Showing posts with label மணிரத்னம். Show all posts
Showing posts with label மணிரத்னம். Show all posts

Feb 2, 2013

மதிப்பிற்குரிய மணிரத்னம் அவர்களுக்கு...


வணக்கம்.
கடலில் நீச்சலும் தெரியாமல்...ஆழமும் தெரியாமல் இறங்கி உள்ளீர்கள்.
சுஜாதா என்ற மாலுமியில்லாமல்...
ஜெயமோகன் என்ற ‘டம்மி பீஸை’ நம்பி கடலில் பயணப்பட்டதை நீங்கள்  உணர்ந்திருப்பீர்கள்.
நாங்களும் மூச்சு திணறி அவஸ்தைப்பட்டோம்.

ஜெயமோகன் மிகச்சிறந்த இலக்கிய படைப்பாளி.
அவரது ‘ஏழாம் உலகம்’ ஒன்று போதும்...
ஆயிரம் ஆண்டுகள் பேசும் காவியம் அது.
ஆனால் சினிமா என்பது வேறு.
அது இலக்கியத்தை காட்டிலும் உயர்ந்தது.
அதில் அவர் மாஸ்டர் கிடையாது.

முதலில் ஜெயமோகனுக்கு,
சினிமாவின் மீது மதிப்பும்...ஆர்வமும் அறவே கிடையாது.
அவரது எழுத்துக்கள் அனைத்தையும் படித்தவர்களுக்கு இது தெரியும்.
நான் அவரிடம் நேரிடையாக மதுரையில் சந்தித்து பேசும் போது
நேரடி அனுபவமாக இதை உணர்ந்திருக்கிறேன்.

சினிமாவில் ஜெயமோகன் நுழைந்ததற்கு ஒரே காரணம், பணம்....பணம்...பணம்.
இனி யாரும் ஜெயமோகனிடம் சிக்கி சீரழியாமல் எச்சரிக்கவே இப்பதிவு.

கடல் படத்தின் கதையும் அவரது சொந்த  சரக்கல்ல.
திரை மேதை லூயி புனுவலின் ‘நஸ்ரின்’ கதையை சுட்டு...
காதல் என்ற கத்தரிக்காயை சேர்த்து  ‘கந்தர்கோலமாக்கி’ விட்டார்.
திரைக்கதை குப்பையாகிப்போனால்...எப்பேற்பட்ட இயக்குனரும் மண்ணைக்கவ்வுவர்.
இப்படத்தில், தாங்கள் அறிந்தோ அறியாமலோ அழிந்திருக்கிறீர்கள்.

ஜெயமோகன் உங்களை மோசடி செய்திருக்கிறார்.
கடற்கரை கிராம மக்கள் மேரி மாதா,இயேசுவுக்கு அப்புறம் பாதிரையாரைத்தான் வாழும் தெய்வமாக வழி படுவர்.
அரவிந்த சாமி பாதிரியாராக முதன் முதலாக ஊருக்குள் நுழையும் போது
தமிழகத்தில் எந்த கடற்கரை கிராமமும் இப்படி வரவேற்காது.
தேவாலயமும் இப்படி சீரழிந்து கிடக்காது.
நஸ்ரின் படத்தில் வரும் கிராமத்தை அப்படியே தமிழ்நாட்டுக்கு
இடம் பெயற்ததால் வந்த கோளாறு இது.


ஐந்தே வயது மூளை வளர்ச்சியுள்ள பெண்ணின் ‘கிளிவேஜ்ஜை’ ...
 ‘டெல்லி கற்பழிப்பான்’ ரசிப்பான்.
கலா ரசிகன், காறித்துப்புவான்.
எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி படமாக்கியுள்ளீர்கள்.
நல்ல வேளை டிரைலரில் இருந்த  ‘லிப் லாக்’ கிஸ்ஸை தூக்கி விட்டீர்கள்.
அக்காட்சியை படத்தில் இடம் பெற்றிருந்தால் நீங்கள் படமாக்கிய மணப்பாடு கிராமப்பெண்களே ‘வாரியலை’ தூக்கி கொண்டு வந்திருப்பார்கள்.

ஏ.ஆர். ரகுமானுக்கும் ஒரு வார்த்தை...
இப்படத்திற்கு இசை அமைப்பதற்கு முன்னால்...
அலைகள் ஓய்வதில்லை,கடலோரக்கவிதைகள் இரண்டையும் பார்த்திருக்க வேண்டும்.
டைட்டில் சாங் ஒன்று போதும்.
இவ்வளவு அபத்தமாக ஹாரிஸ் ஜெயராஜ் கூட போட்டதில்லை.
ஆடியோவில் கேட்கும் போது உருக வைத்த ஜீவனுள்ள ‘நெஞ்சுக்குள்ளே’ பாடல் படத்தில் செத்து விட்டது.

‘ஏலேய் கிச்சா’ பாடலில் பிருந்தாவின் நடன அமைப்பும்,
பாம்பே டான்சர்களின் தோற்றமும்...ஆட்டமும்...
எனக்கு வாந்தியே வந்து விட்டது.

கிளைமாக்ஸ் காட்சியில் விஷுவல் எபக்ட்ஸ்சும்,பின்னணி இசை அபாரமாக இருந்தும்...
அர்ஜூனை ‘டிப் டீ’ போல கடலுக்குள் முக்கி எடுத்து காலி பண்ணி விட்டார்கள்.


 ‘நாயகன்’ மணிரத்னம் இனி பிறக்க முடியாதுதான்.
எனவே, அலைபாயுதே மணிரத்னத்தையாவது உயிர்த்தெழச்செய்யுங்கள்.
எல்லாப்படங்களிலும் அழுது வடிந்த ஷாலினியை...
துறுதுறு சுட்டிப்பெண்ணாக்கிய மந்திரவாதி மணிரத்னத்தை இன்றும் காதலிக்கிறோம்.

 ‘கோலிவுட் கர்த்தருக்கு’ ஸ்தோத்திரம்.

நஸரின் படத்தை அறிமுகம் செய்து நான் எழுதிய பதிவைக்காண்க...

Nov 21, 2012

மணிரத்னம் V \ S கோவைத்தம்பி...யார் சரி ?

நண்பர்களே...
 ' CONVERSATION WITH MANI RATHNAM' என்ற நூலை...
திரு.பரத்வாஜ் ரங்கன் [ஹிந்து பத்திரிக்கையாளர்] உருவாக்கி வெளியிட்டு உள்ளார்.
திரு. மணிரத்னத்தை பேட்டி கண்டு...அவரது படைப்புகளை பற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதியிருக்கிறார் நூலின் ஆசிரியர்..


வந்தது வினை...எதிர்வினை.
இந்த மாதம்...தயாரிப்பாளர்கள் V \ S படைப்பாளிகள் மாதம் போல் இருக்கிறது.
திரு.முக்தா சீனிவாசனின் தொடர்ச்சியாக கோவைத்தம்பி பொங்கியிருக்கிறார்.
தினத்தந்தியில் [ 20 - 11 - 2012 ] அவரது அறிக்கை வெளி வந்திருக்கிறது.

கோவைத்தம்பியின் அறிக்கையிலிருந்து....
"அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. 
அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்' என்றும் 
28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.

கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களைத் தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். 

எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்' இயக்குநர் ஆக்கியது என் தவறுதான். 
அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியதுதான் உண்மை.

எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும்.

அந்த படத்தில் எனக்கு மூன்று படத்துக்கான செலவு வைத்தார் இந்த மணிரத்னம். 

சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது. 
என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்' வெற்றிப் படம்தான். 
ஆனால் அதற்கு காரணம் மணிரத்னம் அல்ல.

திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது," .



\\\ சினிமா தெரியாமல், அதைப் படமாக்கும் விதம் தெரியாமல் காட்சிகளை அவர் பாட்டுக்கு சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தையே சுட்டு பொசுக்கியது \\\ 



கோவைத்தம்பியின் இவ்வரிகளை...மவுன ராகம், நாயகன்,அஞ்சலி, இதயத்தை திருடாதே, தளபதி,ரோஜா, பம்பாய், அலைபாயுதே,உயிரே, குரு, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்கள்...
 “அடங்கப்பா...இது உலக காமெடிடா” என சிரித்து கும்மாளமிட்டு கும்மியடித்துக்கொண்டிருக்கிறதாம். 

\\\ அந்த காலகட்டத்தில், 
தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது \\\

மணிரத்னத்துக்கு இதயக்கோயில் நாலாவது படம். 
1 பல்லவி அனுபல்லவி [ கன்னடம் ]
2 உணரு [ மலையாளம் ]
3 பகல் நிலவு [ தமிழ் ]
தனது முதல் தமிழ் படமான பகல் நிலவு படத்திலேயே தனி முத்திரை பதித்து
தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்பட்டவர்.
கோவைத்தம்பிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.
கோவைத்தம்பி தான்தான் தமிழ்நாடு என்ற நினைப்பில் வாழ்கிறார் போலும்.

\\\ திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்' படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது \\\


மணிரத்னம் படைப்பிலேயே மாஸ்டர்பீஸ் இருவர்தான்.

உலகசினிமா ரசிகர்களும், சினிமா மொழி தெரிந்த திராவிட இயக்க பற்றாளர்களும் இருவர் படத்தை குறை சொல்ல மாட்டார்கள்.
திராவிட இயக்கதின் இரண்டு தலைவர்களின் நட்பையும், அதையொட்டிய வாழ்க்கையையும் பதிவு செய்த படம் இருவர்.
மதர்லேண்ட் பிக்சர்ஸ் லோகோவை  அதிமுக வண்ணத்தில் காட்டி காசு பார்த்தவ்ர் என உங்களைத்தான் கோடம்பாக்கத்தில் குறிப்பிடுகிறார்கள்.
திராவிட இயக்கத்தலைவர்களில் ஒருவர்  வரலாற்றையாவது  படமாக்கியிருந்தீர்கள் என்றால்...
அந்த நன்றிக்கடனுக்காக இக்கட்டுரையையே எழுதி இருக்க மாட்டேன்.

சர்ச்சைக்குறிய இதயக்கோயில் படம் பற்றி நான் கேள்விப்பட்ட
சில விவரங்களை கூறுகிறேன்.
இதயக்கோயில் படத்திற்கு கதை தயார் செய்து விட்டு...
அக்கதையை திரைக்கதையாக்கி இயக்க   ‘வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு’ வலை வீசி தேடினார்கள்.
அதில் ஒருவர் பாண்டியராஜன்.
பாண்டியராஜன்  ‘கன்னிராசி’ என்ற படத்தில் அறிமுக இயக்குனராக ஜெயித்த நேரம்.
கோவைத்தம்பி அதிமுகவில் செல்வாக்கோடு இருந்ததால்...
அவரது பட இயக்குனர்கள் அனைவரையும்  ‘படுத்துவார்’ என கோடம்பாக்கம் முழுக்க செய்தி பரவியிருந்தது.
அவரது படங்களை இயக்கியதில்...
இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் [ பயணங்கள் முடிவதில்லை,நான் பாடும் பாடல்],
இயக்குனர் மணிவண்ணன் [இளமைக்காலங்கள்] முக்கியமானவர்கள்.

கோவைத்தம்பியின் வீர தீர பராக்கிரமங்கள் தமிழ்த்திரையுலகில் எல்லோருக்கும் தெரியும்.
பாண்டியராஜனுக்கு தெரியாதா ?...அவர் சிக்கவில்லை.
மணிரத்னம் மாட்டினார்... ‘அடி மாட்டு ’ சம்பளத்தில்.
கொத்தடிமையாகத்தான் மணிரத்னம் இதயக்கோயிலில் பணியாற்றினார்.

உச்ச கட்ட அராஜகம் ஒன்றை...இதயக்கோயில்  படம் வெளியான பிறகு கோவைத்தம்பி நடத்தி காட்டினார்.
படம் தியேட்டரில் வெளியான பிறகு கவுண்டமணி - செந்தில் காமெடியை மணிரத்னத்துக்கு தெரியாமல் ஷூட் செய்து இணைத்து விட்டார்.
பட விளம்பரத்திலும் கவுண்ட மணி- செந்தில் காமெடியை பிரதானப்படுத்தினார்.
ஒரு படத்தில் இயக்குனருக்கு தெரியாமல்  ‘ஒரு பிரேமை’ கூட நீக்கவோ சேர்க்கவோ எவனுக்கும் உரிமை கிடையாது....படத்தயாரிப்பாளர் உட்பட.
இந்த நியாய தர்மம் எல்லாம் ‘பிச்சைக்காரன்களுக்கு’ தெரியாது.

இப்போது கூட நீங்கள் அப்படத்தை பார்க்கும் போது...
கவுண்ட மணி  ‘காமெடி டிராக்’...
ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட  ‘டெக்னிக்கல் தரம்’
படு மோசமாக இருப்பதை உணரலாம்.

கோவைத்தம்பி வீழ்ந்ததுக்கு காரணம் மணிரத்னம் இல்லை.
அவரது செயல்பாடுகள்தான்.
அவரது படங்களில் முதுகெலும்பாக இருந்த இளையராஜாவை புறக்கணித்தார்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியின் எந்தப்படமும் வெற்றிகரமாக ஓடவில்லை.
எல்லாமே அடிதான்.

ஒரு தயாரிப்பாளராக... திறமையான படைப்பாளிகளை இனம் கண்டு
அவர் தயாரித்த படங்கள் எல்லாமே வெற்றிகரமாக ஓடின.

படம் ஓடியதே தன்னால்தான் என்ற மண்டைக்கனம் யாருக்கு வருகிறோதோ அவர்கள் அத்தனை பேரும் ‘தொலைந்து போவார்கள்’ .
இந்த விதி,  தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் பொருந்தும்.


கோவைத்தம்பிக்கு மரண அடி கொடுத்தது மணிரத்னம் அல்ல... புரட்சித்தலைவர் திரு.எம்.ஜி.யார் அவர்கள்தானாம்.
தனது கட்சியில் இருக்கும் நபர்கள் அராஜகம் செய்தால்...
எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும்  ‘காயடித்து’ விடுவாராம்.
கோவைத்தம்பிக்கும்  ‘அது’ நடந்ததாம்..
ஒரு பிரபல தியேட்டரை வாங்க அதன் உரிமையாளரை உருட்டி மிரட்டினாராம் கோவைத்தம்பி.
தியேட்டர் அதிபர் புரட்சித்தலைவரிடம் அடைக்கலம் போனாராம்.
எம்ஜியார்... கோவைத்தம்பியை அழைத்து நைசாக விசாரித்தாராம்.

“என்ன விலைக்கு வாங்கலாம் ? ”

“ பணத்தை என்னிடம் கொடு...
நானே அந்த தியேட்டரை வாங்கித்தருகிறேன் ” .

பணத்தை கொடுத்து காத்திருந்தாராம் கோவைத்தம்பி.
எந்த தகவலும் வராததால்...
நேரடியாக போய் கேட்டாராம்  கோவைத்தம்பி .
எம்ஜியார்... திருப்பி கேட்டாராம்...
எந்த பணம் ? எந்த தியேட்டர் ?
தியேட்டர்காரருக்கு பிரசனை தீர்ந்தது.
பிரச்சனைகளை தீர்ப்பதில் தலைவர் பாணியே தனிதான்.
அதற்குப்பிறகு கோவைத்தம்பியை பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

இதயக்கோயில் பாடலை காணொளியில் காண்க...




Nov 7, 2012

HAPPY BIRTH DAY KAMAL \ நாயகன் காப்பியா ? காப்பியமா ?

நண்பர்களே...
கலைத்தாயின் இளைய மகனுக்கு நவம்பர் 7  பிறந்த நாள்.
கமல் பிறந்த நாள் பரிசாக இப்பதிவை வெளியிடுவதில் மகிழ்கிறேன்.



கடந்த பதிவுகளின் சாரம்...
கமல் V \ S முக்தா பிரச்சினையில் மையமாக இருப்பது...
இரு தனி நபர் பேதமல்ல...
ஆர்ட் V \ S பிசினஸ் என்ற பேதமே.


Nayagan \ 1987 \ Tamil \ Directed by Mani Rathnam 
மணிரத்னம்,கமல்& நாயகன் படத்துக்கு வந்த எதிர்வினைகளில்...
நாயகன் காட்பாதரின் காப்பி என்ற அடிநாதமிருந்தது.
இந்த பரப்புரையை திட்டமிட்டவர்களின் எதிரொலி அது.
பொய் பரப்புரையை தகர்க்க...இப்போது வந்த வாய்ப்பை சிக்கென பற்றினேன்.

முதலில் காட்பாதரை பார்ப்போம்.
THE GODFATHER \ 1972 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA
THE GODFATHER 2  \ 1974 \ ENGLISH \ DIRECTED BY FRANCIS FORD COPPOLA

அமெரிக்காவில் குடியேறிய இத்தாலியர்கள் மெல்ல மெல்ல முதலாளித்துவத்துவத்தின் சாரங்களை பயின்று தேறி  ‘இணை அரசாங்கம்’ நடத்துகின்ற அளவிற்கு பலம் பொருந்தி விட்டார்கள்.
இந்த  ‘மாபியாக்கள்’ தயவிருந்தால்தான், அமெரிக்க அரசின் உயர் பதவிக்கு
வர முடியும்...நீடித்திருக்க முடியும்.

அமெரிக்க - இத்தாலிய மக்களின்  ‘கூட்டுக்குடும்ப வாழ்க்கை’...
நிழல்-உலக வியாபாரங்கள்,..அதற்கான போரட்டங்கள் என அனைத்துக்காரணிகளையும் ஆராய்ந்து...
எழுத்தாளர் மரியோ புஸோ [ MARIO PUZO ] காட்பாதர் என்ற நாவலை வெளியிட்டார்.
அதன் விற்பனையும், புகழும் உலகே அதிர்ந்தது.
காட்பாதரை திரைப்படமாக்க பாரமவுண்ட் நிறுவனம் திட்டமிட்டது.
இக்கதையை திரைக்கதையாக்கும் கருத்தாக்க - போட்டியில்
மரியோ புஸோ பின் தங்கினார்.
கொப்பல்லோ ஜெயித்தார்.
கருத்தாக்கம் = பேமிலி V \ S பிசினஸ்

கொப்பல்லோவின் இயக்கத்தில் காட்பாதர் காப்பியமாக [ Epic ] உருவெடுத்தது.
வசூலிலும் வரலாறு படைத்தது.

உலகத்தையே கவர்ந்த காட்பாதர்...
கமல், மணிரத்னம், & திரு.முக்தா சீனிவாசனையும் ஈர்த்ததில் வியப்பில்லை..
திரு.சிவாஜி கணேசன் - கமல் இணைப்பில் காட்பாதரை தழுவி
படமாக்கும் முயற்சி...
திரு.அனந்து அவர்களால் நிறுத்தப்பட்டது என...
திரு.முக்தா சீனிவாசன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
 ‘இத்திருப்பணிக்காக’ திரு.அனந்து அவர்களுக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்கள்.
காட்பாதர் இன்ஸ்பிரேஷனில்...  ‘தேவர் மகனாகி’  சிவாஜி -  கமல் பெருமை சேர்த்தது  வரலாறு.
தேவர் மகனுக்கு பின்னால் பதிவிடுகிறேன்.

நாயகனும், தேவர் மகனும் காட்பாதர் இன்ஸ்பிரேசனில் வடிவமைக்கப்பட்டவையே.
ஆனால் மூன்றும் வெவ்வேறு தளத்தில் இயங்குபவை.

காட்பாதரும் நாயகனும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மட்டும் இங்கே பார்ப்போம்.

காட்பாதரில் இருப்பது பவர் ஸ்டிரகிள் 
[ Power Struggle \ அதிகார போராட்டம் ] .
நாயகனில் இருப்பது கர்மிக் ஸ்டிரகிள் 
[ Karmic Struggle \ கர்மவினைப்போராட்டம் ] .

 ‘அண்டர்ஸ்டாண்டிங் மூவிஸ்’ என்ற நூலிலிருந்து சில பகுதிகள்...
Understanding Movies=Louis Giannetti=Fifth Edition=1990= Prentice Hall,
New Jersey 07632

Page=325
THE GOD FATHER =(USA.1972)=Paramount Pictures=Directed by: Francis Ford Coppola

Genre films are generally profuse in archetypal elements. 
In this, 
the most famous gangster film in history, 
the very title resonates with larger-than-life forebodings. 
In Italian-American culture, 
a godfather is a respected authority figure, 
a revered parental surrogate. 
In the subculture of the Mafia, 
“Godfather” is what criminal chieftains are often called.
The Brando figure is also a benevolent patriarch to the members of his immediate family,
a legendary hero, 
a God-Father.

Page=384
THE GOD FATHER, Part II =(USA.1974)=Paramount Pictures=
Directed by: Francis Ford Coppola

A Marxist reading of a movie doesn’t necessarily exclude other interpretations.
Critic  JOHN HESS  has argued that Coppola comes closer to a Marxist analysis of American Society than any other Hollywood filmmaker:
 “The film’s all pervasive theme is the warmth,
strength,
and beauty of family ties which,
in bourgeois society, 
alone appear to meet the desperate need we all feel for human community.
The counter theme and the real strength of the film is its demonstration that the benefits of the family structure and the hope for community have been destroyed by Capitalism"

பவர் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட காட்பாதரின்
செண்டர் பாண்ட் பேமிலி V \ S  பிசினஸ்.
இந்த சூத்திரத்தை கண்டு பிடித்து திரைக்கதை அமைத்ததால்தான்
மரியோ புஸோவை முந்தினார் கொப்பல்லோ.

காட்பாதர்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் ஆகிய
3  கருத்தாக்கங்களில் இயங்குகிறது.

மாமேதை மார்க்ஸ் இறப்புக்குப்பின் மாமேதை ஏங்கெல்ஸ் [ Friedrich_Engels ]  ‘மனித குல வரலாற்றின் மீது’ ஆய்வு செய்த கருத்தாக்கங்கள்.
The Origin of the Family.- Private Property - and the State - 1884 ] =  “ PRIMITIVE - COMMUNAL SYSTEM = CHANGES IN THE FORMS OF MARRIAGE & FAMILY = ECONOMIC PROGRESS OF SOCIETY = ECONOMIC CAUSES = CAPITALISM = STATE = FUTURE HUMAN SOCIETY "
காட்பாதர் + ஏங்கல்ஸ் கருத்தாக்கங்களில் இந்திய தத்துவமான  'கர்மா' இல்லை.
*********************************************************************************
ஆர்ஜின் ஆப் த பேமிலி.... பற்றி விரிவாக தெரியவும்...புரியவும்
 ‘எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன்’  ‘பொதிந்து’எழுதிய...
‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூலை படிக்கவும்.
அழகிய தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது...
திரு.சுஜாதா நாவல் போல் 100 % விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.
*********************************************************************************
நாயகன்,
பேமிலி - பிரைவேட் பிராப்பர்டி - ஸ்டேட் - கர்மா ஆகிய
4  கருத்தாக்கங்களில் இயங்குகிறது.

கர்மிக் ஸ்டிரகிளின் தன்மையில் அமைக்கப்பட்ட நாயகனின் செண்டர் பாய்ண்ட் பேமிலி V \ S  கர்மா.

ஸ்டேட் = அரசாங்கம்
காட்பாதரில் மாபியாக்களொடு இசைந்து ஸ்டேட் இயங்குகிறது.

நாயகனில் ஸ்டேட் [ நாசர் காரெக்டர் ] வேலுநாயக்கரையும்...
அவரது கூட்டத்தையும் வேட்டையாடுகிறது.


மணிரத்னம்...
‘பம்பாய் ரியல் காட்பாதர்’ வரதராஜ முதலியார் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக கொண்டு...நாயகன் திரைக்கதையை அமைத்தார்.
எனவேதான் வேலு நாயக்கர் என்ற ஒற்றை கதாபாத்திரத்தை பிரதானப்படுத்தி நாயகன் திரைக்கதை பயணப்பட்டது.
மார்லன் பிராண்டோ, அல்பசினோ என இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் வழியே காட்பாதர் திரைக்கதை பயணப்பட்டிருக்கிறது.

வேலுவின் இஸ்லாமிய வளர்ப்பு தந்தையை கொல்கிறான்  போலிஸ்காரன்.
போலிஸ்காரனை கொல்கிறான் வேலு.
வேலுவை கொல்கிறான் போலிஸ்காரன் மகன்...
என ஒரு வட்டத்தில் முடித்து....
இந்தியத்தத்துவமான கர்மாவின் அம்சத்தில் திரைக்கதை போக்கை அமைத்திருக்கிறார் மணிரத்னம்.
இப்படி ஒரு அம்சமே காட்பாதரில் கிடையாது.

பாலியல் தொழிலாளியான விளிம்பு நிலைப்பெண்ணை வேலுவிற்கு மனைவியாக்கியது...
மகளே சட்டத்தின் பெயரால் தந்தையை எதிர்ப்பது...
மகள் தந்தையை விட்டுப்பிரிந்து தனது குடும்பத்தை
தானே அமைத்துக்கொள்வது...
மருமகனே வேலு நாயக்கரை நீதியின் முன் நிறுத்துவது...
இவையெல்லாம் காட்பாதரிலிருந்து நாயகனை
வேறுபடுத்திக்காட்டும் முக்கிய அம்சங்களாகும்.

பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும் போராட்டத்தில்
தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன காட்பாதரில்.
மனைவியை கொன்றதற்காக தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன நாயகனில்.

வேலு நாயக்கரின் மகன் வன்முறைப்பாதையில் ஈர்க்கப்பட்டு...
அதன் விளைவாக உயிரை துறப்பான்.
மகளோ, வன்முறை வாழ்க்கை முறையை வெறுத்து...
தந்தையை விட்டு விலகிச்செல்கிறாள்.
அவளது மகனுக்கு...அடுத்த தலைமுறைக்கு...
தனது  ‘கவசமான’ உத்திராட்சத்தை பரிசாக கொடுப்பார் வேலு நாயக்கர்.
உத்திராட்சம் = அன்பே சிவம்.
வன்முறை வழிமுறைகள் தன்னோடு முடிய வேண்டும் என
வேலு நாயக்கரின் விருப்பமாக நாயகனில் பல இடங்களில் சொல்லப்பட்டாலும்...
இக்காட்சிதான்  ‘மணிரத்ன சுருக்கம்’.
காட்பாதரில் வன்முறையை யாருமே மறுக்கவில்லை.
வன்முறையை சிறப்பாக செய்பவனே வாரிசாகிறான்.
காட்பாதர் 1,2,3 பாகங்களிலும் இது மீண்டும் மீண்டும் வலுவாக சொல்லப்படுகிறது.,

நாயகன் இறுதிக்காட்சியில் வேலு நாயக்கர் சுடப்பட்டு தரையில் கிடப்பதை வோர்ம்’ஸ் - ஐ - வியூ [ WORM'S EYE VIEW ] கோணத்தில் படமாக்கியிருப்பார் இயக்குனர் மணிரத்னம்.
வேலுநாயக்கரின் வாழ்க்கையில் நடந்த பாசிட்டிவ் நிகழ்ச்சிகளை தொகுத்து காட்டியிருப்பார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வந்த  ‘டைட்டானிக்’ படத்திலும்...
Titanic \ 1997 \ English \ Directed by James Cameron
இங்மர் பெர்க்மனின் இயக்கத்தில் வந்த  ‘கிரைஸ் & விஸ்பர்ஸ்’ படத்திலும்...
Cries & Whispers \ 1972 \ Swedish \ Directed by Ingmar Bergman
இறுதிக்காட்சியில் இதே பாசிட்டிவ் தன்மையை காணலாம்.
காட்பாதரின் இறுதிக்காட்சி வேறு.

காட்பாதர், நியூயார்க் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
நாயகன், பம்பாய் நகர நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தது.
எந்த நகரத்து நிழல் மனித வாழ்க்கையை பதிவு செய்தாலும்
ஒரே மாதிரிதான் வந்து சேரும்.

1970 -80களில்  ‘மஸ்தான்’ என்பவர் பம்பாயின் நிழல் உலக சக்ரவர்த்தியாக இருந்தார்.
அப்போது பம்பாயில் மாபியா குழுக்களிடையே தொழில் போட்டியில்
தொடர் கொலைகள் நிகழ்ந்தன.
மஸ்தானை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்
“ நடக்கும் நிகழ்வுகள் காட்பாதர் சிச்சுவேஷன் போல் உள்ளதே” எனக்கேட்டார்.
மஸ்தான்...“ உண்மைதான்...
ஆனால் காட்பாதர் பார்ட் 1 அல்ல...காட்பாதர் பார்ட் 2 சிச்சுவேஷன் ” என்றார்.
நிஜம் நிழலாகிறது...நிழல் நிஜமாகிறது.

காட்பாதரையும், நாயகனையும் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொண்டதால் போர்ச்சுக்கல் விமர்சகர் பாராட்டுகிறார்.
டைம் பத்திரிக்கை காட்பாதர் ,காட்பாதர் 2, நாயகன் மூன்று படத்தையும்
உலகின் தலை சிறந்த நூறு படங்கள் வரிசையில் இணைத்து
கொண்டாடியது.



மணிரத்னம் தலைமையில்...
கமல்,இளையராஜா,பி.ஸி.ஸ்ரீராம்,தோட்டா தரணி,லெனின்,பால குமாரன் மற்றும்  
தமிழ் திரையுலகின் ஜாம்பவன்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கிய...
நாயகன் என்ற காப்பியத்தை... 
தமிழ் பதிவர்களில்  ‘சிலர்’ மட்டும்தான்...
காப்பிக்கும் - இன்ஸ்பிரேஷனுக்கும் வேறுபாடு புரியாமல் 
கண்ட மேனிக்கு எழுதுகிறார்கள்.
அவர்களுக்காக ஒன்று சொல்கிறேன்.
நியூயார்க் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
பம்பாய் நகரிலும், பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள்.
நியூயார்க் பெண்களை காப்பியடித்து...
பம்பாய் பெண்கள் பிள்ளை பெறுகிறார்கள் என யாரும் சொல்லவே முடியாது.

பின்னூட்டங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.



Oct 30, 2012

நாயகன் - ‘ போர்ச்சுக்கல் பிளிறல் ’

நண்பர்களே...
போன பதிவில் நாயகன் பட தொடர்பாக  கமல் - முக்தா 
இருவரது கருத்துக்களை பார்த்தோம்.
இது தொடர்பாக எனது கருத்தை எழுதுவதற்கு முன்னோட்டமாக...
நாயகன் படத்திற்கு போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த விமர்சகர்
Jorge Soares Aka Shinobi  எழுதியதை சமர்ப்பிக்கிறேன்.

இந்தப்பதிவு மட்டும்... தற்காலிகமாக ஆங்கிலத்தில் இயங்குகிறது.
தமிழ் அன்பர்கள் மன்னிக்கவும்.

சேட்டைக்காரர்களும்... ‘வெறி பிடித்த’ கமல் எதிர்பாளர்களும் இதையும் படித்து விட்டு வழக்கம் போல், கமல் = காப்பி...காப்பி...காப்பி என எழுதவும்.
நடு நடுவே... டீ, போர்ன்விடா, ஹார்லிக்ஸ் சேர்த்து எழுதவும்.



"Shakti Velu 'is a child who murders the policeman who killed his father, 
and as a result, is forced to flee to Mumbai, 
where he ends up being adopted by a Muslim fisherman who has a gentle personality and extremely fair. Over the years, 
the now young adult "Velu" (Kamal Hassan) and his friend "Jungle" (Janagaraj) develop a feeling of hatred towards the police, 
due to the fact that it is a brutal form people living in most poor areas of Mumbai. 
Due to death perpetrated by law enforcement against those who welcomed him as a child, 
"Velu" kill the officer in charge, and penetrates into the world of crime, where smuggling and gangs dictate the law.

Later, "Velu" knows "Neela" (Saranya), and passionate, contract marriage, 
two children born here. 
However, the journey of the protagonist in the world of organized crime vai walking path, and "Velu" eventually become one of the most prominent leaders of the Mumbai underworld.
Given this fact, the tragedy knocks at the door of "Velu" again when his wife is killed in a settling of accounts between rival. 
Misfortune is the motto that "Velu" depart again for revenge, eliminate your opponents and become the undisputed leader.
As the years pass, a period of calm seems to finally arrive. 
However, "Velu" is faced again with the family disgrace, this time with the couple who means everything to him worldwide, their children.

In 1987, when the film "Nayagan" saw the light of day, 
was created unprecedented success in the Tamil movie concerns, 
and its grandeur is sprawling across India, 
including having been the proposal of this country in the Oscars respect of that year. 
In 2005, the prestigious magazine "Time" would put "Nayagan" a real pedestal, to consider this film as one of the 100 best movies ever. 
A resume of respect therefore.

But what about actually versa "Nayagan"? 
It is no secret that all countries have, to a greater or lesser extent, 
structures of organized crime which sometimes assume the dimension of real societies apart, 
or a reality very own within a certain social context. 
India, in its immensity geographic and ethnic, no exception. 
"Nayagan" was its inspiration to a real person. 
I refer to the "gangster" Varadajan, who controlled the Mumbai underworld, especially in the late '80s. 
Its activities are mainly reconduziam smuggling at ports, after evolving for the killings and other illegal activities. 
It is said that Varajadan had created a parallel judicial system in its Tamil community, 
where he himself would be judge and executioner of the law. 
Known as a benefactor, 
Varajadan was a very strong symbol of the Tamil community living in Mumbai and defender of the rights of his people against an overwhelming majority population composed by Hindi.

"Nayagan" means "hero" or "leader", 
and no doubt that Varajadan, or "Shakti Velu" as it is called in this film, 
is reported as a folk hero who protects the oppressed and those who are on the lowest rung of the social spectrum. 
In the wake of the great influence exerted by saga "Godfather", 
Mani Ratnam gives the body an epic related to organized crime, using as inspiration one of the "gangsters" popularity of Indian history. 
However, "Velu" is never properly seen as a bloodthirsty criminal leader, 
but as a good-hearted man, who is haunted by tragedy throughout his life, and who uses illegal activities, especially smuggling, to help those who most need. 
Note that often "Velu" call for a life lesson and sentence was passed upon him by his adoptive father, 
namely, "whether it is to help people, not wrong."

The plot is somewhat intricate, where they will be arranging situations increasingly dramatic, 
some rather forced, but reaching the intended target. 
However, always tell you that there are plenty of iconic scenes in "Nayakan". 
Think of the stoic endurance of "Velu" to attack police with water hoses, 
their deadly struggle with the inspector in the slums of Mumbai or the discussions that take place with your daughter about the relativity of good and evil .

The actors fulfill what is required of them, but the highlight has to necessarily go to actor Kamal Hassan, 
who is a high fashion, the role of the protagonist of the story. 
Can you, in equal measure and a safe conduct, to externalize revolt "Velu" at an earlier age, 
who holds the power in the prime of his life and finally demonstrated vulnerability in old age. 
Their reaction, face the loss of loved ones, is truly touching and credible. 
A good job!

With a soundtrack quite acceptable, highlighting the initial repertoire and that repeats a bit throughout the film and an ending that brings to mind "Gandhi", Richard Attenborough, "Nayakan" is without any doubt one larger work of the Tamil film scene. 
Not recognizing the brilliance that many insist on attributing to this feature, 
there is no doubt that we are present before a film endowed with a deep soul, 
and with a high interest that serve to justify an attentive viewing.
A check! 

போர்ச்சுக்கல் பதிவைக்காண கீழ்க்கண்ட இணைப்பில் செல்லவும்.

நாயகன் படத்திற்கான... போர்ச்சுக்கல் பிளிறல்



Aug 5, 2012

மணிரத்னத்தை காப்பியடித்த... வெள்ளைக்காரன்


மணிரத்னம் தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தி பிடித்த வித்தகன்.
ஆர்ப்பரித்து அலறாமல்....அமைதியாக அவரது படைப்புகளை முன் வைக்கும் பாங்கை ...அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய உதாரணம்.

காப்பி...காப்பி...என்று நமது பதிவுலகில் தொடர்ந்து முழங்கி வருகிறார்கள் பலர்.
நானும் அவர்களை பின் தொடர முடிவு செய்து விட்டேன்.
காப்பியடிப்பவர்களை பிடிப்பதில்...தமிழ்நாடு போலிசுக்கு இணையாக செயல் பட்டு வருகிறார் எனது நண்பர்... ‘கருந்தேள்’ ராஜேஷ்.
அவருக்கு , ‘ஹாலிவுட்’... ‘கொழந்த’....மனசு.
நம்ம  பிள்ளையை... அடிச்சு வளர்த்தா போதும்னு நினைக்கிறாரு.
அவர் வழியில்... நானும் காப்பியடிக்கும் கனவான்களை காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஆனால்  ‘என் வழி தனி வழி’.

நான் ஹாலிவுட்  ‘காப்பியர்களை’ காட்டி கொடுக்க முடிவு செய்து விட்டேன்.
ஏற்கெனவே சுஜாதா கதையை காப்பியடித்த  ‘அன் நோன்’
[Un Known]திரைப்படத்தை  ‘வெளுத்தெடுத்த’ அனுபவம் இருக்கிறது.


நம்ம மணிரத்னம்  ‘தில் சே’ - 1998 [ ஹிந்தி ] எடுத்து தமிழில்  'உயிரே'ன்னு டப் செய்து வெளியிட்டார்.
வட கிழக்கிந்திய மாநிலங்களில் இன்று வரை நிகழும்  ‘சிவில் யுத்தத்தை’
மெல்லிய இழையாக்கி..காதலை முதன்மையாக்கி எடுத்திருந்தார்.

ஷாருக்கான்  ‘சைய்யா...சைய்யா’ன்னு குதிச்சுகிட்டு...டிரெய்ன் மேல
ஆடுவாரு.
கூடவே மலாக்கான்னு ஒரு அக்கா இடுப்பை வெட்டுவாங்க...

ஊட்டி ரயில... பெயிண்ட் பண்ணி 15 நாள் சூட் பண்ணி எடுத்தாரு.
‘அகிலா’ன்னு ஒரு கிரேன் புதுசா வந்த நேரம்.
அந்த கிரேன் 150 அடி உயரம் மேலே போவும்.
‘அகிலாவுக்கு’...அந்த பாட்டுதான்  ‘டெமோ’.
இண்ணைக்கு வரைக்கும்  ‘ஒரு பய’ டிரெய்ன்ல பாட்டு ஷூட் பண்ண முடியாது.
அந்த பாட்டை ஒவர்டேக் பண்ணவே முடியாது.

அந்த பாட்டு உலகமெல்லாம் ஹிட்டடித்து ரஹ்மானுக்கு மிகப்பெரிய பிரேக். ஒரு வெள்ளைக்காரன் ரஹ்மான்கிட்ட  ‘ரைட்ஸ்’ வாங்கி... ‘இன்சைட் மேன்’ [Inside Man] என்ற ஹாலிவுட் படத்தில் அந்த பாட்டை பயன்படுத்தினான். 

இந்தப்படத்தின் கதையை Tigmansha Dhulisa , Maniratnam, Sujatha  மூணு பேரும் சேர்ந்து உருவாக்கியிருக்காங்க.
 மனிஷா கொய்ராலா... மலை வாழ் மகள்.
ஷாருக்கை காதலிச்சு..தீடிர்னு காணாம போயிருவா.
அந்த துக்கத்தை மறக்க, ‘பிரித்தி ஜிந்தான்னு’ ஒரு ஜாங்கிரியை கல்யாணம் பண்ற நேரம்...
திரும்ப மனிஷா  ‘எண்ட்ரி’.
ஷாருக்கை குழப்பி...நம்மையும் குழப்பி...
மனிஷா... ஒரு  ‘மனித வெடிகுண்டு’ன்னு முடிச்சிருப்பாங்க.


இந்தக்கதையை பட்டி பார்த்து  ' Luc Besson ' என்ற ஜாம்பவான்... காசு பாத்திட்டாரு.
அவன்  தயாரிப்பில்... ‘ஜான் டிரோவோல்டோவை’ நடிக்க வச்சு.. ‘ஃப்ரம் பாரிஸ் வித லவ்’-2010 \ ஆங்கிலம்    என்ற படத்தை எடுத்து ஹிட்டாக்கி கல்லா கட்டிட்டான்.

ஆனா...மணிரத்னம் கிளைமாக்ஸ் சூப்பீரியரா இருந்துச்சு.
இந்திய கலாச்சாரப்படி, காதலை விட்டுக்கொடுக்காத காதலனும்...கொள்கையை விட்டுக்கொடுக்காத காதலியும் இணைந்து உயிரை விடுவார்கள்.
ஹாலிவுட் படத்தில்...கொள்கைக்காக காதலியை மட்டும் சாகடிச்சு...காதலனை தப்பிக்க வச்சிருப்பாங்க.
இப்படி மசாலா கிளைமாக்ஸ் வச்சா... நல்லா கல்லா கட்டலாம்.

 ‘மலை வாழ் மகளை’  ‘முஸ்லீம்னு ’ ஒரு  ‘சேஞ்சு’ கொடுத்தான்...
‘சேஞ்சை’ அள்ளிட்டான்.
டெரரிஸ்ட்னா... முஸ்லீம்தான்னு ஹாலிவுட்காரன் தொடர்ந்து ரூல் எழுதிகிட்டு இருக்கான்.    
‘பிர்பால பதிவருன்னு’ நக்கலடிக்கும்  ‘நல்லவர்கள்’ இதப்பத்தி மூச்சே வுட மாட்டாங்க...
ஆனா  ‘கமல்ஹாசன்’ முஸ்லீம் இன விரோதின்னு சொல்லிட்டுதான் டெய்லி  ‘மூச்சா’ போவாங்க.


உதாரணத்துக்கு  ‘தசாவதாரம்’ன்னு ஒரு சாதா மசால் தோசை படம். அதுல..பத்து அவதாரத்துல ஒண்ணா... உயரமா  ‘பீம்பாய்’ கேரக்டர் ஒண்ணு படைச்சிருப்பார் கமல்.
உயரத்துக்கேத்த மாதிரியே மிக உயர்வா படைச்சிருப்பாரு.
அவ்வளவு வெள்ளந்தியா அந்த கேரக்டர் இருக்கும்.
அந்த காரெக்டர், உலகத்தில் உள்ள அனைவரையும் நல்லவங்களா பாக்கும். அந்த காரெக்டருக்கு கெட்டதே தெரியாது. எப்பேர்பட்ட உயர் படைப்பு !.


 ‘தசாவதாரம்’ நாயுடு காரெக்டர் ஒரு சீன்ல சொல்வாரு...
“எல்லோரும் முஸ்லீம்களா...
அப்ப எல்லோரும் டெர்ரரிஸ்ட்தான்....
அவ்வளவு பேரையும் அரஸ்ட் பண்ணுங்க ”

முஸ்லீம் இன மக்கள் எல்லோரையும் தீவிரவாதிகள்தான் எனப்பார்க்கும் பொது புத்தியை நக்கலடித்தவர் கமல்.
நானும், ‘காது... கேட்காது’ எனத்தெரிந்தே...  தொடர்ந்து சங்கு ஊதுகிறேன்.
கண் மூடிய பூனைகள்... இருட்டென்றே புலம்பட்டும்.
 அடுத்த பதிவில்... நம்ம ரஜினி படத்தை காப்பியடிச்ச காப்பியரை...
காட்டி கொடுப்பேன்.
காத்திருங்கள்.

உயிரே படப்பாடலை காணொளியில் காண்க...