Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Dec 5, 2014

எல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்!.




கோவா சர்வதேச திரைப்பட விழாவில்,
அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி...
கால்வாசி காலியாகி...
இருந்த முக்கால்வாசி பேரும் முழி பிதுங்கி பார்த்த படத்தை நானும் பார்த்தேன்.
கியூவில் நிற்கும் போது...முன்னால் நின்ற 84 வயது பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன்.
எங்கே இருந்து வர்றீங்க?
“பிரான்ஸ்”
உங்க பேரு ?
“ கோடார்டு”
படத்தோட இயக்குனர் பேரை கேக்கல...உங்க பேரை கேட்டேன்.
“ நாந்தான் கோடார்ட்”
நீங்க கோடார்டுன்னா...நாந்தான் கமல்ஹாசன்.
நம்பிட்டேன்.
என்ன யோசிக்கிறீங்க?
நீங்க கமல்ஹாசன் என்பதை கமல்ஹாசனும் நம்பிட்டா என்ன நடக்கும்னு யோசிச்சு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டேன்.
தெய்வமே! நீங்கதான் கோடார்டு. ஒத்துக்குறேன்.
அரசாங்க மரியாதையோட ‘ரெட்கார்பெட்ல’ நடந்து வராம ஏன் க்யூவில வர்றீங்க?
‘உலகசினிமா ரசிகன்னு’ புருவத்தை உயர்த்தி...
நெஞ்ச நிமித்தி... உலா வருகிறாயே!
இந்த படத்தை எப்படி உள் வாங்கப்போறேன்னு பாக்க வந்தேன்.
ஏன் இந்த சோதனை?
பக்தர்களை சோதிப்பது ‘பரமனுக்கு’ வழக்கம்தானே!
படம் தொடங்கியது.
பர்ஸ்ட் பிரேம்லேயே ‘கோடாட்ர்ட் அட்டகாசம்’ தொடங்கியது.
தியேட்டர்ல இருந்த பாம்பு,பல்லி, பூரான், தேளு எல்லாம் தெறிச்சு வெளிய ஓடிருச்சு!.
நீ ஓடலியா!
ஐய்யா...நான் ‘உலகசினிமா ரசிகன்’.
உங்க படத்துக்கு ஓட மாட்டேன்.
ஆனா, சரித்திரப்படம்னு...தரித்திரப்படம் காமிச்சா அலறிகிட்டு ஓடிறுவேன்.
படம் ஆரம்பிச்ச உடனே,
‘ப்ரண்ட் சவுண்ட் ஸ்பீக்கர்’ அவுட் ஆகி...
சைடு ஸ்பீக்கர்ல கன்னாபின்னான்னு சவுண்டு பிச்சிகிட்டு வந்திச்சு.
பார்வையாளர்கள் அனைவரும் ‘ஆப்பரேட்டரோட அம்மாவை’ திட்ட ஆரம்பித்தார்கள்.
கிக்...கிக்..கிக்.
உங்க குசும்புதானே இது...அநாவசியமா ஆபரேட்டரை திட்டு வாங்க வச்சீட்டீங்க!.
15 நிமிடம் கழித்து...
ஒரு ஷாட்ல, இருக்குற விஷூவல்சுக்கும்...சவுண்டுக்கும் சம்பந்தம் இல்லை.
அந்த சவுண்டுக்கு உரிய விஷூவலை வேறொரு சந்தர்ப்பத்தில காமிக்கிறீங்க!
ஏன் இந்த புதிர் விளையாட்டு?
ஏன்னா...நீங்கள் மேதைகள்.
விடையை கண்டு பிடிப்பீர்கள் எனத்தெரியும்.
ஏன்னா...நானும் மேதை.
சினிமா வரலாற்றில், இது வரை கண்டிராத 3டி அற்புதம் ஒரு காட்சியில் நிகழ்ந்தது.
இதற்காகத்தான் இப்படத்தை 3டியில் எடுத்தீர்களா?
ஹாலிவுட் பசங்க அவ்வளவு பேரையும் ‘காயடிச்சிட்டீங்களே !
ஹா...ஹா...
இந்த ஷாட் மட்டும் அல்ல...
இந்த 3டி கேமராவை நான் எனக்குன்னு ஸ்பெஷலா உருவாக்குனேன்.
ஷாட் பை ஷாட்...ஏன் இப்படி தொடர்பே இல்லாம படம் எடுத்து பாமரர்களை கொல்றீங்க!
சிட்பீல்ட் எழுதிய திரை இலக்கணப்படி ஒரு படம் கூட எடுக்க மாட்டேங்கறீங்க!.
சிட்பீல்டு சின்னப்பையன்...அவன் ரூலுக்கேல்லாம் நான் படம் எடுக்க முடியுமா?
இந்த படத்தில ஒரு ரூலை உருவாக்குவேன்.
அடுத்தப்படத்துல நானே அதை உடைப்பேன்.
அப்படியே பழகிட்டேன்.
திரைக்கதை இலக்கணம் புக்கை எல்லாம் என்ன பண்றது?
உங்க ஊர்லதான் ‘போகி’ வரும்ல!.
அதுக்கு யூஸ் பண்ணுங்க.
ஒண்ணு சொல்றேன்...
எல்லா இலக்கணத்தையும் உடைங்க...
அப்போதான் கோடம்பாக்கத்துல கூட ஜெயிக்க முடியும்.
படம் முடிந்தது.
இந்த படத்தை மறுபடியும் சென்னை திரைப்பட விழாவில் பார்க்கப்போகிறேன்.
ஏன் ?.
அது.... வந்து......புரியல.
கொஞ்சம் புரியலயா? கொஞ்சம் கூட புரியலயா ?
வாங்களேன்...காப்பி சாப்டுகிட்டே ‘மிஷ்கின்’ பத்தி பேசுவோம்.
கோடார்ட் மயக்கமாகி சரிந்து விட்டார்,
“ அது ”.
Goodbye To Language [ Adieu Au Language ] | 3D Film | 2014 | France | 70 min | Directed by : Jean-Luc Godard.


Dec 4, 2014

உலகசினிமாக்களை பார்க்காதே!.

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன்.
காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்காக மட்டும் எடுக்கப்படும் ‘போலி உலகசினிமாக்கள்’.
அவற்றையும் அடையாளம் காட்டுகிறேன்.
1. Alice in Mariland | 2014 | mexico | Directed by : Jesus Magana Vazquez.
2. Fish | Turkey | 2014 | Directed by : dervis Zaim.
3. Red Amnesia | China | 2014 | Directed by : Xiaoshuai Wang.
4. Tales | 2014 | Iran | Directed by : Rakshan Banietemad.
5 Sand Dollers | 2014 | Dominican Republic | Directed by : Laura Amelia Guzman & Israel Cardenas.
6. Party Girl | 2014 | France | Directed by : Marie Amachoukeli, Claire Burger & Samuel Theis.
7. One On One | 2014 | South Korea | Directed by : Kim Ki-duk.
தங்கமீன்கள், தலைமுறைகள், காவியத்தலைவன் போன்ற படங்களை புறக்கணித்த அடிப்படையில்தான் இப்படங்களை புறக்கணிக்கிறேன்.
மேற்கண்ட தமிழ்ப்படங்களை சிலாகிப்பவர்கள் இந்தப்படங்களை தயவு செய்து பார்த்து விடுங்கள்.
இந்தப்படங்கள் உங்களுக்கு கிளர்ச்சியூட்டலாம்.

Dec 3, 2014

‘சர்வாதிகாரியின் சரிவு’


கோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது.
இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட படமாக இது தோற்றமளித்தது.
ஜார்ஜியா அரசு மிகுந்த ஒத்துழைப்பை நல்கியதால் குறைந்த செலவே ஆனது என குறிப்பிட்டார் மக்மல்பப்.
ஒரு சர்வாதிகாரியின் வீழ்ச்சிதான் இத்திரைப்படம்.
சர்வாதிகாரி ஆண்ட நாட்டை பெயரிடாமல் வைத்து விட்டார் மக்மல்பப்.
எனவே இந்த சர்வாதிகாரியை,
சோனியா, ஜெயலலிதா, கருணாநிதி, ராஜபக்‌ஷே, மோடி என யாரோடும் பொருத்திப்பார்க்கும் வசதியை ஏற்படுத்தி இருக்கிறார் மக்மல்பப்.
சர்வாதிகாரி தன் பேரனுக்கு விளையாட்டு காண்பிக்க ஆசைப்படுகிறார்.
போனை எடுத்து ‘லைட்ஸ் ஆப்’ எனச்சொல்ல சொல்கிறார்.
பேரனும் சொல்கிறான்.
சென்னை போல ஒரு பெரு நகரமே இருளில் மூழ்குகிறது.
இப்போது ‘லைட்ஸ் ஆண்’ என சொல்ல சொல்கிறார்.
பேரன் சொல்கிறான்.
நகரமே ஒளிர்கிறது.
பேரன் சொல்கிறான்... “ ஹை...இந்த விளையாட்டு நல்லா இருக்கு.
உன் போஸ்ட்டுக்கு நான் எப்ப வர்றது? ”
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் வாரிசுக்கு அதிகாரப்போதையை ஊட்டுவதை இதை விட சிறப்பாக படம் பிடித்து காட்ட முடியுமா !


பிரசிடெண்ட் கிளைமாக்சும், உதிரிப்பூக்கள் கிளைமாக்சும் ஒன்றே!.
இரண்டு திரைப்படங்களின் இறுதி காட்சிகளும்,
ஒரே உணர்வை தோற்றுவித்தன.
இத்திரைப்படம் கேரளா, பெங்களூர், சென்னை திரைப்பட விழாக்களில் கட்டாயம் திரையிடப்படும்.
தவற விடாதீர்கள்.
The President | Iran | 2014 | Directed by : Mohsen Makhmalbaf.

May 29, 2014

‘பொற்காலம்’ என்றழைக்கப்பட்ட ‘கற்காலம்’ !

வணக்கம் நண்பர்களே !
பதிவுலகை மறந்து,  ‘முகநூலில்’ சிக்கிக்கிடந்தேன்.
மன்னிக்கவும்.
இனி வாரம் ஒரு படங்களையாவது அறிமுகப்படுத்தி எழுத எண்ணியுள்ளேன்.

முகநூலில் எழுதிஅறிமுகப்படுத்திய படத்தையே சற்று விரிவாக எழுதி ‘பிள்ளையார் சுழி’ போட்டுள்ளேன்.
பொறுத்தருள்க !.


Tales From The Golden Age [ Amintiri din epoca de aur ], 
2009,
Romania,
138 minutes,
Directed by :
Hanno Höfer, 
Razvan Marculescu,
Cristian Mungiu,
Constantin Popescu,
Ioana Uricaru.

ஐந்து குறும்படங்களை ஒன்றாக இணைத்து இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஐந்து திரைப்படங்களும் ஒரே கருத்தாக்கத்தை முன் வைக்கின்றன.

1967 - 1989 வரை ரொமேனியாவை கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி புரிந்தது.
இதில் பதினைந்து ஆண்டு காலத்தை ‘கோல்டன் ஏஜ்’ என வர்ணித்து இருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள்.
அந்த ‘கோல்டன் ஏஜ்’ காலத்தை இக்குறும்படங்கள் சித்தரிக்கின்றன.

துரதிர்ஷ்டவசமாக, இத்தொகுப்பில் இரண்டு குறும் படங்கள் மட்டுமே, எனக்கு காணக்கிடைத்தது.
எல்லா படங்களுமே ‘கோல்டன் ஏஜை’  காட்சிப்படுத்தி இருக்கிறது.
இப்படங்களை இயக்கிய படைப்பாளிகள், தங்கள் கலை நுட்பத்தால்...
‘கோல்டன் ஏஜ்’ ஆட்சியை விமர்சித்து விளாசி தள்ளியிருப்பதை உணர முடியும்.
ஆட்சியில் அவலங்களை, நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தி ‘களமாடியிருக்கிறார்கள்’.

‘கோல்டன் ஏஜ்’ ரொமானிய மக்களின் பொருளாதார நிலையை,
நம்ம ஊரு ‘ரெங்கசாமியும்’ அறிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக இக்குறும்படங்கள் சித்தரிக்கின்றன.

‘ஓடினாள்...ஓடினாள்...வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என கலைஞர் பக்கம் பக்கமாக எழுதி சித்தரித்ததை,
‘எளிமையான விஷூவலாக’ சித்தரிக்கின்றது இக்குறும்படங்கள்.


வீடு வீடாக சென்று, காலி பாட்டில்களை ஏமாற்றி வாங்கி சேகரிக்கிறார்கள் ஒரு இளம் காதல் ஜோடி.
அதை விற்று காசு பார்க்கிறார்கள். 

ஒரு அப்பார்ட்மெண்டில் உள்ள வீடுகளில் எல்லாம் ஏமாற்றி பாட்டில்களை கவர திட்டம் போட்டு செயல் படுத்தும்போது,  ‘சட்டம் போட்டு திருடும் கூட்டத்திடம்’ சிக்கி கொள்கின்றனர்.  


கோழிகளை ஏற்றி செல்லும் லாரியை ஓட்டுகிறான் ஒருவன்.
போகும் போது, நடு வழியில்... அக்கோழிகள் போடும் முட்டையை விற்று காசு பார்க்கிறான்.

 ‘கையை நக்க மீண்டும் தேனெடுக்கும்போது’ சிக்குகிறான்.

தங்கள் பொருளாதாரத்தேவைக்காக, திருடும் அன்றாடங்காய்ச்சிகளை கைது செய்து சிறையில் அடைக்கிறது ரொமேனிய காவல்துறை.
சாமானியர்களை கஞ்சிக்கு அலைய வைத்த ‘பொற்காலத்தை’  கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு இருக்கிறார்கள்  அற்புதமான ஐந்து இயக்குனர்கள்.


ஐந்து இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்த ஆளுமை ‘கிறிஸ்டியன் மிஞ்சு’.
இவரது படங்களை பட்டியல் இடுகிறேன்.
அனைத்தையும் பார்த்து விடுங்கள்.


 ‘டேல்ஸ் ஃப்ரம் கோல்டன் ஏஜ்’ படம் பாருங்கள்.
1,75,000 கோடி ரூபாய் ஊழல் ராஜ்யசபா எம்பியும்...
பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும்...
உங்கள் நினைவலைகளில் ஜோடியாக மின்னுவதை தடுக்க முடியாது.

Feb 25, 2014

ஸ்டேட் பேங்க் அயோக்கியத்தனம் = State Bank's Cheating

ஏழைகளுக்கு, ஸ்டேட் பேங்க் போன்ற முழுமையான அரசு வங்கிகளே வரம்.
தனியார் வங்கிகள்...சாபம்.
அவைகள்,  ‘வசதி செய்கிறேன்’ என கோவணத்தை உருவும் ‘கோடாங்கிகள்’.


நேற்று  ‘ஸ்டேட் பேங்க்’ என்னை சிதறடித்தது.
நண்பனுக்கு அத்தியாவசிய தேவைக்காக 5000 ரூபாய் அனுப்ப முடியவில்லை.
புதுசு...புதுசா சட்டமும் திட்டமும் போட்டு வச்சுருக்கானுங்க!
அயோக்கியப்பயலுங்க!!


வட இந்திய தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை அனுப்ப ஸ்டேட் பேங்கைத்தான் நம்பி இருக்கிறார்கள்.
நாள் தோறும் படையெடுக்கிறார்கள்.
அந்த நெருக்கடியை, கொசுக்கடியாக எண்ணி திட்டம் போட்டு விட்டான் ஒரு உருப்படாத உலக்கை.
ஏசி ரூமில் உலகத்தை காணும் உருப்படாத பயல்களுக்கு,
மண் குடிசையின் நிலவரம் தெரியுமா!
கரெக்டாக கலவரம் மட்டும், ஏற்படுத்துவார்கள் இந்த கயவாளிகள்.
குடிசைக்கு, குண்டு வைப்பதில் ‘டாக்டரேட்’ செய்தவன்  ‘செட்டிநாட்டு செல்லாக்காசு’.


கோடி..கோடியா பணம் நாடு விட்டு நாடு போகுது.
அதுக்கு  ‘வெளக்கு பிடிக்குது’ ரிசர்வ் வங்கி.
ஏழை பாழை அனுப்பும் 500, 1000த்துக்கு சட்டம் போடுது...திட்டம் போடுது ரிசர்வ் வங்கி மங்குணிகள்.
மண்ணு மோகனும், செட்டிநாட்டு அரசனும் ஆட்சி செய்யும் போதுதான் ஏழைகளை ஏய்ச்சு பிழைக்கும் தொழிலை வளமாக செய்யும் வங்கிகள்.


ஏழையின் நலம் அறிந்த நல்லவர்கள் ஆட்சி செய்தால் இந்த நெருக்கடிக்கு அழகாக தீர்வு காண்பார்கள்.
ஒவ்வொரு ஏடிஎம்மிலும் பணம் போட, பணம் எடுக்க வகை செய்யும் மிஷினை வாங்கி வைப்பார்கள்.
பணம் வாங்கற மிஷினை தனியார் வங்கி [ ஐசிஐசிஐ] வச்சிருக்கான்.
அட்லீஸ்ட், அதையாவது உடனடியா வாங்கி வைங்களேண்டா... அப்ரண்டிசுகளா!


பத்தாயிரத்துக்கு கீழே பணம் அனுப்பப்போனால் தனியாரிடம் திருப்பி விடுகிறது ‘ஸ்டேட் பேங்க்’.
அவன் ஸ்டேட் பேங்கு பக்கத்திலேயே பொட்டிகடை மாதிரி தொறந்து வச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, சுளையா 100 ரூபாய் தண்டம் அழணுமாம்.
நூறு ரூபாய் ஒரு ஏழைக்கு மிகப்பெரிய தொகை.
அரசு வங்கியான ஸ்டேட் பேங்க், இவ்வளவு நாள் 25 ரூபாய் வாங்கிட்டு அனுப்பிகிட்டு...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு!
அதை நீக்கிட்டு, தனியாரை விட்டு கொள்ளையடிக்க வச்ச,  ‘கொள்ளையில போவான்’ யாரு!

சரி...தனியார்கிட்ட அனுப்புறியே...
அந்த தனியார், பணத்தை ஆட்டையை போட்டுட்டா...
எங்க பணத்துக்கு யார் பொறுப்பு?

உதாரணமா...கார்த்தி சீதாம்பரம்னு ஒரு தனியார்,
பணம் வாங்கி அனுப்பற வேலையை செய்யுறான்.
5000 ரூபாய் அனுப்புறதுக்கு, நூறு ரூபாய் சர்வீஸ் சார்ஜ் சேர்த்து வாங்கிட்டு, ஹோட்டல் மாதிரி ‘கம்ப்யூட்டர் பில்’ கொடுக்குறான்.
ஒரு நாள் பூரா, பல லட்சம் வசூல் பண்ணிட்டு,
மொத்த கலெக்‌ஷனையும் ஆட்டையை போட்டு,
கம்பி நீட்டிட்டான்னா...
ஏழைகளின் பணத்துக்கு யார் பொறுப்பு?

ஆன்லைன்லே அனுப்புறோம்னு சில பேர் இறுமாப்ல இருக்காங்க!
ஆன்லைன்ல அனுப்புனா, இலவசம்னு இண்ணைக்கு சொல்றான்.
நாளைக்கு, அதுக்கும் கட்டணம் போடுவான்.

இந்த சிதம்பரம்,  ‘சர்வீஸ் டேக்ஸ்’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி  மண்டையில் மயிறு இருக்கறவன்...இல்லாதவன்னு...
எல்லோரையும் கட்ட வச்ச ஆளு.
ஏழைகளை எப்படி சுரண்டலாம்? என்பதை ஒரு நாளைக்கு நூறு முறை சிந்திக்கும் சிந்தனை சிற்பி சிதம்பரம்.
காரணம், வட்டி வாங்கி...வயிறு வளர்த்த பரம்பரை அவர்.

முன்னாடி, இது மாதிரி...ஏழைகள் வயித்திலடிக்கும் நடைமுறைக்கு, நடைபாதையில் நின்று போராடுவார்கள் கம்யூனிஸ்ட் கட்சி கடமை வீரர்கள்.
சிவப்பு கொடியை பிடிச்சுகிட்டு உசுரை கொடுத்து பத்து பேரு கத்துவாங்க!.
அந்த பாதையில் போற பத்தாயிரம் பேர் அதை பார்த்துருவாங்க!!.
பத்தாயிரம் பேர்கிட்ட இருந்து பல கோடி பேருக்கு செய்தி போய் சேர்ந்துரும்.

நம்ம நேரம்...அத்தகைய போராளிகள் போய் சேர்ந்து விட்டார்கள்.
நமக்கு வாய்ச்சது தா.பாண்டியன் வகையறாக்கள்.
அந்த தொகையறாகள், போயஸ் ரோடு தாரை நக்கி...
தாடை பெயர்ந்து கிடக்குதுகள்.

வாடி நிற்போர், வாட்டம் போக என்ன வழி?
ஏய்ச்சு பிழைப்பவனை, ஏறி மிதிக்க வந்து விட்டது தேர்தல்.
சீனாதானா போன்ற அம்பானி அடிவருடிகளை அறவே அழிப்போம்.
ஒழிப்போம்.
தெரு விளக்கில் படித்தவனை, நிதி மந்திரியாக்குவோம்.
ஏழைக்காக ஏணி ஏந்துபவனை, ஏற்றம் பெறச்செய்வோம்.
அது வரை வாடுவோம்...வதங்குவோம்...
அயோக்கியர்களை அழிக்க, அறம் பாடுவோம்.

Feb 23, 2014

ஆஸ்காரை அள்ளப்போகும் படம் !


ஓய்விலிருப்பவர்கள்...
எண்பது வயது தாண்டியவர்கள்...
‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது.
இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் ?

இப்படி ஒரு கேள்வி, ‘பாப் நெல்சனுக்குள்’ [ Bob Nelson ] எழும்பியதால்...
அற்புதமான திரைக்கதை உருவாகிறது.
உருவான திரைக்கதை,
‘அலெக்ஸாண்டர் பைன்’ [ Alexander Payne ] இயக்கத்தில்...
‘நெப்ராஸ்கா’ என்ற காவியமாக வெள்ளித்திரையில் வடிவமைக்கப்படுகிறது.


 ‘ப்ரூஸ் டேர்ன்’ [ Bruce Dern ] என்ற நடிகரின் ஆற்றலால்,
ஒரு முதியவரது வாழ்க்கை உயிரோட்டமாக பதிவாகிறது.


Nebraska | USA | 2013 | 110 min | Directed by : Alexander Payne

நூறு மைல் வேகத்தில்...
வாகனங்களின் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
சாலையின் ஓரம்...
தள்ளாத வயதில்...தளர் நடையில்...ஒரு முதியவர்.
 ‘ரோந்தடிக்கும்’ காவல்துறை அதிகாரி பார்வையில், முதியவர் படுகிறார். விசாரிக்கிறார்.

 “ எங்கே போறீங்க? ” 

 “                                       ”

 “ எங்கேயிருந்து வர்றீங்க ? ”

 “                                                 ”
காவல்துறை அதிகாரியின் கேள்வியாலும், உடல் மொழியாலும்... மனிதநேயம் வெளிப்படுகிறது.
முதியவர், காவல்துறை அதிகாரியின் கேள்விகளுக்கு,
கண்ணசைவாலும், உடல் மொழியாலும் ‘பதிலை’ சொல்கிறார்.

“ இந்தா...அங்க போய்ட்டு இருக்கேன் ”

“ இந்தா...அங்க இருந்து வர்றேன் ”

முதியவரின் உடல் மொழியிலேயே,
யாரையும் லட்சியம் செய்யாத...அலட்சியம் வெளிப்படுகிறது.

கட்.

முதல் காட்சி முடிவடைகிறது.
அற்புதமான பின்னணி இசையில், ‘டைட்டில்கள்’ தொடர்கிறது.

ஒரு இளைஞன் வருகிறான்.
காவல்நிலையத்தில் அமர்ந்திருக்கும் முதியவரை நோக்குகிறான்.
விசாரிக்கிறான்.
வீட்டுக்கு அழைக்கிறான்.
மறுக்கிறார்.

“ ஏன் ? ”

“ ஒரு மில்லியன் டாலர் எனக்கு பரிசு விழுந்திருக்கு. 
அதை வாங்கப்போணும்”

சட்டைப்பையிலிருந்து பரிசு கூப்பனை எடுத்து நீட்டுகிறார்.
பையன் பார்க்கிறான்.

“இது ஏதோ, டுபாக்குர் கம்பெனியின் டுபாக்கூர் பரிசு”

தந்தை பிடிவாதமாக மறுக்கிறார்.
சமாதானம் செய்து அழைத்துச்செல்கிறான்.

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது.
 ‘சற்றும் மனம் தளராத விக்கிரமன்’ வேதாளத்தை அழைத்துக்கொண்டு
பரிசை வாங்க புறப்படுகிறான்.
இந்தப்பயணமே அற்புதமான ‘ரோடு மூவி’யாகிறது.


இப்படம்,
‘பாலகன்’ முதல்  ‘பழுத்தப்பழம்’வரை,
பாடம் பகிர்கிறது.
எளிமையாக எடுத்துரைக்கிறது.
பொறுமையாக போதிக்கிறது.

இக்கருப்பு - வெள்ளை காவியத்தை கட்டாயம் பாருங்கள்.
உற்றார்- உறவினரையும் பார்க்க வையுங்கள்.
அதுதான் முக்கியம்.


கருப்பு - வெள்ளை காவியங்கள் மேல் எனக்கிருக்கும் காதலை இக்காவியம் இன்னும் அகலப்படுத்தி இருக்கிறது.
இக்காவியம், கருப்பு- வெள்ளையில் படமாக்கப்பட்டதை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போமா !

The film was shot in black and white because Payne said he wanted to produce an "iconic, archetypal look".
 According to cinematographer Phedon Papamichael, the choice was to use "the poetic power of the black and white in combination with these landscapes and of course the landscapes are playing a huge role in this story".
The choice of black and white was made against distributor Paramount Vantage's wishes. 
The film was shot with Arri Alexa digital cameras and Panavision C-Series anamorphic lenses.

ஆறு ஆஸ்கார் விருதுகளை அள்ள காத்திருக்கிறது இக்காவியம்.

அடைய வாழ்த்துவோம்.



  

Feb 22, 2014

ஆஹா கல்யாணம் = ஜில் பியர் & ஒயின் .


ஐஸ் பாக்சில் தவமிருக்கும்,  ‘ரிவெய்ரா ஒய்ட் ஒயின்’...
பீரிஸரிலிருந்து புறப்பட்டு வந்த,  ‘ஹைனிகெய்ன் பியர்’...
இரண்டும் கலந்த கிளாஸ், கையில்...

கரகர...மொறுமொறு...நெய்யில் வறுக்கப்பட்ட முந்திரி...
குச்சியில் சொருகிய ‘சீஸ் பைனாப்பிள்’...
இரண்டும் மாறி மாறி, வாயில்...

பனி விழும் மலர் வனம், ஆங்காங்கே...
பார்வைக்கு வரம் தரும் தேவதைகள், எங்கெங்கும்...

‘போஸ் ஸ்பீக்கரில்’...
‘உல்லாசம் ஆகவே...
உலகத்தில் வாழவே’
என  ‘சந்திரபாபு’ துடிக்க...

ஐம்பது வயது...
இடுப்பில் எம்.ஆர்.எப் டயர் இருந்தாலும்...
சிந்தனையில், பிரபுதேவாவாகி...
இடுப்பை அசைத்தாடும், பீலிங் வரும்.
‘ஆஹா கல்யாணமும்’ இத்தகைய அனுபவத்தை தருகிறது.

உள்ளூர்க்கார கதிர்வேலன், பிரம்மன் எனும் ‘பிக்பாக்கெட்டுகள்’,
நம்பி வந்த ரசிகனை பிளேடால் கீறுகிறார்கள்.
வடக்கத்தி யஷ்ராஜ் சோப்ரா, வணிக சினிமாவுக்குரிய இலக்கணத்தை,   அணுஅணுவாக இழைத்து, திரைக்கதையை நெய்திருக்கிறார்கள்.

கதாநாயகனின்  ‘தெலுங்குத்தமிழையும்’...
கதாநாயகியின்   ‘சின்மயத்தமிழையும்’....
ரசிக்க வைத்தது ‘திரைக்கதையே’.


கதாநாயகி ‘வாணி கபூரை’ பத்தி நாலு வார்த்தை சொல்லவில்லையென்றால், ‘கட்டை வேகாது’.
 “ தேக்கு பாதி...கேக்கு பாதி...கலந்து செய்த கலவை நான்” என வந்திருக்கும் வாணி கபூரை வாழ்த்தி வரவேற்போம்.


தொப்புளை சுத்தி நான்கு திசைகளிலும்,
‘முழம் ஏரியாவை’ காலியா காமிச்ச காஸ்ட்யூமரை ஸ்பெஷலா பாராட்டியே தீரணும்..
காஸ்ட்யூமர் வடிவமைத்த ‘கவர்ச்சி மைதானத்தில்’ எழும் காந்தப்புயல்,
ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் அலைக்களிக்கும்.
‘இந்த ஏரியாவை காட்டி’ அதகளம் செய்து கொண்டிருந்த ‘ஸ்ரேயா’, பாட்டியாகி விட்டதால்...
‘வாணி கபூரை’ பார்ட்டி கொடுத்து வரவேற்கும் தமிழகம்.


'லிப்லாக்’ ,   ‘திருமணத்துக்கு முந்தைய உடல் உறவு’ என அழகிய அத்துமீறல்கள்...
 ‘திரைக்கதை பாயாசத்தில்’  ‘இந்திரன் தோட்டத்து முந்திரியாய்’ இணைந்திருந்து ருசிக்கிறது.
[ சிறுவர்களை தவிர்த்து,இப்படத்தை பார்க்கச்செல்லவும்.]

தொழில் பக்தியும்,செய்நேர்த்தியும் இருப்பதால்,
 ‘வடக்கத்தி உணவை’ உண்டு வாழ்த்துவோம்.

Feb 11, 2014

இஷ்டத்துக்காக ‘படிப்பவள்’...கஷ்டத்துக்காக ‘படுப்பவள்’.


நண்பர்களே...
இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி,
கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு.
நேர்மையான படைப்பாளிகளுக்கு நேரிடும் நெருக்கடிகள்,
 ‘நல்ல படங்களாக’ மாறி நன்மை பயக்கின்றன.


கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அப்பாஸ் கியரஸ்தமியின் படங்கள் இரானில் திரையிடப்படுவதில்லை.
இருந்தாலும் இடம் பெயரவில்லை.
காரணத்தை அவரே கூறுகிறார்...

"When you take a tree that is rooted in the ground, and transfer it from one place to another, the tree will no longer bear fruit. 
And if it does, the fruit will not be as good as it was in its original place. 
This is a rule of nature. 
I think if I had left my country, I would be the same as the tree." —Abbas Kiarostami.

வெறுமையான பாடல் காட்சிகளுக்காக,
வெளிநாடு போகும் கோமாளிகள்தான்...
நமக்கு கிடைத்த சாபம்.
நாடு விட்டு நாடு தாவினாலும்,
நல்ல படமெடுக்கும் படைப்பாளி...
இரானுக்கு கிடைத்த வரம்.

பிரான்சுக்கு பறக்கிறார்.
‘சர்டிபைட் காப்பி’ [ Certified Copy ] என பிரமாதமா ஒரு படம் கொடுக்கிறார்.
ஜப்பானுக்கு  ஜம்ப் பண்ணுகிறார்.
'லைக் சம்ஒன் இன் லவ்’ என ஜம்முன்னு ஒரு படம் கொடுக்கிறார்.

Like someone in Love | 2012 | Japanese | Directed by : Abbas Kiarostami.


அப்பாஸ் கியரஸ்தமியின் படங்களில்,
முதல் ஷாட்டே அசாதாரணமாக இருக்கும்.
இப்படத்தில், கேமராவை கதாநாயகியாக்கி...
முதல் ஷாட்டை அமைத்துள்ளார்.
அசத்தலான கோணத்தில், காட்சியின் களத்தை ஒரே ஷாட்டில் விவரிக்கிறார்.

பரபரப்பான இரவு விடுதி.
பலான பெண்கள்.
பலானதை மேய வந்த  ‘பண பலன்கள்’.
கதாநாயகி தனிமையில் செல்போன் பேசிக்கொண்டு இருக்கிறாள்.
எதிர்முனையில் பேசுபவன் காதலன் என அவளது உரையாடலே தெளிவாக்குகிறது.
அதோடு, அவன் ஒரு சந்தேகப்பேர்வழி என்பதையும் சித்தரிக்கிறது.

‘பக்கத்து டேபிள்’ செல்போனை நோண்டுவதை நிறுத்தி,
கதாநாயகியின் பேச்சை உற்றுக்கவனித்து,
‘நான் வேண்டுமானால் பேசி சந்தேகத்தை தீர்த்து வைக்கவா’ என்பது போல் சைகை செய்கிறது.
‘பக்கத்து டேபிளின்’ உடல் மொழியே,
‘தோழி’ என படம் வரைந்து பாகம் குறிக்கிறது.

இவ்வாறு, ஒவ்வொரு ஷாட்டிலும்...
பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.


மற்றொரு உச்சபட்ச சுவாரஸ்ய களத்தை மட்டும் சொல்கிறேன்.
வெளிச்சத்தில் ‘கல்லூரி மாணவி’யாகவும்,
இருட்டில் ‘இரவு ராணி’யாகவும் பணியாற்றும் கதாநாயகி.
‘மாணவியை’ காதலிக்கும் காதலன்.
‘இரவு ராணியை’  ‘புக் செய்த’ 80 வயது பேராசிரியர்.
மூவரையும் ஒரே காரில் ஏற்றி விடுகிறார் இயக்குனர்.


இக்காட்சியில் இருக்கும் சுவாரஸ்ய திருப்பங்களை,
படத்தை பார்த்து அனுபவியுங்கள்.
இறுதிக்காட்சியில் வரும் ‘அப்ரப்ட் எண்டிங்கில்’ [ Abrupt Ending ] திடுக்கிடுங்கள்.

அடுத்தப்பதிவில் சந்திப்போம்.


Feb 5, 2014

அடையாளம் தருபவனே...அடையாளம் பெறுவான்.


About Elly | 2009 | Iran | 119 min | Directed by : Asghar Farhadi.

இயக்குனர் அஸ்கர் பர்ஹாதியின் நான்காவது படம் இது.
ஹிட்ச்ஹாக் பாணியில் ஒரு சோசியல் திரில்லரை கொடுத்து இருக்கிறார்.


நான்கு ஜோடிகள் ஜாலியாக டூர் வருகிறார்கள்.
வழக்கமாக தங்கும் ரிஸார்டில் இடம் இல்லாததால் ஒரு ‘டஞ்சன் வில்லாவில்’ வேறு வழியில்லாமல் தங்குகிறார்கள்.
மூன்று ஜோடிகள் மட்டுமே கணவன் - மனைவி குழந்தைகளோடு வந்தவர்கள்.
ஒரு ஜோடி திருமணம் ஆகாதவர்கள்.
ஆனால் அவர்களை, திருமணம் ஆனவர்கள் என்றும், தேனிலவுக்காக வந்தவர்கள் என்றும் பொய் சொல்லி ரிஸார்டில் தங்க வைக்கிறார்கள் ஏனைய ஜோடிகள்.
காரணம் இரான் சட்டப்படி தம்பதிகள் மட்டுமே ஒன்றாக தங்க முடியும்.

திருமணமாகாத ஜோடிதான் அஹ்மத்- எல்லி.
வில்லாவை ஒட்டிய கடற்கரையில் குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
காவலுக்கு எல்லி.
குழந்தைகள் விளையாடிய பட்டத்தை துரத்திக்கொண்டு எல்லி ஓடுகிறாள்.
எல்லி குழந்தையாக மாறி பட்டத்தை கண்டு களிக்கும் ஷாட்டுகளாக டைரக்டர் அடுக்குகிறார்.
கட்.




ஒரு சிறுமி ஓடி வந்து, மற்றொரு சிறுவன் கடலோடு போய் விட்டான் என அழுகிறாள்.
அனைவரும் தேடி சிறுவனை காப்பாற்றி விடுகிறார்கள்.
அப்போதுதான் கண்டுபிடிக்கிறார்கள்.
‘எல்லியை காணவில்லை’.
கடலில் மூழ்கினாளா?
சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாளா?

இரண்டு கேள்விகளையும் எழுப்பி கதாபாத்திரங்கள் தேடுவதாக திரைக்கதை அமைத்து,
விளையாடி இருக்கிறார் அக்ஸர் பர்ஹாதி.
‘எல்லி’ சந்தோஷமாக இருக்கும் ஷாட்களை அடுக்கி காண்பித்ததன் மூலமாக,
பார்வையாளர்களையும் தேட வைத்து விடுகிறார் பர்ஹாதி.

கதையை அக்ஸர் பர்ஹாதி மட்டுமே எழுதவில்லை.
இன்னொரு நண்பரும் பணியாற்றி இருக்கிறார்.
இருந்தும், இயக்குனர் அக்ஸர் பர்ஹாதிக்கு பேஸ்புக்கில்,
ஸ்டேட்டஸ் போடும் நெருக்கடி வரவில்லை.

காரணம், கதை அமைக்க உதவிய நண்பர் 'Azad Jafarian' பெயரை நன்றியுடன் டைட்டிலில் பெயர் போட்டு அடையாளம் காட்டி விட்டார்.
ஏனென்றால் அக்ஸர் பர்ஹாதி,
தற்காலிக வெற்றியில் மினுங்கும் கவரிங் நகையல்ல...சொக்கத்தங்கம்.

தன்னோடு பணியாற்றியவரை அடையாளம் காட்டியதால்தான்,
ஆஸ்கார் அவரை வந்தடைந்து உலகுக்கே அவரை அடையாளம் காட்டி இருக்கிறது.




Jan 25, 2014

கோலி சோடா = திருட்டு சோடா !.

நண்பர்களே...
நேற்று  ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன்.
இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கியது.

இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ‘அழகாய் இருக்கிறாய்...பயமாய் இருக்கிறது’ என்ற மொக்கைப்படத்தின் மூலமாக அறிந்திருக்கிறோம்.
ஒளிப்பதிவிலும் அரைவேக்காடு என்பதை பல படங்களிலும் கண்டு உணர்ந்திருக்கிறோம்.
குறிப்பாக...வழக்கு எண் 18\2.
 ‘வழக்கு எண்ணில்’ இவர் செய்த குளறுபடிகளை இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் நேரிடையாகவே தெரிவித்து இருக்கிறேன்.
எந்த வித சால்ஜாப்பும் சொல்லாமல் அவர் அக்குறைகளை ஒத்துகொண்டார்.

 ‘அரைவேக்காடு’ விஜய் மில்டன் எப்படி கோலி சோடா என்ற படத்தை இடைவேளை வரை அற்புதமாக வழங்க முடிந்தது?
அற்புதம் நிகழ்த்தியவர் என் நண்பர் திரு.விஸ்வாமித்ரன்.
விஸ்வாமித்ரன் சினிமாவின் மொழி தெரிந்தவர்.
இயக்குனர் பிரசன்ன விதாநாயகேவிடம் இணை இயக்குனராகவும்,
திரைக்கதை உருவாக்கத்திலும் விஸ்வாமித்ரன் பணியாற்றியவர்.

விஸ்வாமித்ரன் கோயம்பேடு மார்க்கெட்டிலேயே வாழ்ந்து ஒரு திரைக்கதையை  ‘விஜய் மில்டனுக்காக’ உருவாக்கினார்.
உருவாக்கியதை விஜய்மில்டனிடம் நேரிடையாக சொல்லியும் விட்டார்.
முழுக்கதையை கேட்டு விட்டு பிரமாதமாக உருவாக்கி இருக்கிறீர்கள் என கை கொடுத்து அனுப்பி விட்டார் விஜய் மில்டன்.
அதோடு சரி...
விஜய் மில்டன் கொஞ்ச காலம் ‘கமுக்கமாக’ இருந்து விட்டு  ‘கோலி சோடா’ விளம்பரத்தை வெளியிடுகிறார்.
அதை பார்த்து விஸ்வாமித்ரன் அதிர்ச்சியாகி விட்டார்.

இப்பேரதிர்ச்சி, விஸ்வாமித்ரனை மிகக்கடுமையாக தாக்கி...
நோயாளியாக்கி வீழ்த்தி விட்டது.
இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் கொஞ்சம் மீண்டு இருக்கிறார்.
இன்னும் அவருக்கு உடல் ரீதியான உபாதைகள் தொடர்கிறது.

கோடம்பாக்கம் எப்போதுமே விஸ்வாமித்ரனை *த்தடித்து சுண்ணாம்பு தடவிதான் வந்திருக்கிறது.
இது புதிதல்ல!

கோலி சோடா பார்த்து வியந்த எல்லோரும்  ‘பொக்கே’ கொடுக்க லைனில் நிற்பார்கள்.
உண்மை அறிந்ததால், நான் ‘கருப்புக்கொடி’ காட்டுகிறேன்.

படம் பாருங்கள்.
ஆச்சரியங்கள்...விஸ்வாமித்ரனுக்கு சொந்தம்.
அபத்தங்கள்...விஜய் மில்டனுக்கு சொந்தம்.

அடேய் விஜய் மில்டா...வாழ்வதற்காக வல்லவனை வீழ்த்தினாய்.
குறுகிய கால வளர்ச்சியும்...புகழ்ச்சியும்...
உன்னை எதிர்காலத்தில் அடையாளம் காட்டும்.
அப்போது விஸ்வாமித்ரன் ஆலமரமாய் வளர்ந்து நிற்பார்.
அந்த ஆலமரத்தின் விழுதுகள் உனக்காக காத்திருக்கும்.
   

Jan 22, 2014

கிம்-கி-துக் டொக்காகி விட்டாரா ?


நண்பர்களே...
கேரள திரைப்படவிழாவிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
மற்ற விழாக்களில் காணக்கிடைக்காத சில அரிய உலக சினிமாக்கள் கே.தி.விழாவில் மட்டுமே காணக்கிடைக்கும்.
அவற்றில் ஒன்றுதான் ‘மொபியஸ்’
கிம்-கி-துக்கின் லேட்டஸ்ட் திரைப்படம் இதுதான்.
தென் கொரியாவிலேயே தடை செய்யப்பட்ட படம்.

Moebius | 2013 | South Korea | Directed by : Kim-ki-duk.



கிம்-கி-துக்தான் கேரளாவின் ‘சூப்பர் ஸ்டார்’.
'God's Own Country'  என்றிருப்பதை, 'Kim-ki-duk Own Country '  என மாற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது.
தற்போதைய நிலவரப்படி,
அங்கிங்கெனாதபடி கேரளாவெங்கும் நிறைந்து இருப்பது கிம்-கி-துக்.



கேரள திரைப்பட நிறைவு விழாவிற்கு வருகை தந்த கிம்-கி-துக்கை கொண்டாடி விட்டது கேரளா.
பத்திரிக்கை, டிவி எல்லாம் கிம்-கி-துக் மயம்.

கிம்-கி-துக் படத்தை பார்த்தே ஆக வேண்டிய  ‘கட்டாய ஜூரம்’ பரவி விட்டது.
இரண்டு மணி நேரம் க்யூவில் நின்று,
ரிசர்வ் பண்ணி விட்டேன்.
இருந்தும், காலை 11.00 மணி படத்துக்கு,
10.30க்கே ஆஜராகி விட்டேன்.
ரிசர்வேஷனாவது...மண்ணாவது...கி.கி.து ரசிகர்கள் மொத்த தியேட்டரை கைப்பற்றி விட்டார்கள்.
கடைசியில் ஒரு படிக்கட்டில் சிறிய இடம்,
‘இட ஒதுக்கீட்டில்’ கிடைத்தது.

அப்படியே ரஜினி பட ஆரவாரம்.
பாலபிஷேகம், கற்பூர ஆரத்தி மட்டும்தான் இல்லை.
ஷாட் பை ஷாட் கை தட்டினார்கள்.
ரஜினி படத்தில் கூட இடைவேளையில் இத்தகைய ஆரவாரம் ஒய்ந்து விடும்
கி.கி.து ரசிகர்கள் இறுதி வரை ஒயவில்லை.
வணிக சினிமா ரசிகர்களை மிஞ்சி விட்டார்கள் கி.கி.து ரசிகர்கள்.

[இத்தகைய வரவேற்பை  ‘இரானிய புரட்சி இயக்குனர்’ ஜாபர் பனாஹிக்கும் வழங்கினார்கள் கேரள ரசிகர்கள் ]

 ‘கலாச்சார காவலர்கள்’ யாரேனும் இப்பதிவை படித்துக்கொண்டு இருந்தால்
இந்த இடத்தில் விலகுவது உத்தமம்.

ஒரு பெண், தன் கணவன் ‘பரஸ்த்ரீயுடன்’ உறவு கொள்வதை கண்ணால் பார்த்து விடுகிறாள்.
அவளது மகனும் இக்காட்சியை இலவசமாக பார்த்து விடுகிறான்.
நீதி கேட்டு நெடும் பயணம் போகவில்லை கொரியன் கண்ணகி.
கத்தியுடன் கணவன் படுக்கை அறைக்குள் போய் காய்கறியை நறுக்குவது போல் ஆண்குறியை அறுக்க முனைகிறாள்.
கணவன் போராடி  ‘காப்பாற்றிக்கொள்கிறான்’.


வெறி தணியாமல் மகன் படுக்கை அறைக்குள் எட்டி பார்க்கறாள்.
ஆழ்ந்த நித்திரை.
கர...கர...கர..கர...
துண்டாக்கி விடுகிறாள்.
மகன் அலறல் கேட்டு தகப்பன் ஓடி வருகிறான்.
அடிக்கிறான்.
இன்னும் வெறியாகி ‘கடித்து மென்னு முழுங்கி விடுகிறாள்’.


இன்னும் இருக்கிறீர்களா!
உங்கள் மன தைரியத்தை பாராட்டி...
தகப்பன் ஆண் குறியை தரவா?
அறுக்க வேண்டாம்...அவனே அறுத்து தருகிறான்.
 ‘அப்படியே சாப்பிடலாம்’.

படம் முழுக்க ஏகப்பட்ட ஆண்குறிகள் அறுபட்டுக்கொண்டே இருக்கின்றன.
அத்தனையும் ஆண் குறி ‘குறியீடு’...விளக்கணுமா?

ஆண்குறி இல்லாவிட்டாலும் ‘உச்ச கட்ட இன்பம்’ அடையும் வழியை ‘இணையம்’ கற்றுக்கொடுக்கிறது.
அதில் ஒரு வழி...
சிக்கிமுக்கி  கல்லை எடுத்து உடம்பில் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து தேய்க்க வேண்டும்.
வலியும், ரத்தமும் இணைந்து பிறக்கும்.
உச்சக்கட்டமாக ‘பேரின்பமும்’...பேரின்ப எல்லையில் விந்துவும் வருகிறது.
அல்லாத்தையும் ஒண்ணு விடாம...விலாவாரியா காட்றார் கிம்-கி-துக்.

யாருக்காவது சந்தேகமோ...விருப்பமோ இருந்தால் ‘பாத்ரூமில் பரிட்சித்து பார்க்கவும்’.

இன்னொரு வழி...
அதற்கு கத்தி வேண்டும்.
கத்தியை எடுத்து...
வேண்டாம் நீங்களே படம் பார்த்து  ‘முயற்சித்துப்பாருங்கள்’.

வன்முறையின் அளவை காட்சிக்கு காட்சி அதிகரித்துக்கொண்டே போகிறார் கிம்-கி-துக்.
ஏன்?
கலாச்சார சீரழிவு குடும்ப உறவுகளை குலைத்து விடும்.
காலம் காலமாய் வளர்த்தெடுக்கப்பட்ட தாய்,தகப்பன், மகன்,மகள் என்ற உறவுகள் அழிக்கப்படும்....ஒழிக்கப்படும் என் எச்சரிக்கிறார் கிம் கி துக்.
எச்சரிப்பதோடு நின்று விடவில்லை...
தீர்வையும் சொல்லி இருக்கிறார்  கிம் கி துக்.



கிம்- கி-துக்கின் முந்தைய படைப்பான ‘பியாட்டாவின்’ நீட்சியாகவே இப்படமும் அமைந்தது...
சற்றல்ல...ரொம்பவே அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 ‘கிம்-கி-துக் டொக்காகி விட்டாரா?’ என்ற கேள்வி எழுகிறது.



வழக்கமாக கிம்-கி-துக்கின் படங்களில் வசனம் ‘மன்மோகன் சிங்’ எழுதியது போலவே இருக்கும்.
இந்தப்படத்தில்,
சாதனைகளே இல்லாத காங்கிரஸ் ஆட்சி போல...
வசனங்களே இல்லை.

படம் முடிந்ததும்,
அவசரம் அவசரமாக டாய்லெட்டுக்கு ஓடினேன்.
அப்பாடி...இருக்கு!

‘கிம்-கி-துக்கின் ரசிகர்களுக்கு’  ‘செல்ல எச்சரிக்கை’!
“பத்திரமா பாத்துக்கங்க”

Jan 12, 2014

ஜில்லா - அற்புதமான பயிற்சி !.


நண்பர்களே...
ஜில்லா படம்  ‘பரம ரசிகர்களை’ திருப்தி படுத்துகிறது.
ஆனால் ஏனைய  ‘பாமர ரசிகர்கள் ஆசனவாயில் பட்டாஸ் வெடிக்கிறது’.
காரணம் என்ன?
இதை  ‘நாளைய இயக்குனர்கள்’ ஆராய்ந்தால்,
அதுவே அற்புதமான ‘திரைக்கதை பயிற்சியாக’ இருக்கும்.

கில்லி, போக்கிரி, துப்பாக்கி போன்று  ‘ஹிட்’ அடிக்க வேண்டிய கதை,
திரைக்கதையால் நொண்டியடிக்கிறது...
தலைகுப்புற, அது வெட்டிய குழியில் விழுகிறது...
ரசிகர்களையும் கூட இழுத்து பிராணனை விடுகிறது.

‘ஜில்லாவில்’ ரசிகனை ஈர்த்த ஒரே விஷயம் ‘மோகன்லால்’.
மோகன்லால் அல்லாமல் வேறு ஆளைப்போட்டிருந்தால் இப்படம் ‘சுறாவை’ முந்தி இருக்கும்.
மோகன்லாலின் ஆளுமை, தொடக்கத்தில் ரசிகனை கட்டிப்போடுகிறது.
கட்டிப்போட்ட மோகன்லாலின் ஆளுமையை, புரட்டிப்போட்ட இடம் எது ?

கேஸ் கம்பெனி விபத்தால் மதுரையே பற்றி எரிகிறது.
அந்த கொடூரத்தை நேரில் பார்த்த கதாநாயகன் வருந்துகிறான்...திருந்துகிறான்.
ரசிகர்களை பதைபதைக்க வைத்த கொடூரக்காட்சிகளுக்குப்பிறகு,
மோகன்லால் அது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படுவதாக காட்சிபடுத்தப்படவில்லை.

கொத்து கொத்தாக ஈழத்தமிழர்கள் செத்து விழும்போது ‘மானாட மயிலாட’ புரோகிராமை ரசித்த  ‘கலைஞர் குடும்பம்’ போல் காட்சிபடுத்தப்பட்டு இருக்கிறார்கள் மோகன்லாலும், அவரது குடும்பத்தாரும்.
ஆனால், நடந்த கொடூர சம்பவத்துக்கு... துன்பப்படாத...துயரப்படாத... வருத்தப்படாத...மோகன்லால்,
தனது அல்லக்கைகளை விஜய் கைது  செய்ததை எதிர்த்து கோபிக்கிறார்.
இந்த இடத்தில்,
மோகன்லால் காரெக்டரை பூமியில் புல்டோசர் விட்டுத்தோண்டி... ஜல்லி,சிமெண்ட் போட்டு மூடி...
தோற்றம்: முதல் சீன்...
மறைவு: நாற்பதாவது சீன்...
என கல்வெட்டும் வைத்து விட்டார் இயக்குனர்.

இதோடு மோகன்லாலையும்,
அவரது குடும்பத்தாரையும் புறக்கணித்து விடுகிறார்கள் பார்வையாளர்கள்.
விஜய்க்காக ‘நெஞ்சை நக்கும்’ பூர்ணிமா பாக்யராஜை,
 ‘போடி டகால்டி’ என உதைக்கும் கவுண்டமணியாகி விடுகிறார்கள்.
‘இன்ஸ்டெண்ட் வில்லனிடம்’ அடி வாங்கும்  ‘மணமகளிடம்’ இரக்கம் வராமல் ‘மிக்சர் சாப்பிடுகிறார்கள்’.
‘ஆஸ்கார்’ நடிப்பை தந்து உயிரை விடும்  ‘மோகன்லால் மகனிடம்’
துளி இரக்கம் காட்டாமல் இறுக்கமாகிறார்கள்.
‘பிரபல தாதாவின் மகன் சுட்டுக்கொலை’ எனும் தினத்தந்தி தலைப்பை மட்டும் படித்து கடந்து செல்லும் வாசகர்களாகிறார்கள்.


மோகன்லாலும்,விஜயும் இணையும் இறுதிக்காட்சியில் விசிலடிக்காமல் திகிலடித்து திகைக்கிறான் ரசிகன்.
 ‘என்ன எழவுடா இது’ என ஒரு வரியில் தீர்ப்பெழுதுகிறான்.

 ‘நாளைய இயக்குனர்களே’...
இது போன்ற விலகல்களால், நரகல்களாகி விட்டது ‘ஜில்லா திரைக்கதை’.
நீங்களும் நரகல்களை நக்காதீர்கள்...நீக்குங்கள்.
ஜில்லாவை, பில்லாவாக்கும் வித்தை வசப்படும்.
பாட்சா, தூள், சிங்கம், தசாவதாரம், துப்பாக்கி போன்ற வணிக சினிமாக்களை
படைத்து வெற்றி பெறுவீர்கள்.

Jan 7, 2014

‘பாலைவனச்சோலை’.


நண்பர்களே...
திரையரங்குகளே இல்லாத  ‘சவுதி அரேபிய பாலைவனத்தில்’,
ஒரு  ‘பசுஞ்சோலை’ தோன்றி இருக்கிறது.
நேற்று முதல் அதன் ‘நிழலில்’ சுகமாய் அசை போட்டுக்கொண்டு இருக்கிறேன்.

சவுதி அரேபியாவில் முதன் முதலாக,
ஒரு திரைப்படம் முழுக்க படமாக்கப்பட்டு...
அதுவும் ஒரு பெண் இயக்குனரால் உருவாக்கப்பட்டு...
உலகம் முழுக்க கொண்டாடப்படும் படம்  ‘வாஜ்தா’.

Wadjda | 2012 | Saudi Arabia | 100 min | Directed by : Haifaa Al-Mansour.



சவுதியின் கட்டுப்பாடுகள் உலகமே அறிந்ததுதான்.
அத்தகைய ஒரு நாட்டில் ஒரு பெண் படைப்பாளி...
 ‘பாரதியின் புதுமைப்பெண்ணாய்’வாழ்ந்து சாதித்து காண்பித்து இருக்கிறார்.
திருமதி.ஹய்பா அல்- மன்சூர் [ Haifaa Al-Mansour ] என்ற வீர்யம் மிகுந்த படைப்பாளியை,
தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்.
ஒரு கவிஞருக்கு மகளாகப்பிறந்து...
ஆஸ்திரேலியாவில் திரைப்படக்கலையை பயின்று,
அற்புதமான படைப்புகளை வழங்கி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஹய்பா.
ஜெர்மனி நாட்டு நிறுவனத்தின் துணையோடு ‘வாஜ்தா’ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

 இயக்குனர் ஹய்பா,
விட்டோரியா டிசிகா, பிரான்ஸிஸ் த்ரூபோ போன்ற படைப்பாளிகளின் மூலம் படைப்பூக்கம் பெற்று அவற்றை மிகச்சரியாக தனது படத்தில் பிரதிபலித்து வெற்றி கண்டிருக்கிறார்.
பிரச்சார நெடி இல்லாமல் தன் படைப்பை வழங்கி இருப்பதே இவரது தனிச்சிறப்பு.
தன் நாட்டு அரசியல், வாழ்வியல் அனைத்தையுமே படிமங்களாக்கி
ஒவ்வொரு பிரேமிலும் வழங்கி இருக்கிறார்.


ஈரான் நாட்டை விட, சவுதியில் ‘படைப்புக்காற்று’ சற்று சுதந்திரமாக வீசுவதை ‘வாஜ்தா’ உணர்த்துகிறது.
நவ நாகரீக ஆடை அணிந்த பெண்களை காண முடிகிறது.
‘கிளிவேஜ்’ காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.


‘வாஜ்தா’ பதின் வயது சிட்டுக்குருவி.
அவளது ஒரே லட்சியம் ’பச்சை நிற சைக்கிள்’.
அதற்காகவே பள்ளியின் சட்ட திட்டங்களை மீறி,
சின்ன சின்ன பொருள்களை விற்று பணம் சேர்த்து வருகிறாள்.
வாஜ்தா தன் கனவு சைக்கிளை பெற்றாளா?
இந்த எளிய கதையில் எத்தனை வலிமையான கருத்துக்களை சொல்லி இருக்கிறார்!
காட்சிக்கு காட்சி குறியீடுகளாலும்...படிமங்களாலும் நிரப்பி நம் ரசனைக்கு செம்ம தீனி போட்டிருக்கிறார் இயக்குனர் ஹய்பா.
கீழிருக்கும் புகைப்படங்களை சாட்சிக்கு அழைத்திருக்கிறேன்.




அரேபிய மொழியை கற்று,  ‘குரானை’ படிக்க ஆசை வருகிறது.
படம் பார்க்கும் அனைவருக்கும் இத்தாக்கம் வரும் என நம்புகிறேன்.

இப்படத்தை தனியாக பார்க்க தடை விதிக்கிறேன்.
குடும்பத்தோடு பார்க்க,பள்ளிகளில் திரையிட...
பலமாக பரிந்துரைக்கிறேன்.

சக மனிதனை வெட்டிச்சாய்ப்பதை,
வீரமாக்கும் வீணனுக்கு...
பல்லக்கு தூக்கும்  ‘பாத்திரத்தை’ சபிக்க ஆசைப்படுகிறேன்...
‘வாஜ்தா’விடம் ‘பிச்சை’ எடுத்து பிழைக்க வாழ்த்துகிறேன்.

வாஜ்தாவும்...ஹய்பாவும் பெற்ற விருதுகள்...
[ உபயம் : ஐ.எம்.டி.பி ]

Asia Pacific Screen Awards 2013

Nominated
Asia Pacific Screen Award
Best Children's Feature Film
Roman Paul (producer)
Gerhard Meixner (producer)
Amr Alkahtani (co-producer) 

Boston Society of Film Critics Awards 2013

Won
BSFC Award
Best Foreign Language Film

British Film Institute Awards 2012

Nominated
Sutherland Trophy
Haifaa Al-Mansour 

British Independent Film Awards 2013

Nominated
British Independent Film Award
Best International Independent Film

Broadcast Film Critics Association Awards 2014

Nominated
Critics Choice Award
Best Foreign Language Film

Chicago Film Critics Association Awards 2013

Nominated
CFCA Award
Best Foreign Language Film

Dubai International Film Festival 2012

Won
Muhr Arab Award
Best Actress - Feature
Waad Mohammed 
Best Film - Feature
Roman Paul
Gerhard Meixner 

Durban International Film Festival 2013

Won
Best First Feature Film
Haifaa Al-Mansour 

Fribourg International Film Festival 2013

Won
Audience Award
Haifaa Al-Mansour 
Nominated
Grand Prix
Haifaa Al-Mansour 

Guild of German Art House Cinemas 2013

Won
Guild Film Award - Gold
Foreign Film (Ausländischer Film)
Haifaa Al-Mansour 

Göteborg Film Festival 2013

Won
Audience Award
Audience Dragon Award - Best Feature Film
Haifaa Al-Mansour 

Independent Spirit Awards 2014

Nominated
Independent Spirit Award
Best First Feature
Haifaa Al-Mansour (director)
Gerhard Meixner (producer)
Roman Paul (Roman Paul) 

Los Angeles Film Festival 2013

Won
Audience Award
Best International Feature
Haifaa Al-Mansour 

National Board of Review, USA 2013

Won
Freedom of Expression Award

Online Film Critics Society Awards 2014

Nominated
OFCS Award
Best Film Not in the English Language
Saudi Arabia

Oslo Films from the South Festival 2013

Nominated
Films from the South Award
Best Feature
Haifaa Al-Mansour (director) 

Palm Springs International Film Festival 2013

Won
Directors to Watch
Haifaa Al-Mansour 

Rotterdam International Film Festival 2013

Won
Dioraphte Award
Haifaa Al-Mansour 

San Francisco Film Critics Circle 2013

Nominated
SFFCC Award
Best Foreign Language Picture

Satellite Awards 2014

Nominated
Satellite Award
Best Motion Picture, International Film
Saudi Arabia

Sydney Film Festival 2013

Nominated
Official Competition Award
Best Film
Haifaa Al-Mansour 

Tallinn Black Nights Film Festival 2012

Won
Don Quixote Award - Special Mention
Haifaa Al-Mansour
The Jury is impressed by the courage of the director Haifaa Al-Mansour for formulation a desire of ... More
Won
Netpac Award
Haifaa Al-Mansour
A bold movie with an uplifting spirit, narrated in a simple, touching and masterful way.
Nominated
Grand Prize
Haifaa Al-Mansour 

Tromsø International Film Festival 2013

Won
Norwegian Peace Film Award
Best Film
Haifaa Al-Mansour 

Vancouver International Film Festival 2013

Won
Most Popular International First Feature
Haifaa Al-Mansour 

Venice Film Festival 2012

Won
'CinemAvvenire' Award
Best Film - Il cerchio non è rotondo Award
Haifaa Al-Mansour 
Won
C.I.C.A.E. Award
Haifaa Al-Mansour 
Won
Interfilm Award
Haifaa Al-Mansour 

Washington DC Area Film Critics Association Awards 2013

Nominated
WAFCA Award
Best Youth Performance
Waad Mohammed 
Best Foreign Language Film