Feb 27, 2011

கொடியேற்றம்-பின்னணி இசை இல்லாத காவியம்

கொடியேற்றம் படத்தின் டிவிடி மிகவும் மோசமான தரத்தில் இருந்தாலும் படத்தின் ஆன்மாவை தரிசிக்க முடிந்தது.சத்யஜித்ரேவின் ஆளுமையில் அடூர் கோபாலகிருஷ்ணன் வெளிப்பட்டாலும் ரித்விக் கட்டக்கின் நேரடி மாணவன்.அடூர் பூனா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படிக்கும் போது கட்டக்தான் ஆசிரியர்.கட்டக் பற்றி அடூரின் விமர்சனம்.... “அவரது நாளங்களில் சினிமாவும் மதுவும்தான் ஓடிக்கொண்டிருந்தது”.
1972ல் தனது முதல் படைப்பான சுயம்வரம் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்துதான் தனது இரண்டாவது காவியமான கொடியேற்றத்தை[1977] வெளியிட்டார்.

இப்படம் சங்கரன் குட்டி என்ற சாமான்யனின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது.திருமணத்தையும் குடும்பவாழ்க்கையையும் மற்றொரு கோணத்தில் பார்க்கிறது.
திருமணமாகாத ஒருவன் திருமணம் செய்து கொள்வதற்க்கான உரிமை எப்போதும் உண்டு.ஆனால் திருமணமான ஒருவன்,திருமணமாகாதவனாக இருக்கும் சுதந்திரத்தை இழந்து விடுகிறான்.

உலகின் யதார்த்த சித்திரங்களும் சங்கரன்குட்டியின் வாழ்க்கையனுபவங்களும்...அனுபவங்களால் சங்கரன்குட்டி அடையும் மாற்றங்களும்தான் கொடியேற்றம்.
சங்கரன்குட்டி பற்றி அடூரின் பேட்டி இதோ....
சங்கரன்குட்டி பெருந்தீனிக்காரனோ மநத புத்திக்காரனோ அல்ல.நமது வெகுஜனத்திரளிலிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இவனும் ஒருவன்.தனக்கென ஒரு தனித்துவமோ சுயசிந்தனையோ இல்லாததுபோல் தோன்றும்.எனவே, அவனை நாம்,நம்மை விடக்கீழானவனாக நினைத்து தாழ்வாக மதிப்பிடுகிறோம்.நம்மிடையே வாழும் இப்படியான சங்கரன்குட்டிகளை நாம் அதிகமாக கண்டுகொள்வதில்லை.திருமணமாகும்வரை,குடும்பத்தைப்பற்றியோ குடும்பவாழ்க்கைக்கு அடிப்படை தேவையான பரஸ்பர அன்பைப்பற்றியோ அறியாத,வெற்றுத்தடியனாக திரிந்தவன்தான் சங்கரன்குட்டி.பல்வேறு விதமான வாழ்க்கைகளைப்பார்த்து,அதன் ஏமாற்றங்களையும்,வெறுப்புகளையும்,ஆபத்துகளையும்,துயரங்களையும்,ரகசியங்களையும்,
பொருத்தமின்மைகளையும் எல்லாம் அனுபவித்த அவனுக்குள் எங்கோ ஒளிந்து கிடந்த ஒரு தனித்துவம் மெல்லத்தலைதூக்குகிறது.உடனே மனத்தெளிவுடன் தனக்குச்சொந்தமான சிறு குடும்பத்தை நோக்கி அவன் நிறைந்த அன்புடனும் பாசத்துடனும் வந்து சேருகிறான்.
சத்யஜித்ரே முதன்முதலில் பார்த்த அடூரின் படம் கொடியேற்றம்.அந்த அனுபவம் அடூரின் வார்த்தைகளிலேயே......
ஒரு டஜன் பார்வையாளர்கள் மட்டும் அடங்கிய பிரத்யேகத்திரையிடல் அது...படம் தொடங்கி அதிகம் தாமதமாகவில்லை.சட்டென்று இறுக்கத்தை தளரச்செய்து ஒரு வெடிச்சிரிப்பு கேட்டது.அது ரேயிடமிருந்து.கதை முன்னேற முன்னேற மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள்.எல்லா சிரிப்பை விடவும் உரக்கக்கேட்டது ரேயின் உச்சமும் கனமுமான சிரிப்புதான்.

படம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. “பின்னணி இசையை சுத்தமாக ஒதுக்கிவிட்டீகளே,இனிமேலும் அதை பயன்படுத்த மாட்டீர்களா?” என்று கேட்டார்.
“இந்தப்படத்தில் அதற்க்கு இடம் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் பயன்படுத்தவில்லை அவ்வளவுதான்”.
அடூரின் முதல் படமான சுயம்வரத்தின் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனின் பாராட்டு இதோ... “கோபால் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தால் கூட இப்படத்தில் பின்னணி இசை சேர்ப்பதற்க்கான ஒரு இடத்தை கூட என்னால் கண்டுபிடித்திருக்க முடியாது”.

திரைப்படம் பேசத்தொடங்கிய பின்னர் பின்னணி இசை சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட படம் என்ற சிறப்பு கொடியேற்றத்துக்கு உரியது.

இப்போது வந்திருக்கும் நடுநிசிநாய்கள் இந்த உண்மையை மறைத்து வந்த பம்மாத்து படம்.வக்கிரத்தை ...வக்கிரக்காரர்களுக்காக... வக்கிரக்காரக்காரன் எடுத்த படம் நடுநிசிநாய்கள்.
அடூரின் அனுபவங்கள் மேலும் அறிய....
அடூர் கோபாலகிருஷ்ணன் சினிமா அனுபவம்-தமிழில்:சுகுமாரன்
அடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை -அக்பர் கட்டில் [தமிழில்-குளச்சல் மு.யூசுப்]
இரண்டுமே காலச்சுவடு வெளீயீடு.

Feb 22, 2011

Love In Time Of Cholera-காமத்தில் தோய்த்த காதல் கவிதை

காதல் என்பது எப்போ வருவேன்...எப்படி வருவேன் என்று ரஜினி மாதிரி சொல்லிகிட்டு இருக்காது.வரும்..புயல் மாதிரி தாக்கும்.காதல் சுனாமியில் சிக்கி சீரழிந்தவனின் வரலாறுதான் லவ் இன் டைம் ஆப் காலரா.

நோபல் பரிசு பெற்ற இலக்கியவாதி காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் படைப்பில் உருவான காவியம் இது.மேஜிகல் ரியலிசம் பாணியில் தனது படைப்புகளை உருவாக்கி புகழ் பெற்ற இவர் கொலம்பியா நாட்டின் மைந்தன்.


இக்காவியத்தை திரையில் ஒவியமாக்கியவர் ஹாலிவுட்டில் புகழ் பெற்ற இயக்குனர் மைக் நியுவல்.

முக்கோண காதல் காவியங்களில் மாஸ்டர்பீஸ் காஸாபிளாங்கா.இப்படத்தையும் இந்த வரிசையில் கொண்டாடலாம்.

முதுமையின் விளிம்பில் இருக்கும் ஒரு டாக்டரின் மரணத்தில் துவங்குகிறது படம்.அவரது காதல் மனைவி தனது வாரிசுகளோடு தனது கணவரது இறுதி சடங்குகளை நிறைவாக செய்து விட்டு உறவுகளை அனுப்பிவிட்டு தனிமையில் இனிமை காண தனது இல்லம் வருகையில் காத்திருக்கிறார் ஒருவர்.தோற்றத்தில் முதுமை...குரலில் இளமை.கண்களில் காதல் நிரம்பி வழிய, கண்ணே...உன்னைக்கண்டதும் தோன்றிய நம் காதலின் வயசு..

51 ஆண்டுகள்....

9 மாதம்....

4 நாட்கள்....

கோபத்தில் கொந்தளிக்கிறாள்....என் வாழ்நாள் முழுக்க என் கண்ணெதிரில் வராதே..பிளாரெண்டிநோ....

இங்கிருந்து பிளாஷ் பேக்கில் பயணிக்கிறது படம்.

பெர்மினா தாஸா...புலம் பெயர்ந்து வந்த புயல்.வந்த அன்றே பிளாரெண்டிநோவை தாக்கிவிடுகிறாள்.காதல் நோய் வயப்பட்டு பிளாரெண்டிநோ தவிப்பதில் நாமும் பங்கெடுப்பதை தவிற்க்கமுடியாது.வழக்கம்போல் காதலுக்கு வில்லன் பெர்மினாவின் பணக்கார தந்தை.ஆனால் பிளாரெண்டிநோவின் தாயார் மகனின் காதலுக்கு உரம் போடுகிறார்.காதலுக்கு ஆதரவான இவரது வார்த்தைகள் அனைத்தும் திருக்குறளின் காமத்துப்பால்.இந்த வேடத்தை மிகச்சிறப்பாக செய்து நம்மை கவர்பவர் செண்ட்ரல் ஸ்டேசனில் ஏமாற்றுக்கார பா[ர்]ட்டியாக நடித்து நம்மை கொள்ளை கொண்ட Fernanda Montenegro.


முக்கோணத்தில் ஒரு கோணமாக வந்து விடுகிறார் டாக்டர்.

காதல் ரேஸில் ஜெயித்து பெர்மினா கரம் பிடிக்கிறார்.இருந்தும் காத்திருக்கிறார் பிளாரெண்டிநோ

51 வருடம்

9 மாதம்

4 நாட்கள்

காதல் நோய்க்கு மருந்தாக பிளாரெண்டிநோ உடல் உறவு கொண்ட பெண்களின் எண்ணிக்கை 622.இதுதான் மேஜிகல் ரியலிசம்.

காத்திருந்த காதல் கூடியதா????????

விடை படத்தில்.

இப்படத்தை இது வரை கவுதம் மேனன் பார்க்காதது இப்படம் செய்த புண்ணியம்.

இப்படத்திற்க்கு அற்ப்புதமான விமர்சனம் நண்பர் கீதப்பிரியன் எழுதியுள்ளார்.அதையும் தவறாமல் படிக்கவும்.
http://geethappriyan.blogspot.com/2010/03/200718love-in-time-of-cholera.html

Feb 9, 2011

Viva Cuba-2005 பட்டாம்பூச்சிகளின் பயணம்

விவா கியூபா சிறந்த குழந்தைகள் படமாக உலகமெங்கும் விருதுகளை அள்ளிய படம்.விவா என்றால் வாழ்க.கியூபா என்றால் நமக்கு உடனடி தர்ஷன் சே&பிடல்.இந்தப்படம் பாருங்கள்..இனி இந்தப்பட்டாம் பூச்சிகள்..... மாலு&ஜோர்கிடோ..... காட்சியளிப்பார்கள்.
இப்படத்தை இயக்கி பாராட்டை குவித்த இரட்டையர்கள் Juan Carlos Cremata&Iraida Malberti Cabrera.
மாலு 12 வயது சிட்டுக்குருவி...அப்பர் கிளாஸ் அம்மா....டைவர்ஸ் அப்பா.....அன்பேசிவமான பாட்டி...
ஜோர்கிடோ 11 வயது குறும்பன்....மிடில் கிளாஸ் அம்மா,அப்பா....

இரண்டு குழந்தைகளும் கிளாஸ்மேட்ஸ்&பிரண்ட்ஸ்.....
இவர்களது பெற்றோர்கள் டாம்&ஜெர்ரிதான்.....
மாலு அம்மா:அவனோட பழகாதே...அவங்கெல்லாம் லோகிளாஸ்
ஜோர்கிடோ அம்மா:அந்த குட்டி கூட பேசாதே...திமிர் பிடிச்ச பணக்கார ஜாதி...
இந்த போதனைகளை எரித்து நட்பு என்கிற பீனிக்ஸ் பிறக்கிறது.மாலுவின் பாட்டி இறந்ததும் மாலுவின் அம்மா தனது காதலனுடன் வாழ அமெரிக்கா செல்ல முடிவெடுக்கிறாள்.மாலு அம்மாவை விட்டுவிட்டு அப்பாவிடம் செல்ல ரகசிய திட்டம் போடுகிறள்.மாலுவுக்கு துணையாக இவனும் ஒடி வர தயார்...இங்கே பிறக்கிறது அழகிய ரோடு மூவி.

கிட்டத்தட்ட காஷ்மீர் To கன்யாகுமரி பயணம்.இங்கே கியூபாவின் ஆன்மாவை தரிசிக்கலாம்...குழந்தைகளின் பயம்,கோபம்,பொறாமை,அன்பு என அனைத்தையும் பாசாங்கில்லாமல் காட்டியிருக்கிறார்கள் இயக்குனர்கள்.இவர்கள் பயணிக்கும் இடங்கள்...சந்திக்கும் மனிதர்கள் நம் மனதில் பச்சை குத்தி குடியேறுகிறார்கள்.


இப்படம் பார்க்கும் போது சே இன்னும் கியூபாவில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை உணரமுடிகிறது.நம் தலைவர்கள் எலெக்சன் வரும்போதுதான் காமராஜர்,அண்ணா.எம்ஜியாரை நினைவுபடுத்தி கொண்டாடுவார்கள்.
தயவு செய்து விஜய் படம் பார்க்கும் குழந்தைகளை விவா கியூபா,சில்ட்ரன் ஆப் ஹெவன்,சாங் ஆப் சாரோ,ஸ்பிரிட்டட் அவே பார்க்க வையுங்கள்.நல்லது நடக்கும்.