கோரஸ் ஜாலியான 10000வாலா.....
நான் மிகவும் ரசித்த ப்ரெஞ்ச் படம்..இயக்கம் Christophe Barrtier.
இந்தப்படம் ஒரே ஸ்ட்ரோக்கில் உங்களை வீழ்த்தி விடும்.....ஆட்டோகிராப் மாதிரி....
நீங்கள் படித்த பள்ளிக்கு கூட்டிச்செல்லும்..உங்கள் ஆசிரியரை ஞாபகப்படுத்தும்..
இப்படத்தின் வசியத்தன்மைக்கு...வெற்றிக்கு இதுதான் காரணம்...
நான் கல்விஅமைச்சரானால் இப்படத்தை எல்லா டீச்சர்களையும் பார்க்க ஆணையிடுவேன்..
குட் டீச்சர்..பேட் டீச்சர் இரண்டுக்குமே உதாரணம் இப்படத்தில் இருக்கிறது.
கிட்டதட்ட சிறுவர் ஜெயில் மாதிரி ஒரு ஸ்கூல்.அதற்க்கு நல்லாசிரியராக வருகிறார் நம்ம கதாநாயகன்.இம்மென்றால் அடி...ஏனென்றால் உதை கொடுக்கும் தலைமை ஆசிரியர்தான் வில்லன்...அத்தனை அராத்து மாணவர்களையும் இசையால் வசமாக்குகிறார் நம் நாயகன்..தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி மட்டும் பரிசாகப்பெறும் நாயகன் ஒரு மாணவனுக்கு வெற்றி விருந்தளிக்கிறார்...
இப்படம் என் ஆசிரியரை ஞாபகப்படுத்தி உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்க வைத்தது.என் வகுப்பில் என்னோடு ஆறு பேர் ஆங்கிலத்தில் புலமை படைத்தவர்கள்..35 மார்க் எடுத்தால்தான் பாஸென்ற கொடுமையான சட்டம் நிலவி வந்த அந்தக்கால SSLC நான்..15 நாள் எங்களை அவரது வீட்டில் சிறை வைத்து சாப்பாடும் போட்டு பாடம் எடுத்து பாஸாக்கினார் கடமை கண்ணியம் மிக்க எனது ஆசான் திரு.ராஜ்குமார்.
வருடாவருடம் மீசை,கிருதா கெட்டப் சேஞ்ச் செய்வார் கமல் மாதிரி..
அப்பாடா...கமலை கொண்டு வந்துவிட்டேன்..கமலைப்பற்றி பேசுவது... நினைப்பது... சுகம்..
சென்னையில் நானும் விக்ரம் தர்மாவும் பக்கத்துவீடு..மருதநாயகம் பற்றி பேசும் போது சொன்னார் இந்தச்செய்தி.....மலை உச்சியில் இருந்து குதித்து தண்ணீருக்குள் மறைந்து போவதாகக்காட்சி..லொக்கேசன் ஒகனேக்கல்..வெள்ளம் பெருக்கெடுத்துக்கொட்டும் அருவி...ஒயர் கட்டி டம்மி வைத்து ஒத்திகை பார்த்தால்..... ஒரே ஒரு இடத்தில்.....மட்டும்...... சரியாக குதித்தால்..... மேலே இருந்து விழுகின்ற வேகத்தை..... உள் வாங்குகின்ற ஆழம் இருந்தது .மற்ற இடத்தில் விழுந்தால் தண்ணீருக்குள் ஒளிந்திருக்கும் பாறையில் மோதி மரணம் நிச்சயம்.டூப்பும் ரெடி..12 காமிராவும் ரெடி..டேக்கிற்க்கு ரெடியாகும் போது.... கமல், நான் ரெடி ...டூப் வேண்டாம்..... என்றார்..மொத்த யூனிட்டும் நடுங்கிவிட்டது...யார் சொல்லியும் கேட்காமல் குதித்தேவிட்டார்..அது மட்டுமல்ல...விழும் வேகத்தில் சற்று ஸ்விங் செய்து ஒரு பாறையில் காலை ஊன்றி மிதித்து....கரணம் போட்டு... சரியாக பள்ளத்தில் குதித்தார்..இன்றும் நம்மிடையே இருக்கிறார்..ஜாக்கிச்சான் கூட இந்த ஸ்டண்ட் செய்தது இல்லை..அனைத்து ஹாலிவுட் படத்துக்கும் இந்த ஒரு காட்சியில் சவால் விட்டிருந்தார்..எடிட் செய்து பார்த்தால் அத்தனை அழகு அந்தக்காட்சி.இந்தப்படம் வெளிவரவில்லையே என்று கலங்கினார் விக்ரம் தர்மா..
1991ம்வருடம்..... ஒரு ஹிந்திப்பட சூட்டிங்...விஜிபி கோல்டன் பீச்சில்..நான் எட்டி பார்த்தேன்.ஒரு ஜீப் பானட்டில் இருந்து குதிக்கும் காட்சி..குதித்தவர் டூப்..நடித்தவர் ரஜினிகாந்த்.