2011ல் தமிழ் சினிமா மிகவும் மோசமான பாதையில்
பயணித்துக்கொண்டிருந்த போது
ஒரு விபத்தாக வந்திருக்கிறது எங்கேயும் எப்போதும்.
அதுவும் ஒரு விபத்தை களமாக அமைத்து.
இந்த முயற்ச்சி பாராட்டப்படவேண்டிய முயற்ச்சி.
மனிதாபிமானத்தை வலுவாக வேறூன்றச்செய்யும் தரமான தமிழ் படம்
இது என்பதில் தமிழனான எனக்கு சற்று கர்வம் கலந்த பெருமை.
பைனல் டெஸ்டினேசன் பார்ட் 1,2,3,4,5 என ஹாலிவுட் மசாலாப்படம் மனிதாபிமானத்தை கொன்று காசு பார்க்கும் அவலத்தை கண்டு பொறுமிக்கொண்டிருந்தேன்.
சமீபத்திய வரவான பைனல் டெஸ்டினேசன் பார்ட்5 த்ரீடியில் பார்க்கும் கொடுமைக்கு ஆளானேன்.
என் பக்கத்தில் ஒருவன் தனது காதலியுடன் வந்திருந்தான்.
அந்தப்படத்தில் மனிதர்களை விதவிதமாக கொத்துக்கறி போடுவதை சத்தம் போட்டு சிரித்து ரசித்து மகிழ்ந்தான்.
நிச்சயம் அந்தப்பயல் 100% சைக்கோ.
அந்தப்பெண்ணுக்கு அந்தக்காதல் தோற்று அந்த சைக்கோவிடம் இருந்து விடுதலை கிடைக்க நாமெல்லாம் கூட்டு பிரார்த்தனை செய்வோம்.
எ.எ தயாரித்த முருகதாசுக்கு முதல் வணக்கம்.
குரு தந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய சிஷ்யன் சரவணனுக்கும் முதல்மரியாதை.
இரண்டு பஸ்கள் நேரடியாக மோதி விபத்துக்குள்ளாகிறது.
அதில் பயணிக்கும் பயணிகளின் கதியை...அவஸ்தையை மிக விஸ்தாரமாக காட்டி கலவரப்படுத்துகிறது படம்.
பாடல் படமாக்கப்பட்ட விதத்தில் ‘மகேந்திர’ஜாலம் தெரிகிறது.
படத்தில் வரும் காதல் காட்சிகள் புத்தம்புதுசாய் இருக்கிறது.
அஞ்சலி என்ற அதிசயப்பிசாசு என்னாமாய் ஜாலம் காட்டுகிறது!!!!!!!!!!!!!.
ஜெய் இப்படத்தில் அற்ப்புதமாக நடித்து முந்தைய பட பாவங்களுக்கு பரிகாரம் தேடி உள்ளார்.
ஒட்டு மொத்த டீமே அசத்தி உள்ளார்கள்.
இப்படத்திற்க்கு நியாயமான வெற்றியை தமிழ் ரசிகர்கள் வழங்க வேண்டும்.
இதுதான் என்னுடைய இப்போதைய உடனடிக்கவலை.
இல்லையென்றால் மங்காத்தா பார்ட் 2,முனிபார்ட் 3 போன்ற மசாலாக்கள்தான் கதியென்றாகிவிடும்.
இப்படத்தின் மிகப்பெரிய குறை ....
இரண்டாம் முறை பார்க்க முடியாது.
அந்த விபத்துக்காட்சிகளை இரண்டாம் முறை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.ஆனால் இரண்டாம் முறை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு அலையாய் அடிக்கிறது.