Nov 8, 2010

Halfaouine-[1990]பையன் வயசுக்கு வந்துட்டான்

பதின்வயது..... புரியாத ரகசியங்களும்..... சொல்லமுடியாத விருப்பங்களும்.... அலைக்கழிக்கும் இனிமையான அவஸ்தைப்பருவம்.இதை மையக்கருவாக அமைத்துவிட்டால் திரைப்படத்தின் சுவாரஸ்யத்திற்க்கு பஞ்சமிருக்காது.உதாரணமாக மெலினா...தமிழில் அழியாதகோலங்கள்....
துனிசியா நாட்டு சிறுவனின்......பிஞ்சிலே பழுக்கத்துடிக்கும் பதட்டத்தை அற்புதமாக படமாக்கியவர் இயக்குனர் Ferid Boughedir உலகசினிமாவுக்கே உரிய கலைத்தன்மை சற்று குறைவாக இருந்தாலும் இப்படத்தை அறிமுகம் செய்யக்காரணம் இப்படத்தின் காட்சிகள்..இஸ்லாமிக் நாடுகளின் படங்களில் நாம் காணவேமுடியாத நிர்வாணக்காட்சிகள்...அழகாக....கலைநயத்துடன் காட்சியளிக்கிறது. நோராவை அவனது தாய் குளிப்பாட்டும் காட்சியில் துவங்குகிறது படம்.பொதுக்குளியலறையில் ஏராளமான பெண்கள்....தாராளமாக ரசிக்கிறான் நோரா.
தன்னை விட வயதில் மூத்தவர்களோடு மட்டுமே சினேகம் கொள்கிறான் டீனேஜ் இயல்புப்படி... அவர்கள் அவனது கேள்விகளை கேலியாக்குகிறார்கள்.ஆனால் விடையாக வீட்டுக்கு அழகிய வேலைக்காரி [தமன்னா சாயல்] வருகிறாள்.
குளியலறையில் கண்களால் தரிசித்ததை கரங்களால் ஸ்பரிசிக்கும் வாய்ப்பு கிட்டியதும் வாலிபத்தின் கதவு திறக்கிறது நோராவுக்கு.சின்னசின்ன நகாசு வேலைகளில் துனிசியாவின் வாழ்வியலை தரிசிக்கும் பாக்கியத்தை வழங்குகிறார் இயக்குனர்.
நமது பதின்வயது சேட்டைகளை ஞாபகப்படுத்தும் ஆட்டோகிராப் தன்மை படம் முழுக்க நிரவிக்கிடக்கிறது.....என்ஜாய்.....

21 comments:

  1. நல்லா இருக்கு... ரொம்ப சின்னதா எழுதியிருக்கீங்க... நிர்வாண காட்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டில் கூட போடலை...

    ReplyDelete
  2. பிரபாகரன்@\\ நிர்வாண காட்சிகள் இருக்குன்னு சொல்லிட்டு ஒரு ஸ்டில் கூட போடலை... \\
    வேண்டுமென்றெதான் போடவில்லை.ஆனால் ஒன்று..பார்வையாளரை கிளர்ச்சியுறச்செய்யும் ஹாலிவுட்தனம்...இப்படத்தின் நிர்வாணக்காட்சிகளில் இருக்காது.

    ReplyDelete
  3. இப்படத்த பத்தி எஸ்.ரா அல்லது செழியன் எழுதியிருக்காங்க. நீங்க ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா சொல்லிட்டேள் :)

    ReplyDelete
  4. இதோ இப்பவே யூட்யூப்ல தேடிடுவோம்ல - பிஞ்சிலேயே பழுத்த தமிழன்

    ReplyDelete
  5. இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், பையன் ரோலுக்குப் பொருத்தமானவர் யார்? விஜயகாந்த்? சத்யராஜ்? ராமராஜன்? ஷண்முகசுந்தரம்?

    ReplyDelete
  6. நிச்சயம் இது ஒரு நல்ல படம் தான். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எஸ்.ரா தனது தளத்தில் எழுதியிருந்தார். அப்போதே கூகிள் வீடியோஸில் தேடிப் பார்த்து விட்டேன். டிவிடி என்னிடம் இல்லை. ஆனால் உங்களிடம் கண்டிப்பாக இருக்கும். லிஸ்டில் சேர்த்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  7. நன்றி மரா..எஸ்.ரா எழுதியது எனக்கு தெரியாது..தெரிந்து இருந்தால் தப்பித்திருப்பேன்.

    ReplyDelete
  8. \\இந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால், பையன் ரோலுக்குப் பொருத்தமானவர் யார்? விஜயகாந்த்? சத்யராஜ்? ராமராஜன்? ஷண்முகசுந்தரம்?\\பி.ப.தமிழரே!இக்கேள்விக்கு விடை சொல்ல கடினமாக இருப்பதால் குமுதம் அரசுக்கு பார்வேர்டு செய்கிறேன்.

    ReplyDelete
  9. நண்பரே!நவம்பர் 12 முதல் 20 வ பெங்களூர் புத்தகக்கண்காட்சியில் உலகசினிமா ஸ்டால் போடுகிறேன்.வாருங்கள்.

    ReplyDelete
  10. நல்லா இருக்கு உங்க பகிர்தல், பார்க்க வேணும்!

    ReplyDelete
  11. Your reviews are nice! follow U!! :)

    ReplyDelete
  12. ஜீ..வருக...வருக தொடர்ந்து நல்லாதரவு தருக

    ReplyDelete
  13. ஓ பெங்களூர் வர்ரீங்களா? மீட் பண்ணுவோம்.. கால் பண்ணுறேன் உங்களை... :-)

    ReplyDelete
  14. தலைவரே,
    இதுவரை கேள்வியேபட்டதில்லை,உடனே பார்த்துவிடுகிறேன்.
    இது உலகெங்கும் தடை செய்யப்பட்ட படங்களின் பட்டியல் http://en.wikipedia.org/wiki/List_of_banned_films
    உங்களுக்கு உதவும்

    ReplyDelete
  15. I downloaded this movie a long back...but yet to watch... :D

    ReplyDelete
  16. அடடே.. படம் நல்லா இருக்கும் போல இருக்கே.. டிவிடி கிடைக்குமா? ஹி.. ஹி...

    ReplyDelete
  17. பின்னூட்டமிட்ட நண்பர்கள் கருந்தேள்,கீதப்பிரியன்,சிவன்,கவிதைக்காதலன் அனைவருக்கும் நன்றி.டிவிடி இருக்கிறது கவிதைக்காதலரே!இப்படத்தை உல்டா செய்யுங்கள்.தயாரிப்பாளர் உடனே கிடைப்பார்.

    ReplyDelete
  18. download starts right now...

    ReplyDelete
  19. மெலினா, அழியாத கோலங்கள் பார்த்திருக்கிறேன்.. அருமையான படஙகள் இதையும் பார்ததிடவேண்டியதுதான்

    ReplyDelete
  20. Replies
    1. http://www.youtube.com/watch?v=202BEn6dcZc

      Delete

Note: Only a member of this blog may post a comment.