May 21, 2013

நல்ல ‘நேரம்’ வந்தாச்சு !


நண்பர்களே...
தமிழ் சினிமாவுக்கு நல்ல நேரம் வந்தாச்சு.
பழையன கழிந்தாச்சு.
புதியன புகுந்தாச்சு.
சரியான திரைக்கதையும்,
கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான புதியமுகங்களும்,
பக்க வாத்தியங்களாக தொழில் நுட்பக்கலைஞர்களும் இருந்தால்,
ஜெயிக்கலாம் எனச்சரியான  ‘நேரத்தில்’ நிரூபித்து இருக்கிறார்கள்.

விஸ்வரூபம், பரதேசி, சென்னையில் ஒரு நாள்...
இந்த படங்களின் வரிசையில் என்னை மிகவும் கவர்ந்த படம் ‘நேரம்’.
மேற்சொன்ன படங்களின் வரிசையில் ‘நேரம்’ படத்தை இணைத்திருப்பதே...
படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனுக்கு,
ஆகச்சிறந்த பாராட்டாக இருக்கும்.


கெட்ட நேரம் , ‘360’ டிகிரி சுற்றி நின்று,
பல ரூபங்களில்...பல்வேறு திசைகளில் தாக்கும்.
அதில், ஒரு திக்கில் நின்று  தாக்கும் கெட்ட நேரம் மட்டும்...
கொஞ்சம் வலுவிழந்து இருக்கும்.
அந்த  ‘கேப்பில்’ புகுந்து வெளியேற முடியும் ;
அதுவே நல்ல நேரம்  என பாஸிட்டிவாக கதையையும்,
திரைக்கதையையும் வடிவமைத்த இயக்குனருக்கு,
எனது நன்றி கலந்த பாராட்டு.

 ‘ரன் லோலா ரன்’ படத்தின் இன்ஸ்பிரேஷனில் கதையை எழுதி,
திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தி ஜெயித்து விட்டார் இயக்குனர்.

ஒட்டு மொத்தமாக தமிழ் சினிமாவை ‘சூது கவ்விருச்சோ’ என அச்சப்பட்டுக்கொண்டு இருந்த ‘நேரத்தில்’ ,
நம்பிக்கை ஊட்டி இருக்கிறார் இயக்குனர்.
திருடுவது... திகட்டாது,
கற்பழிப்பதே... களிப்பு,
ஏமாற்றுவதே... எதிர்காலம்,
உண்மையை...ஊத்தி மூடு,
என்று புதிய ஆத்திச்சூடி எழுதிக்கொண்டு,
‘டொரொண்டினோ’ பேரப்பிள்ளைகள்
தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என நடுங்கிப்போயிருந்தேன்.
‘அச்சம் தவிர்’ என அடைக்கலம் கொடுத்த இயக்குனரை உச்சி முகர்ந்து பாராட்டுகிறேன்.

நான் இத்தனை உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதற்கு காரணமான,
ஒரு காட்சியை மட்டும் விளக்குகிறேன்.
கதாநாயகன், தன்னுயிர் போகப்போகும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க,
ஒருவனை கொள்ளையடிப்பதே தீர்வு என்ற சூழ்நிலையில்,
‘கொள்ளை செய்யப்பட வேண்டியவன்’ உயிர்...
விபத்தால் கொள்ளை போகப்போகிறது என அறிந்ததும்,
உயிரைக்காப்பாற்றும் மனிதாபிமானம் கொடி கட்டி பறக்கும் காட்சிதான் என்னை வசியப்படுத்தி...ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறது.
‘கொள்ளை செய்யப்பட வேண்டியவன்’ என்ற  ‘பதம்’,
படம் பார்த்த நேயர்களுக்கு விளங்கும்.


நாயகியாக நடித்த ‘நஸ்ரினா’ பற்றி நாலு வார்த்தை சொல்லவில்லையென்றால் ரோட்டில் நடமாட முடியாது.
இவளை பார்க்கும் போதெல்லாம் இளையராஜாவின் ‘டிக்..டிக்..டிக்..’படப்பாடலில் வரும் ‘தகிர்தனா...திரனா...தீம் திரனா’ என்ற டியூன் ‘லூப்பில் ரிப்பீட்டாகிறது.
இந்த  ‘அழகு அஞ்சலிக்கு’...
மலையாளத்தில் மார்க்கெட் போக சாபமும்,
தமிழில் நல்ல இயக்குனர்களும் கிடைக்க வரமும் வழங்குகிறேன்...
தமிழ் கூறும் நல்லுலகின் சார்பாக.


நடிகர்கள் அனைவரும் அசத்தி இருக்க,
திருஷ்டி பரிகாரமாக ‘தம்பி ராமையா’  மட்டும்.
மிகை நடிப்பில், பிரகாஷ்ராஜை தோற்கடிக்கும்  ‘போரில்’ ஈடுபட்டிருக்கிறார் இவர்.

திரைக்கதையை, தங்கள் தொழில் நுடபத்தால் மேலும் மெருகேற்றியதில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளர் இருவருமே சம பங்கு.
சில காட்சிகளில்  ‘குறும்பட பாணி’ சொதப்பல்கள்  இருந்தாலும்,
பல காட்சிகளில் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆனந்த் சி. சந்திரன்,
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன், 
இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரு நல்ல வணிக சினிமாவை தமிழுக்கு வழங்கிய,  
‘நேரம்’ படக்குழுவினரை வாழ்த்தி வெற்றியை பரிசளிப்போம்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

15 comments:

 1. நேரம் நல்ல நேரம் தான்...பார்க்கணும்...

  ReplyDelete
  Replies
  1. பாக்கணும் நெனைச்சாலே...நல்ல நேரம் வந்தாச்சுன்னு அர்த்தம்.

   Delete
 2. நல்ல விமர்சனம்... ஆத்திச்சூடி மாற்றம்-அருமை...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு நன்றி...புன்னகை அரசரே.

   Delete
 3. பாடல்களின் வித்தியாசம் படமும் வித்தியாசமாய் இருக்குமென்றே நினைக்கத் தோன்றியது... உங்கள் விமர்சனம் அதை உண்மை என்கிறது...

  ReplyDelete
 4. மிகுந்த மன அழுத்தத்தில் இப்படம் பார்க்க போயிருந்தேன்.
  பட ஓட்டத்தில், அனைத்தும் காற்றில் கரைய...
  மிகுந்த நம்பிக்கையோடு வீடு திரும்பினேன்.

  கருத்துக்கு நன்றி மேடம்.

  ReplyDelete
 5. Anna, what are you saying? Soodhu kavvum nalla padam illaya?

  ReplyDelete
  Replies
  1. படம் நல்ல படம்தான். அதில் இருக்கும் கருத்தாக்கத்தில் உடன்பாடில்லை.அவ்வளவுதான்.

   Delete
 6. சார், அருமையான விமர்சனம், உங்களிடம் இருந்து சூது கவ்வும் படத்தின் விமர்சனத்தையும் எதிபர்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மனோஜ்.

   சூது கவ்வும் படத்திற்கு ஆய்வு செய்து விரிவாக எழுதுவேன்.

   Delete
 7. i watch this movie but many scenes i guess for example the vilan kidnapping the girl

  ReplyDelete
  Replies
  1. ரசிகர்களுக்கு, எதிர்பாராத திருப்பமாக அக்காட்சியை இயக்குனர்
   உருவாக்கவில்லை.
   அதனால் இது போன்ற காட்சிகளை நம்மால் யூகிக்க முடியும்.
   இங்கே நீங்கள் யூகிக்க முடிவதையே திருப்பமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

   Delete
 8. vilan a patha oru payam varala

  ReplyDelete
  Replies
  1. நிஜ வாழ்க்கையில்,
   நெறைய பேர்...கொழந்த முகமும்...வில்லத்தனமும் கொண்டிருப்பதை பார்க்கலாமே !

   Delete
 9. சிறப்பான விமர்சனம்... பதிவிற்கு நன்றி..

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.