Jun 24, 2011

கண்ணதாசன் விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கொடுக்கலாமா?

l
கண்ணதாசன் பால் குடித்து வளர்ந்த பிள்ளை நான்.
காந்திஜிக்குப்பிறகு தனது தவறுகளை,தப்புகளை ,திருவிளையாடல்களை அப்பட்டமாக சுயசரிதை எழுதிய மகான்.

எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது சென்னை ஜாம்பஜாரில் கண்னதாசன் பேசுகிறார் என்ற போஸ்டர் பார்த்து மாலை ஆறு மணிக்கே முதல் வரிசையில் நானும் ஒருவனாக இடம் பிடித்தேன்.
இரவு பத்து மணிக்கு சந்தனசில்க் சட்டையும்,பட்டு வேட்டியுமாக மாப்பிள்ளை போல் வந்தார்.
அப்போது அவர் காமராஜரின் பக்தர்.
கலைஞரையும்,அவரது ஆட்சியையும் கிழித்தார் பாருங்கள்....அடடா...
அத்தனையும் அமில மழை ...
ஆனால் அதில் தமிழ் ஆறாக ஒடியது.
திட்டப்பட்ட கலைஞரே ரசிக்கும் ரசவாத வித்தை இருந்தது.
அறம் பாடுவதிலும் தமிழரசன் அவர்.

அவரது புகழை பேச ஆரம்பித்தால் ராமாயணம் ஆகிவிடும்.
ஒன்றிரண்டை மட்டும் உங்களோடு பகிர்கிறேன்.

அத்திக்காய்... காய்...காய்... பாடல் தெரியும் உங்களுக்கு.
அப்பாடல் பதிவின் போது ஒருவர் கேட்டிருக்கிறார்...
“முக்கியமான காயெல்லாம் சொல்லிட்டீங்க...கொத்தவரைக்காயை விட்டு விட்டீர்களே !”என பகடி பண்ணியிருக்கிறார்.
நெற்றி சுருங்கியது......அடுத்த கணமே தமிழை கொட்டியது.

“என்னை நீ காயாதே...கொற்றவரைக்காய் வெண்ணிலவே”

தமிழ்க்கடல் அல்லவா அவன்.

மணப்பந்தல் என்றொரு படம்.
 காதல் கதை.
 காதலியின் தந்தை மகளின் காதலுக்கு மறுப்பு சொல்லாமல் காதலன் வீட்டுக்கு சென்று திருமணம் பேசி முடிக்கச்செல்கிறார்.
ஆனால் அறியாமல் காதலனின் அண்ணனை பேசி முடிவு செய்து விடுகிறார்
.இந்த சிக்கல்தான் படமே.
தனது காதலனிடம் தன்னை ஒப்படைக்க தகப்பன் போனதை எண்ணி மகிழ்ந்து காதலி தனியே பாடி ஆடுகிறாள்.
இதுதான் சிச்சுவேசன்.

 'அன்று குணத்தோடு மனம் கொண்டு நின்றேன்.
இன்று குலத்தோடு மணம் பேசக்கண்டேன்...'

காதலன் பெயர் குணசேகரன்.
காதலனின் அண்ணன் பெயர் குலசேகரன்.

[பாடல் முதல் வரி....
 ஒரே ராகம்...ஒரே தாளம்...ஒரே பாடல் பாடுதம்மா...]

இரண்டு வரியில் ...இரண்டு மணி நேர படத்தின் கதையை சொன்ன நீதான் எனக்கு திருவள்ளுவர்.


நான் என்றும் கொண்டாடும் கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் கோவை கண்ணதாசன் கழகம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு விழா நடத்தி கண்ணதாசன் விருது சிறந்த எழுத்தாளருக்கு வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கண்ணதாசன் விருது தமிழ்த்தாயின் இலக்கியப்புதல்வன் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
இன்று மாலை 6.00 மணிக்கு கோவை மணி ஸ்கூல் கலையரங்கில் வைத்து அறிஞர் பெருமக்களால் வழங்கப்படுகிறது.
இந்த விருது மட்டுமல்ல...இலக்கியத்துக்கான அனைத்து விருதுகளும் அவரை வந்தடைந்து பெருமை சூடிக்கொள்ளும்.

இது என் இதயம் ஆர்ப்பரித்து சொல்லும் சத்திய வார்த்தை.  

11 comments:

  1. அடடா, அருமையான எளிமையான எழுத்து நடை..இத்தனை நாளாய் உங்களைக் கவனிக்காமல் போனேனே....இன்று முதல் தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. sir,

    this blog has
    very useful widget..see at its left side bar

    http://chakpak-widgets.blogspot.com/

    u can place slideshow of ur books(or anything) in a large size

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே, செங்கோவியைப் போல நானும் இன்றுதான் உங்கள் தளத்துக்கு வருகிறேன்! நீங்கள் நல்லதொரு சினிமா ரசிகரென்று தெரிகிறது!

    உங்கள் சினிமாப் பயணத்தோடு சேர்ந்து இனி நாமும் பயணிப்போம்!

    கவிஞர் கண்ணதானசன் பற்றிக் குறிப்பிட்டவை அருமை! எனக்கு அத்திக்காய் பாட்டுத் தெரியும்! மற்றப் பாட்டுத் தெரியல!

    இரண்டையும் பற்றி ரசித்து, ருசித்து எழுதியமைக்கு, பாராட்டுக்களும், நன்றிகளும்!

    ReplyDelete
  4. நண்பரே, இண்ட்லி தமிழ்மணம் போன்ற தளங்களில் இணைக்கவில்லையா? பட்டைகளைக் கானோம்!

    ReplyDelete
  5. @செங்கோவி
    நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. @ஓ.வ.நாராயணன்
    நண்பரே...தங்கள் வருகைக்கு நன்றி.

    //நண்பரே, இண்ட்லி தமிழ்மணம் போன்ற தளங்களில் இணைக்கவில்லையா? பட்டைகளைக் கானோம்!//

    நண்பரே...எப்போது பார்த்தாலும் தொழில் நுட்ப தகறாறு.
    இருந்தாலும் முயற்ச்சித்து கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  7. @ரத்னவேல்
    ஐயா...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  8. உண்மையை பட்ட வர்த்தனமா சொல்லுவதில் அவருக்கு நிகர் எவர் நண்பா!

    ReplyDelete
  9. ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல நான் யார்? ஆகவே, எனது மகிழ்ச்சியை இங்கே பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  10. @விக்கியுலகம்
    //உண்மையை பட்ட வர்த்தனமா சொல்லுவதில் அவருக்கு நிகர் எவர் நண்பா!//

    தமிழ் உள்ளளவும் கவிஞர் புகழ் நிலைத்திருக்கும்.
    வருகைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  11. @
    //ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல நான் யார்? ஆகவே, எனது மகிழ்ச்சியை இங்கே பதிவு செய்கிறேன்.//

    உங்கள் மகிழ்ச்சியுடன் எனது கொண்டாட்டத்தை இணைத்து விட்டேன்.
    நன்றி நண்பரே!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.