Jan 8, 2013

சொர்க்கத்திற்கு ஜீப்பில் போகலாம்!.


நண்பர்களே...
கொல்லூர் மூகாம்பிகையை தரிசித்து விட்டு மேலும் ஒரு நாள் தங்கினால்
 ‘சொர்க்கத்திற்கு’ போகலாம்.
ஒரு கண்டிஷன் இளைஞர்கள் மட்டுமே போக முடியும்.
முதியவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் கட்டாயம் போகக்கூடாது.

சொர்க்கம் = குடசாத்ரி.
குடசாத்ரி கொல்லூரிலிருந்து 21 கிலோமீட்டர் தூரம் + உயரத்தில் இருக்கிறது.
‘சொர்க்கத்திற்கு’ ஜீப்பில் போக இரண்டு மணி நேரம் ஆகும்.
அதுவும் இதெற்கென்றே கொல்லூரில் உள்ள ஜீப்பில் மட்டுமே பயணிக்க முடியும்.
நடந்தும் போகலாம்.
அருமையான டிரெக்கிங் அனுபவம் உத்திரவாதம்.


குடசாத்ரி போவதற்கு மலைப்பாறைகளை உடைத்துதான் பாதை போல்’குன்ஸாக’ ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதில்தான் ‘ஜீப்கள்’ தவழ்கிறது.
பாதையில் இருக்கும் பாறைகளில் ஜீப்கள் தத்தி தத்தி ஏறுகின்றன.
பாதையில் ஒரு பக்கம் நெடிதுயர்ந்த பாறைகள்.
மறு பக்கம்  ‘பச்சை பசேல்’ பாதாளம்.
இந்தப்பாதையில்  ‘ஹேர்பின்’ வளைவுகளில் ஜீப் முன்னேறுவதே
 ‘தனி அட்வெஞ்சர் ஸ்டைல்’.
ரிவர்ஸ் எடுக்கும் போது டயர் மட்டும்தான் பாதையில் இருக்கும்.
ஜீப்பின் பின் பாகம் பாதாளத்தில் நிற்கும்.
ஜீப்பின் பின் பக்கம் இருப்பவர்கள்  ‘அனுபவித்தால்’ சொர்க்கம்...
பயந்தால் நரகம்.
இந்த திரில்லை நேரில்தான் அனுபவிக்க முடியும்.
எழுத்தில் கொண்டு வருவது  ‘பயணத்தை’ விட சிரமம்.


இந்தப்பாதையில் இது வரை விபத்தே நடந்ததில்லை.
இது மூகாம்பிகையின் அருளென்று நான் சொல்வேன்.
டிரைவர்களின் திறமையென்று  ‘கமல்’ சொல்வார்.



போகும் பாதையில் குறிப்பிட்ட தூரம் வெறும் மணல் பாதைதான்.
நமது ஜீப்பிற்கு முன்னால் வேறொரு ஜீப் போனால் அனைவரும் செவ்விந்தியர்களாக மாறி விடுவோம்.
அந்த செம்மண் புயலின் நடுவே பயணிப்பது  ‘பாலைவன அனுபவம்’.


மலை உச்சிக்கு போன பிறகு,
வழியில் புல் பிரதேசம் ஒன்று வரும்.
கண்ணுக்கு எட்டிய தூரம் புல் வெளிதான்.
மாலை நேரச்சூரியனில் அந்த புற்கள் தங்கம் போல்  ‘தகத்தகாயமாக’ ஜொலிக்கும்.
மூகாம்பிகைகையின் விசுவல் டீரிட்மெண்டை  ‘லைவாக’ பார்க்கலாம்.
இந்த அனுபவம் வேறெங்கும் கிட்டாது.

இந்த த்ரில் பயண முடிவில்தான்,
குடசாத்ரி ஆதி மூகாம்பிகை கோயில் உள்ளது.
கோவில் சிறிதுதான்.
ஒரே ஒரு பிராம்மணக்குடும்பம் மட்டும் அங்கே வசித்து பூஜை செய்து வருகின்றனர்.
மின்சாரம் கூட ஜெனரேட்டர் உபயம்தான்.
பூஜை செய்யும் அய்யர் கோமணத்தை உருவுவதில் டாக்டரேட் பெற்றுள்ளார்.
நூறு ரூபாய் தாளை காட்டினால்தான் கற்பூர ஆரத்தி.

குடசாத்ரியில் கோவிலுக்குள் அம்பாள் இல்லை.
பச்சை பசேல் பிரதேசங்களில் அவளை நீங்கள் தரிசிக்கலாம்.
அந்தப்பிரதேசத்தை அடைய நல்ல சாலை வசதி செய்யப்படவேக்கூடாது.
சொர்க்கத்திற்கு சுலபமாக போகக்கூடாது.
கஷ்டப்பட்டு அந்த இடத்தை அடைவதே எனக்கு இஷ்டம்.
நீங்கள் போகும் போது என்னைப்போலவே உணர்வீர்கள்.


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.



5 comments:

  1. புதுவித அனுபவம்..பெற்றமை பதிவினில் தெரிந்தது !

    ReplyDelete
  2. நானே போய் வந்த அனுபவம் கிடைத்தது, நண்பரே..

    ReplyDelete
  3. எழுத்தில் கொண்டு வருவது ‘பயணத்தை’ விட சிரமம்.// பூஜை செய்யும் அய்யர் கோமணத்தை உருவுவதில் டாக்டரேட் பெற்றுள்ளார்.//குடசாத்ரியில் கோவிலுக்குள் அம்பாள் இல்லை.//
    சொர்க்கத்திற்கு சுலபமாக போகக்கூடாது..//
    டிரைவர்களின் திறமையென்று ‘கமல்’ சொல்வார்.///

    hm..fantastic ,lines ;)

    ReplyDelete
  4. பாஸ்கர் அண்ணா ,
    பயண அனுபவ பகிர்வு அருமை .நாங்களும் உங்கள் எழுத்து மூலம் கொஞ்சம் திரில் அனுபவித்தோம் .
    படங்கள் அருமை .

    ReplyDelete
  5. அருமை!

    மங்களூர் அல்லது கொல்லூர் மூகாம்பிகை ரோடு இரயில் நிலையத்தில் இருந்து கொல்லூர் சொல்ல பேருந்து வச்தி உள்ளதா???

    கொல்லூரிலிருந்து குடசாத்ரி சொர்க்கத்திற்கு ஜீப்பில் போக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது???

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.