Jun 17, 2012

Hey Ram- தவறுகளின் குழந்தையே... துன்பம். [2000\ஹேராம்=011]


பண்டைய நாகரீகத்தின் மேன்மையை தோண்டி...ஆராய்ச்சி செய்து உலகுக்கு பறை சாற்றும் நாகரீக மனிதனான சாகேத்ராம்...நாகரீகமே இல்லாமல் காட்டுமிராண்டி போல் மனிதவேட்டைக்கு புறப்பட்டான் என்றால்...அதற்கான காரணம் எவ்வளவு வலுவானதாக இருக்க வேண்டும்!.
தன் காதல் மனைவியை பறி கொடுப்பதே அத்தகைய ஆக்ரோஷத்தை கிளப்ப முடியும்.
இது வரை சாகேத்ராமின் காதல் மனைவி ஆடியன்சுக்கு நேரடியாக காட்டப்படவில்லை.
ஆனால்... இருவரின் நெருக்கத்தையும்... பார்ட்டி சீனில் வசனங்களால் சொல்லி விட்டார் கமல்.
அம்ஜத் : ஹி ஈஸ் ஆல்ரெடி எ பொண்டாட்டிதாசன்.

போனில் பொண்டாட்டியிடம் குழைந்து குழைந்து பேசும்போது அந்த காதலின் நெருக்கத்தை நடிகர் கமல் எஸ்டாபிலிஷ் பண்ணியிருப்பார்.
காதல் இளவரசனாச்சே!
இன்று வரை அந்த சிம்மாசனத்தில் அவரே ஆட்சி புரிகிறார்.

இப்போது வரவிருக்கும் ஒரே ஒரு காட்சியிலேயே இவர்கள் காதலின் நெருக்கத்தை ஆடியன்சிடம் சொல்வதற்கு படைப்பாளி கமல் தீர்மானித்து விட்டார்.
படைப்பாளி,இயக்குனர்,நடிகர் மூவருமே தனித்தனியாக போட்டி போட்டு செயல் பட்டிருக்கிறார்கள்.
இந்த மூன்று டிபார்ட்மென்டை ஒருவரே கையாண்டு வெற்றி பெறுவது சாதாரணம் அன்று.
இத்தகைய ஆளுமையில் கமலுக்கு முன்னோடி..சார்லி சாப்ளின்.

சாகேத்ராம் காலிங் பெல்லை அழுத்தி விட்டு ஒளிந்து கொள்கிறான்.
காதல் மனைவி அபர்னா துப்பாக்கியை தூக்கி விடுகிறாள்.
கல்கத்தா சூழ்நிலை தெரிந்த பெண்ணாக அபர்னா சித்தரிக்கப்படுகிறாள்.
சூழ்நிலையை கணக்கில் எடுத்து கொள்ளாத காரெக்டராக சாகேத்ராம் சித்தரிக்கப்படுகிறான்.
இக்காட்சியை முழுக்க கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை புலப்படும்.
சூழ்நிலையை கவனிக்க தவறியதால் தான் டிராஜிடி நிகழ்கிறது.

அரிஸ்டாட்டில் பார்ம் முறைப்படி டிராஜிடியை வரவழைக்கும்...
ஒரு மெத்தடை... இப்போது பார்ப்போம்...
ஒரு காரெக்டர்... தான் அறிந்தும் அறியாமலும் செய்த...தனது தவறுகளின் மூலமாக ஏற்படும் டிராஜிடி...காரெக்டருக்கும்...அதே சமயத்தில் ரசிகனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அரிஸ்டாட்டில் பார்ம்....செல்ப் கான்சியஸ்னஸ்ஸை பெரும்பாலும் முன்னிலை படுத்துகிறது.
இதன் வடிவமைப்பு...தனி மனித உணர்வுகளுக்குள் விளையாடும் தன்மை இருக்கும்.
ஹாலிவுட் நேரேட்டிவ் ஸ்டைல் இப்படித்தான் பெரும்பாலும் இருக்கும்.

யூரோப்பியன் பார்ம்... சோஸியல் கான்சியஸ்னஸ்ஸை பெரும்பாலும் முன்னிலைபடுத்துகிறது.
இதன் வடிவமைப்பு அறிவுபூர்வமாக விளையாடும் தன்மை இருக்கும்.

விஸ்காண்டி,குரோசுவா,அண்டனியோனி,பெர்க்மன்,டிசிகா போன்ற மாஸ்டர்கள் இரண்டு பார்மையும் கலந்து தங்களது படைப்புகளை மேம்படுத்தி விடுவர்.
கமலும் இதே முறையை கையாண்டு ஹேராமை படைத்துள்ளார்.
ஹேராம் கதை... யூரோப்பியன் பார்மில் இருந்தாலும்...சாகேத்ராம்-அபர்னா காட்சியை அரிஸ்டாட்டில் பார்மில் கமல் வடிவமைத்துள்ளார் என்பதை மனதில் கொள்க.

அடுத்த பதிவில்...விலாவாரியாக பார்ப்போம்.

6 comments:

  1. அலசல் ஆய்வு .அருமை

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த வருகைக்கும்...பாராட்டுக்கும்...நன்றி நண்பரே!

      Delete
  2. //படைப்பாளி,இயக்குனர்,நடிகர் மூவருமே தனித்தனியாக போட்டி போட்டு செயல் பட்டிருக்கிறார்கள்.
    இந்த மூன்று டிபார்ட்மென்டை ஒருவரே கையாண்டு வெற்றி பெறுவது சாதாரணம் அன்று.
    இத்தகைய ஆளுமையில் கமலுக்கு முன்னோடி..சார்லி சாப்ளின்.//

    சாப்ளினின் மீது ஆதீத பற்று கொண்டவர் கமல் என படித்திருக்கிறேன்.
    அவரின் தோற்றத்தை நடிப்பை கடை தமிழனுக்கும் கொண்டு சேர்த்தவர்.

    ReplyDelete
    Replies
    1. தமிழனாக பிறந்ததால் தமிழ் சினிமாவுக்கு கொடையாக இருவர் கிடைத்தனர்.
      ஒருவர்...சிவாஜி.
      மற்றொருவர்...கமல்.

      Delete
  3. யுரோப்பியன், அரிஸ்டாட்டில் பார்ம்கள்.. இன்னும் பல திரைப்பட ஜாலங்களை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. திரைக்கலையின் அத்தனை தொழில் நுட்பங்களையும் அறிந்து கொண்டுதான் ஹேராமை படைத்தார்.
      இந்த படம் வெற்றி பெற்றிருந்தால் இன்னும் உயரத்திற்க்கு தமிழ் சினிமாவை கொண்டு போயிருப்பார்.

      //இன்னும் பல திரைப்பட ஜாலங்களை அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்!//

      தங்கள் ஆவல் மகிழ்சி அளிக்கிறது.
      தெரிந்ததை சொல்கிறேன் நண்பா!

      Delete

Note: Only a member of this blog may post a comment.