Showing posts with label இந்திய வரலாறு. Show all posts
Showing posts with label இந்திய வரலாறு. Show all posts

Aug 15, 2013

எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம் !




           சு         சுதந்திர தின வாழ்த்துக்கள்                             

இன்று காலையில் ஜெயா ப்ளஸ்ஸில் ‘பாரதி’ திரைப்படம் திரையிட்டார்கள்.
இயக்குனர் ஞான சேகரன் அற்புதமான குறியீடுகளை உருவாக்கி படைத்துள்ளார்.


# பாரதியின் உணவை அஹ்ரகாரத்து அக்கிரமக்காரர்கள், 
தடுத்து  உண்டு விடுகிறார்கள்.
ஊரை விட்டு ஒதுக்குப்புறத்தில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பார். 
தனது உணவை தட்டிப்பறித்த சேதி கேட்டதும்...
அருகில் கால்நடைகளை மேய்த்து கொண்டு இருக்கும் சிறுவர்களிடம் சாப்பிட வருகிறேன் என்பார்.
அவர்கள் சம்மதித்ததும் கன்றுக்குட்டி போல் துள்ளி எழுந்து 
‘ஒரு குட்டிச்சுவரை’ அலட்சியமாக ஜம்ப் பண்ணி தாண்டிச்செல்வார்.
அய்யா பாரதி.... ‘குட்டிச்சுவரை’ இன்னும் உயரமாக வளர்த்து விட்டார்கள் எங்கள் அரசியல் வியாதிகள்.
## சொந்த ஊரில் பாரதியை வெள்ளைகாரர்களுக்கு அஞ்சி புறக்கணிப்பார்கள் சொந்த மக்கள்.
அப்போது இளையாராஜா பின்னணி இசையை அற்புதமாக குறியீடாக்குவார்.
பின்னணி இசை = நல்லதோர் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ...

### காந்திஜியை சந்தித்து தனது பொதுக்கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைப்பார் பாரதி கம்பீரமாக.
மகாத்மா, ‘நாளை வேண்டுமானால் வருகிறேன்’ என்பார்.
‘அது முடியாது...உங்கள் போராட்டத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்’ என சிங்கம் போல் பீடு நடை போட்டு வருவார். அப்போது ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் பாரதியை விஸ்வருபமாக கம்போஸ் செய்து பாரதியின் பிம்பத்தில் மகாத்மாவை மறையச்செய்திருப்பார்.
வாவ்...

பாரதி படம் உருவாக காரணமாக இருந்த என் ஆசான் சுஜாதாவை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.

Aug 15, 2012

முதல் மனித வெடிகுண்டு போராளி ‘‘குயிலி’


இந்திய விடுதலை போராட்டத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் வேலுநாச்சியார்.
1772-ல் பான்ஜோர் என்ற ஆங்கிலேயனால்...
  ‘வேலுநாச்சியாரின் கணவர்’ முத்து வடுகநாதன்,அவரது மகள் கவுரி நாச்சியார் கொல்லப்பட்டனர்.
வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை வேட்டையாடினான்.
அவனை தீர்த்து கட்ட சின்ன மருது,பெரிய மருது,வேலு நாச்ச்சியார் தலைமையில் மூன்று போராளி குழுக்கள் அமைக்கப்ப்பட்டன.
சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேச்வரம் கோவிலில் விஜயதசமி அன்று பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது ஐதீகம்.

அதைப்பயன்படுத்தி வேலுநாச்சியார் தலைமையில் பெண்கள் போராளி குழு உள்ளே நுழைந்து ஆங்கில நவாப் வீரர்களை தாக்கினர்.
முற்றிலும் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போன பான்ஜோர் சுதாரித்து...கடும் எதிர் தாக்குதலை நடத்தினான்.
அரண்மனைக்கு உள்ளே வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்தது.

இது வரை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்யப்படாத சம்பவம் இக்கடும்போரில் நடைபெற்றது.
கரியநிறமுள்ள வீர தமிழச்சி தன் உடல் முழுவதும் எண்ணெய் ஊற்றிக்கொண்டு...
தனது உடலுக்கு தானே நெருப்பு வைத்துக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்து மொத்தக்கிடங்கையும் பூண்டோடு அழித்தொழித்தாள்.
அந்த வீர மங்கையின் பெயர்தான்                                                                                                           ‘குயிலி’
இவர்தான் உலகில் முதல் தற்கொலைப்படை போராளி.

50 வயதான வேலுநாச்சியார் இடது கையில் வாளேந்தி போரிட்டு
போன்ஜோரையும்,அவனது படையையும் அழித்தொழித்தார்.
சிவகங்கை அரண்மனை மட்டுமல்ல...தொடர்ந்து திருபுவனம்,
மானா மதுரை,காளையார் கோவில் போன்ற பகுதிகளையும் போரிட்டு மீட்டார்.
ஜான்சிராணியை [1828-1858] மட்டும் துதி பாடும் இந்திய சரித்திரம்...
 ‘வீரத்தாய் வேலுநாச்சியார் ’ [1730-1790] புகழை இன்றும் மறைத்து வருகிறது.

வெள்ளையனுக்குகெதிராக போர் பிரகடனம் செய்த முதல் இந்திய முழக்கம் வீரத்தாய் வேலுநாச்சியாரிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது.
அது மட்டுமல்ல போரில் முதன்முதலாக வெள்ளயனை ஜெயித்த வீர வரலாறும் அவருக்கே சொந்தம்.
இந்த வரலாற்று உண்மைகள் வெளியே தெரியாமல் இருப்பதற்கு காரணம் ஏன்?

வீரத்தாய் வேலுநாச்சியார் பற்றி நானறிந்த தகவல்களை தனிப்பதிவில் தொடர்கிறேன்.

இக்கட்டுரை இன்று தினத்தந்தியில் [15-08-2012] சுதந்திரதின மலரில் தஞ்சாவூர்.வெ.ஜீவக்குமார் எழுதி வெளியாகி உள்ளது.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.