Jul 8, 2011

நாஞ்சில் நாடன் - நடிகர் சிவக்குமார் உரசல் ஏன்?







நண்பர் ஒவியர் ஜீவா எழுதிய திரைச்சீலை தேசியவிருது பெற்றதற்க்காக கோவையில் நடந்த பாராட்டு விழாவில்,
 என்ன காரணமோ! தெரியவில்லை ...நாஞ்சில் நாடன் எடுத்த எடுப்பிலேயே சூடாக ஆரம்பித்தார்.
இளைஞர்களின் இன்றைய ரசனைப்போக்கை வெகுவாக சாடினார்.
ஆரண்யகாண்டம் வெற்றி பெறாததை வேதனையுடன் குறிப்பிட்டார்.
நச்சுப்படங்களுக்கு எதிராக நெற்றிக்கண்ணை திறந்தார்.
முத்தாய்ப்பாக வேதனை நிரம்பிய குரலில் கூறியது இது......
“சமீபத்தில் நடந்த நடிகரது திருமணத்துக்கு பத்திரிக்கை வந்தது.
என் பக்கத்து வீடுகளிலுள்ள இளம் பெண்கள் அந்தபத்திரிக்கையை முத்தமிட்டு கொஞ்சினர்.
திருமணத்திற்க்கு என் கூட வருவதற்காக விடிகாலை நாலு மணிக்கே அலாரம் வைத்து ரெடியாகி விட்டார்கள்.
இது எனக்கு அதிர்சியையும் ,கவலையையும் அளித்தது.
தமிழ் திரைப்படம் மூன்று முதல்வர்களை தந்திருக்கிறது.
இனி மேலும் தரப்போகிறது என்பதில் எனக்கு ஆதங்கம் இல்லை ”.என நையாண்டியுடன் முடித்தார்.



தொடர்ந்து பேச வந்த சிவக்குமார்... “பத்தாம் வகுப்பு படிக்கும் வரை காலில் செருப்பு அணிந்தது கிடையாது.
இரண்டே இரண்டு செட் ஆடைகள்தான் எனக்கு...
பிறகு ஒவியனாக ஆசைப்பட்டு...அதற்க்காக கஷ்டப்பட்டு...ஒரு விபத்தாக நடிகனானேன்.
என் மகன் சூர்யா நடிக்க வாய்ப்பிலாமல் கஷ்டப்பட்ட காலத்தில்
ஆதரவாகப்பேசி அவனை சாய விடாமல் தோள் கொடுத்த ஜோதிகாவை நான்கு ஆண்டுகள் காத்திருந்து எங்கள் சம்மதத்தை பெற்று திருமணம் செய்தான்.
இளைய மகன் கார்த்தி அமெரிக்காவில் படிக்கும் போது எத்தனையோ வெளி நாட்டுப்பெண்களை உதறி விட்டு பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என உறுதியாக நின்றான்.
என் சொந்த மண்ணில் அவனுக்கு திருமணம் நடத்த ஆசைப்பட்டு 30,000 பேர் வந்து வாழ்த்தி நேற்று திருமணம் நிறைவாக நடைபெற்றது.
இன்று இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன்.
மற்ற நடிகர்களை பார்க்கும் கண்ணோடு என் குடும்பத்தை பார்க்க வேண்டாம்  என தம்பி நாஞ்சில் நாடனை கேட்டுக்கொள்கிறேன்”என உணர்ச்சி கொப்பளிக்க கண்டித்தார்.

தொடர்ந்து பேசிய சிவக்குமார் ஜீவாவின் புத்தகத்தில் சிவாஜியை பாராட்டி எழுதியதை மிகவும் ரசித்ததாக பாராட்டினார்.
சிவாஜி பேசிய மனோகரா,வீர பாண்டிய கட்ட பொம்மன்,சாக்ரடீஸ்,சேரன் செங்குட்டுவன் வசனங்களை அப்படியே அடி பிறழாமல் சிவாஜி மாதிரியே ஏற்ற இறக்கத்துடன் பேசிக்காட்டி ஆச்சரியப்படுத்தினார்.
அதோடு விட்டாரா மனுசன்...
சிந்து பைரவி படத்தில் வரும்... ரீரீரீ...என ஆரம்பிக்கும் ராக ஆலாபனையை அப்படியே பாடி அதிசயிக்க வைத்து விட்டார்.
இந்த வயதிலும் அவரது நினைவாற்றல் அசாத்தியம்.

 “சிவாஜி என்ற சிங்கத்துக்கு தயிர் சாதம் போட்டே தமிழ் சினிமா சாகடித்து விட்டது”  என்றார் கமல் ஒரு பேட்டியில்....
சிவக்குமாருக்கும் இது பொருந்தும் என நினைத்தேன்.

16 comments:

  1. நல்ல பகிர்வி ஐயா..மகனின் கல்யாணம் முடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்தவரை நோகடிக்காமல் விட்டிருக்கலாம்..

    சிவாஜியை நாம் வீணாக்கிவிட்டோம் என்பது உண்மை தான்.

    ReplyDelete
  2. //இளைஞர்களின் இன்றைய ரசனைப்போக்கை வெகுவாக சாடினார்.
    //

    நாஞ்சில் நாடன், கொஞ்சம் பழமைவாதி என்பது என் கருத்து. இன்றைய இளைஞர்களின் exposure லெவல், அருமையாக இருக்கிறது என்பதில் சந்தேகமே கொள்ளத் தேவையில்லை. ஒரு உதாரணமாக, இளைஞர்கள் உலகப்படங்கள் எவ்வளவு பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.இப்போதெல்லாம் யாரும் சினிமா பின் பைத்தியமாக அலைவதில்லை என்று நினைக்கிறேன். ஒரு சிலர் அப்படி இருக்கலாம்; ஆனால், பெரும்பாலானவர்கள், வாழ்க்கையில் எப்படி செட்டில் ஆவது என்று யோசித்துத்தான் செயல்படுகிறார்கள். நாஞ்சில் நாடன், இந்த விஷயத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  3. @மதுரன்
    //அருமையான பதிவு
    இன்று என் பதிவில்
    பிரபல வன்னிப் பதிவரின் மன உளைச்சல்//

    வருகைக்கு நன்றி.உங்கள் பதிவை பார்க்க கட்டாயம் வருவேன்.

    ReplyDelete
  4. @செங்கோவி
    //மகனின் கல்யாணம் முடித்துவிட்டு நிகழ்ச்சிக்கு வந்தவரை நோகடிக்காமல் விட்டிருக்கலாம்..//
    இந்த எண்ணம் அரங்கத்தில் இருந்தவர்களின் அனைவரின் ஒட்டு மொத்த அபிப்ராயமாக இருந்தது.

    //சிவாஜியை நாம் வீணாக்கிவிட்டோம் என்பது உண்மை தான்.//
    சிவாஜியை பற்றி ஒரு பதிவிடுகிறேன்.எனது ஆதங்கத்தை அதில் முழுமையாக காணலாம்.

    ReplyDelete
  5. @கருந்தேள் கண்ணாயிரம்
    //நாஞ்சில் நாடன், கொஞ்சம் பழமைவாதி என்பது என் கருத்து.//
    நண்பரே!நாஞ்சில் நாடனை அதிகமாக படித்ததில்லை.
    அவரது பேச்சையும் முதன் முறையாக கேட்டேன்.
    அதனால் நான் அபிப்ராயம் சொல்வது முறையாக இருக்காது.

    //இன்றைய இளைஞர்களின் exposure லெவல், அருமையாக இருக்கிறது என்பதில் சந்தேகமே கொள்ளத் தேவையில்லை. ஒரு உதாரணமாக, இளைஞர்கள் உலகப்படங்கள் எவ்வளவு பார்க்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.இப்போதெல்லாம் யாரும் சினிமா பின் பைத்தியமாக அலைவதில்லை என்று நினைக்கிறேன். ஒரு சிலர் அப்படி இருக்கலாம்; ஆனால், பெரும்பாலானவர்கள், வாழ்க்கையில் எப்படி செட்டில் ஆவது என்று யோசித்துத்தான் செயல்படுகிறார்கள். நாஞ்சில் நாடன், இந்த விஷயத்தில் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறார் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?//
    ஆரண்ய காண்டம் ஒடாத விரக்தியை அழகாக வெளிப்படுத்தினார்.
    விஜய்காந்தை அடுத்து விஜய் பின்னால் ரசிகர்கள் திரள்வதற்க்கு ஆதங்கப்பட்டார்.
    கார்த்தி திருமண மேட்டரை இழுத்தது நாகரீகமற்ற பேச்சாக இருந்தது.

    ஒட்டு மொத்தமாக இளைஞர்கள் பற்றிய கருத்தும்
    பார்வையற்றோர் யானையை பற்றி அபிப்ராயம் கூறிய கதைதான் ஞாபகத்துக்கு வந்தது.

    ReplyDelete
  6. காத்திரமான அலசல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. add this movie blog in google reader...

    http://specialdoseofsadness.blogspot.com/

    (delete this...only my comments r queuing down)

    ReplyDelete
  8. @கவி அழகன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு. . .

    ReplyDelete
  10. நல்ல பதிவுதான் ஆனால் இன்றய இளம் நடிகர்கள் முந்தைய தலை முறை நடிகர்களை விட காசு விசயத்தில் கெட்டிக்காரர்கள்....!? பிழைக்க தெரிந்தவர்கள்.. முந்தைய தலை முறை நடிகர்கள் பிழைக்க தெரியாதவர்கள் உதரணம் தியாகராஜபாகவதர் சந்திரபாபு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இதில இத்தலை முறையில் சிவகுமாரின் மகன்களை சொல்லத் தேவையில்லை...!!?

    ReplyDelete
  11. இரண்டு கலைஞர்களுக்கு இடையேயான சொற்போர். என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோ,

    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  12. @பிரணவன்
    @ஆதவன்
    @நிரூபன்
    @தமிழ்வாசி
    நண்பர்கள் அனைவரது வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  13. நல்ல தொரு அலசல்.. ஆனால் சிவகுமார் அளவு சூர்யா,கார்த்தி அப்பாவிகள் அல்ல. வியாபாரம் தெரிந்தவர்கள்

    ReplyDelete
  14. நடிகனும் ஒரு மனிதன் தான்.... அவனுக்கும் ஒழுக்கம், குடும்பம், கலாசாரம் இருக்கிறது என்பதை சிவகுமார் நன்றாக உணர்த்தி இருக்கிறார் ......

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.