Jan 16, 2013

கண்ணா ‘பூந்தி’ தின்ன ஆசையா...


நண்பர்களே...
இந்த பொங்கலுக்கு ‘ரியல் ஹிட்’ கண்ணா லட்டு தின்ன ஆசையாதான்.
பாக்யராஜின் பூந்தியைத்தான் லட்டாக்கியிருக்கிறார்கள்.
லட்டில் முந்திரி பருப்பாக சந்தானமும்...
கிஸ்மிஸ் பழமாக பவர் ஸ்டாரும் கலந்திருப்பதால் ருசிக்க முடிந்தது.


பாக்யராஜின் இன்று போய் நாளை வாவில் இட்ம் பெற்ற காட்சிகள்,
‘லட்டுவில்’ ஜெராக்ஸ் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் என்னால் சிரிக்க முடியவில்லை.
முந்தைய படத்தில் இடம் பெறாத ஜோக்குகளுக்கு சிரித்து கொண்டாடினேன்.
ஆனால் இன்றைய தலைமுறை ரசிகர்கள் மொத்தப்படத்தையுமே ரசித்து கொண்டாடி விட்டார்கள்.


இ.போ.நா.வாவில் இடம் பெற்ற பாக்யராஜ், ராதிகா,கல்லாப்பெட்டி சிங்காரம், ஹிந்தி வாத்தியார்  காரெக்டர்களை இப்படத்தில் சுமந்தவர்கள் ஒரிஜினல் முன்னால் நிற்கக்கூட முடியாமல் பரிதாபமாக காட்சியளித்தார்கள்.
ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

பவர்ஸ்டார் + சந்தானம் கூட்டணிதான் இப்படத்தின் பலமே.
பவர்ஸ்டாரை நான் முதன்முதலில் பார்த்தது  ‘நீயா நானா’வில்தான்.
கோபிநாத்தின் அகந்தைக்கேள்விகளை,
தனது எளிய புன்னகை மற்றும் அலங்காரமில்லாத பேச்சால் அட்டகாசமாக அடித்து நொறுக்கினார் பவர்ஸ்டார்.
அன்று அவர் சொன்ன ரசிகர் கணக்கு இன்று நிஜமாகி விட்டது.


பவர்ஸ்டாருக்கு நடிப்பு சுத்தமாக வரவில்லை.
ஆரம்ப நாட்களில் நடிகர் செந்தில் அப்படித்தான் இருந்தார்.
கவுண்டமணியோடு இணைந்த பிறகே நடிப்பு, புகழ், பணம் எல்லாம் தானே வந்து விட்டது.
சந்தானத்தோடு இணைந்து பத்து படம் நடித்தால் நடிப்பு நிச்சயம் வந்து விடும்.
பவர்ஸ்டாரின் வருங்காலம் சந்தானம் கையில்தான்.

பாக்கியராஜ் பட கிளைமாக்சை விட, ’லட்டில்’ கிளைமாக்ஸ் பெட்டராக இருந்தது.
சிம்புவை உள்ளே நுழைத்ததில் நிச்சயம் கிரியேட்டிவிட்டி இருந்தது.


அலெக்ஸ் பாண்டியனும் பார்த்து விட்டேன்.
அலெக்ஸ் பாண்டியன் குழுவினரும்...
ஈமு கோழி வளர்ப்பு மோசடி நிறுவனங்களும் ஒன்றே.
ஈமு மோசடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியும்.
இவர்களை ?

பொங்கலுக்கு,
தமிழ் சினிமா ரசிகனாக மூன்று படங்கள் காணக்கிடைத்தன.
உலகசினிமா ரசிகனாக, ஒரு மண்ணும் கிடைக்கவில்லை.
ஆனால்,இன்று விஜய் டிவி பகல் 12 மணிக்கு ‘ஆரண்ய காண்டத்தை’
பொங்கல் விருந்தாக படைக்கிறது.
நன்றி விஜய் டி.வி.  
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


12 comments:

  1. ஆரண்ய காண்டம் ஒரிஜினல் டிவிடிக்காக இன்னும் அலைந்து கொண்டிருக்கிறேன். யாராவது விஜய் டிவியில் போடுவதை ரெகார்ட் செய்து வெளியிட்டால், நல்லது.

    ReplyDelete
    Replies
    1. இன்று போடப்படும் விஜய் டிவி பிரிண்ட் அநேகமாக புண்ணியவான்கள் யாராவது இணயத்தில் ஏற்றி விடுவார்கள்...
      நம்மாளுங்க இதில கில்லாடிங்க நண்பரே.

      Delete
  2. பாக்யராஜ் படத்தோடு ஒப்பிட்டால் இந்த லட்டு சுவை கம்மி தான் ஆனா அந்த படம் பார்கதவங்களுக்கு இது சுவையோ சுவை

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது 100 சதவீத உண்மை.

      நன்றி.

      Delete
  3. அலெக்ஸ் பாண்டியன் தோல்வியடையும் என்பதுமுன்பே தெரிந்த செய்தி தான்.இந்த வருடத்தின் தேறவே தேறாத படங்கள் பட்டியலில் நிச்சயம் இடமுண்டு.

    ReplyDelete
    Replies
    1. அலெக்ஸின் தோல்வி தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமானது.

      Delete
  4. அன்று நாம் விவாதித்ததைப் போலவே தான் நடந்திருக்கிறது.சினிமாவின் மீது மக்களுக்குத் திரும்பியுள்ள தெளிவான பார்வை பறிபோகாமல் காக்கபட்டிருகிறது அலெக்ஸ்சின் தொல்வியின் மூலம்.

    ReplyDelete
    Replies
    1. சிவக்குமார் பேமிலி பண வெறி பிடித்து அலைகிறது.
      திருந்தவில்லையென்றால் வருந்துவார்கள்.

      பருத்தி வீரன் கார்த்தியை கொன்று புதைத்து விட்டு மாளிகை கட்டுகிறார்கள்.
      அது மண் கோட்டையாக நிச்சயம் சரிந்து விழும்.

      Delete
  5. முருக்கமுடியத உண்மை. வந்த புறாவையெல்லமா வறுத்துத் தின்று தீர்ப்பது.காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை தவறாக புரிந்துகொண்டு காற்றோடு சேர்த்து இப்போது மண்ணையும்.

    ReplyDelete
  6. I completely agree with you comments.. KLTA is an in & out entertainment movie..

    Alex pandian lived just bcoz of Santhanam..

    Apart from these i liked Samar too.. Different attempt in tamil cinema.. (except the physcho characters)

    ReplyDelete
  7. விசகாவிற்கு என்ன ஒரு இடுப்புடா. நாலு நாளா தூக்கம் போச்சு. இப்படி காமெடியன்கள் ஜோடியா நடிச்சு எதிர்காலத்தை கேடுத்துகிட்டாலே.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.