May 19, 2013

பதிவுலகின் அஞ்சலி !


நண்பர்களே...
நேற்று சனிக்கிழமை 18 - 05 - 2013 அன்று,
பதிவர் பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
பதிவுலகமே இயங்காமல் மவுன அஞ்சலி செலுத்தியது.
பேஸ்புக்கில் கூட, தினமும் ஸ்டேட்டஸ்  போடும் பலர்,
நேற்று கருத்திடாமல் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அனைவருக்கும் நன்றி.

கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சிலரை நான் நன்கு அறிவேன்.
பஹ்ரைனில் குண்டு வெடித்தால் பதறுவார்கள்.
பக்கத்து வீட்டில் இழவு விழுந்து கிடக்கும் போது, பாயசம் சாப்பிடுவார்கள்.
நேற்று ஒரு  ‘இலக்கிய வியாதி’ பதிவர், பதிவு போடும் போது...
அவர்,  ‘பாயாசம் சாப்பிடும் கோஷ்டியை’ சேர்ந்தவர் எனத்தெரிந்து கொண்டேன்.


‘முள்ளி வாய்க்காலில்’  விதைக்கப்பட்டவர்களுக்கு...
அஞ்சலியும்...வீர வணக்கமும் செலுத்துகிறேன்.

 ‘இளையராஜாவின்’ சாதனை பற்றி,
செழியன் எழுதிய தொடரின் நிறைவுப்பகுதி...
அடுத்தப்பதிவில் காண்க.  

11 comments:

 1. நேற்று எனது dashboard-ல் 45 பகிர்வுக்கும் மேலே இருந்தன... எந்த தளமும் பார்க்கவில்லை... மேற்படி தகவல் அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்...

  ReplyDelete
  Replies
  1. தகவல் தெரியாமல்தான் நிறைய பேர் பதிவு போட்டுள்ளார்கள்.

   நான் குறிப்பட்ட ‘தோழரை’ அந்த ரகத்தில் சேர்க்க முடியாது.
   நேற்று முள்ளிவாய்க்கால் சோகம் நிகழ்ந்த நாள்.
   அது கூடவா அந்த ‘பொதுவுடமைப்போலிக்கு’ புரியாமல் போயிற்று.

   Delete
 2. திட்டுவதற்கு வேற ஆள் கிடைக்கலையா? சம்ந்தபட்ட பதிவரை திட்டுங்கள் கட்சியை ஏன் இழுக்குறீங்க... ஏன் அ.தி.மு.க. ,தி.மு.க வை திட்ட முடியுமா உங்களால் ....பா.ம.கா திட்டுபாரூங்க....

  ReplyDelete
  Replies
  1. நண்பரே...
   கம்யூனிஸ்ட் கட்சியை நான் எங்கே திட்டினேன்?
   ‘கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள சிலர்’ என்றே குறிப்பிட்டு உள்ளேன்.

   திமுக, அதிமுக, பாமக போன்ற தனியார் கம்பெனிகளை விமர்சிக்க
   என்றுமே நான் அச்சப்பட்டது கிடையாது.

   Delete
 3. நம்ப கோவை நேரமும் மவுன அஞ்சலி செலுத்தியது..

  ReplyDelete
  Replies
  1. இந்நிகழ்வின் தொடக்கப்புள்ளிகளில் நீங்களும் ஒருவராயிற்றே.

   Delete
 4. ஜயா. நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் மற்றவர்கள் எல்லாரும் தொடரவேண்டும் என்பது கட்டாயமல்ல.
  ஒவ்வருவருக்கும் வேறு வேறு நம்பிக்கைகள் உண்டு. மதம் போலதான் இதுவும். நீங்கள் தீபாவளி கொண்டாடினால் நான் வெசாக் கொண்டாடுவேன். இன்னொருவர் கிறிஸ்துமஸ் கொண்டாடுவார். மற்றயவர் ரம்ஜான் கொண்டாடுவார். அது போலத்தான் இதுவும். நீங்கள் சொல்வது எல்லாரையும் கட்டுப்படுத்தாது. அப்படி கட்டுப்படுத்த நீங்கள் ஒன்றும் கடவுளில்லை.
  அதைவிட மற்றயவர்களை விமர்சிக்க உங்களுக்கு தகுதியில்லை. கமல் மற்றும் இளையராஜாவைப்பற்றி யாராவது உங்கள் தளத்தில் விமர்சித்தால் நீங்கள் அதை எப்போது ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே மற்றயவர்களையும் நீங்கள் விமர்சிக்காதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. பண்டிகையையும்,
   துக்க நாளையும் ஒன்றாக பார்க்கும் பாக்கிஸ்தாரன்காரரே!
   மாறு வேடமிட்டு வராமல்...
   நேரிடையாக வருபவருடைய விமர்சனம் வெளியிடப்படும்.
   விவாதிக்கப்படும்.

   Delete
 5. உண்மைதான் நேற்று நிறைய பதிவுகள் வந்திருந்தன. தகவல் சரிவர கிடைக்கவில்லையோ அல்லது துக்கம் அனுஷ்டிக்க விருப்பம் இல்லையோ தெரியவில்லை! பதிவுலகில் ஒற்றுமை அவசியம் என்பது என் ஆசை! நன்றி!

  ReplyDelete
 6. நானும் தங்களது அறிவிப்பை வெள்ளி இரவு எனது வலைப்பக்கத்தில் வெளியிட்டு, நேற்று எந்த பின்னூட்டமும், பதிவும் இடாது மறைந்த பதிவர் பட்டாபட்டி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரது ஆத்மா சாந்தி அடைவதாகுக.

  ReplyDelete
 7. அந்த பதிவாளர் என்ன ஹிட்சு வெறியரோ!விட்டுவிடுங்கோ நாம் பலர் பட்டாப்ட்டிக்கு அஞ்சலி செலித்தியது பதிவுலகம் அறியும்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.