Showing posts with label ஹேராம். Show all posts
Showing posts with label ஹேராம். Show all posts

Jun 11, 2013

கமலின் கான்செப்ட்...இரண்டு மனைவிகள்.


HEY RAM \ 2000 \ INDIA \ DIRECTED BY : KAMAL HASSAN \ ஹேராம் = 036

“ கமல் திரைக்கதை எழுதிய படங்களில் திரும்பத்திரும்ப வெளிப்படும் ஒரு விஷயம், அப்பா என்கிற படிமம்.
குறிப்பாக, அப்பாவிடமிருந்து விலகிப்போக விரும்பும் ஒருவன் எப்படி அப்பாவின் ஆளுமையிலிருந்து விலக முடியாதவனாக இருக்கிறான் என்பதே
அவரது ஆதார பிரச்சனை.
குடும்பத்திலிருந்து வெளியேற விரும்புவம் ஒருவனே அவரது கதாநாயகன்.
அவன் வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண்ணோடு பழகுகிறான்.
அவளைக்காதலிக்கிறான்.
திருமணம் செய்து கொள்ளும் முன்பே அவளோடு நெருக்கமாக பழகி சேர்ந்திருக்கிறான்.
பிறகு சூழலின் காரணமாக அவளை கைவிட்டு இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.

இது தேவர் மகனில் மட்டுமில்லாது, ஹேராமிலும் இடம் பெறுகிறது.
ஒரு வகையில் இந்த ஒப்புமை ஆச்சரியப்படக்கூடியது.
தேவர் மகன், ஹேராம்...
இரண்டிலுமே இரண்டு நாயகிகள் இடம் பெறுகின்றனர்.
ஒன்று, அவன் காதலி.
மற்றொன்று, அவன் மனைவி.
காதலி... அவன் விரும்பித்தேடிக்கொண்டது.
மனைவி...அவன் முழு விருப்பமின்றி மணந்து கொள்ளப்பட்டவள்.
தேவர் மகனில்...செங்கமலமும் [ ரேவதி ],
ஹேராமில்...மைதிலியும் [ வசுந்தரா தாஸ் ],
தனது கணவனோடு உள்ள உறவைப்புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
கடந்த காலத்தில் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்பதை அறிந்து அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.” - எஸ்.ராமகிருஷ்ணன்.
நூல் : கமல் நம் காலத்து நாயகன் \ முதல் பதிப்பு \ 2011.
தொகுப்பு : மணா.
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.
[ நூலில் எஸ்.ரா ஹேராம் பற்றிய கட்டுரைக்கு, 
எழுதப்பட்ட காலமும், 
கட்டுரை இடம் பெற்ற ஊடகமும் குறிப்பிடப்படவில்லை ] 

நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ஒப்பீட்டு ஆய்வை இப்பதிவின் முன்னுரையாக இடம் பெறச்செய்தது மிகப்பொருத்தமான ஒன்றே.

இனி ஹேராம் திரைக்கதைக்குள் செல்வோம்.
_________________________________________________________________________________

தன் மகளை முதலிரவு அறைக்குள் அனுப்ப வந்த...

அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...

அறையினுள் ராம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து,
காந்தியடிகளின் ‘சத்திய சோதனை’ ஆங்கிலப்புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறான்.

மைதிலி : [ என்ன பேசுவது என்றே புரியாமல் ] பால் அங்கே இருக்கு.

ராம் : இல்ல...நான் பாலே சாப்பிடறதில்ல.

மைதிலி : ஏன் ? டாக்டர்... ப்டாதுண்ட்டாரா ?

[ ராம் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை பார்த்து ]

மைதிலி : இண்ட்ரஸ்டிங் இல்ல ?

ராம் புருவம் உயர்த்தி அவளைப்பார்க்கிறான்.

மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான்.

ராம் : ஓ !...ஸாரி.

புத்தகத்தை கீழே வைக்கிறான்.

மைதிலி : நோ...நோ...படிங்கோ.
‘டிட் யூ லைக் த புக்’

ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.

மைதிலி : நான் பொடவையை மாத்திண்டு வந்துட்றேன்.
பட்டுப்பொடவய கட்டிண்டு தூங்க வேண்டானுட்டா...அம்மா. 

பீரோவிலிருந்து வேறு புடவையை எடுத்துக்கொண்டு மைதிலி குளியலறைக்குள் போகிறாள்.
குளியலறைக்குள் புகுந்த மைதிலி, கதவை தாழ்ப்பாள் இட்டு விட்டு,
புடவையை களையத்துவங்குகிறாள்.
ஒரு பல்லி அவள் தோள் மீது விழுகிறது.
மைதிலி அலறி விடுகிறாள்.

மைதிலி : ஆ...ஆ...ஆ....

பல்லி கீழே விழுந்து ஓடுகிறது.
காலில் ஏறி விடுமோ என பயத்தில் கத்திக்கொண்டே குதிக்கிறாள் மைதிலி.
குளியலறைக்கு வெளியிலிருக்கும் ராம் குழப்பமைடைகிறான்.
மைதிலியின் அலறல், ராமை கல்கத்தா சூழலுக்குள் நினைவினில் உந்தித்தள்ளி விடுகிறது.

ராமின் கண்கள் திறந்திருந்தும், எதையும் பார்க்காத கண்களுடன்...
தூக்கத்தில் நடப்பவன் போல் பாத்ரூம் கதவை அடைந்து தட்டுகிறான்.

ராம் : அபர்னா...அபர்னா...

 ‘நிஜத்திற்கும்’... ‘நினைவிற்கும்’...பிரித்து பார்க்க முடியவில்லை ராமால்.  மைதிலி கதவை திறக்கிறாள்.
ராம், குரல் கொடுப்பதை நிறுத்தி விடுகிறான்.
ஜாக்கெட் தெரியும் கோலத்தில் இருக்கும் மைதிலி அவசரமாக புடைவையை
போர்த்தி மறைக்கிறாள்.

மைதிலி : அபர்னா யாரு ?

ராம் பதில் சொல்லாமல் குளியலறைக்குள் சென்று, மூடித்தாழிட்டுக்கொண்டு
நினைவில் சூழ்ந்துள்ள ‘கல்கத்தா துயரங்களுக்கு தலை முழுக’
குளிக்க ஆரம்பிக்கிறான்.
மைதிலி வெளியே குழப்பத்தோடு காத்திருக்கிறாள்.

நனைந்த உடலுடன், ராம் நிர்வாணமாக ஒரு மூலையில் போய் ஒடுங்குகிறான்.
மெய் மறந்த நிலையில் ராம் இருக்கிறான்.

[ வெளியிலிருந்த ] மைதிலி : ஏன்னா...உங்களுக்கு ஒண்ணுமில்லியே.
ஆர் யூ ஆல் ரைட்?

நிஜ மைதிலியின் குரலுடன் கலந்து,
நனவோடை கல்கத்தா அபர்னா - கற்பழிப்பாளர்களின் குரலும் கலந்து கேட்கும் பிரமை ராமுக்கு ஏற்படுகிறது.

அல்தாப் : [ குரல் மட்டும் ] மேம் சாப்...தார்வாசா கோலோ மூம்சாப்...
மெய்ன் அல்தாப் மேம்சாப்...ஆப்கா புரானா டெய்லர் மேம்சாப்...
நையா நாப் லேனே ஆயாஹூன்.

அபர்னா : [ குரல் மட்டும் ] ராம்...ஆர் யூ ஆல் ரைட் ராம் ?

ராம் தன் செவிகளை அடைத்துக்கொள்கிறான்.
கல்கத்தாவில் இறந்தவர்கள் உருவங்கள் பாத்ரூம் தரையில் தோன்றி மறைகின்றன.

அபர்னா, கழுத்தறுக்கப்பட்டு கிடக்கிறாள்.
இரத்தம் குளமாக தேங்கி கிடக்கிறது.
ராமால் கொல்லப்பட்ட அனைவரும் அங்கே இருக்கிறார்கள்...
அவனது முதலிரவுக்கு வருகை தந்தவர்கள் போல...

பல்லி ரத்தம் குடிக்கிறது...
ராம் துடிக்கிறான்.
ரத்தச்சகதியின் மீது பல்லி ஊர்ந்தும்...நடந்தும் செல்கிறது.

_________________________________________________________________________________

திரைக்கதையை முழுக்க விவரித்ததன் மூலமாக,
நீங்கள் இக்காட்சியை மறுபடி மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்திருப்பீர்கள்.

\\\ அம்புஜம் : நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா...பயப்படாத...\\\

இந்தியத்தாய்க்கும் - மகளுக்கும் இருக்கும் உறவு நெருக்கம்...
பாலியலுக்கு பக்குவப்படுத்துதல்...
இரண்டையுமே, இந்த  ‘ஒரு வரி வசனத்தில்’ வெளிப்படுத்தி... 
நம் குடும்ப அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு முதலிய பெருமைகளை உலகறியச்செய்துள்ளார் படைப்பாளி கமல்.
மேல் நாட்டு ‘டேட்டிங்’ கலாச்சாரத்தை இங்கே பரப்ப நினைக்கும் பன்னாடைகளுக்கு இக்காட்சி பாடம் புகட்டும்.


\\\  மைதிலி : [ புத்தகத்தை காட்டி ] காந்திஜீஸ் பயாகிரபி. 
என் புக்தான். \\\

இந்த வசனத்தை உச்சரிக்கும் போது மைதிலியின் குரலில் பெருமிதம் பொங்கி வழிவதைக்காணலாம்.

\\\ ராம் : நோ...ஐ யூஷுவலி டோண்ட் லைக் செமி பிக்‌ஷன்.
வேற ஒண்ணும் படிக்கிறதுக்கு கிடைக்கல...அதான்.\\\

ராமின் குரலில் அலட்சியம் மேலோங்கி இருக்கும்.

‘காந்திஜீ பயாகிரபியை’... ‘செமி பிக்‌ஷன்’... என ராம் நக்கலடிப்பதை விரும்பாமல் மைதிலி அந்த இடத்திலிருந்து நகருவாள்.
இந்தக்குணம்... இந்தியப்பெண்களுக்கே உரித்தான பராம்பரிய குணம்!
காந்தியையும் விட்டுக்கொடுக்க முடியாமல்,
புருஷனையும் திட்ட முடியாத...
மைதிலியின் ஷண நேரத்தவிப்பை மிக அற்புதமாக தனது முகத்தில் பிரதிபலித்து காட்டியிருப்பார் வசுந்தரா தாஸ்.

பாத்ரூமிற்குள் மைதிலி,
பல்லிக்கு பயந்து அலறுகிறாள்.
ராமிற்கு, மைதிலியின் அலறல்,
நனவோடையினால் [ Stream Of Consciousness ]...
அபர்னாவின் கதறலாக கேட்கிறது.

பார்வையாளராகிய நமக்கு இருவரது அலறலும் கேட்கிறது.
திரையில் விஷுவலாக காட்டப்படும் மைதிலியின் அலறலுக்கு பின்னணி இசை அமைக்காமல்,
ராமின் நனவோடையில் ஒலிக்கும் அபர்னாவின் கதறலுக்கு ...
பின்னணி இசை கொடுத்து...
ரசிகர்களை நனவோடையில் ஆழ்த்தி ‘கல்கத்தாவுக்கு’ அழைத்து செல்கிறார் இளையராஜா.
இரண்டு ஜீனியஸ்கள் ஒன்றாக சங்கமித்ததால் நமக்கு கிடைத்த பொக்கிஷம் இந்தக்காட்சி.


அவலத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் ராஜாவின் இசை,
மைதிலி கதவைத்திறந்ததும்...நொடி நேரத்தில் மெல்லிசையாக மாறி சாந்தமாக ஒலிக்கும்.
மீண்டும் ராம் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டு கதவடைத்ததும்,
ராஜாவின் ‘துன்பியல் இசை’ ...
காட்சியில் இடம் பெறும் சப்தங்களுக்கு...
இடையூறு செய்யாமல் ரசிகனுக்கு அவலச்சுவையை கூட்டுவதில்
தன் பங்கை செவ்வனே செய்கிறது.

அடித்துச்சொல்கிறேன்..
உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ்,
ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா.
இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க,
கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு.

ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள்,
தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.



அபர்னா நினைப்பு, கல்கத்தா துயரம் இவைகள் ஏற்படுத்திய  உள்ளக்கொதிப்பை தணிக்க ராம்  ‘தலை முழுகுகிறான்’.
இறுதியாக  ‘கரண்ட் ஷாக்கில்’ உடம்பு உதறுவது போல் உடல் மொழியை ஏற்படுத்தி நம்மை ஆகர்ஷிக்கிறார் கமல்.
இக்காட்சியில்  நடிகர் கமலை பாராட்டுவதா !
வடிவமைத்த இயக்குனர் கமலை பாராட்டுவதா !!
ஒரே வார்த்தை...கொன்னுட்டீங்க கமல்.

‘நனவோடைக்காட்சிகளை’ படமாக்குவதில் உலகிலேயே
ஈடு இணையற்ற மாஸ்டர் ‘ இயக்குனர் மாமேதை இங்மர் பெர்க்மன்’ மட்டுமே.
ராமின் குளியலறைக்காட்சியின் மூலமாக  ‘பெர்க்மனுக்கு’ இணையாக உயர்ந்து விட்டார் கமல்.


மைதிலியின் மீது விழுந்த பல்லியும்...
இரத்த சகதிக்குள் துடிக்கும் பல்லியும்...
ஒன்றல்ல.
ஏனென்றால் ராம் பார்க்கும் போது வெற்றுத்தரையாக இருப்பது...
மெல்ல மெல்ல இரத்தக்குளமாக உருவெடுக்கும்.
அதில் ஊர்ந்து போய் இரத்தத்தை குடிக்கிறது ‘பல்லி’.
இக்காட்சி சரியான ‘பெர்க்மன்தனம்’.

பல்லி = நனவோடை.
இரத்தம் = கல்கத்தா துயரம்.

இது போன்ற காட்சியை பாமர ரசிகன் புரிந்து கொள்வான் என நம்பி 2000ல் படமெடுத்த கமலுக்கு...
ராயல் சல்யூட்.

‘பெர்க்மனை’  உண்மையாக புரிந்து கொண்ட ரசிகன்,
இக்காட்சியை அமைத்த கமலைக்கொண்டாடுவான்.

‘நனவோடை’ பற்றி ஹேராமின் முந்தைய பதிவு ஒன்றில் சொல்லியுள்ளேன்.

ஹேராம் = 031 பதிவிற்குச்செல்ல...

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Jun 10, 2013

பதிவுலக பண்ணையார்கள் பற்றி எரியட்டும்.


நண்பர்களே...
பேட்டரி, ஊமத்தை, அரளி விதையை போட்டுக்காய்ச்சிய கள்ளச்சாராயத்தை வாசகனிடம் விற்று விட்டு ‘ரெமி மார்ட்டினுக்கு’ வழியில்லையே எனப்புலம்பும் ‘லகுட பாண்டி’ இருக்கும் நாட்டில்தான்...
தாய்ப்பாலை பருக வைக்கும் எழுத்தாளனாக,
வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
இந்த ‘கள்ளச்சாராயம்’...  ‘தாய்ப்பாலை’ தொடர்ந்து தாக்கி வரும் மர்மத்தையும் நாடறியும்.
எஸ்.ரா அவர்கள் ஹேராமுக்கு பாராட்டு பத்திரம் வாசித்ததை,
வாசிக்கும்  ‘ஒரு சில பதிவுலக பண்ணையார்கள்’ பற்றி எரிவதை பற்றி கவலையில்லை.
என் கடன்  ‘உலக சினிமாவுக்கு’ பணி செய்து கிடப்பதே.

Heyram \ 2000 \ India \ Directed by Kamal Hassan \ Part = 035


“  ஹாலிவுட்டின் 3 அங்கங்கள் கொண்ட திரைக்கதை அமைப்பு 
தமிழுக்கு பொருந்தாது.
அதற்குக்காரணம், தமிழில் கதை சொல்லும் முறைகள் ஏராளம். 
இங்குள்ள ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், நாட்டார் கதைகள் போன்றவை நூற்றுக்கணக்கான கதை சொல்லும் முறைகளை கொண்டிருக்கின்றன.
ஆகவே,தமிழ் திரைக்கதை... 
‘சிட்ஃபீல்டு’ சொல்லும் 3 அங்கங்கங்களை கொண்ட திரைக்கதை அமைப்பிற்கு 
ஒத்து வராது.
இதற்கு உதாரணமாக கமலின் திரைக்கதைகளையே சொல்லலாம்.
அவரது கதைகள் சம்பிரதாயமான ஹாலிவுட் திரைக்கதை வடிவத்திற்குள் பொருந்தாதவை.

ஹேராம் இந்திய சுதந்திரத்தின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டிய முதல் படம்.
காந்தி எப்போதுமே ஒரு புனித பிம்பமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
அதை விலக்கி காந்தியை முன் வைத்து நடந்த அரசியல் சம்பவங்களையும்,
அதன் விளைவுகள் இன்றுவரை இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை விவரிக்கிறது ஹேராம்.
இதை ஒரு கமர்சியல் சினிமாவிற்கான கதையாக தேர்வு செய்வது என்பதிலே...
கமலின் துணிச்சலும் ஆர்வமும் வெளிப்பட்டுள்ளது.

ஹேராமின் திரைக்கதை விரிந்த தளத்தில் இயங்கக்கூடியது.
பொதுவில் திரைக்கதையின் முக்கியப்பிரச்சனையாக கதை நடைபெறும் கால மற்றும் வெளியைச்சொல்வார்கள்.
ஹேராம் ஒரு நாவல் போல சரித்திரத்தின் நீண்ட பக்கங்களில் முன்பின்னாக நகர்ந்து செல்கிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதும்,
அதன் எதிர்விளைவுகளாக உருவான வன்முறையும்,
இந்திய சமூகத்தில் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் பாதிப்புகளின் மீதான ஒரு கலைஞனின் பார்வையே ஹேராம்.

சினிமாவில் சரித்திரத்தை மறு உருவாக்கம் செய்யும்போது சந்திக்கும் முதல் சவால் உரையாடல்.
எது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினார்கள்;
எப்படியான மொழியில் வெளிப்படுத்தினார்கள் என்பது.
ஹேராமில் ஐம்பது வருடங்களுக்கு முன்புள்ள பிரயோகங்கள்,சொற்கள்,
உரையாடல்களில் கவனமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
அது போல பல்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் மொழியில் பேசிக்கொள்கிறார்கள்.
இத்தனை வேறுபட்ட மொழிப்பிரயோகங்கள் கொண்டிருந்த போதிலும்,
ஆதாரக்கதை சொல்லல்...காவியத்தன்மை மிக்கதாகவே தொடர்ந்திருக்கிறது.

தமிழ் சினிமாவை தொடர்ந்து அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் ஒரு முன்னோடி கலைஞன் என்ற அளவில் கமலின் படைப்புகள் ஒவ்வொன்றும் விரிவாக விவாதிக்கப்படவேண்டியவை.
கமல் தமிழுக்கு கிடைத்த 
ஒரு ‘ழான் கிளாட் கேரியர்’. 
- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

நூல் : கமல் நம் காலத்து நாயகன்.

தொகுத்தவர் : மணா.

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்.

[ எழுத்தாளர் எஸ்.ரா. அவர்கள் எழுதிய காலமும், வெளியிட்ட ஊடகம் பற்றிய தகவல் நூலில் இல்லை.] 



ழான் கிளாட் கேரியர் பற்றி தெரிந்து கொள்ள விக்கிப்பீடீயாவுக்கு செல்க...
நண்பர்களே...
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கல் வெட்டை’ கண்டு களித்திருப்பீர்கள்.
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.
    

May 28, 2013

ஹேராமில், சென்சார் நீக்கிய காந்தி பற்றிய வசனங்கள்.


Hey Ram \ 2000 \ INDIA \ ஹேராம் = 034 
‘கமல்ஹாசன் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவோடு பேசிக்கொண்டிருக்கிறார்...
சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்...
சூதாடிக்கொண்டு இருக்கிறார்...
இடர்கள் மிகுந்த அதன் ஒவ்வொரு குகையாகத்தட்டி திறந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தமிழில் சினிமா மொழியை உருவாக்குவதற்காக,
அதன் கலா பூர்வமான வேர்களை உயிர்பிப்பதற்காக அவர் தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி கொண்டு இருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த மாதிரிகளாக கருதப்படும் அனைத்தும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கமல்ஹாசன் பரிசோதித்து பார்த்ததின் நீட்சியே’ - மனுஷ்ய புத்திரன். 

நண்பர்களே...
ஹேராமில்,  ராம் - மைதிலி திருமணக்காட்சிகள்,
அய்யங்கார் திருமணச்சடங்குகளை மிகச்சிறப்பாக பதிவு செய்ததை,
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மிகவும் சிலாகித்து பாராட்டி எழுதி இருக்கிறார்.
அம்புஜம் கதாபாத்திரத்தில் ஹேமமாலினி அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
கண்ணாலேயே கணவனுக்கு கட்டளை பிறப்பிப்பதும்,
கட்டளைகளை சரியாக உள்வாங்கி உப்பிலி அய்யங்கார் ‘ஆடுவதும்’ ...
கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

‘வைஷ்ணவோ ஜனதோ...
தேனே கஹியேஜெ...
பீடு பராயி ஜானேரே’
என, பெண் பார்க்கும் படலத்தில்...
மைதிலி, காந்திக்கு பிரியமான பாடலைப்பாட,
மைதிலியின் பெற்றோர் பெருமிதத்தில் பூரிப்பார்கள்.
மைதிலியின் குடும்பமே காந்தியின் பக்தர்கள் என்பதை இக்காட்சியிலேயே
எஸ்டாபிளிஷ் செய்திருக்கிறார் இயக்குனர் கமல்.

ராம் - மைதிலி கண்கள் கலந்து திருமணம் நடக்கிறது.


சாப்பாட்டுப்பந்தி நடக்கும் போது,
மொட்டை மாடியில் நண்பர்களோடு உரையாடுகிறான் ராம்.
ராமின் முகத்தில் கல்யாணக்களையே இருக்காது.

வேதா : என்ன...கல்யாண மாப்ள யோசிச்சிண்டிருக்கே ?

ராம் : இங்க சாவகாசமாக என் கல்யாணம் நடந்திண்டிருக்கு.
டெல்லியில ஒரு பெரிய விவாகரத்தே நடந்துண்டிருக்கு.
‘வேர்ல்டு பிக்கஸ்ட் பொலிட்டிக்கல் டிவ்வோர்ஸ்’

யக்ஞம் : சரி...தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சு.
இந்த பாக்கிஸ்தான் பிரிஞ்சது நல்லதுங்கறேன் நானு.
அந்த ரேட் கிளிஃப் செறங்கை நறுக்கி எறியற மாதிரி 
சர்ஜரியே பண்ணிட்டான்.

வேதா : யாருடா அந்த ரேட் கிளிஃப் ?

யக்ஞம் : என் சித்தப்பா.

வேதா : ஓஹோ...

யக்ஞம் : என்னடா ஒத்துக்கறான்.

வேதா : சரி...ஒத்துக்கல. யாருடா அது ?

ராம் : இந்தியாவையும் பாக்கிஸ்தானையும் பிரிக்கிற கோடு எதுன்னு
நிர்ணயம் பண்ணின மகானுபாவன்.

இக்காட்சியில் உள்ள வசனத்தின் மூலம் ராம்-மைதிலி திருமணக்காலத்தை கணக்கிடலாம்.
மேலும் பிரிவினையை ஆதரிக்கும் பாத்திரமாக ‘யக்ஞம்’ காரெக்டரையும்,
பிரிவினையில் உடன்பாடில்லாத பாத்திரமாக‘ராம்’ காரெக்டரையும் படைத்துள்ளார் படைப்பாளி கமல்.
பிரிவினையில் முரண்பட்ட கருத்துக்கள் இந்துக்களிடம் நிலவியதை இக்காட்சி சித்தரிக்கிறது.
முஸ்லீம்களிடமும் முரண்பட்ட கருத்துக்கள் இருந்த்தை  ‘அம்ஜத்’ காரெக்டர் மூலம் சித்தரிக்கப்பட்டிருப்பதை பின்னால் பார்க்க இருக்கிறோம்.

 இந்திய - பாக்கிஸ்தான் எல்லைக்கோட்டை வகுத்த ரேட் கிளிஃப் பற்றி மேலதிக தகவல்களுக்கு விக்கிப்பீடியாவை அணுகவும்.

ரேட் கிளிஃப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு....


வசந்தா மாமி மயக்கமாகிறார்.
யக்ஞம் டாக்டர் என்பதால் பரிசோதிக்கிறான்.
இக்காட்சியில்  ‘ஸ்கிரிப்ட்டில்’ உள்ள சில வசனங்கள்,
சென்சாரால் நீக்கப்பட்டு உள்ளது.
அந்த வசனங்களை  ‘அடித்து’ அடையாளப்படுத்தி உள்ளேன்.

யக்ஞம் : மாமி, 24 மணி நேரம் இருக்குமா...
நீங்க கடைசியா சாப்டு ?...
ம்...பட்னி...
உங்களுக்கு எதுக்கு இந்த வயசில காந்தி விளையாட்டெல்லாம் ? வேலையெல்லாம் ?

அம்புஜம் : காந்தி வெளயாட்டா ?

யக்ஞம் : அவர்தான் உபவாசம், பாஸ்ட்ன்னு கடைசி நிமிஷம் வரைக்கும்,
எல்லோரையும் இழுத்தடிச்சுட்டு காரியம் ஆனதும் ,
ஒடம்பு கெடாம டக்குன்னு நிறுத்திடுவார்.

அம்புஜம் : என்ன சொல்றார் ? 
மஹாத்மாவை கேலி பேசற மாதிரி இருக்கே ?

பாஷ்யம் : இவா வம்சமே அப்படித்தான்.
லோகம் பூரா ஒண்ண ஒத்துண்டாலும்...இவா ஒத்துக்க மாட்டா.
என் ஒறவுக்காரன்.
ம்...காந்தி என்ன...பகவானையே கேலி பேசுவான்.

யக்ஞம் : ம்...உறவுக்காரரே... ‘ஐ யாம் ஜஸ்ட் பீயிங் பிராக்டிகல்.
மாமி...நான் மகாத்மாவை கேலி பேசல.
‘ஆஸ் எ டாக்டர்’...இந்த மாதிரி ஒடம்ப கவனிச்சுக்காம பட்னி கெடக்கறது தப்புன்னு சொல்றேன். அவ்வளவுதான்.

அம்புஜம் : நானும் நீங்களும் பட்னி கெடந்தா, 
மாமி மாதிரி மயக்கம்தான் வரும்.
மஹாத்மா பட்னி கெடந்தா சுதந்திரம் வரும்.
நீங்க சாப்பிட்டேளா ?

யக்ஞம் : [ நக்கலான விமர்சனம் புரிந்தவனாய்...அசடு வழிய ]
வயிறு திம்முன்னு நெறஞ்சுடுத்து.

அம்புஜம் : அது ‘கேஸ்’ஆ இருக்கும்...போய் சாப்ட்றுங்கோ.

வசந்தா மாமி கலகலன்னு சிரிக்க இக்காட்சி நிறைவு பெறுகிறது.

இக்காட்சியில் காந்தியின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை
கமலின் கருத்தாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
காந்தியின் உண்ணாவிரதப்போரட்டம்,
அந்தக்காலத்திலேயே விமர்சிக்கப்பட்டதை...
யக்ஞம் கதாபாத்திரம் மூலமாக எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.
காந்தியை எந்த விமர்சனமும் இல்லாமல் பக்தர்கள் போல்,
அவரது கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டதை அம்புஜம் கதாபாத்திரம் மூலம் எடுத்துக்காட்டி உள்ளார் கமல்.

இக்காட்சியில் போட்டி போட்டு யக்ஞமாக நடித்த ஒய்.ஜி. மகேந்திரனும்,
அம்புஜமாக நடித்த ஹேமமாலினியும்,
பாராட்டுக்குறியவர்கள்.

வைஷ்ணவோ ஜனதோ & வாரணம் ஆயிரம் பாடலையும்... திருமணக்காட்சிகளையும் காணொளியில் காண்க...


அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

May 25, 2013

மீண்டும் ஹேராம் !


HEYRAM \ 2000 \ INDIA \ ஹேராம் = 033
நண்பர்களே...
ஹேராம் தொடரை தொடர்ந்து எழுதாமல்,
‘டிமிக்கி’ கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இனி ஹேராம் தொடர், நிற்காமல் தொடரும் என உறுதியளிக்கிறேன்.
ஹேராம் தொடர் கற்றுக்கொடுத்த மிக முக்கியமான பாடம் இதுதான்...
“ புதிய கருத்துக்கள் வளர வேண்டும் என்பதற்காக, 
எத்தனை கருத்துக்கள் வெட்டி வீசப்பட வேண்டும் !
இலக்கை சரியாக அடைவதற்கு, 
எத்தனை முறை குறி வைத்து அடிக்க வேண்டும் !! ”

‘ நடிகனின் பிரதான நோக்கம் ஒரு மனித ஆன்மாவின் வாழ்வை,
மறு உருவாக்கம் செய்வது மட்டுமல்ல ; 
மாறாக, அதை ஒரு அழகான கலை நுட்பமான வடிவமைப்பில் வெளிப்படுத்துவதும் ஆகும்’ - கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவ்ஸ்கி.

 ‘ஸ்தனிஸ்லாவ்ஸ்கி’ வகுத்த நடிப்பு இலக்கணத்தை,
ஹேராமில் அனைத்து நடிகர்களும் பின்பற்றியிருப்பதை நாம் காணலாம்.
மிகச்சிறந்த உதாரணம்...சாகேத்ராம் மைதிலியை பெண் பார்க்கும் படலம்.

வேதா என்ற ஒல்லியான இளைஞன், அழைப்பில்லாமல் தெருவிலிருந்து உப்பிலி ஐயங்கார் வீட்டுக்குள் நுழைந்து ராமை தேடுகிறான்.

வேதா : ராமா...ராமா...டேய் ராமா...
வேதாடா...
என்னடா இது, தாடியும் மீசையுமா ?
அசல் பாஷ்யம் மாமா மாதிரியே மாறிட்ட.
அவர் மாதிரியே பிரம்மச்சாரியா போகாம, 
ரெண்டாம் கல்யாணத்துக்கு ஒத்துண்டயே, 
அது வரைக்கும் சந்தோஷம்.

பாஷ்யமும், வசந்தா மாமியும் வெறுப்போடு அவனை முறைக்கிறார்கள்.
வேதா வசந்தா மாமியும் வந்திருப்பதை உணர்ந்தவனாய்...

வேதா : அடடே...வசந்தா மாமி !
சவுக்கியமா இருக்கேளா ?
மாமா வரலயா ? 

வசந்தா மாமி : வரல...

வேதா : ஏன் ?

வசந்தா மாமி : வரல...

வேதா : அதான் ஏன் வரலன்னு கேக்றன்.

வசந்தா மாமி : உடம்பு சரியில்ல.

வேதா : அய்யய்யோ...உடம்பு சரியில்லயா ? நன்னாத்தானே இருந்தார்.

வசந்தா மாமி : போடா பிரம்மஹத்தி.
ஏழு வருசமா கைகால் வெளங்காம படுத்துண்றுக்கார்.

வேதா : ஓ... இருக்கட்டும்...இருக்கட்டும்.

வசந்தா மாமி : இப்ப வந்துட்டான் பெரிசா கேக்கறதுக்கு...
போடா அந்தண்ட...

பாஷ்யம் : அக்கா...

வசந்தா மாமி : இர்ரா...
[ உப்பிலி அய்யங்காரிடம் ]
இவன் என்ன உங்களுக்கு ஒறவா ?

உப்பிலி அய்யங்கார் : அய்யய்யோ; அக்ரஹாரத்துல இருக்கான்.
அவ்வளவுதான். 

இந்தக்காட்சியில் தோன்றும்,
வேதா என்ற காரெக்டரை நீங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள்.
இவர்களால் உபகாரம் இருக்காது; உபத்திரவம் இருக்கும்.

வசந்தா மாமி, ‘இவன் உங்களுக்கு ஒறவா ?’ என கேட்ட தொனியில் திருமணத்தையே நிறுத்தி விடும் தொனி இருக்கும்.
அதைப்புரிந்து, உப்பிலி ஐயங்கார்...
திருமண ஏற்பாடு நின்று விடப்போகிறதே என்ற பதட்டத்தோடு...
‘அய்யய்யோ ; அக்ரஹாரத்துல இருக்கான். அவ்வளவுதான்’ என்று மறுதலிப்பார்.
உப்பிலி அய்யங்காரின் பேச்சின் தொனியில் ‘வேதா ஒரு டம்மி பீசு’ என்பது பொதிந்திருக்கும்.

வேதா காரெக்டரில்...வையாபுரியும்,
வசந்தா மாமி காரெக்டரில்...நாகமணி மகாதேவனும்,
உப்பிலி அய்யங்காராக...கிரிஷ் கர்னாடும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக நாகமணி மகாதேவன்...சான்சே இல்லை.

மைதிலி பாஷ்யம், வசந்தா மாமியை சேவித்து விட்டு,
ராமையும் சேவிப்பாள்.
ராம் அவளை ஆசிர்வதிக்க எத்தனிக்கும்போது,
கையில் அபர்னா அணிவித்த மெட்டியை பார்ப்பான்.
குற்ற உணர்வில் ராம் தவிப்பதை எடுத்துக்காட்ட, 
அற்புதமாக ‘ஷாட் கம்போஸ்’ செய்திருப்பார் இயக்குனர் கமல்.



அந்த  ‘அரை செகண்ட்’ ஷாட்டிற்கு, 
இளையராஜா ‘நீ பார்த்த பார்வை’ பாடலில் உள்ள பியானோ இசையை, பின்னணி இசையாக்கி... இசையால்,  
‘ராம்-அபர்னா’ காதல் காட்சிக்கு ‘கனோட்டேஷன்’ செய்திருப்பார்.

ஹேராம் = அபர்னா - ராம் காதல் காட்சி பற்றிய பதிவிற்கு இங்கே செல்லவும்.




இதெல்லாம்... 
‘தலை கீழாய் தொங்கும் ஜந்துவுக்கு’ புரியுமா ?  

ஹேராமின் முந்தைய பதிவுகளுக்கு கீழ்க்கண்ட இணைப்பில் செல்லவும்...

ஹேராம் = 032

ஹேராம் = 031

ஹேராம் = 030
அடுத்தப்பதிவில் சந்திப்போம்.  

Dec 15, 2012

கடவுள் பாதி...மிருகம் பாதி...

நண்பர்களே...
நான் இந்த வலையுலகத்தில் எழுதிக்கொண்டிருப்பது யாருக்காக ?
எனக்காகத்தான்.
ஏனென்றால்,
எனது  ‘கிரியேட்டிவிட்டியை’ உயிர்ப்போடு இயங்க வைப்பது
வலையுலகம்தான்.

உலகசினிமாவின் கதையை சொல்லி வியாபாரம் செய்யும் சாதாரண வியாபாரி நான்.
 ‘உலகத்தமிழ் மாநாட்டுக்காக’ கோவை வந்திருந்த,
எனது நண்பர் திரு .செந்தில் ராஜ் கொடுத்த ஊக்கத்தில்தான்  பதிவெழுத ஆரம்பித்தேன்.
நண்பர் செந்தில் ராஜ் ‘இடுக்கண் களையும் நட்புக்கு’ இலக்கணமானவர்.
அவர் வலையுலகில்  ‘தமிழ் குறிஞ்சி’ என்ற இணைய பத்திரிக்கையை நடத்தி வருகிறார்.
நான் கமலைப்பற்றி  ‘சகலகலா வல்லவர்’ என்ற 52 வாரத்தொடரை தயாரித்து விளம்பரதாரர் சரியாக அமையாததால் நஷ்டம் அடைந்திருந்தேன்.
அவர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,லண்டன் என உலகம் முழுக்க அத்தொடரை சாட்டிலைட் டிவி,கேபிள் டிவி என வியாபாரம் பண்ணி
நஷ்டத்தை ஈடு கட்டி சிறு லாபத்தையும் ஈட்டி கொடுத்தார்.

நண்பர் புண்ணியத்தால்,
வலையுலகத்தில் எழுத ஆரம்பித்த போது உலகசினிமாக்களை  ‘அறிமுகம்’ மட்டுமே செய்ய ஆரம்பித்தேன்.
விமர்சனம் செய்யவிரும்பவில்லை.
காரணம், அது மிகக்கடினமான பணி.
சொகுசாக உலகசினிமாவை அறிமுகம் செய்து கொண்டு பயணித்தேன்.

பதிவெழுத ஆரம்பித்தபோது வரவேற்று மிகப்பெரிய அறிமுகம் கொடுத்தது
பதிவர்  ‘கருந்தேள்’ ராஜேஷ்தான்.

மதி செய்த விதியால்,
ஹேராம் திரைப்படத்தை முதலில் விமர்சனம் எழுத ஆரம்பித்தேன்.
வந்தது வினை.
எதிர்ப்பு வரிசை கட்டி வந்து, வலையுலகத்திலுள்ள  ‘வசையுலகை’
புரிய வைத்தது..
அதே நேரத்தில், ஆதரவு  ‘ஏகே 47கள்’ அத்தனையையும் சிதறடித்தது.

இறுதியாக வந்த சண்டையில் ,
என்னுள் இருந்த  ‘கடவுளை’க்கடந்து... ‘மிருகம்’ மட்டும் வெளியே வந்தது.
எதிர்ப்பும் முடிவுக்கு வந்தது.
ஆனால் இந்த சண்டையில் என் கடையை நேற்று முதல் மூடி விட்டேன்.
இத்தருணத்தை மிகுந்த சந்தோஷமாக உணருகிறேன்.
10% வருத்தம்...90% மகிழ்ச்சி.
கடையை மூடி விட்டு  ‘சிவாஜியை’ 3டியில் பார்த்தேன்.
இன்று  ‘நீதானே என் பொன் வசந்தம்’.

10% வருத்தம்  =  எதையோ  ‘மிஸ்’ பண்ணிய உணர்வு .
காரணம்,
உலகசினிமாவை ஊர் ஊராகச்சென்று விற்ற போது எனக்கு கிடைத்த நட்பு வட்டாரம்.
பத்திரிக்கையாளர்கள், இலக்கியவாதிகள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், கம்யூனிஸ்ட் சித்தாந்த வாதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவிகள் என... அடேயப்பா!.எவ்வளவு பேர்!!.
இன்று எனக்கு  ‘உலகசினிமா’ மூலம் உலகம் முழுக்க சொந்தங்கள் இருக்கின்றனர்.
பதிவுலகின் மூலமாக ‘உலகசினிமா சொந்தங்கள்’ இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கும்.


இனி...
நான் ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.
‘ஜோர்பா த க்ரீக்’ 
[ ZORBA The Greek \ 1964 \ Written by : Nikos Kazantzakis \ Directed by :Mihalis Kakogiannis ] என்ற உலகசினிமா அல்லது நாவல் படித்தவர்களுக்கு
சட்டென புரிந்திருக்கும்.
ஜோர்பாவுக்கு கடந்த காலமும் கிடையாது.
வருங்காலமும் கிடையாது.
நிகழ்காலத்தில் ரசித்து ருசித்து வாழ்பவன்.
“நேற்று இல்லை...நாளை இல்லை...எப்பவுமே ராஜா”.
நான்  ‘ஜோர்பா’ போல வாழ விரும்புகிறேன்.

அடுத்த பதிவில் சந்திப்போம்.

Dec 11, 2012

‘காப்பித்திலகம்’ கருந்தேள் அடித்த காப்பி.

நண்பர்களே...
போன பதிவில் என் மீது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
பேஸ் புக்கில் கூறிய குற்றச்சாட்டை படித்திருப்பீர்கள்.
 ‘காப்பித்திலகம்’கருந்தேள் குறிப்பிட்ட ஆங்கிலப்பதிவை படிக்கச்சொல்லி ஹேராம் = 003வது பதிவிலேயே லிங்க் கொடுத்திருந்த செய்தியை வெளியிட்டு  
‘காப்பித்திலகம்’ கருந்தேளின் பொய் பிரச்சாரத்தை முனை முறித்து விட்டிருந்தேன்.


ஹேராம் = 003 பதிவில் ஹேராம் ஆங்கில விமர்சனங்களை படிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளும்...இணைப்பும் இதோ...


விக்கிப்பீடீயாவில் ஹேராம் பற்றி மிகச்சிறந்த விமர்சனம் இணைத்துள்ளார்கள்.
தயவு செய்து அதை முழுக்க படித்து விடுங்கள்.

1. இருபது சேப்டர்கள் உள்ள மிக நீண்ட ஆய்வு இது....
http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

2. அமெரிக்க பேராசிரியரின் பதிவு இது....
http://www.uiowa.edu/~incinema/HEYRAM.html


3. எனது ஹேராம் பதிவுகள்.

எனது பதிவையும் உள்ளடக்கிய மூன்று பதிவுகளுமே ‘ஹேராம்’ திரைப்படத்திற்கு  
'Bun & Butter' மாதிரி   'Complimentary'தான்.
ஹேராம் பதிவுகளுக்கிடையில் 'Conflict' ஆக்க முயற்சி செய்த 
 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் பேராசை பலிக்காமல் அம்மணமாகி விட்டது.

ஆனால் இந்த  ‘காப்பித்திலகம்’ கருந்தேள், 
எனது ஹேராம் பதிவையும் படிக்கவில்லை...
 ‘செவன்த் ஆர்ட்’ எழுதிய ஹேராம் பதிவையும் படிக்கவில்லை என தெளிவாகிறது.
இரண்டையும் படித்திருந்தால் எனது பதிவுகள் வேறுபட்டிருக்கும் உண்மை தெரியும்...புரியும்.

ஆனால் ஒன்று... 
எனது மேல் இருந்த காழ்ப்புணர்ச்சியில் ‘செவன்த் ஆர்ட்’  எழுதிய ஹேராம் பதிவை பாராட்டி விட்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.

நான் எழுதிய ஹேராம் = 001 பதிவில்  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் போட்ட கமெண்ட் இதோ...

படத்துல வர்ர முஸ்லிம் டைலர் கொலையாளி. முஸ்லிம்கள் தெளிவா ஸ்கெட்ச் போட்டு கழுத்தை அறுப்பானுங்க. அய்யரு ஈரோ பாலைவனத்துல டுப்பாக்கியோட போஸ் குடுப்பாரு. அதாவது பாப்பான் பொங்கிட்டானாம். ஆரெஸ்ஸெஸ் மானிஃபெஸ்டோல இந்தப்படத்தைத்தான் பரிந்துரைக்கிறாங்களாமே? பெர்க்மேன், ஃபெலினியெல்லாம் இந்தப் படத்த நல்லவேளை பார்க்கல. பார்த்திருந்தா பிலிம் ரோல்லயே தொங்கிருப்பாங்க

 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் காழ்ப்புணர்ச்சியும், சுய முரண்பாடும் 
இப்போது விளங்குகிறதா ?. 

கருந்தேளுக்கு காப்பித்திலகம் என பட்டம் கொடுத்த காரணம் இதோ...

‘நாட் ஒன் லெஸ்’ [ Not One Less  \ 1999 \ Chinese \ Directed by : Zhang Yimou ] என்ற திரைப்படத்தை  பார்க்காமலேயே, 
விக்கிப்பீடீயாவை மொழிபெயர்த்து பதிவெழுதியது ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
கூடவே  ‘மாவோ’ பற்றிய எதிர்மறையான கட்டுரையையும் மொழி பெயர்த்து
ரெண்டையும் இணைத்து இப்படம் மாவோ செய்த அட்டூழியங்களை எடுத்துக்காட்டுகிறது என கன்னாபின்னாவென்று உளறி பதிவு போட்டிருந்தது.

 ‘மாவோ’ இன்றி  ‘மக்கள் சீனம்’ இல்லை.
மாவோவை பற்றித்தெரியாமலே சீனா வரலாறை பற்றிப்பேச முயற்சித்த உலகிலேயே முதல் வடி கட்டின முட்டாள் ‘காப்பித்திலகம்’ கருந்தேள்தான்.  

‘நாட் ஒன் லெஸ்’ என்ற திரைப்படத்தை எனது சொந்த செலவில் கோவையில் திரையிட்டு அப்படத்தை ஆய்வு செய்து ஏற்கெனவே பேசியிருந்தோம்.
விழாவில் கோவையிலுள்ள மிகப்பெரிய கம்யூனிஸ்ட் மேதைகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
 ‘மாவோவை’ பிடிக்காதவர்கள் கூட அவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.
விழாவில் பேசிய அனைவரும் இப்படம்  ‘மாவோவின்’ பாதையிலிருந்து சீனா விலகிச்சென்றதன் சீரழிவை பேசுகிறது என்ற கருத்தையே வழி மொழிந்திருந்தனர்.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள்  ‘நாட் ஒன் லெஸ்’ படத்தை பார்க்காமல், 
விக்கிப்பீடீயாவை அப்படியே காப்பியடித்து பதிவெழுதிய கருந்தேளின் வண்டவாளத்தை தெரிந்து கொண்டாலும்,
அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,
 ‘நாட் ஒன் லெஸ்’ பதிவின் பின்னூட்டத்தில்... படத்தின் மையக்கருத்தை எடுத்துரைத்தேன்.
நான் தெரிவித்த கருத்தை வழக்கம் போல் காட்டுத்தனமாக எதிர்த்தது.
கருந்தேளின் நண்பர் கணேசன் என்பவர் எனது வாதத்துக்கு ஆதரவு தெரிவித்து,
வலுவூட்டவே ஜகா வாங்கி விட்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
 “மாவோ இருந்த காலத்தில் நான் பொறக்கவேயில்லை” என்ற  ‘சொத்தை வாதத்தை’ வைத்து விவாதத்தை முடித்துக்கொண்டது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் விக்கிப்பீடீயாவை காப்பியடித்ததை எப்படி கண்டு பிடித்தேன் என்பதை சொல்கிறேன்.
 ‘நாட் ஒன் லெஸ்’ படத்தில் ஒரு அழகான மலை கிராமம் வரும். 
அதன் தலைவராக ஒரு காரெக்டர் வரும்.
நீங்கள் இப்படத்தை பார்த்து பதிவெழுதினால் அந்த காரெக்டரை எப்படி குறிப்பிடுவீர்கள்?.
பஞ்சாயத்து தலைவர், கிராமத்தலைவர் அல்லது ஊராட்சித்தலைவர்... 
இப்படி ஏதாவது ஒன்றை குறிப்பிடுவீர்கள்.
ஆனால் இந்த  ‘காப்பித்திலகம்’ மேயர் என குறிப்பிட்டது.
இந்தியாவில், எந்த கிராமத்தில் தனது தலைவரை மேயர் என்று குறிப்பிடுகிறார்கள் ?.
இந்த  ‘காப்பித்திலகம்’ விக்கிப்பீடீயாவில்  ‘மேயர்’ எனக்குறிபிடப்பட்டு இருந்ததால்,
கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்படியே தனது மொழிபெயர்ப்பு பதிவில்  ‘மேயர்’ என்றே குறிப்பிட்டு விட்டது.   

ஒரு படத்தைப்பார்க்காமலே, விக்கிப்பீடீயாவை காப்பியடித்து எழுதும் 
 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் மற்றவர்களையும் காப்பி... காப்பி... என எழுதி 
குற்ற உணர்ச்சியை களைந்து கொள்கிறது.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் தான் செய்யும் தில்லுமுல்லுகளை மற்றவர்களும் செய்வார்கள் என்றெண்ணுகிறது.
எனவேதான், 
தமிழ்ப்பட இயக்குனர்கள்,நடிகர்களை காப்பி...காப்பி என எழுதித்தள்ளி தொடர்ந்து அராஜகம் செய்து வருகிறது  ‘காப்பித்திலகம்’ கருந்தேள்.
 ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் மற்றப்பதிவுகளை ஆய்வு செய்தால் இன்னும் காப்பி ரகசியங்கள் வெளிப்படலாம்.
இனி  ‘காப்பித்திலகம்’ கருந்தேள், 
காப்பி என வாயைத்திறந்து பாடாது.

 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் செய்யும் மற்றொரு அராஜகம்...
பதிவர் ஜாக்கி சேகரை தொடர்ந்து ‘ஓட்டும்’ இந்த வீராதி வீரர்கள்.... 
 ‘சின்மயி விவகாரத்தில் கைது’ என்ற செய்தி வந்ததுமே பம்மி விட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வந்ததும் வீரம் முளைத்து விட்டது.
மீண்டும்  ‘ஓட்ட’ ஆரம்பித்து விட்டார்கள். 

இதோ... ‘காப்பித்திலகம்’ கருந்தேளின் மற்றொரு சாகச பம்மல்...
 ‘காரெக்டர்’ [ Character \ 1997 \ Dutch & Belgiam \ Directed by Mike Van Diem ] என்ற படத்துக்கு  ‘காப்பித்திலகம்’ கருந்தேள் பதிவெழுதியபோது, நான் பின்னூட்டத்தில் ஒரு கேள்வி கேட்டேன்.
படத்தின் கதாநாயகன் தனது தந்தையை கொலை செய்தானா ? இல்லையா ?
இன்று வரை அதற்கு பதில் இல்லை.
ஏன் சொல்ல முடியவில்லை ?
சினிமா மொழி தெரிந்தால் மட்டுமே அதற்கு விடையளிக்க முடியும்.

சாரு மட்டுமல்ல...அந்த கோஷ்டிக்கே சினிமா தெரியாது.
எல்லாமே அரைவேக்காடு ஜல்லிகள். 

இனி  ‘காப்பித்திலகம்’ கருந்தேளுக்கு பதில் எழுதி, 
தரம் தாழ விருப்பமில்லை.


 ‘காப்பித்திலகம்’ கருந்தேள் செய்கைக்கு... 
பட்டுக்கோட்டையார் பாடல் அப்படியே பொருந்தி வருகிறது.
பாடலை காணொளியில் காண்க...  




‘காப்பித்திலகம்’ கருந்தேள் என்கிற ராஜேசுக்கு ...குட் பை


நண்பர்களே...அடுத்து  ‘ஹேராம்’ பதிவில் சந்திப்போம்.

    

Dec 10, 2012

‘காப்பித்திலகம்’ கருந்தேளின் ரத்த வாந்தி.


நண்பர்களே... 

கருந்தேள் மீண்டும் தனது இயல்பை காட்ட ஆரம்பித்து இருக்கிறது.

பொறாமை + இயலாமை + வயிற்றெரிச்சல் = அல்சர்

அதற்கு அல்சர் அதிகரித்து ரத்த வாந்தியெடுத்திருக்கிறது.




பேஸ்புக்கில் அது நடத்திய திருவிளையாடல் இதோ...


Rajesh Da Scorp
ஹேராம் பற்றி ஒரிஜினல் ஆங்கில போஸ்ட்கள் இங்கே படிக்கலாம். இது ஒரு நல்ல அனாலிஸிஸ். இதை சுட்டு தமிழில் ஒப்பேற்றி ஒரிஜினல் க்ரெடிட் கொடுக்காமல் எழுதும் போலிகளை நம்பி ஏமாறாதீர் நண்பர்களே. என்னே திருட்டு டிவிடிக்கு வந்த சோதனை.http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

*********************************************************************************
ஜிங்சக். ஜிங்சக். கடவுள்டா. ஜிங்சக். சார்டா. ஜிங்சக். இது ஒலக சினிமா டா. ஜிங்சக். தொள்ளாயிரம் பதிவு போடுவண்டா. ஜிங்சக். கீசிடுவேன். ஜிங்சக். எரித்து விடுவேன். ஜிங்ச்க். திருட்டு டிவிடி வித்தாலும் என் தலைவண்டா. ஜிங்சக். ஜிங்சக் ஜிங். தலைவன் கையெழுத்தின் ஜெராக்ஸ் காப்பி இருக்குடா. ஜிங்சக்(சார் சார். உங்களைப் பத்தி நிறைய பதிவு போட்டுருக்கேன். பார்த்து போட்டு கொடுங்க சார்ர்ர்ர்ர்ர்)
Like ·  · 
  • Murali Krishnan ///தொள்ளாயிரம் பதிவு போடுவண்டா. ஜிங்சக். ////

    அதுவும் எவனாச்சும் புக்க எழுதிருப்பான் அத நோவாம காப்பியடிச்சு பத்தாயிரம் பதிவு எழுதுவேன் டா...  
    13 hours ago · Edited · Like · 3
  • Rajesh Da Scorp முரளி. ஹேராம் பத்தி ஆங்கிலத்தில் யாரோ எழுதின முப்பது ப்ளஸ் பதிவுகளை காப்பியடிச்சி சுட்டு திருடி திருட்டு டிவிடி விக்குற மாதிரியே யாரோ தமிழ்ல எழுதுறாங்கன்னு சொல்றீங்களா? ச்சே ச்சே. ஆதாரம் இல்லாம பேசப்படாது. முடிஞ்சா அந்தப் பதிவுகளின் ஆங்கில லிங்க் போடுங்க பார்ப்போம். சும்மா நொட்ட சொல்லிக்கினு
    13 hours ago via mobile · Like · 5
  • Murali Krishnan இந்தா வாரேன்
  • Murali Krishnan கஷ்டப்பட்டு அப்லோட் லாம் பண்ணிருக்கேன்... கொஞ்சம் பாத்து செய்ங்க....  

    https://docs.google.com/open?id=0BywKPYpLVf0WNkU0eUpZYUQwRG8
    13 hours ago · Like · 1
  • Rajesh Da Scorp நானும் மொபைல்ல தேடியே லிங்க் புடிச்சிட்டேன். இதோ ஒரிஜினல் ஹேராம் போஸ்ட்கள் ஆங்கிலத்தில். http://theseventhart.info/2008/06/20/hey-ram-an-analysis-part-120/

    இத்த காப்பியடிச்சி திருடி தமிழ்ல எழுதுறவங்க ஒலக சினிமா ரசிகருங்களாமா . திருட்டு டிவிடீக்கு வந்த சோதனை


    theseventhart.info
    CHAPTER 1: PREFACE Kamal Haasan’s body of works can be broadly divided into two ...See More
    13 hours ago via mobile · Like · 3
  • Murali Krishnan Rajesh Da Scorp ச்சே இந்த லிங்க்கு எனக்கு மாட்டல....அந்த மொத்த புக்கையும் நான் கூகிள் டிரைவ் ல அப்லோடு பண்ணியே லிங்க் போட்டேன்...  
    13 hours ago · Like · 1
  • Mayil Ravanan Rajesh Da Scorp Hi, I think you gave this link some years back also I think... u remember?
  • Rajesh Da Scorp சுத்தமா நினைவில்ல மயில். அப்படியா என்ன?
    8 hours ago via mobile · Like
  • Mayil Ravanan yeah,i remember well that too when we are pulling legs each other regarding Kamalahaasan garu!!! 
    8 hours ago · Like · 1
  • Rajesh Da Scorp ஹா ஹா. அப்போ ஓகே. ஆனா ஒண்ணு. இத்த நாளிக்கி அவரு பார்ப்பாரு. அப்போ இருக்கு நமக்கு
    8 hours ago via mobile · Like
  • Pratap Kumar Oh it is a medical miracle
    6 hours ago via mobile · Like
  • Haris David ச்சே எனக்கு முதல்ல இது தெரியாமல் போய் விட்டதே? தெரிந்திருந்தால் நான் அதை காபி அடித்து தனி பதிவு போட்டு பெயர் வாங்கியிருப்பேன். டூ லேட்
    6 hours ago · Like · 1
  • Haris David இப்பொது இந்த அனலிசிஸ் தான் படித்து கொண்டிருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கிறது. அனைவரும் படிக்க வேண்டியது.
    5 hours ago · Like · 1
  • Saravanan Savadamuthu எதுக்குக் காப்பியடிக்கணும்..? ஹேராம் டிவிடிய இன்னொருவாட்டி பார்த்துட்டு விமர்சனம் எழுதியிருக்கலாமே..? இதுவும் தப்பா..? என்னதான்யா சொல்ல வர்றீங்க..?
  • Rajesh Da Scorp அட நீங்க வேற. இதைப் பார்த்துட்டு அதைப் படிங்க. உங்களுக்கே புரியும்
    3 hours ago via mobile · Like


காப்பித்திலகம் கருந்தேள் சுயரூபத்தை எனது அடுத்தப்பதிவில் 

தோலுரிக்கிறேன்.

காத்திருங்கள்.