


தன் வளர்ப்பு பெற்றோர் மறைவுக்குப்பிறகு தன் ஒரிஜினல் தாயைத்தேடி முயற்சித்து கண்டுபிடித்து விடுகிறாள்.தொலைபேசியில் தன் தாயை நேரில் காண விருப்பம் தெரிவிக்கிறாள்.
பொது இடத்தில் இருவரும் சந்திக்கின்றனர்.மகளைக்கண்ட தாய் அதிர்ச்சியுறுகிறாள்.காரணம் மகள் ஹார்டென்ஸ் கறுப்பினம்.தாய் சிந்தியா வெள்ளையினம்.ஹார்டன்ஸ் தன் மகளாக இருக்க வாய்ப்பே இல்லை என மறுக்கிறாள் சிந்தியா.ஆதாரங்களை காட்டி நிறுபிக்கிறாள் ஹார்டன்ஸ்.உண்மை அறிந்த பிறகு குற்றஉணர்ச்சியில் கதறுகிறாள் சிந்தியா.தனக்கு 21வயதில் ரோக்ஸேன் என்ற மகள் இருப்பதாகவும் அவளுக்கு உண்மை தெரியக்கூடாது என்று உறுதிமொழி வாங்குகிறாள் சிந்தியா.பின்னர் அடிக்கடி ரகசியமாக சந்தித்து உறவை பலப்படுத்துகின்றனர்.
தனது சகோதரன் மோரிஸ் வீட்டில் நடைபெறும் ரோக்ஸேன் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹார்ட்டனை அழைக்கிறாள் சிந்தியா.அக்குடும்பம் ஹார்ட்டனை ஏற்றுக்கொண்டதா? என்பதே கிளைமாக்ஸ்.



உறவுகளின் இணைப்பே மெல்லிய நூலிழையில் இயங்குகிறது....அதை எவ்வாறு பலப்படுத்துவது என்பதை பாடமாக்கியிருக்கிறார்
மைக் லீ.
சிந்தியா
கருப்பின மகள் ஹார்டென்ஸ்
வெள்ளையின மகள் ரோக்ஸேன்
சகோதரன் மோரிஸ்
மோரிஸ் மனைவி மோனிகா
இந்த பஞ்சபாண்டவர்கள் இப்படத்தை இதிகாசமாக்கியிருக்கிறார்கள்.
கறுப்பினத்தவரின் மரணம்....வெள்ளையினத்தவரின் திருமணம் எனத்துவங்கும் அறிமுகக்காட்சியே இப்படம் உலகசினிமா என்று முத்திரை குத்தி விடுகிறது.
ஒரு கதாபாத்திரத்தின் தன்மை என்ன?அப்பாத்திரத்துக்கு ஏற்ப்படும் பாதிப்பு என்ன?அப்பாதிப்பின் தன்மையை எவ்வாறு அவர்களது உடல்மொழியால் வெளிப்படுத்துவது...என்பதை இப்படத்தின் மூலம் கற்க்கலாம் நமது இயக்குனர்கள்...குறிப்பாக மிஷ்கின்.