May 6, 2013

திரைக்கதை ரெடி!


நண்பர்களே...நீண்ட இடைவெளிக்குப்பிறகு பதிவுலகம் வந்திருக்கிறேன்.
காரணம் ஒரு திரைப்படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

டிசம்பர் 31 அன்று டிவிடி கடையை சாத்தியதில், எதிர்காலத்தை பற்றிய திட்டமிடல் இருந்தது.
வெற்றிகரமாக ஒரு திரைக்கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டேன்.
ஜனவரி1 துவங்கிய பணியை,
ஏப்ரல் 14க்குள் வெற்றிகரமாக முடித்து விட்டேன்.

என்னுடைய இந்த திரைக்கதைக்கு,  நிச்சயமாக ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’ தேவைப்படாது.
எதிர் காலத்தில், மற்றொரு திரைக்கதைக்கு... ஒரு வேளை தேவைப்பட்டால் திரு.கமல்ஹாசனிடம்தான் செல்வேன்.
இந்தியாவிலேயே அவருக்கு இணையான ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’ கிடையாது.
 ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’  என்ற தகுதி...நிச்சயம் ஒரு  ‘மொழி பெயர்ப்பாளருக்கு’ இருக்காது.

புதுமுகங்கள்தான் இத்திரைக்கதைக்கு தேவை.
இருந்தாலும் திரைக்கதை,
இப்படத்திற்கான பட்ஜட்... இரண்டு கோடி என தீர்மானித்திருக்கிறது.
ஒரு உத்தம தயாரிப்பாளருக்காக இத்திரைக்கதை காத்திருக்கிறது.
நிச்சயம் இத்திரைக்கதை வசூலை வாரி வழங்கும்.
காரணம் முழுக்க வணிக ரீதியில் இத்திரைக்கதையை வடிவமைத்து உள்ளேன்.
உருவாக்கத்தில் உலகசினிமாவின் தரம் நிச்சயம் இருக்கும்.


நடிகர்கள் பிருத்திவிராஜ், பிரசன்னா போல் அழகும் திறமையும் ஒருங்கே அமையப்பெற்ற கதாநாயகன் தேவை.
தகுதியானவர்கள் தொடர்பு கொள்க.


ஒரு காதல் பாடலை மாண்டேஜில் உருவாக்க எண்ணியுள்ளேன்.
நண்பர்கள் ஐடியா தந்து உதவலாம்.
பாலுமகேந்திரா, மகேந்திரன் பாணியில் புதிய களத்தில் இருக்கவேண்டும்.
‘கிளிஷேவை’ முற்றிலும் தவிற்க எண்ணியுள்ளேன்.
என்னுடைய காதல் அனுபவங்கள் இன்று கதைக்குதவாது.
மை டியர் யூத்ஸ்...உதவுங்கள்.... ப்ளீஸ்.
[ பின்னணியாக,
இளையராஜாவின் ‘காதல் ஓவியம்...பாடும் காவியம்’
ஏ.ஆர். ரஹ்மானின் ‘என்னவளே...அடி என்னவளே...போன்ற பாடலை கற்பனை செய்து கொள்க.]

ஐடியா உபயதாரர்கள் தொடர்பு கொள்ள...
sppbhaskaran@yahoo.co.in

இரண்டு கோடியுடன் எனது தயாரிப்பாளர் எங்கோ இருக்கிறார்.
நான் அவரை தேடி கண்டு பிடிக்க வேண்டும்.
முயற்சி திருவினையாகும்.

விரைவில்... நல்ல செய்தியோடு வர வாழ்த்துங்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

59 comments:

 1. சார்...வாழ்த்துக்கள்..நான் எப்போ ஷூட்டிங் வரணும்..எவ்ளோ பேமண்ட் தருவீங்க...ஹாஹாஹா...

  ReplyDelete
  Replies
  1. அம்மணிகளுக்காக ஏங்கி அலையும் ஒரு காரெக்டர் இருக்கிறது.
   செய்வீர்களா?

   பேமெண்ட் விவகாரம் புரடக்‌ஷன் மானேஜருக்குத்தான் தெரியும்.

   Delete
 2. வாழ்த்துகள் சார்.. உங்கள் திரைப்படம் விஸ்வரூப வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே...

   கவிஞர் வாக்கு பலிக்கட்டும்.

   Delete
 3. ji
  manamaarntha vazhthukkal. thaangal thirai ulagil vetri kodi naata iraivanai prarthikkiraen. rasanaiyana tharamana commercial cinemavin moolam thaangal pugazh peravendum (paravavendum ) enbathu enathu avaa.
  anbudan
  sundar g rasanai chennai

  ReplyDelete
 4. சார் வாழ்த்த வயதில்லை ஆனால் மிக்கமகிழ்ச்சி.கிளிஷேவை தவிர்க்க நினைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை என்பது நம்பிக்கை அளிக்கிறது.உங்களுடைய blog மூலம் நான் கற்ற விஷயங்கள் ஏராளம்.அதை வைத்து கூறுகிறேன் நீங்கள் இயக்கப்போகும் சினிமாவிற்கு மினிமம் கேரன்ட்டி உறுதி.மீதியை உங்கள் உழைப்பு உங்களுக்கு கட்டாயம் ஈட்டுத்தரும் என்று மனதார நம்புகிறேன்.

  ReplyDelete
 5. நான் பதிவுலகில் பெரிதும் மதிக்கும் அண்ணன் பாஸ்கரன் வெற்றி பெற வாழ்த்துகள்....!கண்டிப்பா வெற்றி பெறுவீங்க..!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சுரேஷ்குமார் அவர்களின்...நிறைந்த மனதிற்கு நன்றி.

   Delete
 6. உங்களுடைய திட்டமிடலே வெற்றியை காட்டுகிறது திரையில் காண ஆவலாய் ??

  ReplyDelete
  Replies
  1. வெள்ளமென பெருகி வரும் வாழ்த்துக்கள் எனது பொறுப்பை அதிகப்படுத்துகின்றன.
   நன்றி நண்பரே.

   Delete
 7. வாழ்த்துக்கள் நண்பரே கண்டிப்பா வெற்றி பெறுவீங்க

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தில் ஒலிக்கும் திண்ணம்...என் எண்ணத்தை ஈடேற்றும்.
   நன்றி நண்பரே.

   Delete
 8. நண்பர் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 9. அருமையான செய்தி சார்... திரையுலக வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. "அம்மணிகளுக்காக ஏங்கி அலையும் ஒரு காரெக்டர் இருக்கிறது.
  செய்வீர்களா?"

  அம்மணியா ?
  அம் "money" யா?

  ReplyDelete
 11. விஸ்வரூப வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. முதலில் வாழ்த்துகள்... பாஸ்கர் சார்...


  ‘ஸ்கிரிப்ட் டாக்டர்’ என்ற தகுதி...நிச்சயம் ஒரு ‘மொழி பெயர்ப்பாளருக்கு’ இருக்காது.// சான்சே இல்லை..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜாக்கி.

   Delete
 13. இந்த கேரக்டரை எனக்குக் கொடுங்கள்.
  ஏனெனில் நான்தான்
  அம் "money" தேடி ரொம்ப நாளாக அலைந்து கொண்டிருக்கிறேன்.

  நானும் உங்களைப் போல, பல திரைக்கதைகள் அமைத்து, காத்துக் கொண்டிருக்கிறேன்.
  நீங்கள் குறிப்பிட்ட money இருந்தால்,
  இதற்குள் திரைப்படங்கள் ரெடி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் போட்டாவை மெயிலில் அனுப்பவும்.

   Delete
 14. மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


  தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
  அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
  அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி.

   மின்சாரத்தை தராமல், மின் கட்டண உயர்வை தந்தால் இந்த ஆட்சிக்கு சமாதிதான்.

   இச்செய்தியை முகநூலிலும் பகிர்கிறேன்.

   Delete
 15. உங்களின் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற அட்வான்ஸாக இப்போதே என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாஸ்கரன் ஸார்! உலக சினிமாக்களையும் உள்ளூர் சினிமாக்களையும் ரசித்துப் பார்த்த தேர்ந்த ரசனை மிக்க ரசிகர் நீங்கள் என்பதாலும், க்ளிஷேக்களைத் தவிர்க்க விரும்பும் எண்ணத்தாலும், இளசுகளின் உதவியை ஈகோ இனறிக் கேட்டாதாலும் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் உங்கள் முயற்சி வெற்றிபெறும் சாத்தியம்தான் என் கண்ணுக்குத் தெரியுது. மீ்ண்டும் நல்வாழ்த்துகள்! (ஜீவாவுக்கு பெண்களை துரத்தற கேரக்டர் தந்தா, நிச்சயம் எனக்கு ஹீரோயின் அப்பா கேரக்டர் தந்துடணும். ஹி... ஹி...!)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்தை அடி உரமாக்கி நல்ல சினிமாவை பயிர் செய்வேன்.

   அமெரிக்க மாப்பிள்ளை காரெக்டர் இருக்கிறது. ஓகேவா.

   Delete
 16. உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ராஜ்.

   வெற்றிகரமாக... ஐஸ்வர்யத்துடனும், ஆரோக்கியத்துடனும் தாயகம் திரும்ப வாழ்த்துகிறேன்.

   Delete
 18. முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் பாஸ்கரன்!

  ReplyDelete
 19. எதாவது வாய்ப்பு இருந்தால் சொலோங்க

  ReplyDelete
  Replies
  1. தயாரிப்பாளர் எனக்கு, முதலில் வாய்ப்பு வழங்க வேண்டும்.
   அதன் பின்னர்தான் நான் வாய்ப்பு வழங்க முடியும் நண்பரே!

   Delete
 20. congrats sir. use your script wisely and wish u all the best for your movie. hope it you will get a good producer and finish the movie sucessfully... (after your movie completed dont arrange special show for anyone. especially bloggers :- )

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.

   [தங்கள் எச்சரிக்கையை கவனத்தில் கொள்கிறேன்]

   Delete
 21. Congratss. All the best..

  ReplyDelete
 22. வாழ்த்துக்கள் பாஸ்கரன்

  ReplyDelete
  Replies
  1. முப்பத்து முக்கோடி தேவர்கள் வந்து வாழ்த்தியது போல் உணர்கிறேன் நண்பரே.
   நன்றி.

   Delete
 23. வாழ்த்துக்கள் பாஸ்கரன்ஜி.. அடிச்சு ஆடுங்க.

  ReplyDelete
 24. Congrads Sir.Do your best.

  ReplyDelete
 25. நன்றி நண்பரே.

  பதிவெழுத வந்த போது, சீராட்டி பாராட்டிய நண்பர்களில் நீங்களும் ஒருவர்.
  எனக்கு, உங்களது வாழ்த்து தனித்துவமானது.

  ReplyDelete
 26. இந்த புதிய பாதை...உங்களை உங்களின் இலக்கிற்கு சிறப்பாக அழைத்துச்செல்ல என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்துக்கள்...வெற்றிப்பாதைக்கு வழி காட்டுகிறது.
   நன்றி.

   Delete
 27. Vaaltthukkal.... By the way any chance to Assistant Director inform me...

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. Vetri adaiya vazhthukkal sir..

  ReplyDelete
 30. இன்று படித்தேன். என்ன ஆச்சு, தயாரிப்பாளர் கிடைத்தாரா?

  ReplyDelete
 31. sir any one scene give to me

  ReplyDelete
 32. விரைவில் நல்லவை நடக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 33. வாழ்த்துகள்... பாஸ்கர் சார்...

  ReplyDelete
 34. மனமார்ந்த வாழ்த்துகள் சார்

  ReplyDelete
 35. I am a temporary handy caped person unga film-la enakku oru role kidaikuma?

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.