Jun 29, 2011

உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவை இல்லை.

உலகசினிமா பார்க்க ஆங்கிலத்தில் மிகுந்த புலமை தேவை என்ற பொதுப்புத்தி நிலவி வருகிறது.
ஹாலிவுட் மசாலா படங்களை பார்க்க வேண்டுமென்றால் ஆங்கில அறிவு தேவைப்படலாம்.
உலகசினிமா பார்க்க ஆங்கில அறிவு அறவே தேவையில்லை.
இதற்க்கு முழு உதாரணம் நான்தான்.
நான் ஆங்கிலப்பாடத்தில் 35 மதிப்பெண் ஆசிரியர்கள் தயவில்தான் பெற்று ஜஸ்ட் பாஸாகியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட நானே சினிமாவின் மேல் உள்ள ஆர்வத்தால் இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட படங்கள் பார்த்து விட்டேன்.
இன்றும் நான் ஆங்கிலத்தில் அறைகுறைதான்.
ஆனால் சினிமா மொழி பழகிவிட்டேன்.

சினிமா மொழி நல்ல உலகசினிமாக்களை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தாலே ந்மக்கு பழகிவிடும்.
சினிமா மொழி பழகிவிட்டால் உலகின் எந்த உலகசினிமாவையும் உள் வாங்க முடியும்.


கோணங்கள் பிலிம் சொசைட்டி சேரிப்பகுதிகளில் பை சைக்கிள் தீப்,சில்ட்ரன் ஆப் ஹெவன் போன்ற படங்களை தொடர்ந்து பலபகுதிகளில் திரையிட்டு வருகிறார்கள்.
படம் முடிந்த பிறகு நடக்கும் கலந்துரையாடலில் படத்தை அந்த மக்கள் அழகாக உள் வாங்கியது மிகத்தெளிவாக வெளிப்படும்.
ஆங்கிலம் படித்த மேதாவிகளை விட அந்த மக்கள் அந்தப்படத்தை அழகாக அலசுவர்.
என்னை கேட்டால் உலகசினிமா பார்க்க ஆங்கிலம் அறவே தேவையில்லை என்று ஆணித்தரமாக சொல்வேன்.

ஒவியத்தை பார்த்து ரசிக்க மொழி தேவையா?
நல்ல சினிமா.... ஒவியம் போலவே உங்களோடு பேசும்.

உலகசினிமா பாருங்கள்.... வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.

Jun 24, 2011

கண்ணதாசன் விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கொடுக்கலாமா?

l
கண்ணதாசன் பால் குடித்து வளர்ந்த பிள்ளை நான்.
காந்திஜிக்குப்பிறகு தனது தவறுகளை,தப்புகளை ,திருவிளையாடல்களை அப்பட்டமாக சுயசரிதை எழுதிய மகான்.

எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது சென்னை ஜாம்பஜாரில் கண்னதாசன் பேசுகிறார் என்ற போஸ்டர் பார்த்து மாலை ஆறு மணிக்கே முதல் வரிசையில் நானும் ஒருவனாக இடம் பிடித்தேன்.
இரவு பத்து மணிக்கு சந்தனசில்க் சட்டையும்,பட்டு வேட்டியுமாக மாப்பிள்ளை போல் வந்தார்.
அப்போது அவர் காமராஜரின் பக்தர்.
கலைஞரையும்,அவரது ஆட்சியையும் கிழித்தார் பாருங்கள்....அடடா...
அத்தனையும் அமில மழை ...
ஆனால் அதில் தமிழ் ஆறாக ஒடியது.
திட்டப்பட்ட கலைஞரே ரசிக்கும் ரசவாத வித்தை இருந்தது.
அறம் பாடுவதிலும் தமிழரசன் அவர்.

அவரது புகழை பேச ஆரம்பித்தால் ராமாயணம் ஆகிவிடும்.
ஒன்றிரண்டை மட்டும் உங்களோடு பகிர்கிறேன்.

அத்திக்காய்... காய்...காய்... பாடல் தெரியும் உங்களுக்கு.
அப்பாடல் பதிவின் போது ஒருவர் கேட்டிருக்கிறார்...
“முக்கியமான காயெல்லாம் சொல்லிட்டீங்க...கொத்தவரைக்காயை விட்டு விட்டீர்களே !”என பகடி பண்ணியிருக்கிறார்.
நெற்றி சுருங்கியது......அடுத்த கணமே தமிழை கொட்டியது.

“என்னை நீ காயாதே...கொற்றவரைக்காய் வெண்ணிலவே”

தமிழ்க்கடல் அல்லவா அவன்.

மணப்பந்தல் என்றொரு படம்.
 காதல் கதை.
 காதலியின் தந்தை மகளின் காதலுக்கு மறுப்பு சொல்லாமல் காதலன் வீட்டுக்கு சென்று திருமணம் பேசி முடிக்கச்செல்கிறார்.
ஆனால் அறியாமல் காதலனின் அண்ணனை பேசி முடிவு செய்து விடுகிறார்
.இந்த சிக்கல்தான் படமே.
தனது காதலனிடம் தன்னை ஒப்படைக்க தகப்பன் போனதை எண்ணி மகிழ்ந்து காதலி தனியே பாடி ஆடுகிறாள்.
இதுதான் சிச்சுவேசன்.

 'அன்று குணத்தோடு மனம் கொண்டு நின்றேன்.
இன்று குலத்தோடு மணம் பேசக்கண்டேன்...'

காதலன் பெயர் குணசேகரன்.
காதலனின் அண்ணன் பெயர் குலசேகரன்.

[பாடல் முதல் வரி....
 ஒரே ராகம்...ஒரே தாளம்...ஒரே பாடல் பாடுதம்மா...]

இரண்டு வரியில் ...இரண்டு மணி நேர படத்தின் கதையை சொன்ன நீதான் எனக்கு திருவள்ளுவர்.


நான் என்றும் கொண்டாடும் கண்ணதாசனுக்கு ஆண்டுதோறும் கோவை கண்ணதாசன் கழகம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு விழா நடத்தி கண்ணதாசன் விருது சிறந்த எழுத்தாளருக்கு வழங்கி கவுரவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கண்ணதாசன் விருது தமிழ்த்தாயின் இலக்கியப்புதல்வன் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
இன்று மாலை 6.00 மணிக்கு கோவை மணி ஸ்கூல் கலையரங்கில் வைத்து அறிஞர் பெருமக்களால் வழங்கப்படுகிறது.
இந்த விருது மட்டுமல்ல...இலக்கியத்துக்கான அனைத்து விருதுகளும் அவரை வந்தடைந்து பெருமை சூடிக்கொள்ளும்.

இது என் இதயம் ஆர்ப்பரித்து சொல்லும் சத்திய வார்த்தை.  

Jun 22, 2011

ஹிந்து பத்திரிக்கையில் என்னை பாராட்டி வந்தக்கட்டுரை

இன்று ஹிந்து பத்திரிக்கையில் என்னைப்பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது.
காரணம் உலகசினிமா.
ஆயிரக்கணக்கான சதுர அடியில் ஆடம்பரமான உள் அலங்காரங்கள் எதுவுமின்றி ஒரு பொட்டிக்கடை போன்று பத்துக்கு பத்தில் கடை நடத்தி வரும் எனக்கு இவ்வளவு பெரிய பாராட்டா !!!!!!!!!!!!!!!!!

நான் ஒரு கதை சொல்லி.
என்னிடம் கதை கேட்டு....
 அதற்க்கு பிறகு டிவிடி வாங்கும் வாடிக்கையாளர்கள் அநேகம்.
இரண்டு டிவிடி வாங்கிப்போக வரும் வாடிக்கையாளர்களை அசத்தி நான்காக வாங்க வைக்கும் வியாபார உத்திதான்.
ஆனால் நான் கதை சொல்லி விற்க்கும் படங்கள் எனது வலைப்பக்கத்தில் இடம் பெறும் படங்களே.
இதற்க்காக என்னை பாராட்டியுள்ளதா தெரியவில்லை.
இந்தப்பாராட்டில் நடுங்கிப்போய் இருக்கிறேன்.

உலகசினிமா பற்றி வரும் வலைப்பக்கங்களிலேயே மிகவும் சாதாரண நடையில் இருப்பது எனது வலைப்பக்கம்தான் என்பதை நான் அறிவேன்...
கருந்தேள்,கீதப்பிரியன்,கனவுகளின் காதலன்,கொழந்த,பிச்சைப்பாத்திரம்,[இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்]போன்ற சிங்கங்கள் உலவும் காட்டில் சிறு நரியாகத்தான் உலவி வருகிறேன்.
உலகசினிமாரசிகன் எனற பசுத்தோல் போர்த்திய புலி இல்லை நான்....
பூனை என்பதை நாடறியாது .நான் மட்டுமே அறிவேன்.

Cinema paradise என்று தலைப்பில் ஹிந்து மெட்ரோ பிளஸ்ஸில் ஒரு முழு பக்கத்துக்கு எழுதித்தள்ளிவிட்டார்கள்.
இக்கட்டுரையை எழுதியவர் கே.ஜெஸி.
உலகசினிமாவை வெகு ஜன மக்களுக்கு இன்னும் முனைப்பாக எடுத்துச்செல்வதே ஹிந்துவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன்.
உலகசினிமாவை என்னுள் விதைத்த செழியனுக்கும்,அதை உரம் போட்டு வளர்த்து வரும்
கோணங்கள் பிலிம் சொசைட்டி,
கோயம்புத்தூர் சினிமா கிளப்,
களம்
போன்ற பிலிம் சொசைட்டிகளுக்கும்
நான் நன்றி தெரிவத்து கொள்கிறேன்.

இக்கட்டுரையில் என்னைப்பாராட்டி சிறப்பித்த இலக்கிய மேதை எஸ்.ராமகிருஷ்ணனுக்கும்,இயக்குனர் சுப்பிரமணிய சிவாவுக்கும் நன்றி.

பார்ப்பதற்க்கு சுமாராக இருக்கும் என்னை காமிரா ட்ரிக் செய்து வெகு அழகாக இளமையுடன் படம் பிடித்து வெளியிட்ட ஹிந்து புகைப்படக்கலைஞர் எஸ்.சிவ சரவணனுக்கும் நன்றி.

எனது இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் எனது வாடிக்கையாளர்கள்.....
உலக சினிமாவை எனக்கு சப்ளை செய்யும் முஸ்லீம் நண்பர்கள்....
எல்லோருக்கும் காலில் விழுந்து சேவித்து நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இது சினிமா கிறுக்கு...அதிலேயாவது மேலே வரட்டும்... என்று என்னை பொறுத்துக்கொண்ட பெற்றோருக்கும்,
திருட்டுத்தனமாக சினிமா பார்ப்பதை கண்டிக்காமல் வளர்த்த தாததா பாட்டிக்கும்,
பத்தாவது வயதிலேயே கல்கி,சாண்டில்யனை அறிமுகப்படுத்தி முப்பது நாள் லீவில் அறுபது தமிழ் சினிமாவுக்கு என்னைக்கூட்டிச்சென்ற பாசமிகு
அத்தைக்கும் நன்றி.
இன்றும் என்னை வேராகத்தாங்கிப்பிடிக்கும் மனைவிக்கும்,என் கனவை
 நனவாக்க உழைக்கும் மகளுக்கும் நன்றி.

உலக சினிமாவை நோக்கிய பயணத்துக்கு என்னை தயார் செய்த பாலச்சந்தர்,பாரதிராஜா,ம்கேந்திரன்,மணிரத்னம்,கமலஹாசனுக்கும் என் நன்றி.

நிறைய்ய...  என்னை பாராட்டியிருக்கிறார்கள்.
 இந்தப்பாராட்டுக்கு தகுதியுடையவனாக என்னை வளர்த்துக்கொள்கிறேன்
கீழே ஹிந்து பத்திரிக்கையில் வந்ததை தந்திருக்கிறேன்.
நன்றி
ஹிந்து பத்திரிக்கை
மெட்ரோ ப்ளஸ்.
22-06-2011


Cinema paradise
K. JESHI
S.P.P Bhaskaran's Hollywood DVD Shopee has a formidable collection of world cinema. He tells K.
Jeshi that he wants to introduce master filmmakers and their masterpieces to as many people as he can

PHOTOS: S. SIVA SARAVANAN 
 
Classic tales S.P.P Bhaskaran with his collection

The smiles and sorrows of Ali and Zohre in Majidi Majid's Children of Heaven linger long after the movie is over. A Persian film, it is set in Tehran yet the visuals speak volumes. “The film came as a breath of fresh air,” says S.P.P Bhaskaran. And it introduced him to the aesthetics of world cinema.
Writer Chezian's writings on world cinema in Ananda Vikatan hooked him to the world of classics. “In his weekly column ‘Ulaga Cinema', Chezian discussed one film maker and his masterpiece. That was my window to world cinema,” says Bhaskaran. He was inspired by writer S. Ramakrishnan too, who picked a social cause and introduced readers to films and books that dealt with the issue.
Bhaskaran couldn't get enough of Vittorio De Sica ( Bicycle Thieves), Satyajit Ray ( Pather Panchali), Akira Kurosawa ( Roshomon) and Stanley Kubrick ( Spartacus). He started Hollywood DVD Shopee in Sai Baba Colony. The six-year-old shop is where writers, filmmakers and all those who follow world cinema come frequently. As he puts it, his clientele runs from Kashmir to Kanyakumari.
His celebrity clients include K. Hariharan, director of LV Prasad Film & TV Academy. Whenever he is in Coimbatore he takes back a collection of DVDs from Bhaskar's shop. Director Ameer Sultan who made the national award winner Paruthi Veeran is a frequent visitor too as is writer Jeymohan.
“Film societies in Coimbatore such as Konangal, and Coimbatore Cinema Club supported me in a big way. IT professionals from Bangalore and even many film lovers abroad are my customers. I send them the DVDs by mail order,” he says.
Bhaskaran has an enviable collection of about 2,000 world movies and an equal number of Hollywood films. They are classified as Vikatan Classics Collection, Iranian, Chinese, Hollywood Classics (from the silent era to the films of 1940s and 50s), Asian and European classics.
He also has award-winning documentaries such as David Attenborough's Life Series and Jacques Perrin's Winged Migration, a documentary on the migratory patterns of birds, shot over the course of three years on all seven continents.
Bhaskaran has made innumerable ad films and worked with noted cinematographers such as Manikandan, Ratnavel, Balasubramaniam, Thiru and Jeeva (the late cinematographer- turned-director). Now, he wants to introduce world cinema to people.
A taste for films
“When someone buys commercial films from me, I give away a classic as a compliment,” he smiles. For children, he suggests Japanese filmmaker Ahayo Miyazaki's films. “His films such as Spirited Away entertains, upgrades their taste in cinema and educates them as well”, he says.
He calls Kimki Duk's masterpiece Spring Summer Fall Winter, an extraordinary film that chronicles the travels of a Buddhist monk.
He tells you about Iranian filmmaker Samira Makhmalbaf's At five in the afternoon a notable film on women liberation.
He fondly recalls an incident when a young girl was so inspired by the Korean film Way Home (a moving story on the bonding between a grandmother and grandson) that she visited her grandmother in the village.
Kurosawa, Bergman, Antonioni, Ghatak, Ray and Chaplin are all-time favourites, cineastes also ask for names such as Robert Bresson (French) and Theo Angelopoulos (Greek) after reading up on IMDB, the Internet Movie Data Base.
Bhaskaran rues the lack of availability of good prints of many Indian classics. “In the West, Criterion buys the rights of classics, re-masters the prints digitally and uses people from literary background to subtitle them,” he says. “We need to upgrade to have a better reach.” Some of Adoor Gopalakrishnan's films are available only in VHS format. Even Ray's “Apu Trilogy” is in good quality print only after Sony intervened and re-mastered it digitally.

Classics can be educative, says Bhaskaran. For instance, the French film Chorus about a good teacher and a bad one is a lesson for teachers and students. The fast paced Winged Migration creates awareness on protecting nature. Schools, colleges, and TV channels should screen such movies, he suggests.
In Tamil Nadu, he says, “Success of middle cinema (a combination of commercial elements and world cinema aesthetics) indicates a positive trend. Films such as Aadukalam, Aaranya Kaandam (made on the lines of Godfather), Azhagarsamiyin Kudirai and the award-winning Thenmaerku Paruvakaatru have been well received.”
A classic upgrades film appreciation, and helps you evolve, he says. “For example, a film like The Motorcycle Diaries tells yow how a journey changed the life of Che Guevara. It inspires you to raise your voice against the inequalities in the society. That is when a film becomes a classic.”
FACT FILE
K. Vijay Kumar, the then Chief of the Special Task Force that tracked Veerappan, sent him a list of inspirational films to be screened at the camp. One such film is “Raid on Entebbe” a 1977 movie directed by Irvin Kershner based on the freeing of hostages at Entebbe Airport, Uganda on July 4, 1976.
Bhaskaran rues that many notable Indian works are plagiarised, such as the film Unknown. “It is a scene by scene copy of Sujatha's novel Nillungal Rajavae serialised in Saavi magazine in 1982. Wikipedia says it's an adaptation from a French novel written in 2003.The original writer deserves credit.”
Bhaskaran records his experiences at www.worldcinemafan.blogspot.com “I'm not a critic. I only introduce good films to people,” he is quick to clarify
Hollywood DVD Shopee is open all days from 10 a.m. to 9 p.m.
For details call 94865-66776/ 90039-17667/ 0422-4382331.
Celebrating classics
Hollywood DVD shopee fans share their experience
Writer S. Ramakrishnan, noted Tamil author, a regular customer and friend
“I picked up six volumes of the art series documentaries that chronicle the works of artists like Picasso and Raphel from Coimbatore. I have bought many Japanese classics too. I even found a copy of the film Tree here, a month before it won top honours at the Cannes.”
Films from international film festival circuits are available too. “Bhaskaran's true interest is to take world cinema to the general public.”
At the Cannes festival, every popular director made a three-minute film on cinema. Bhaskaran has the films of all the 26 directors. You also find Indian art films such as Adoor's Elipathayam and several Shyam Benegal films. “Watching a classic is like reading a good book. You discover so many treasures about life and the grammar of film-making.”

Subramania Siva, director of films such as Thiruda Thirudi, Yogi, and Seedan, has worked with Bhaskaran in ad films
“World War II gave birth to a new wave of European films that hugely influenced film making. That is the lesson I learnt from the classics,” he says. Two films at left a deep impact in him are Roman Polanski's biographical war film The Pianist and Federico Fellini's Le Strada. “Bhaskaran should be credited for initiating film appreciation in Coimbatore.”



E-mail: sppbhaskaran@yahoo.co.in
Send this article to Friends by E-Mail


Jun 19, 2011

அவன் இவன்- இயக்கியது எவன்?

இன்று காலையில் அவன் இவன் பார்க்கப்போனேன்.
பாலா படம் என்றால் முதல் நாளே பார்த்து விடுவேன்.
வெள்ளிக்கிழமை பார்க்க முடியவில்யே என்ற ஏக்கம் சனிக்கிழமை ஜூரமாக வடிவெடுத்தது.
ஜன்னி வருவதற்க்குள் பார்த்து விட எண்ணி ஞாயிறு காலை பத்து மணிக்காட்சி பார்த்து விட்டேன்.
அரங்கு நிறைந்து வழிந்ததுசந்தோசமாக இருந்தது.
அந்த சந்தோசம் படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வடிந்து விட்டது.

டைட்டிலிலேயே படத்தின் தலையெழுத்தை குறியீட்டாக காண்பித்தார்கள்.
ஒரு காங்கிரீட் சுவர் உதிர்ந்து நொறுங்கி குட்டிச்சுவரான பின் அவன் இவன் என்ற எழுத்து கிராபிக்சில் தோன்றியது.
முதல் காட்சியிலேயே ஆரம்பித்த சொதப்பல் படத்தின் இறுதி வரை நீடித்ததில் பாலாவின் கடின உழைப்பு தெரிந்தது.

விஜய்யின் குருவி,வேட்டைக்காரன்,சுறா போன்ற படங்களோடு போட்டி போட்டு ஜெயித்திருக்கிறார் பாலா.

பிதாமகனில் வரும் காட்சிகளை யாருமே காப்பியடிக்காத ஆதங்கத்தில் அக்காட்சிகளை மீண்டும் இப்படத்தில் நுழைத்து வெற்றி பெற்று இருக்கிறார் பாலா.
தனக்குத்தானே சூனியம் வைப்பதில் கலைஞரை மிஞ்சி விட்டார் பாலா.


விசாலை ஒண்ணரைக்கண்ணனாக்கி,ஆர்யா தலையில் காப்பர் கலர் பெயிண்ட் அடித்தால் படம் நூறு நாள்.... என்றுயாரய்யா உனக்கு சொன்னார்கள்?
நான் கடவுள் படத்தில் வரும் சிறு காரெக்டர்கள் இன்றும் மனதில் ஆட்சி புரிகையில் இப்படத்தில் வரும் அனைவரும் டெப்பாசிட் இழந்து விட்டார்கள்.

எனக்கு இந்தப்படத்தில் வந்த கோபம் ராம நாராயணன் படம் பார்க்கும் போது வராது.

காதல் ஒவியம்,நிழல்கள் தோல்வியடைந்த வேகத்தில்...ரசிகர்கள் மேல் உள்ள கோபத்தில் பாரதிராஜா வாலிபமே வா வா என்ற குப்பையை வீசீனார்.
அதற்க்கு நிகராக ஒரு படம் கொடுக்க ஆசைப்பட்டாயா பாலா?

இது என் கோபம் மட்டுமல்ல...ஒட்டு மொத்த தமிழர்களின் கோபம்.
இதை நீ உணர்ந்து நல்லபடம் கொடுப்பாய் என நம்புகிறேன்.

உனது குப்பை படம் ரீலிசாக மாணிக்கத்தை[ஆரண்யகாண்டம்] வெளியேற்றிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள்.

எந்த ஒரு படைப்பாளிக்கும் ஒரு கட்டத்தில் கிரியேட்டிவ் மலட்டுத்தன்மை வந்துவிடும்.
உங்களுக்கு வரவில்லை என்பதை அடுத்தப்படத்தில் நிரூபியுங்கள்.
.

Jun 16, 2011

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க...மயிறானுங்க....

படமா எடுக்கிறானுங்க...மயிறானுங்க.... எனக்காறித்துப்பியபடி தியேட்டரிலிருந்து வெளியே வரும் சாபம் எனக்கு இடப்பட்டிருந்தது.
அந்த சாபத்தை நிவர்த்தியாக்கி என்னை நிறைந்த மனசோடு தியேட்டரில் இருந்து வெளியே அனுப்பிய இயக்குனருக்கு நன்றி.

விளிம்பு நிலை மக்களின் வாழ்வை இத்தனை யதார்த்த்தோடு படைத்த
குமார ராஜா...
இத்தனை நாள் எங்கிருந்தாய்?
நல்லா இருய்யா....

இனி தமிழ்சினிமா இந்தப்பாதையில் பயணிப்பது நல்லது.ஆனால் இந்தப்படத்தை வெற்றி படமாக்கினால்தான் இது சாத்தியமாகும்.
தியேட்டரில் நிறைந்திருக்கும் காலி இருக்கைகள் நம்பிக்கை இழக்க வைக்கிறது.
இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கச்சொல்லி எஸ்.எம்.எஸ் அனுப்பப்போகிறேன்.
என்னிடம் இருக்கும் பணத்தில் இப்படத்தை பார்க்கச்சொல்லி தினத்தந்தி பேப்பரில் விளம்பரமே கொடுப்பேன்.தேதி 15 கடந்தும் வாடகை கிடைக்காத
ஹவுஸ் ஓணர் துப்பாக்கியோடு வந்து விடுவார்.

இந்தப்படம் பார்க்கும் முன்னர் எந்த ஒரு விமர்சனத்தையும் படிக்காமல் போவது நல்லது.

இந்தப்படத்தை பாராட்ட அகிரா குரோசுவா வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்...
காலை சூரிய உதயத்தை பார்க்காமலிருப்பது எவ்வளவு குற்றமோ அவ்வளவு குற்றம் ஆரண்யகாண்டம் பார்க்காமலிருப்பது.

இனி எவனாவது.... “ நான் தமிழ்படம் பார்ப்பதில்லை....
ஒண்லி வேர்ல்டு சினிமாதான் பார்ப்பேன்...
மெலினால்லாம் என்னா படங்க....”
 என ஜல்லியடிப்பவனிடம்
ஒங்கி ஒரு அப்பு விட்டு...., நாயே...ஆரண்யகாண்டம் பார் என ஒங்கிச்சொல்லுங்கள்.
இங்கே எனக்கு கேக்க வேண்டும்.

Jun 13, 2011

Unknown-2011[ஹாலிவுட் படம்]எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி எடுக்கப்பட்டது.

டேக்கன் என்ற ஹாலிவுட் திரைப்படம் திரைக்கதை உத்தியாலும் லீயாம் நீசன் நடிப்பாலும் என்னை மிகவும் கவர்ந்த படம்[இப்படத்தை அப்படியே காப்பியடித்து விருதகிரியாக்கினார் நம்ம விஜய காந்த்]
சமீபத்தில் வெளியான அன்நோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தை
லியாம் நீசனுக்காகவே பார்த்தேன்.
படம் பார்த்து அதிர்ந்து விட்டேன்.
கதை அப்படியே என் ஆசான் சுஜாதா எழுதிய நில்லுங்கள் ராஜாவே நாவலின் அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி .
விக்கிப்பீடியாவில் இது பற்றிய தகவல்களை தேடினேன்.
அன் நோன் [2011]திரைப்படத்தின் கதை 2003ல் வெளியான பிரஞ்ச் நாவல்
Hors De Moi.....என்று கூறியது.
 எழுதியவன் Dider Van Cauwelaert.என்பதும் தெரிய வந்தது.கதையை திருடிய பிரெஞ்ச் களவாணியின் படத்தை பாருங்கள்.
                             

 இந்தக்கதை 1981அல்லது 1982ல் சுஜாதா சாவி என்கிற பத்திரிக்கையில் தொடராக எழுதியது.
நான் அப்போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன்[வருசத்துக்கு 100 ரூபாய்தான் பீஸ்]
நானும் எனது நண்பர்களும் போட்டிபோட்டு படித்த தொடர்.
சாவி வந்த அடுத்த நாள் காலேஜில் நில்லுங்கள் ராஜாதான் பிரதான டாபிக்.
வாராவாரம் அவ்வளவு விருவிருப்பு.

ஒருவன் தனது வீட்டுக்குப்போனால் அவனது மனைவி நீங்கள் யார்? எனக்கேட்பாள்.
 எனது கணவர் என வேறு ஒரு ஆளைக்காண்பிபாள்.
இவனை அவனது பிள்ளைகள்,கூர்க்கா... ஏன் நாய் கூட நம்பாது.
போலிசில் புகார் செய்வான்.
அவர்களும் விசாரித்து விட்டு இவனைத்தான் மெண்டல் என்பார்கள்.
அப்புறம் கணேஷ்-வசந்தை பார்த்து உதவி கேட்பான்.
அதுக்கப்புறம் கேக்கணுமா...இன்னும் ஜெட் ஸ்பீடுல கதை பறக்கும்.

இந்தக்கதையை அப்படியே வரிக்கு வரி...எழுத்துக்கு எழுத்து அப்பட்டமா காப்பியடிச்சு அன் நோன் எடுத்திருக்கானுங்க.

சுஜாதாவின் தீவிரமான வாசகன்...ரசிகன்....ஏன் பக்தன் அப்படிக்கூட என்னை சொல்லலாம்.
நான் வாழ்க்கையிலேயே முதன் முதலாக அவரிடம்தான் ஆட்டோகிராப் வாங்கினேன்.
நான் மிகவும் நேசித்த கமல்,கலைஞர் இவர்களை பர்சனலாக சந்திக்கும் போது கூட ஆட்டோகிராப் வாங்கவில்லை.
சுஜாதாவிடம்தான் முதன்முதலாக வாங்க வேண்டும் எனப்பிடிவாதமாக இருந்தேன்.
அவரை நான் சந்தித்த நாள்...
 அந்தப்பரவசம்...
ஆஹா...
என் உயிர் போகும் வரை மறக்காது.
அந்த அனுபவத்தை தனியாக பதிவிடுகிறேன்.

சுஜாதா கதையை திருடியவன் மேல் கோபப்படாமல் ஆக்கபூர்வமாக சிந்திப்போம்.
அவனால்தான் நில்லுங்கள் ராஜாவே பிரான்சுக்கு சென்று ஹாலிவுட்டில் படமாகி உலகம் பூரா பரவி விட்டது.
இப்போது நமது கடமை உண்மையை உலகறியச்செய்வது.

எப்படிச்செய்யலாம்? சொல்லுங்கள் நண்பர்களே!

பிற்சேர்க்கை: ஒரே நாளில் சுஜாதா வாசகர்கள் என்னுடைய பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டு சந்தோசப்படுத்தி விட்டார்கள்.
கை வலிக்க வலிக்க பதில் பின்னூட்டமிட்டேன்.
வலி இத்தனை சுகமளிக்கும் என்பதை இன்றுதான் கண்டு கொண்டேன்.
என்னுடைய முயற்ச்சியாக இந்த விசயத்தை ஹிந்து பத்திரிக்கையில் வெளியிட முயற்ச்சி எடுத்து வருகிறேன்.
நண்பர்கள் நீங்களும் உங்களுக்கு தெரிந்த ஊடக நண்பர்கள் மூலம் தெரியப்படுத்தி உலகறியச்செய்யுங்கள்.
குறிப்பாக பிரான்ஸ்&அமெரிக்காவில் இந்த விசயம் தீ போல் பரவவேண்டும்.
பேஸ் புக்,ட்வீட்டர் போன்ற இணைய ஊடகங்களை பயன்படுத்தி புயல் போல பரப்புங்கள்.
பிரான்ஸ்,அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை,தொலைக்காட்சிக்கு தெரிய படுத்துங்கள்.
புதிதாக நீங்கள் ஒரு பதிவு எழுதும் போது இந்தக்கொடுமையை....
 உங்கள் கொதிப்பை... உங்கள் வாசகருக்கு தெரியப்படுத்துங்கள்

எழுத்தில் நம்மை சந்தோசப்படுத்திய அந்த காவேரிக்கரை மைந்தனுக்கு நாம் திருப்பி செய்யும் நன்றிக்கடன்.

Jun 11, 2011

POPCORN-நிறுத்து சுகாசினி

நண்பர்களே... பாப்கார்ன் என்ற தலைப்பில்...
எனது கோபம்,சந்தோசம்,அவமானங்கள்,கிடைத்த பாராட்டுக்கள்,சுயபுராணம் எல்லாவற்றையும் கக்க இருக்கிறேன்.
இதில் சில கருத்துக்கள் சிலருக்கு உவப்பா இருக்கும்.
பலருக்கு கசப்பா இருக்கும்.
முடிந்த வரை சுவையாக சொல்ல முயற்சிக்கிறேன்.
முதல் சாட்டையடி சுகாசினிக்குத்தான்
.பதிவர்கள் எல்லோரும் கண்டபடி எழுதுகிறார்கள்
.இதற்க்கு சென்சார் தேவை என ஒரு வெடி போட்டிருக்கு.
எங்க நெல்லை மொழியில குசுவை வெடி எனச்சொல்வோம்.
சினிமாவுக்கே சென்சார் தேவையில்லை என எரிஞ்சுகிட்டு இருக்கும்போது இது பதிவுலகத்துக்கு சென்சார் தேவைன்னு எண்ணை ஊத்துது.
நெஞ்சத்தை கிள்ளாதேயில் சுகாசினியை காதலிக்க ஆரம்பித்து  சிந்துபைரவியில் வெறி பிடித்து அலைந்து நேசித்தவன் நான்.
இந்திரா படம் பார்த்த அன்றே டைவர்ஸ் பண்ணிவிட்டேன்.நிற்க

இந்த அம்மணி என்ன மாதிரி சென்சார் வரணும்னு ஆசைப்படுது...தெரியலை...
ஆனா வந்துச்சு...நான் காலி....
ஏன்...என் நண்பர்கள் கருந்தேள்,கீதப்பிரியன்,கொழந்த,பிலாசபி பிரபாகரன் நெலமை என்னாகும்?
இத்தனைக்கும்,  இந்தம்மா பெண் சுதந்திரம்...பெண்ணுரிமை,பெண்ணீயம் என கண்டபடி சுத்திகிட்டு இருக்கிற ஜாதி.
இப்படி பேசிகிட்டு...சொல்லிகிட்டு...எழுதிகிட்டு திரிஞ்சது திகார்ல உக்காந்திருக்கு...
நண்பர்களே...இந்த அம்மா செக்ஸ் பற்றி அடிக்கடி தனது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லுகிற வசனம் இது....
செக்ஸ் வச்சுக்கிறதும் ஒண்ணுக்கு போகிறதும் ஒண்ணு...
என்னா தத்துவம்!!!!!!!
அதாவது....நாம ஒண்ணுக்கு தினமும் ஒரே இடத்துல போறமா????????
அந்த நேரத்துல....அவசரத்துல...எங்கே இடம் கிடைக்குதோ அங்க போறோம்.
இந்த ஸ்டேட்மெண்ட் கல்யாணத்துக்கு பின்னாடி சொன்னது.
இப்பவே இப்படின்னா...பிராயத்துல என்னா ஆட்டம் ஆடி இருக்கும்.
சிரஞ்சீவி,சுமன்,பானுச்சந்தர்ன்னு இது பார்க்காத மனவாடு கிடையாது.
இதோட ஆட்டம் ஆந்திராவுலதான் அதிகம்.
சரி...இதோட இந்த சாக்கடையிலயிருந்து வெளிய வந்துர்றேன்.
கோபத்தை இறக்கி வைச்சுட்டேன்...
சந்தோசம்?

காலம் காலமா கலைஞருக்கு ஒட்டு போட்டுட்டு மொத தடவை அம்மாவுக்கு போட்டேன்.
அதன் பலனை அனுபவிச்சேன்.
இலங்கை தமிழருக்கு ஆதரவா...ராஜபக்சே கொட்டையை திருகுன மாதிரி ஒரு தீர்மானம் போட்டாங்களே...
கொன்னுட்டாங்க அம்மா...
மனசு நெறஞ்சு சொல்றன்...நன்றி...நன்றி...நன்றி...தாயே...

ஒரு தேர்தலில் என் நண்பரிடம் பந்தயம் கட்டினேன்.
ஜெ ஜெயித்தால் தமிழ்நாட்டை விட்டே போய்விடுவதாக பந்தயம் கட்டினேன்.
நல்ல வேளை நீங்கள் தோற்று என்னை காப்பாற்றினீர்கள்.

கடந்த ஆட்சியில் நடந்த சில நல்ல விசயங்களில் ஒன்று...
சமச்சீர் கல்வி திட்டம்.
ஈகோ பார்க்காமல் இதை உடனே அமல் படுத்த வேண்டும்.
இந்த நல்ல விசயத்திற்க்காக உயர் நீதி மன்றம் வரை போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
அவர்கள் எந்தப்பிரிவு என்பது கூட எனக்கு சரி வரத்தெரியவில்லை.
யாராயிருந்தாலும் அவர்கள் வாழ்க ...வளர்க..

Jun 10, 2011

Life Is Beautiful-1997[இத்தாலி]துன்பம் வரும்போது சிலர் சிரிப்பார்..பலர் அழுவார்..இவன் ?

துனபம் வரும்போது சிரிங்க என்றார் வள்ளுவர்.
இப்படத்தின் நாயகன்...
 மிஸ்டர்.வள்ளுவர் சொன்னதை ஒவர்டேக் பண்ணி புதிய சரித்திரம் படைக்கிறான்
தனக்கு துன்பம் வரும் போது பிறரை சிரிக்க வைத்து மகிழ வைப்பதை கலையாகக்கொண்டு வாழ்ந்து மறைகிறான்.
Vincenzo Cerami துணையோடு எழுதி இயக்கி நடித்து உலகின் அத்தனை
விருதுகளையும் வாரிக்குவித்தார் Roberto Benigini

இப்படத்தை கோணங்கள் பிலிம் சொசைட்டியில் திரையிட்டபோது மிகப்பிரபலங்கள் வந்திருந்தார்கள் .படத்தின் இறுதியில் அவர்கள் சொன்னக்கருத்தை இப்பதிவில் காணலாம்.

இப்படத்தில் தந்தை,தாய்,மகன் என குடும்பமே கொடுஞ்சிறையில் தள்ளப்படுவதை கண்டு நான் நடுங்கிப்போனதை உடன்பிறப்பே உணர்ந்திருப்பாய்.ஆனால் சிறையில் தள்ளிய கொடியவர்களோடு கூட்டணி கண்டு மண்ணோடு மண்ணாய் மக்கிப்போனவன் உன் அண்னன் என நாளை வரலாறு இயம்பும்.  இது போன்ற படங்கள் தமிழில் தொடர்ந்து வருமானால் தமிழ் திரைஉலகமும் எனக்கு ஒய்வு கொடுத்து விட்டதை உணர்ந்து விடை பெற தயாராகி விட்டேன்.

கடந்த ஆட்சியில் இந்த சொசைட்டி மாதம் நான்கு படங்களை திரையிட்டு மக்களை சொல்லொணாத்துயரத்தில் ஆழ்த்தி வந்ததை நான் அறிவேன்.புதிய சட்டமன்ற வளாகத்தை ஒழித்து,சமச்சீர்கல்வியை வங்காள விரிகுடாவில் வீசி.... மக்களுக்கு பல நன்மைகளை தொடர்ந்து எனது கழக அரசு செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள்.இது போன்ற சொசைட்டிகளையும் நாடெங்கும் தடைசெய்து ஆணையிடுகிறேன்.அண்ணா நாமம் வாழ்க.

இந்தப்படம் என் நாட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்பதை அறிந்து உள்ளூர மகிழ்ந்தாலும் வெளியில் காட்டமாட்டேன்.இப்படத்தில் யூதர்களை அழித்து ஒழிக்கும் காட்சிகளை மிகவும் ரசித்தேன்.இலங்கை தமிழர்களை அழித்தொழிப்பதை நண்பர் ராஜபக்சே படமெடுத்து அனுப்பியுள்ளார்.அது இதை விட சூப்பர்.

ண்ணா...இப்படத்துல உள்ள நல்ல சீன் எல்லாத்தையும் உருவி என் படத்துல வச்சுட்டேங்கண்ணா...குருவி,அழகிய தமிழ் மகன் படமும் பாருங்க...
அது என்னோட ஒலக சினிமா.

அல்லோ...அல்லல்லோ..
.இங்க...இங்க...
இங்க பாருங்க...
பேசுறது மட்டும்தான் கேக்கும்...பாக்க முடியாது...மலேசியாவில் இருக்கேன்.
இந்தப்படத்தோட ஹீரோவும் நானும் ஒண்ணு.எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி நடிப்போம்.
ஆனா ஒண்ணு சொல்றன்...இந்த ஜெர்மன் நாசிகளை விட மோசமான பாவிங்க நம்ம தமிழங்க...
நான் போற இடத்துக்கெல்லாம் எவ்வளவு கூட்ட்ம்..
கூட்டம் கூட்டமா வந்தாங்க..
 சிரிச்சாங்க..
ஒட்டை மாட்டும் மாத்தி குத்து குத்துன்னு குத்திட்டாங்க.
 மாப்பு...வச்சீட்டீங்களாடா ஆப்பு

சார்...சார்...
ஸாரி சார்...நல்லா தூங்கிட்டிருந்தீங்க...டிஸ்டர்ப்பண்ணிட்டேன்.உங்ககிட்ட எல்லா டிவிடியும் கிடைக்கும்னு பிரண்ட் சொன்னான்
அண்ணா ஹசாரே,பாபா ராம் தேவ் காமெடி சீரியல் டிவிடி இருக்கா?

Jun 7, 2011

Conviction-English[2010] பாசமலர்

தமிழ் சினிமாவில் மீண்டும் மீண்டும் படமாக்கப்படும் செண்டிமெண்ட்களில் முதன்மையானது அண்ணன் தங்கை.இதன் அடிப்படையில் வந்த முதன்மையான படம் பாசமலர்.சிவாஜி சாவித்திரி நடிப்பில் இப்படத்தில் கலங்காதவர் இருக்க முடியாது.இப்படம் தந்த உணர்ச்சி கொந்தளிப்பு சற்றும் குறையாத அனுபவமாக இருந்தது கன்விக்சன்.அபூர்வமாக ஹாலிவுட்டில் இது போன்ற நல்ல படம் வரும்.உண்மை சம்பவத்தை படமாக்கி இயக்கியவர் டோனி கோல்ட்வின்

ஹாலிவுட் சாவித்திரியாக வருபவர் ஹிலாரி சாங்.இந்த நடிப்பு ராட்சசி ஏற்க்கெனவே பாய்ஸ் டோண்ட் கிரை,மில்லியன் டாலர் பேபி படத்தில் நம்மை கலங்கடித்தவர்.தனது தேர்ந்த நடிப்பால் இப்படத்திலும் நம்மை  கட்டிப்போடுகிறார்.இவருக்கு சற்றும் குறையாமல் ஈடு கொடுத்து நம்மை வெல்கிறார் அண்ணனாக வரும் சாம் ராக்வெல்.இவரது அனாயசமான  நடிப்பு நமது ரகுவரனை ஞாபகப்படுத்தியது.இந்த இருவரது நடிப்புதான் படமே.
யான் பெற்ற இன்பத்தை பெற உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
இப்படத்தில் வரும் கதை உண்மைச்சம்பவம் என்பதிலேயே ஒரு கனம் மனதில் ஏறிவிடுகிறது.கென்னியை ஒரு பெண்ணை கொலை செய்த குற்றத்திற்க்காக கைது செய்து வலுவான சாட்சியங்களை தயார் செய்து ஜெயிலில் தள்ளுகிறாள் ஒரு போலிஸ்காரி.
தனது சகோதரனை வெளியே கொண்டு வர திறமையான வக்கீலை வைத்து வாதாடியும் தோற்றுப்போகிறாள் சகோதரி பெட்டி.
சாட்சியங்கள் வலுவாக இருந்தால் ராம்ஜெத்மலானி வாதாடினால் கூட ஜாமீன் கிடைக்காது.

தனது சகோதரனை வெளியே கொண்டு வர எல்லா முயற்சிகளும் தோற்றுப்போன நிலையில்  தானே வக்கீலாக முடிவெடுக்கிறாள்.
வக்கீல் படிப்பை ஒரு தவமாக மேற் கொள்கிறாள்.ப்தினெட்டு ஆண்டுகள் போராடிய பின்னர் வெற்றி பெறுகிறாள்.இப்போராட்டத்தில் இழந்தது அநேகம்.
பாசமலர்கள் இணையும் இறுதிகாட்சி ந்ம் மனதில் கல்வெட்டாய் பதியும்
.சகோதரி பெட்டி இது போன்ற அப்பாவிகளை  ஜெயிலில் இருந்து விடுவிப்பதையே ஒரு இயக்கமாக கொண்டு வாழ்ந்து வருகிறார் இன்றும்.

அண்ணன் தங்கை பாசத்துக்கு தமிழில் பாசமலர்,முள்ளும் மலரும்,கிழக்கு சீமையிலே என சொல்லிக்கொண்டே போகலாம்.ஹாலிவுட்டில் ஒன்றே ஒன்றுதான்.
அது கன்விக்சன்.

Jun 2, 2011

இடைவேளை

மே 20ம் தேதி ஒரு சிறு அறுவை சிகிச்சை.கழுத்தில் ஒரு கட்டியை டென்னிஸ் பால் சைசுக்கு செல்லமாக வளர்த்து வந்தேன்.என்னை மயக்கமடைய வைத்து எனக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்து விட்டார் டாக்டர்.இப்போது பயாப்ஸி ரிப்போர்ட்டும் வந்து விட்டது.
எல்லாம் நார்மல்.
வீட்டுக்கு வந்ததும் என் மனைவி ஒரே ஒரு கண்டிசன் போட்டாள்.
“கம்ப்யூட்டர் பக்கம் போகக்கூடாது”
‘எப்போ போலாம்?’
 ‘10 நாள் அது கிட்டேயே போககூடாது’
‘சரி..தாயே...’
இந்த விடுமுறையில் தினமும் இரண்டு படம் பார்த்தேன்.
கொஞ்சம் தெம்பு வந்ததும் நண்பர்கள் வலைப்பக்கங்களை மேய்ந்து கமெண்ட் போட்டேன்.
இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக தேறி பார்த்து ரசித்த படங்களை பதிவிடுகிறேன்.
ஆப்பரேசன் தியேட்டருக்கு என்னை ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லும் போது ஒரு கேள்வி பிறந்தது.
அல்பசினோவை ஒரு படத்தில் முதல் காட்சியிலேயே ஸ்ட்ரெச்சரில்  கொண்டு செல்வார்கள். [பிரையன் டி பால்மா இயக்கத்தில் வந்தது]
அது என்ன படம்?
தெரிந்தால் சொல்லுங்கள்!