இன்பம் பொங்கும்... வெண்ணிலா வீசுதே...”
என்ற பாடலில் வெள்ளையத்தேவனும் [ஜெமினி கணேசன்],
வெள்ளையம்மாளும் [பத்மினி] காதல் மயக்கத்தில் பாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு வரும்.
ஆபத்தை அறியாது காதலர்கள் இன்புற்றிருப்பதை கண்ட...
 வீரபாண்டிய கட்ட பொம்மன் [சிவாஜி கணேசன்] உடை வாளால் பாம்பை விரட்டி விடுவார்.
“காதலிப்பதில் தவறில்லை...பாம்பு வருவது கூட தெரியாமல் காதலில் மெய் மறந்திருப்பது தவறு” என இடித்துரைப்பார்.
தளபதி சூழ்நிலையை கவனிக்க தவறிய குற்றத்தை... சிவாஜியின் டயலாக் டெலிவரி& மாடுலேஷனில் குறியீடாக்கப்பட்டிருக்கும்.

ஹேராமில்... அபர்னா சூழ்நிலையை எடுத்துச்சொல்லி எச்சரித்தும் ராம் அசட்டை செய்கிறான்.
ஆபத்தை தடுத்து காப்பாற்ற வேண்டிய இடத்தில் கட்டபொம்மன் இல்லை.....வெள்ளைக்காரன் இருக்கிறான்.
இதனால் வருகின்ற பாதிப்பை அடுத்தப்பதிவில் காண்போம்.

இக்காட்சியின் காணொளி காண்க....
**********************************************************************************
இந்தப்படம் 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
2010ல் இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்... மரியோ வர்காஸ் லோசா [Mario Vargas Llosa]. இவரது எழுத்துக்களில் பாலியல் சற்று தூக்கலாகவே இருக்குமாம். அவரது மாஸ்டர் பீஸ் படைப்புகளில் ஒன்றான இக்கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் Francisco Jose Lombardi. பெரு நாட்டு ராணுவ வீரனான பேஞ்சோ கடைந்தெடுத்த ராமன். மனைவி கொடுக்கும்  'பில்டர் காபியை' தவிர... வேறு ஒன்றும் குடித்திராத பரமப்பசு. ராணுவ உயர் அதிகாரிகள் இவன் தலைமையில் ஒரு ரகசிய ஆப்ரேஷனை நடத்த திட்டமிடுகின்றனர். திட்டம் இதுதான். அமேசான் காடுகளில் பணி புரியும் பெரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு... பாலியல் தொழிலாளிகளை  சப்ளை செய்வது. ஏனென்றால் இந்த காஞ்ச மாடுகள்... சொந்த நாட்டு கம்பம்புல்லை மேய்வதை தடுப்பதற்க்காக. அதிகார வர்க்கம்...தாங்கள் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்காக...எந்த அளவுக்கும் கீழே இறங்கும் என்பதுதான் இப்படத்தின் செண்டர் பாய்ண்ட்.
பேஞ்சோ வேண்டாவெறுப்பாக இப்பொறுப்பை ஏற்கிறான். உத்தம மனைவியோடு ஸ்தலத்துக்கு வந்து சேருகிறான். லோக்கல் பாலியல் விடுதியிலுள்ள பெண்ணின் துணையோடு, பாலியல் பெண்களை தேர்வு செய்கிறான். பெரு நாட்டு தேசியக்கொடியின் வர்ணத்தில் யூனிபார்ம் அணிவிக்கிறான்.
பாலியல் தொழிலாளிகளிலேயே, ஸ்பெஷல் அட்ராக்‌ஷன்...கொலம்பியானா என்றழைக்கப்படும் ஓல்கா. பிப்டி கேஜி... வெடி மருந்து. அந்த ஊர் ஆண்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று...கொலம்பியானாவுடன் படுத்தவர்கள். இரண்டு...படுக்க துடிப்பவர்கள். கடமை வீரன் கந்தசாமியை... கஷ்டப்பட்டு வீழ்த்துகிறாள் கொலம்பியானா. இவர்களது படுக்கையறை காட்சிகள்....வாத்ஸாயனர் ஸ்பெஷல் ஷோக்கள்.
கொலம்பியானாவிடமிருந்து... சிகரட்டையும், துரோக உறுத்தலிடமிருந்து...மதுவையும் கைப்பற்றுகிறான். குடி...பீடி...லேடி மூன்றையும் எவ்வளவு தீவிரமாக எதிர்த்தானோ... அதே தீவிரத்துடன்... நேசிக்க தொடங்கி விடுகிறான். அதே சமயத்தில்,வந்த வேலையையும் சிறப்பாக செய்து திட்ட அறிக்கையை மேலிடத்துக்கு சமர்ப்பிக்கிறான். மேலிடம் மகிழ்ந்து, திட்ட விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்குகிறது. விளைவு...மேலும் பாலியல் தொழிலாளிகள் சேர்க்கப்பட்டு...  அதிக எண்ணிக்கையில்... ராணுவ வீரர்கள் குஷிப்படுத்தப்படுகின்றனர். திரைக்கதையின் திருப்பமாக... லோக்கல் எப்.எம். ரேடியோ ஜாக்கி வருகிறான். கொலம்பியானாவுடன் நெருக்கமாக இருப்பதை படம் பிடித்து பிளாக்மெயில் செய்கிறான். பேஞ்சோ அவனை அவமானப்படுத்தி துரத்துகிறான். விஷயத்தை ரேடியோவில்...அலற விடுகிறான். கர்ப்பிணியான மனைவி கோபித்து போய் விடுகிறாள். லோக்கல் சோமாறிகளும்... பேஞ்சோவுக்கு எதிராக திரள்கிறார்கள். மனநெருக்கடி தாளாமல்..வேலையை ராஜினாமா செய்கிறான்.  “எதிரிகளிடம் சரண்டர் ஆவது... ராணுவ வீரனுக்கு அழகா? போராடி வெல்” என மேலிடம் கட்டளையிடுகிறது. போனஸாக திட்ட விரிவாக்கத்துக்கு அதிக நிதியும் வந்து சேருகிறது. பேஞ்சோவும் சுறுசுறுப்பாக,திட்ட வேலையை விரிவாக்குகிறான். கொலம்பியானாவும்...ஒல்காவாக மாறி...காதல்புறாவாகிறாள்.
ரேடியோ ஜாக்கியை வரவழைத்து  ‘முக்கிய பேப்பர்கள்’ அடங்கிய கவரை கொடுக்கிறான்.  “லஞ்சமா...நோ...யாருன்னு நெனச்ச என்னை...”  “மாசா மாசம் இதே மாதிரி கவர் கிடக்கும்.” “ ஹேய்..இந்த டீலிங் பிடிச்சிருக்கு” காசுக்கு சோரம் போகும் மீடியாவை...ஜாக்கியின் மூலம் குறியீடாக்கப்பட்டுள்ளது. நாய் விற்ற காசுக்கு... குரைத்தான் ஜாக்கி.  “ வணக்கம் நேயர்களே... கேப்டன் பேஞ்சோவை பற்றி நானே தவறாக நினைத்து விட்டேன். யோசித்து பார்த்தால், அவரது பணி எத்தனை மகத்தானது. நம் உள்ளூர் பெண்கள் கற்போடு பாதுகாப்பாக இருக்கிறார்கள். நமது ராணுவ வீரர்களும் மனநெருக்கடியில்லாமல் பாதுகாப்பு பணியை செவ்வனே செய்கிறார்கள். பாவப்பட்ட பாலியல் தொழிலாளிகளுக்கு... ராணுவ அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. எனவே பேஞ்சோவின் சேவை....நாட்டுக்கு தேவை...” ஜாக்கியின் ரேடியோ உரை நிகழும் போது... லோக்கல் காவாலிகள்...ராணுவத்திற்கு  சேவை செய்யும் பாலியல் தொழிலாளிகளை...தங்களுக்கு கிடைக்காத காட்டத்தில்...வெறி கொண்டு... அவர்களை தாக்கி கற்பழிக்க முற்படுகின்றனர். கலவரத்தில் கொலம்பியானா... துப்பாக்கிக்கு பலியாகிறாள். கொலம்பியானாவை ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்கிறான் பேஞ்சோ.  கொலம்பியானாவுக்கு ராணுவ அந்தஸ்தளித்த பேஞ்சோவின் உயரம்... யாரும் தொட முடியாத சிகரம். இறுதிச்சடங்கு செய்ய வந்த பழைய பஞ்சாங்க பாதிரியார் சுருக்கமாகவும்...வெறுப்பாகவும் இறுதி உரை நிகழ்த்தி போகிறார். மதங்கள் மாற்றத்தை விரும்பாது என்பதன் குறியீடாக எனக்குப்பட்டது. கொலம்பியானாவை ராணுவ மரியாதையோடு அடக்கம் செய்து...  ரகசிய திட்டத்தை ஊரறிய செய்ததற்கு தண்டனை வழங்குகிறது மேலிடம். தண்ணியில்லா காட்டுக்கு...நிஜமாகவே வறண்ட பாலைவனப்பிரதேசத்திற்க்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறான்.[உலகமெல்லாம் இதே மெத்தெட்தான் போலும்] வேலை...முதியோர் கல்வி திட்ட ஆசிரியப்பணி. அன்று...பாலியல் கல்வி. இன்று... முதியோர் கல்வி.  மனைவியும் வந்து சேர்ந்து விட்டாள்....குழந்தையோடு. இந்த இடத்தில் படம் முடிந்திருந்தால் சுபம். ஆனால் லாஸ்ட் ஷாட்... இறுகிய முகத்துடன்... பேஞ்சோவின் குளோசப்... உதட்டில் சிகரெட்...[கொலம்பியானாவிடமிருந்து வந்த பழக்கம்] கையில் லைட்டர்....[கொலம்பியானாவுக்கு சொந்தமானது] இப்படம் பார்ப்பவர்கள்... அவரவர் கொலம்பியானாக்களை தேடுவர். டிரைலர் காண...

Jul 5, 2012

Altiplano-திருட்டுக்கு துணையிருப்போம்...[Spanish\ 2009]


ஆளிருக்கும் வீட்டில்...அகப்பட்டதை சுருட்டி போலிசிடம் மாட்டிக்கொள்பவன்...பெயர் திருடன்.
அதற்கு பதிலாக வீட்டு உரிமையாளர்களை... போலிசே அடித்து துரத்தி விட்டு....
“வாங்க....வாங்க....வந்து திருடுங்க” என வரவேற்கப்பட்டு திருடுபவர்களின்.... பெயர் பன்னாட்டு நிறுவனம்.

எங்கேயோ பெருநாட்டில் கனிம வளங்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களால் மலைவாழ் மக்கள் பாதிப்படைவதை பொறுக்க மாட்டாமல் படமெடுத்து தள்ளி விட்டார்கள் பெல்ஜியம் நாட்டு பெருந்தகைகள் இரண்டு பேர்.
Peter Brosens&Jessica Wood Worth.... இந்த இருவரும் படத்தை இயக்கி...முக்கிய பாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்கள்.



இரண்டு பெண்களை மையப்புள்ளிகளாக வைத்து படத்தின் திரைக்கதை
நான்-லீனியரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சத்ரினா...பெருநாட்டு மலைகிராமத்துப்பெண்.
மலையை குடைந்து கனிமங்களை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்திய... சுற்றுசூழல் கேட்டால்.... சத்ரினாவின் கிராமத்து மக்கள் பார்வை பறிபோதல்...உயிரையே பறிக்கும் உடல் உபாதைகள் என படாதபாடு பட்டு வருகின்றனர்.

கிரேஸ்....வார் போட்டாகிராபர்.
துப்பாக்கி முனையில் அவளது கைடை சுட்டுக்கொல்வதை படமெடுக்க நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.
அந்த அதிர்ச்சியில்
தன் புரபொஷனலையே விட்டு விடுகிறாள்.
கிரேஸ் கடைசியாக எடுத்தப்படம் புலிட்ஸர் விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
அந்த புகைப்படத்தை போட்டியிலிருந்து வாபஸ் பெறப்போவதாக அறிவிக்கிறாள்.
அந்த புகைப்படம் வெளியுலகுக்கு தெரிவதே...இறந்தவனின் ஆன்மாவுக்கு செய்யும் மரியாதையென கிரேஸின் கணவர் உபதேசிக்கிறார்.
கிரேஸின் கணவர் மருத்துவர்.
கருணைக்கடல்.
சேவை புரிவதற்காக பெருநாட்டு மலை கிராமத்திற்க்காக வருகிறார்.

சத்ரினாவின் காதலன் சுற்று சூழல் கேட்டால் உயிர் துறக்கிறான்.
காரணமறிய வந்த மருத்துவர் குழுவை மலைவாசிகள் தாக்குகின்றனர்.
இந்நிகழ்வை படமெடுத்துக்கொண்டிருந்த கிரேஸின் கணவன் தாக்கப்பட்டு மரணமடைகிறான்.

சத்ரினாவின் சகோதரனால்... அக்காமிரா கண்டெடுக்கப்பட்டு....
கிரேசிடம் வந்து சேருகிறது.
சத்ரினா... சுற்று சூழல் கேட்டால் ஏற்பட்ட கழிவை குடித்து தற்கொலை செய்து கொள்வதையும்...மலை கிராமத்தினரின் அறப்போராட்டம் ராணுவத்தால் நசுக்கப்படுவதையும் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படம் பெர்க்மன்,அண்டனியோனி,பிரஸ்ஸான்,புனுவல்...தரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

குறியீடுகளின் சொர்க்கம் என இப்படத்தை சொல்லலாம்.
சர்ரியலிசம் பாணியில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெடிதுயர்ந்த மலைத்தொடரில் ஆங்காங்கே புழுதி கிளம்பும்.
புழுதி கிளப்பியது பன்னாட்டு நிருவனங்களின் கனரக வாகனங்கள் ...என எடுத்துக்காட்டும் விசுவல் ட்ரீட்மெண்டை பார்த்தால் மிரண்டு போவீர்கள்.

நம்மூரிலும் ஒடிஸா மாநிலத்தில் இப்பிரச்சனை இருக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களொடு கை கோர்த்து மண்ணின் மைந்தர்களை விரட்டியடிக்க ஜகஜ்ஜாலம் செய்து வருகிறது.
மண்ணின் மைந்தர்களுக்கு தேனும் பாலும் ஊட்டுகிறோம்...அதை படம் பிடித்து தாருங்கள் என பன்னாட்டு நிறுவனங்கள் வலை விரிக்கும்.
மணிரத்னம்,லீனா மணிமேகலைகள் சிக்குவார்கள்.

படம் பெற்ற விருதுகள்[தகவல் உபயம்:விக்கிப்பீடீயா]

The film has gained mainly positive response.[3] It has also won a number of independent film awards:
  • Bangkok International Film Festival 2009: Special Golden Kinnaree Award for Environmental Awareness[4]
  • Festival Film Europeen de Virton 2009: Prize of the City Virton
  • Lucania Film Festival 2010: Best Feature Film [5]
  • Festival de Cinema de Avanca 2010: Best Feature Film [6]
  • Festival de Cinema de Avanca 2010: Best Actress for Magaly Solier
  • International Film Festival Tofifest 2010: Special Jury Award [7]
டிரைலர் காண....